2.தங்கள் சுய ஆசையின்படி நடந்து பரிசுத்த ஆவியானவருக்கு செவிகொடுக்காமல் இருக்கும் போது சாத்தான் மனதை வஞ்சிக்கிறான்.
அப்போஸ்தலர் 5:3 பேதுரு அவனை நோக்கி: அனனியாவே நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?
3.ஆவிக்குரிய ஜீவியத்தில் ஒருவன் முன்னேறி வரும் சமயத்தில் அந்த வளர்ச்சியைப் பார்த்து ஏனோ தன்னுடைய மதிப்புக்கு இவனால் ஆபத்து ஏற்படும் என்ற வக்கிரகத்தில் சவுல் தாவீதை பகைத்தது போல அநேகர் வளர்ந்து வரும் மனிதனை மட்டம் தட்டுவதிலே குறியாய் இருக்கிண்றனர் ,ஓயாமல் மட்டம்தட்டுவதால் வளர்ந்துவரும் மனிதன் முறுமுறுத்து தேவ அன்பில் நிலைத்திராமல் வஞ்சிக்கப்படுகிண்றனர்.
சபையின் மூப்பர்கள் தங்களுக்கு கீழ் அநேக கோள் சொல்லும் மனிதர்களை விசாரணைக்காரர்கள் போல் வைத்திருப்பார்கள் இவர்கள் தேவனுக்குள் வளரும் மனிதனைக்குறித்து ஓயாமல் மூப்பர்களிடம் குறை சொல்லுவார்கள் மூப்பர்கள் ஆவிக்குரிய ஜீவையத்தில் வளரும் மனிதனை ஒடுக்குவதிலேயே குறியாய் இருப்பார்கள்.இதைனை இனங்கண்டு தேவனை சார்ந்து வாழாதவர்கள் வஞ்சிக்கப்பட்டு நாளடைவில் உலகமனிதனைப்போல் மூப்பர்களை குறைகூறி ஆவிக்குரிய ஜீவியத்தில் வளருவதை விட்டுவிட்டு முழுக்க முழுக்க மாம்சகுணமுடையவர்களாய் மாறிவிடுவர்.
அப்போஸ்தலர் 7:19 அவன் நம்முடைய ஜனங்களை வஞ்சனையாய் நடப்பித்து, நம்முடைய பிதாக்களின் குழந்தைகள் உயிரோடிராதபடிக்கு அவர்கள் அவைகளை வெளியே போட்டுவிடும்படி செய்து, அவர்களை உபத்திரவப்படுத்தினான்.
யாத் 1:10-11. அவர்கள் பெருகாதபடிக்கும், ஒரு யுத்தம் உண்டானால், அவர்களும் நம்முடைய பகைஞரோடே கூடி, நமக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, தேசத்தைவிட்டுப் புறப்பட்டுப் போகாதபடிக்கும், நாம் அவர்களைக் குறித்து ஒரு உபாயம் பண்ணவேண்டும் என்றான். அப்படியே அவர்களைச் சுமைசுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படிக்கு, அவர்கள்மேல் விசாரணைக்காரரை வைத்தார்கள்;
4.தேவனுக்கு மகிமை செலுத்தக்கூடிய சமயத்தில் தன்னை உயர்வாக நினைக்கும் மனிதன் வஞ்சிக்கப்படுவான்
ரோமர்1:21. அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.
5.ஒருவனுக்கு தேவனுக்கு பயப்படும் பயம் இல்லையென்றால்,தேவனை அறிகிற அறிவில் வளரமுடியாது அப்படியே உலக நேசம் அவர்கள் இருதயத்தில் வேர்கொண்டு கேடான பாவத்துக்குள்ளாக வஞ்சிக்கப்படுகின்றனர்.
ரோமர் 1:28. தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
-இவர்கள் எத்தனை அதிகமாய் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள்
6.தேவனால் கிடைக்கப்பெறும் கிருபையை அறியாமல் கிருபையை மாம்ச சிந்தையால் அறிய முற்பட்டு சுய ஆசை இச்சையின் படி சுயசித்தத்துக்கு நேராய் கிருபையை புரட்டி உபதேசிக்கும் போதகர்களால் வஞ்சிக்கப்படுகின்றனர்.எப்படியும் ஜீவித்தாலும் பரவால நீங்க இரட்சிப்பை பெற்றிருக்கீங்களா,ஞானஸ்தானம் எடுத்தீர்களா! இராபோஜனத்தில் தவறாமல் பங்கு வகிக்கிறீர்களா போதும் பரலோகத்தில் உங்களுக்கு நிச்சயம் இடம் உண்டு என்று சொல்லூவார்கள் ஆனால் இரட்சிக்கப்பட்டபின்பு ஒருவன் நற்கிரியை செய்து தேவனுடைய சாயலை வெளிப்படுத்த ஊக்குவிக்கமாட்டார்கள்.ஆவிக்குரிய கனியை நீங்கள் வெளிப்படுத்தி வாழவேண்டும் என்று போதிக்கமாட்டார்கள் .
13. அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது;
II பேதுரு 1:2 தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும்பெருகக்கடவது. II கொரிந்தியர் 9:8 மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும்பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார். I தீமோத்தேயு 1:14 நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடுங்கூட என்னிடத்தில் பரிபூரணமாய்ப் பெருகிற்று.
7.ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் என்று சொல்லாதீர்கள் அந்நிய பாசையிலே ஜெபியுங்கள் என்று பரிசுத்த ஆவியால் நடத்தப்படுகிறவர்கள் போல் ஆலோசனை கூறுவார்கள் மற்றும் பாடல் பாடி மேள தாளத்தோடு பரவசத்தில் ஜனங்கள் ஆடிப்பாடி நடனமாடவேண்டும் என்று கட்டாயப்படுத்தி உதடிகளால் தேவனை ஆராதிக்க வைத்து இருதயத்தை தேவனைக் கிட்டிசேராதபடி இவர்கள் தடை செய்து வஞ்சிக்கிறார்கள் ஆராதனை முடிந்தவுடன் சந்தோசமும் ஒரு அர்த்தமில்லாமல் இருக்கும் ஆனால் சுத்த மனச்சாட்சியும் தேவனுக்குப் பயப்படும் பயமும் கொஞ்சம் கூட இருக்காது.
II கொரிந்தியர் 4:15தேவனுடைய மகிமை விளங்குவதற்கேதுவாகக்கிருபையானது அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலேபெருகும்படிக்கு இவையெல்லாம் உங்கள்நிமித்தம் உண்டாயிருக்கிறது.
மத்தேயு 15:8 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது
ரோமர் 12:1 அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்கபுத்தியுள்ள ஆராதனை
2. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
.
8.தாழ்மையுள்ள மனிதர்களை மதியாமல் மேட்டிமையாய் தன்னையே இருதயத்துக்குள் மேன்மையாக எண்ணி வாழ்கிறவர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர்.
I கொரிந்தியர் 3:18 ஒருவனும் தன்னைத்தானே வஞ்சியாதிருப்பானாக, இவ்வுலகத்திலே உங்களிலொருவன் தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன்.
ரோமர்12:9உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக; தீமையை வெறுத்து, நன்மையைப்பற்றிக்கொண்டிருங்கள்
நீதிமொழிகள் 16:30 அவன் மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன் கண்களை மூடி, தீமையைச் செய்யும்படி தன் உதடுகளைக் கடிக்கிறான்.
ரோமர் 7:23. ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது.
10.வேதம் வாசிக்காமல் அல்லது வாசித்தும் அதன் விளக்கம் தெரியாமல் வசனத்தின் விளக்க வெளிப்பாட்டை அறிய ஆவல் கொண்டு மற்றவர்களின் தவறான உபதேசத்தின் புத்தகங்களை வாசிப்பதால் வஞ்சிக்கப்படுகிரார்கள் மற்றும் தவறான போதனையைக் கொடுக்கும் சொந்த போதகர்களாலும் வஞ்சிக்கப்படுகிறார்கள்
தேவனுக்கு பணம் கொடுக்க உச்சாகப்படுத்தும் அதே ஊழியர் தேவனுக்கென்று கனி கொடுக்க உச்சாகப்படுத்த மாட்டார்கள்
சபையில் அநேக ஜனங்கள் வர எதிர்பார்ப்பார்கள் ஆனால் வந்த ஜனத்தை தேவனுக்கு அற்பணித்து பரிசுத்தமாய் வாழ உச்சாகப்படுத்தமாட்டார்கள் பரிசுத்தம் வெறும் உபதேச அளவிலே இருக்கும் ஆனால் எப்படி பரிசுத்தமாய் ஜீவிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுப்பதில்லை ஆயத்தமாகுங்கள் என்பார்கள் எப்படி ஆயத்தமாகவேண்டும் என்று கற்றுக்கொடுக்கமாட்டார்கள் இதுவே மிகப்பெரிய வஞ்சகம்
ரோமர்16:17. அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
18. வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்.
19. உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?
8. ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான்.
12.அநேக பாரம்பரிய அனுசரிப்பாலும் தேவ வசனத்தை உலக ஞானத்தால் விளக்குவதும் இன்னும் அதிக தந்திரமான 1000 ருபாய் கொடுத்தால் தேவன் பலமடங்கு ஆசிர்வதிப்பார் என்றும் தங்க சாவி,தங்க மோதிரம்,இளம்பங்காளர் திட்டம் என்னும் எத்தனையோ தந்திரங்கள் இதனால் வஞ்சிக்கப்படுதல் இப்படிப்பட்டவர்கள் போதிப்பது நீ தேவனுக்கு கொடுத்தால் மாத்திரம் போதும் அவர் உண்ணை ஆசிவதிப்பார் என்பார்கள் ஆனால் தேவனுக்கு பிரியமாய் வாழ அவரை விசுவாசித்து தீமை செய்யாமல் நன்மை செய்யவும் சோதனையின் காலத்தில் தேவனை விசுவாசித்து தன்னைத்தாழ்தி தேவனிடம் இருந்து பதிலும் நன்மையும் கிடைக்க காத்திருக்க போதிக்கமாட்டார்கள்.இவர்கள் போதிக்கும் விசுவாசம் லாட்டரி சீட்டு போன்ற வஞ்சகம்.
கொலே2:8. லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயேல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல.
அப்படியானால் சத்தியம் என்ன?
கொலே2:2. அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன்.
3. அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது.
தலையாகிய கிறிஸ்துவுக்குள் நாம் பரிபூர்னமாய் பரிசுத்த ஆவிக்கு கீழ்படிந்து சத்தியமாகிய வசனத்தின்படியும் தேவனுடைய கர்பனையின் படியும் வாழ்ந்து தேவனுடைய சாயலை வெளிப்படுத்துகிறவர்களாய் அவரில் வளரவேண்டும் நாம் அவரின் அவயங்கலாய் இருப்பதால் எல்லோரோடும் சமாதானமாய் இணக்கமுள்ளவராக காணப்பபவேண்டும் அப்போதுதான் அஸ்திபாரமான இயேசுகிறிஸ்துவின் மேல் கட்டப்பட்டவர்களாய் எல்லா சோதனையிலும் தேவனுக்கேற்ற கணிகொடுத்து உலகத்துக்கு வெளிச்சமாய் கானப்படவேண்டும்.
13. சிலர் கூறுகிறார்கள் நாம் ஜெபிக்கும்போது தேவதூதனையாவது பார்க்காமல் ஜெபத்தை நிறுத்த கூடாது எனபார்கள் ஆனால் கொஞ்சம் கூட தாழ்மை அவர்களிடம் இருக்காது எப்போதும் பெருமையாக பரிசேயனைப்போல் நான் ஜெபித்ததால் இவர்களுக்கு விடுதலை என்னால் இந்த ஊழியம் கட்டிஎழுப்பட்டது.இவர்களை நான் தான் இரட்சிப்புக்குள் வழிநடத்தினேன் என்பார்கள்.எந்த வார்த்தையானாலும் பெருமையாகவே வரும் வார்த்தைக்கு வார்த்தை தாழ்மையாக இருப்பது போல் சத்தத்தை தாழ்தி ஏதோ மிக பொறுமை உள்ளவர்கள் போல் மெதுவாக பேசுவார்கள் ஆனால் அவர்களை விமர்சித்தால் போதும் அடங்காதவர்கள் போல் கோபமாய் வெடித்து சிதறும் வார்த்தைகள் வின்னைத்தொடும் இப்படிப்பட்டவர்களுக்கு தேவனும் காட்சி அளிக்கிறாராம் எத்தனை வஞ்சகம் ஒளியின் தூதன் வேடத்திலும் வருவான் சாத்தான் எது எப்படியோ இவர்கள் கிரியைப் பார்க்கும் போது இவர்களை பின்பற்றுகிறவர்களும் வஞ்சிக்கப்படுவார்கள்
கொலோசெயர் 2:19 மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.
I தீமோத்தேயு 4:1 ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.
14. அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.
15. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.
14.பொருளாசையை ஊக்குவிக்கிரவண்னமாய் பேசுவார்கள் எப்போதும் உலக ஆசிர்வாதமே வாய்க்கு வாய் முழங்கும் இவர்கள் போதகத்தை கேட்பவர்கள் வஞ்சிக்கப்படுகிரார்கள்
1தெச2:3. எங்கள் போதகம் வஞ்சகத்தினாலும் துராசையினாலும் உண்டாகவில்லை, அது கபடமுள்ளதாயுமிருக்கவில்லை.
4. சுவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய், தேவன் எங்களை உத்தமரென்றெண்ணினபடியே, நாங்கள் மனுஷருக்கு அல்ல, எங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம்.
6. நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலராக உங்களுக்குப் பாரமாயிருக்கக்கூடியவர்களானாலும், உங்களிடத்திலாவது, மற்றவர்களிடத்திலாவது, மனுஷரால் வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை. –இப்படிப்பட்டவிதத்தில் உபதேசம் செய்கிர ஊழியர்கள் வெகு சிலரே!
15.இரட்சிப்பின் பூரணமகுதல், தேவனுடைய சாயல், சத்தியத்தின் மேல் விருப்பமும் வாஞ்சையும் இல்லாதவர்கள்
வஞ்சிக்கப்படுவார்கள்
2தெச2: 7. அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது; ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது.
9. அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும்,
10. கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும்.
11. ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு,
12. அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.
I கொரிந்தியர் 1:18 சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.
II கொரிந்தியர் 4:3 எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும். 16.சுயத்தை பேனும் வகையில் உடையிலும் சரிரத்தை அலங்கரிக்கிரதிலும் ஆவல் கொண்டால் வஞ்சிக்கப்படுவார்கள்
14. மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.
ஆணும் பெண்ணும் தகுதியான வஸ்திரத்தையும் அனிய வேண்டும்
சில ஆண்கள் தங்கள் முகத்தை விதவிதமான தாடிகலும் அதிலும் மேலாக தலைமுடியை 90 டிகிரி கோனத்தில் நேராக அழங்கரிக்கிறார்கள்.பெண்கள் தங்கள் உடல் அப்பட்டமாய் தெரியும் படி உடை அணிகிறார்கள் பவுல் இந்த காலத்தில் இருந்தால் மிக கடினமாக எச்சரித்திருப்பார்.
17.பாவத்தை கடினமாக எடுக்காதவர்கள் வஞ்சிக்கப்படுவார்கள்
II பேதுரு 2:18 வஞ்சகமாய் நடக்கிறவர்களிடத்திலிருந்து அரிதாய்த் தப்பினவர்களிடத்தில் இவர்கள் அகந்தையான வீண்வார்த்தைகளைப் பேசி, மாம்ச இச்சைகளினாலும் காமவிகாரங்களினாலும் அவர்களைத் தந்திரமாய்ப் பிடிக்கிறார்கள். 19.வசனத்தை கேட்கிறவர்கள் அதன்படி நடக்காவிட்டால் வஞ்சிக்கப்படுவார்கள்
யாக்கோபு 1:22 அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள். 20.நாவை அடக்காமல் எப்போதும் எதையாகிலும் பேசிக்கொண்டே இருப்பவர்கள் வஞ்சிக்கப்படுவார்கள்
யாக்கோபு 1:26 உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.
21.உல்லாசமாய் வாழ நினைக்கிறவர்கள் வஞ்சிக்கப்படுவார்கள்
II பேதுரு 2:13 இவர்கள் ஒருநாள் வாழ்வை இன்பமென்றெண்ணி, கறைகளும் இலச்சைகளுமாயிருந்து; உங்களோடே விருந்துண்கையில் தங்கள் வஞ்சனைகளில் உல்லாசமாய் வாழ்கிறவர்கள்;
இப்படிப்பட்டவர்கள்தான் கள்ள சகோதரனாகவும், கள்ள போதகனாகவும் ,கள்ள தீர்க்கதரிசியாகவும் மாறுகிறார்கள். II பேதுரு 2:18 வஞ்சகமாய் நடக்கிறவர்களிடத்திலிருந்து அரிதாய்த் தப்பினவர்களிடத்தில் இவர்கள் அகந்தையான வீண்வார்த்தைகளைப் பேசி, மாம்ச இச்சைகளினாலும் காமவிகாரங்களினாலும் அவர்களைத் தந்திரமாய்ப் பிடிக்கிறார்கள். 22.ஒருவன் தன்னை பரிசுத்தவான் என்னில் பாவம் இல்லை என்கிற மனப்பான்மை வஞ்சகமே!
23.பரியாச வார்த்தை பேசுகிரவர்கள் சுத்த மானசாட்சி கெட்டு வஞ்சிக்கப்படுவார்கள்
2பேது3:3. முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து,
4. அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.
16. எல்லா நிருபங்களிலும் இவைகளைக்குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்.
17. ஆதலால் பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து,
24.கிறிஸ்துவின் அன்பு இல்லாமல் மற்றவர்களை பகைக்கிறவர்கள் வஞ்சிக்கப்படுவார்கள்
1பேது2: 9. ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்.
11. தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்.
9. தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.
I யோவான் 4:6 நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சகஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம்.
10. இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச்செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனாலுண்டானவனல்ல.
11. நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது.
12. பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே.
II யோவான் 1:7 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.
யூதா 1:11 இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.
வெளி 2:20 ஆகிலும், உன்பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்க
தாங்கள் பட்டியலிட்டுள்ள அனைத்து காரியங்களையும் பொருத்தி பார்த்தால் இந்நாட்களில் அநேகர் வஞ்சிக்சிக்கபட்டிருப்பதை அறிய முடிகிறது!
இதன் மூலம் கிறிஸ்த்துவின் நாமத்தில் அநேகர் வந்து அநேகரை வஞ்சிப்பார்கள் என்ற இயேசுவின் வார்த்தை நிறைவேறுகிறது!
பணத்தை வாஞ்சித்து அதன்பின்னே ஓடாதவர்கள் மற்ற அனேக வஞ்சனைகளில் இருந்து தப்பிக்க முடியும் என்று நான் கருதுகிறேன் அதைவிட முக்கியமாக இயேசுவின் வார்த்தைகளை ஆராய்ந்து பரிசுத்த ஆவியின் பெலத்தால் அதை கைகொண்டு நடக்க அப்பியசிப்பவர்கள் வஞ்சனையில் இருந்து தப்பிக்க முடியும்:
மத்தேயு 7:24ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
மத்தேயு 7:25பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
அவர் வார்த்தையின் மேலல்லாது வேறு எதன்மேல் அஸ்திபாரம் போட்டாலும் அந்த வீடு நொருங்கிபோகும் means வஞ்சிக்கப்பட்டுபோகும்!
-- Edited by SUNDAR on Friday 3rd of May 2013 12:18:54 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)