ஒரு நண்பன் என்னிடம் இவ்வாரு சொன்னான் ‘’பிரதர் நம்ம ஆண்டவர் வசதிபடைத்தவங்களுக்கு மாத்திரம் ஆசிர்வதித்துக்கொண்டே இருக்கிறார்’’ ஏன் என்னை போன்ற ஏழைகளை மாத்திரம் கண்டுகொள்வதில்லை நான் எவ்வளவோ ஜெபித்தேன்
என் பிள்ளை நன்றாகபடித்து ஸ்காலர் சீப் கிடைத்து ஒரு பைசாவும் இல்லாமல் இஞ்சினியரிங் படிக்கவேண்டும் என்று,ஆனால் 5 மார்க் வித்தியாசத்தில் மெரிட்ல வருவதை இழந்தான் .என்ன செய்ய என்னோடு கூட கொத்தணார் கையாள்வேலை செய்கிறான்.டிப்ளமோ படிக்க 40,000 கேட்டார்கள் என்கிட்ட வெறும் 15,000 ருபாய்தான் இருந்தது அதனாலதான் .சபைக்கு போய் ஆண்டவர் எதாவ்து ஆறுதலாய் பேசுவார் என்று போனேன் ,ஆரம்பத்தில் பாட்டு படித்தார்கள்,அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும் இந்த லேசான உபத்திரவம் என்ற பாடல் மனதுக்கு ஆறுதலாக இருந்தது ,
அப்புறம் சாட்சி வேளை வந்ததது அப்போது சபையில் உள்ள வசதிபடைத்த அன்புச்சகோதரர் எழுந்து தனக்கு தேவன் 20 ஏக்கர் பட்டா பூமி கிரயம்கொள்ள உதவி செய்தார்.மற்றும் தன்னுடைய பையன் தேர்வில் பாஸ்பன்ன உதவி செய்தார் நல்ல இஞ்சினியரிங் காலேஜில் மெக்கானிக் சப்ஜெட் எடுக்க மனிதர்கள் கண்களில் கிருபை கிடைக்க செய்தார் என்றுகூறி உட்கார்ந்தார்.உடனே ஊழியர் அதை ஆமோதித்து பாருங்கள் இவர் தேவன் மேல் எவ்வளவு நம்பிக்கையும் விசுவாசமும் வைத்திருந்தால் இவ்வளவு பெரிய காரியத்தை செய்திருப்பார் என்றார்.
.
இதை கேட்டுகொண்டு இருந்த அருமை நண்பர் தேவன் மேல் மனதாங்கல் அடைந்தவராய் இவ்வாரு மனதில் சோன்னாராம் ஏசாவை போல் என்னை வெறுத்துவிட்டீர் என் பையனை விட அந்த செல்வந்தரின் மகன் 120 மார்க் குறைவு அப்படியிருந்தும் அவனுக்கு உதவிசெய்தீர் யாக்கோபைபோல் அந்த செல்வந்தரை நேசிக்கிறீர் என்றறாம்.
.
இதற்கு காரணம் என்ன Facebook நண்பர்களெ உங்களுக்கு தெரியுமா கருத்து கூருங்கள் .நான் அவருக்கு சத்தியத்தை கூறினேன் .அவ்வளவுதான் பரலோக சந்தோசத்தை அவர் முகத்தில் பார்த்தேன் என்னால் என் கன்னீரை அட்க்கமுடிந்த அளவு அடக்கி பார்த்தேன் முடியவில்லை .சரி என்ன சத்தியம் அது நீங்கள்கூறுங்கள் அனேகருக்கு பயனுள்ளதாக இருக்கும்