தாவீது மிகப்பெரிய பாவம் செய்திருந்த போதிலும் அவன் தனது இருதயத்தை நொறுக்கி தேவ சமூகத்தில் ஊற்றியபோது தேவன் மீண்டும் அவனுள் வந்து வாசம் செய்து பெரிய காரியங்களை செய்தார்.
எனவே அன்பானவர்களே நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியையும் களிப்பையும் தரும் இன்பமான காரியங்களில் மனதை அலையவிடாமல் நொருக்கபட்ட இருதயத்தோடு தேவனுக்குள் மாத்திரம் மகிழ்வாய் இருக்க கடவோம்
இன்னும் தேவன் வாசம் செய்யும் இடங்கள் குறித்து விபரம் அறிந்தவர்கள் தொடர்ந்து பதிவிடலாம்.
-- Edited by SUNDAR on Saturday 4th of May 2013 04:18:05 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ஆனால் பிரசங்கியார்கள் சாலமேன் சொன்ன படி தேவாலயத்தில் கர்த்தர் வசிப்பதில்லை
நமது சரீரமே அவரின் ஆலயம் என்று பிரசங்கிக்கினறனர்
நமது சரீரமே அவரின் ஆலயம் என்பது சரிதான் கீழுள்ள வசனங்கள் அதை ஒத்து கொள்கின்றன .
I கொரிந்தியர் 3:16நீங்கள்தேவனுடையஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில்
வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
I கொரிந்தியர் 6:19உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடையஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?
II கொரிந்தியர் 6:16தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது?
நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடையஆலயமாயிருக்கிறீர்களே.
ஆனால் தேவாலயத்தில் கர்த்தர் வசிப்பதில்லை என கூறுவது சரியா? சாலமோன் சொன்னதை நம்புவதா
கர்த்தர் சொன்னதை நம்புவதா?
-- Edited by t dinesh on Thursday 9th of May 2013 09:13:11 PM