பணந்தின்னிக் கழுகுகள் பல – திரு மண்டலங்களைக் கட்டி ஆளட்டும் கேரீத்தின் காகம் நீ, பசித்த பாலகரின் வயிறுகளை போஷிக்கப்போ!
நசல்கொண்ட ஆட்டைக் கண்டு நரிசேயர்கள் விலகிப் போகட்டும் நல்ல சமாரியன் சந்ததி நீ – காயம் கட்ட புசல் போல விரைந்து போ!
ஆராதனை வீரர்கள் தங்கள் ஆல்ப வியாபாரங்களில் திளைக்கட்டும் ஆபேலின் வம்சம் நீ, இரத்த சாட்சிபலியாகப் புறப்பட்டுப் போ!
திருப்பணி வழியாக திரவியங்கள் தேடுவோர் திரைகடல்கள் மீதிலே திசைகெட்டு ஓடட்டும் – நாசரேத்தூர் தச்சன் கட்டிய படகு நீ திக்கற்றவன் திரிந்தலையும் திசைகளைத் தேடிப்போ!