ஆதாம் காலம் முதல் நோவாவின் காலம் வரை மனிதர்களுக்கும் மற்றும் மிருகஜீவன்கள் அனைத்துக்கும் தாவரங்கள் போன்ற மரக்கறிகள்
ஆகாரமாக கொடுக்க பட்டது.
ஆதியாகமம் 1:30 பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும்
பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்;
நோவானின் கால பூமியின் அழிவுக்கு பின் தேவன் மனிதர்களுக்கு
ஆதியாகமம் ; 9
2.பூமியிலே நடமாடுகிற யாவும், சமுத்திரத்தின் மச்சங்கள் யாவும், உங்களுக்குக் கையளிக்கப்பட்டன. 3. நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல, அவைகள்
எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்.
எனக்கு இதில் என்ன சந்தேகம் என்றால் தேவன் எதற்காக மிருகங்கள் பறவைகள் போன்ற இரட்சியை மனிதர்களுக்கு ஆகாரமாக
சாப்பிட அனுமதிக்கிறார்
ஆதாம் காலத்தில், மனிதர்கள் மற்றும் மிருகங்களுக்கு தாவரங்களை உணவளித்த தேவன் ஏன் பூமியின் அழிவிற்கு பின் இப்படி ஒரு முடிவை
எடுக்கின்றார் இதில் ஏதாவது ஆவிக்குரிய அர்த்தம் உள்ளதா ?
இந்த காரியத்தை குறித்து விளக்கம் தெரிந்த சகோதரர்கள் தங்கள் கருத்தை பதிவிடுமாறு கேட்டுகொள்கின்றேன்....
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)