கிறிஸ்துவின் உபதேசம் அனுதினம் சுயத்திற்கு சாகும்படி கூறுகிறது தேவனுக்காய் பாடுகளை அனுபவிக்க சொல்லுகிறது.இதனால்தான் அநெகர் இது கடின உபதேசம் யார் இதை கைக்கொள்ள முடியும் ,இது நமக்கு அல்ல என்று அந்த உபதேசத்தின் நிமித்தம் இடறுகின்றனர்.பாடுகள் என்ற பக்கம் தன் மனதை செலுத்தாமல் உலகத்தில் இளைப்பாருதலை கானமுயல்கின்றனர்.இவர்கள் பாடுகள் மூலம் தேவனிட்த்தில் இளைப்பாறுதலைப் பெறாமல்,உலகத்தில் இளைப்பாருதலை விரும்பி வஞ்சிக்கபடுகின்றனர்.இவர்கள் ஆபிரகாமின் வாக்குத்தத்தை உலக ஆதாயத்திற்காக எடுத்துக்கொள்கின்றனர்.உலகத்தில் சுகபோகமாய் வாழலாம் என்று தன்னையும் ,செழிப்பின் உபதேசத்தின் மூலம் அநேகரையும் வஞ்சிக்கின்றனர்.ஆபிரகாமுக்கு தேவன் எந்த சூழ்நிலையில் வாக்களித்தார்,என்பதை நாம் கானவேண்டும். அவர் முதலாவது சுயத்திற்கு மரித்து தன்னை ஒரு பரதேசியாக தீர்மானித்து தேவனை விசுவாசித்தார் எந்த செயலை செய்யும் முன்பு தன் மனதின் படி செய்யாமல் தேவனிடம் உத்தரவு பெற்றே செய்து வாழ்ந்தார் ,தேவனை சார்ந்தே வாழ்ந்த தேவனுடைய வ்ழிநட்த்துதலைப் பொற்றார் .அவர் தேவனை நம்பி தன் இனத்தார் அனைவரையும் விட்டு பரதேசியாய் வந்த்தின் நிமித்தம்,கர்த்தர் அவரை ஆசிர்வதித்தார்.உபதேசம் இப்படி இருக்க சுயத்திற்கு சாகாமல் ஆபிரகாமின் வாக்குத்தத்தத்தை போதிப்பவர்களும், சுயத்திற்கு சாகாமல் அதை கேட்கிறவர்களும் இந்த நாட்களில் அநேகர் வஞ்சிக்கப்படுகின்றனர்.இந்த உலகத்தில் அதிகாரத்தையும்,முதன்மையான ஸ்தானத்தையும் தேடுவது அந்திகிறிஸ்துவின் ஆவியை உடையவர்கள்.இப்படி உயர்வைத்தேடி வஞ்சிக்கப்படுகின்றனர்.கிறிஸ்துவின் மலைப் பிரசங்கம் ஒருவனை இந்த உலகத்தில் பரதேசியாக அடையாளப்படுத்துகிறது. தேவனுடைய அன்பை பிரதிபளிப்பதே பிரதான நோக்கமாய் தெரிவிக்கிறது.ஒருவன் அனுதினமும் சுயத்திற்கு சகும்படி வரும் பாடுகளில் வெற்றிபெரும் போது அநேக ஆவிக்குரிய கனிகளைக் கொடுக்கிறான்.இந்த கனியைதான் கானும்படி தேவன் அவனை தேடிவருகிறார்.கண்டு அவனோடு வாசம் செய்கிறார் ,உறவாடுகிறார் ஆகா எத்தனை இன்பம் எத்தனை சந்தோசம் ,எத்தனை இளைப்பாருதல் .பாடுகள் மூலம் கிறிஸ்துவின் சுபாவத்தை பெற்று கிறிஸ்துவை தன்னில் வெளிப்படுத்துவதே பரிசுத்த வேதத்தின் மூல சத்தியமும் கருப்பொருளும்கூட,இதில் பிரியப்பட்டு தேவனை தேடுவோர்க்குத்தான் வேதத்தில் உள்ள சத்தியம் தெளிவாக புரியும் .கிறிஸ்துவின் உபதேசம் கலாச்சாரியத்திற்கு தகுந்து மாறுவதில்லை.கலாச்சாரம் ,நாகரிகம் வளர்ந்துவிட்ட்து என்று அதற்கு ஒப்பாய் உபதேசத்தை மாற்றிக்கொண்டு வாழ்ந்து வஞ்சகத்தில் இருப்பதை தேவன் விரும்புவதில்லை.ஒவ்வொரு மனிதனுக்கும் அந்தந்த நாட்களுக்கு தகுந்த கனி கொடுக்க அதற்கான பாடுகள் தேவனிட்த்தில் இருந்து அங்கிகரிக்கப்படு வருகிறது.கூடவே கிருபையும் சேர்ந்துவருகிறது.நாம் கிருபையை சார்ந்து பாடுகளில் தேவனுடைய சுபாவத்தை வெளிப்படுத்தவேண்டும்.தெவனுடைய சுபாவங்களே அவர் தேடும் ஆவிக்குரியக்கனிகள்.பிரியமான சகோதர்களே கிருபையைப் பற்றிக்கொண்டு தேவனுக்காய் அதிக கனி கொடுங்கள்