ஒரு காட்டில் முனிவர் ஒரு பரம்பொருளை பார்க்க வேண்டும் என்று எண்ணி தவம் செய்தார்! பரம்பொருளை பற்றி அதிகம் அறிந்திருந்த அவர், அவர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற ஒரு நிர்ணய எண்ணத்தில் அனேக நாள் அமர்ந்து தேடியும் அவரால் பரம்பொருளாம் இறைவனை பார்க்க முடியவில்லையாம்.
மிகுந்த சோர்வுடன் காட்டில் நடந்து வந்துக்கொண்டிருந்த போது அந்த வழியே ஒரு வேடன் வந்தானாம். பிறருக்கு உதவும் நல்ல குணமும், தேவையானதை கடின உழைப்பின் மூலமும் விடா முயற்ச்சியின் மூலமும் பெற்று எந்த குறையும் இல்லாமல் வாழ்ந்து வந்த அவனுக்கு முனிவரின் சோகமான முகத்தை பார்த்து அவருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்ததாம்.
அந்த முனிவரிடம் வந்து ஐயா தாங்கள் இங்கு எதையோ தேடி அது கிடைக்காமல் சோர்வுடன் இருப்பதுபோல் தெரிகிறது தங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள் அதை நான் எப்படியாது கொண்டுவது தருகிறேன். என்று கேட்டானாம்.
முனிவரும் குழந்தாய் நான் தேடி வந்தவரை உன்னால் எனக்கு காட்ட முடியாது அவர் பரம்பொருளானவர் அவர் எங்கும் நிறைந்தவர் என்று சொன்னாராம்.
ஆனால் அந்த வேடனோ "ஐயா காட்டில் எனக்கு தெரியாத இடமே இல்லை எனக்கு தெரியாத எந்த ஒரு உயிரினமும் இல்லை. அந்த பரம்பொருள் எப்படி இருப்பார் என்பதை மட்டும் சொல்லுங்கள் அவரை பிடித்து கொண்டுவது உங்கள் முன்னே நான் நிறுத்துகிறேன்" என்று கெஞ்சி கேட்டானாம்.
வேடனின் அறியாமையை உணர்ந்த முனிவர் அவனிடம் எதையாவது ஓன்று சொல்லி தப்பிக்கும் பொருட்டு நான் தேடும் பரம்பொருள் என்பவர் "சிங்க தலையுடனும் மனித உடலுடனும் இருப்பார்" என்று சொல்லி வைத்தாராம்.
அதை கேட்ட வேடன் அவ்வளவுதானே அவர் எங்கு இருந்தாலும் நான் பிடித்து கொண்டுவருகிறேன் அதுவரை இங்கு தங்கியிருங்கள் என்று சொல்லிவிட்டு உடனே பரம்பொருளை பிடிக்க புறப்பட்டானாம்.
காடு முழுவதும் அலைந்து தேடியும் எங்கும் அவனால் அப்படியொரு மிருகத்தை காண முடியவில்லை. உணவு உடை தூக்கம் அனைத்தையும் மறந்து "கடவுளே எனக்கு அந்த மிருகத்தை எப்படியாவது காண்பி" என்று வேண்டிக்கொண்டு அங்கும் இங்கும் ஓடி தேடிய அவன் இதயம் உடல் சிந்தை அனைத்திலும் "சிங்க தலை மனித உடல்" அந்த பரம்பொருளை எப்படியாது கண்டுபிடிக்க வேண்டும் என்றம் எண்ணம் மட்டுமே நிலைத்திருந்த்தாம்.
அவனது விடா முயற்சி மற்றும் ஒன்றான சிந்தை இவற்றால் மகிழ்ந்த பரம்பொருள் சிங்க தலையுடனும் மனித உடலுடனும் அவன் முன் வந்தாராம். உடனே வலையை எடுத்து அவர்மேல் போட்டு பிடித்த வேடன்
என்னிடம் மாட்டி கொண்டாயா? உன்னை எங்கெல்லாம் தேடுவது! என்று சொல்லி இழுத்து கொண்டுபோய் முனிவர் முன்னால் நிறுத்தி "இதோ நீங்கள் தேடிவந்த மிருக தலை மனித உடலுள்ள பரம்பொருள்"என்று வலையை கான்பித்தானாம்.
வலையினுள் எதோ இருப்பதுபோல் தெரிந்தாலும் அதை முனிவரால் பார்க்க முடியவில்லையாம். காரணம் இவர் பரம்பொருள் அப்படி இருக்க வாய்ப்பில்லை அதிலும் இந்த வேடனின் வலைக்குள் மட்ட வாய்ப்பேயில்லை என்ற நோக்கத்தில் பார்த்ததால் அவர் முன்னால் வந்தும் கூட அவரால் பரம்பொருளாம் அந்த இறைவனை காண முடியவில்லை.
மனுஷனின் தவறான நிர்ணயங்கள் சரியான உண்மையை அறியவிடாமல் தடுத்துவிடும்!
(இந்த கதை நான் ஒரு புத்தகத்தில் படித்தது - சிறிய மாற்றம் செய்துள்ளேன்)
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
///மனுஷனின் தவறான நிர்ணயங்கள் சரியான உண்மையை அறியவிடாமல் தடுத்துவிடும்! ///
உண்மைதான் அண்ணா உலக மக்கள் பாரம்பரியங்களையும் மூதாதையரின் மொழிகளையும் கொண்டு கடவுள் இப்படித்தான் இருப்பார் என மனதில் நிர்ணயித்து கொண்டு அதையே நம்பிக் கொண்டிருப்பார்கள். உண்மையை சொன்னாலும் ஏற்க மாட்டார்கள்.
அவ்வாறு உலக மக்கள் இருக்க சபை மக்கள் என்ன செய்கிறார்கள் என்றால் சபை பாரம்பரியங்களும் மேய்ப்பர்களும் கூறுபவற்றை தெய்வ வாக்காக நம்பி விடுகிறார்கள்.
பாரம்பரியங்களும் மேய்ப்பர்களின் போதனைகளும் வேதத்துடன் எந்தளவுக்கு ஒத்து போகிறது என்பதைக்கூட யோசிக்க முடியாமல் இருக்கின்றனர். வேதத்துடன் ஒத்து போகாத பாரம்பரியங்களும் மேய்ப்பர்களின் போதனைகளும் சொல்வதை காலா காலமாக நம்பி அதுதான் உண்மை என தங்கள் மனதில் நிர்ணயம் பண்ணி விடுவதால் உண்மைகள் கூறப்படும் போது அதை அவர்களால் ஏற்க முடிவதில்லை