இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பழைய ஏற்பாட்டு நீதிமான்களும் பரலோகமும்


புதியவர்

Status: Offline
Posts: 3
Date:
பழைய ஏற்பாட்டு நீதிமான்களும் பரலோகமும்
Permalink  
 


சகோதரரே,

 

கர்த்தரின் பரிசுத்த நாமத்தில் வாழ்த்துக்கள்.

புதிய ஏற்ப்பாட்டில் பரலோகம் தேவ பிள்ளைகளுக்கு அருளப்பட்டிருப்பது போல பழைய ஏற்பாட்டு தேவ தாசர்களுக்கு (உம்: மோசே, தாவீது, யோசேப்பு, தானியெல்...) வெளிப்படுத்தப்பவில்லையே. அல்லது அவர்களுக்கு அருளப்பட்டிருந்தும் அவர்கள் அதைப்பற்றி குறிப்பிடுவதாக வசன்ங்கள் எதிலும் சொல்லப்படவில்லையே. 

பழைய ஏற்பாட்டில் ஒரே ஒருவசனம் இவ்வாறு வருகிறது: ”சங்கீதம் 73:25 பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.” இதைதவிர மற்ற எல்லா இடங்களிலும் “பரலோகத்திலிருக்கிற தேவரீர்”  என்று தேவன் பரலோகத்திலிருப்பவர் என்று மட்டுமே பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதியயேற்பாட்டிலோ நுற்றுக்குமேற்பட்ட வசனங்கள் பரலோகம் மனிதருக்கும் உரியது என்ற கருத்துடன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

உதாரணம்:

 

மத்தேயு 5:3 ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.

 

மத்தேயு 5:10 நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.

 

மத்தேயு 5:12 சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; 

 

மத்தேயு 5:20 வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மற்றும் பல.

 

எனில், பலோகத்தக்குறித்த பழைய எற்பாட்டுப் பரிசுத்தவான்களின் நம்பிக்கை என்ன? அவர்கள் அனைவரும் (சங்கீதம் 73 ஐ எழுதிய ஆசேப்பைத்தவிர) மற்றவர்கள் மரித்தபின் என்ன நடக்கும் என்பதைக்குறித்த வெளிப்பாடுகளைப்பெற்றிருந்தார்களா?

//II இராஜாக்கள் 2:11 அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினிரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்.//

மேற்குறிப்பிட்ட வசனத்திலும், பரலோகத்திற்குத்தான் தான் எடுத்துக்கொள்ளப்படப்போகிறோமா என்று எலியாவுக்குத்தெரிந்திருந்தா என்பதையும் அறியமுடியவில்லை. 

இதை விளக்க முடியுமா? நன்றி.

 

 



__________________


இனியவர்

Status: Offline
Posts: 52
Date:
Permalink  
 

நல்ல கேள்விதான் அண்ணா ஆனால் வேத புத்தகத்தில் "பரலோகம்" என்று சொல்லப்படும் இடம் ஒன்றே ஒன்றுதானா?
பரலோகம் என்று ஒரே ஒரு இடம்தான் இருக்கிறதா 
 
எனது பார்வைக்கு  அனேக வாசஸ்தலங்கள் என்று  வேதம் சொல்வதால் பல்வேறு பரலோகங்கள் இருக்கலாம் என்று எண்ணுகிறேன்.    

 



__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
Permalink  
 

யோவான் 14:2

என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால்,

நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.

இங்கே பிதாவின் வீட்டில் என்று வருகிறது நண்பரே.
ஒரே ஒரு பரலோகமே உண்டு.



__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



இளையவர்

Status: Offline
Posts: 35
Date:
Permalink  
 

மேட்டுக்காக அச்சமுண்டாகி, வழியிலே பயங்கள் தோன்றி, வாதுமைமரம் பூப்பூத்து, வெட்டுக்கிளியும் பாரமாகி, பசித்தீபனமும் அற்றுப்போகாததற்குமுன்னும், மனுஷன் தன் நித்திய வீட்டுக்குப் போகிறதினாலே, துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியிலே திரியாததற்குமுன்னும்,(பிரசங்கி 12:5 )

பிரசங்கி இதில் நித்திய வீட்டை பற்றி குறிப்பிட்டுள்ளார் நித்திய வீடு என்பது பரலோகத்தை குறிக்கும் சொல் என்று நினைக்கிறேன் ஆகையால் பரலோகம் மனிதர்களுக்கும் உரியது என்று அவர்களுக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

சகோதரர்  அவர்கள் குறிப்பிடுவதுபோல பழைய ஏற்பாட்டில் அதாவது ஆண்டவராகிய இயேசுவின் மரணத்துக்கு முற்ப்பட்ட நாட்களில் மனுஷர்களுக்கு பரலோகம் வாக்கு பண்ணப்படவில்லை. மாறாக பழைய ஏற்ப்பாட்டு  நீதிமான்களுக்கு இந்த பூமியே சுதந்தரித்து கொள்ளவும் அதில்  அதில் என்றைக்கும் வாசம்பண்ணவும் வாக்கு பண்ணபட்டுள்ளது என்பதை நாம் கீழ்கண்ட வசனம் மூலம் அறியலாம்!
 
சங்கீதம் 37:9 கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் 
 
சங்கீதம் 37:29 நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.
 
ஏசாயா 60:21 உன் ஜனங்கள் யாவரும் நீதிமான்களும், என்றைக்கும் பூமியைச் சுதந்தரிக்குங் குடிகளும், நான் நட்ட கிளைகளும், நான் மகிமைப்படும்படி என் கரங்களின் கிரியைகளுமாயிருப்பார்கள்
 


-- Edited by SUNDAR on Saturday 27th of July 2013 03:56:25 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

agbenjamin wrote:

//சங்கீதம் 37:29 நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்//

ஆனால் பழைய ஏற்பாட்டு நீதிமான்கள் பூமியைச் சுதந்தரிக்கவோ, என்றைக்கும் அதில் வாசமாகவும் இல்லையே. அனைவருமே மரித்துப்போனார்களே?


 அன்பான சகோதரரே,

 
"என்றென்றைக்கும்" எனப்படும் "நித்திய"மானது சாத்தானின் முடிவுக்கு பின்னரே இந்த பூமியில் ஸ்தாபிக்கப்படும்.
 
சாத்தான் இருக்கும்வரை யாரும் நித்திய மகிழ்ச்சியாக இருக்கமுடியாது.
 
எனவே வாக்குத்தத்தம் என்பது  கிறிஸ்த்துவுக்கு முன்னர் பழைய ஏற்ப்பட்டு காலத்தில் கொடுக்கபட்டாலும் அதன் நிறைவேறுதலானது கிறித்துவின் மூலமாகவே சாத்தியமாகும். சத்துருவாகிய சாத்தான்  ஜெயம்கொள்ளபட்ட பிறகே அது நிறைவேறும்    
 
 வெளி 20:12 மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
 
இதன் தொடர்ச்சியே,
 
சங்கீதம் 37:29 நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.   என்பது
 
அதுவரை 
எசா 57:2. நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்துக்குள் பிரவேசித்து தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்.
என்பது எனது கருத்து. 

 

 
 


-- Edited by SUNDAR on Friday 2nd of August 2013 05:38:01 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



புதியவர்

Status: Offline
Posts: 3
Date:
Permalink  
 

//சங்கீதம் 37:29 நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்//

ஆனால் பழைய ஏற்பாட்டு நீதிமான்கள் பூமியைச் சுதந்தரிக்கவோ, என்றைக்கும் அதில் வாசமாகவும் இல்லையே. அனைவருமே மரித்துப்போனார்களே?



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard