இயேசுவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கபட்ட சுமார் 75 வயதை கடந்து விட்ட எனது அத்தை ஒருவருக்கு கடந்த ஒரு மாத காலமாக கால் முழுவதும் ஆறாத புண் ஏற்பட்டு நரம்பு மற்றும் எலும்பு வரை பாதிக்கபட்டு, கடும் வேதனையோடு மரணமும் வராமல் எழுந்து நடக்கவும் முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள் அவர்களின் சமதனானத்துக்காக ஜெபித்து கொள்ளுங்கள்!
வயதான காலங்களில் மனுஷர்கள் மீண்டும் ஒரு குழந்தை நிலைக்கு திரும்புவதோடு அவர்களின் தாங்கும் சக்தியும் குறைந்து விடுகிறது. அந்நேரங்களில் இதுபோன்ற கொடிய புண்களும் வியாதிகளும் வந்து தாக்கும்போது அவர்களை பார்த்தால் "என்ன உலக வாழ்க்கை" என்றெண்ணி நம்முடைய மனதெல்லாம் உடைந்து விடுகிறது.
இந்த உலகில் ஏன் இப்படி நடக்கிறது? நாம் நல்லவர்கள் என்று நினைக்கும் பலர் கொடிய வேதனை அனுபவிக்கிறார்கள்! நாம் மோசமானவர்கள் என்று நினைக்கும் பலர் எந்த வேதனையும் இல்லாமல் வாழ்ந்து செத்து போகிறார்களே.
எது யாருக்குஎந்த நேரத்தில் எந்த ரூபத்தில் வரும் என்று நிர்மாணிக்க முடியாத உலகில் நாம் வாழ்கிறோம். எத்தனையோ பாடுகளுடனும் வேதனைகளுடனும்
வாழும் மனுஷர்கள் மத்தியில், ஒவ்வொரு நாளும் நம்மை சுகத்துடன் காப்பதற்காக தேவனுக்கு நன்றி செலுத்த மறக்கவேண்டாம்!
-- Edited by SUNDAR on Thursday 25th of July 2013 04:00:09 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)

கர்த்தாவே மனதுருக்கம் உள்ள தேவனே இந்த சகோதரிக்கு ஒருவிசை மனமிறங்கி உதவிசெய்யுமப்பா என்னுடைய சமாதானத்தையே உங்களுக்கு விட்டுச்செல்லுகிறேன் என்று சொன்னீரப்பா அந்த சகோதரிக்கு சமாதானமும் சுகமும் கிடைக்க உதவி செய்யும் ஆண்டவரே அந்த சரீரத்தில் உள்ள புண்கள் உம்முடைய தழும்புகளால் சுகப்படட்டும் ஆண்டவரே ஆமென்
என் அத்தையின் உடல் நலம் குணமடைய ஜெபித்த சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த நன்றி.
காலில் அழுகிப்போன சதைகளை எல்லாம் நீக்கிவிட்டதால் தற்போது ஓரளவு குணமாகிவிட்டது விரைவில் பூரணம் குணம் அடைவார்கள் என்று கர்த்தருக்குள் விசுவாசிக்கிறேன்.
மேலும் இன்னொரு விஷயம் என்னவெனில்:
என் அத்தைக்காக நான் ஜெபித்தபோது "வயதான இந்த காலத்தில் அவர்களால் இவ்வளவு வலியை எப்படி தாங்க முடியும் ஆண்டவரே அவர்கள் கால் வலியில் பாதிவலியை நான் தாங்கிக்கொள்ள தயாராக இருக்கிறேன்" என்று மிகுந்த வியாகுலத்துடன் அழுது ஜெபித்து கொண்டே இருந்தேன்.
அதிசயப்படும் விதமாக என்னுடைய இடது காலில் எந்த பாதிப்பும் ஏற்ப்பட்டமலேயே, எங்கு வலிக்கிறது என்று தெரியாமலேயே கடந்த 15 நாட்களாக கடுமையாக் வலிக்கிறது. நீண்ட தூரம் பிரயாணம் செய்து வேலைக்கும் செல்லும் எனக்கு இந்த வலி கஷ்டமாக இருந்தது. நான் நொண்டி நொண்டி நடந்து கஷ்டப்படுவதை கவனித்த என் மனைவி "யாருடைய வலியையும் நான் தாங்க தயாராக இல்லை" என்று ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்கள் உங்கள் வலி உடனே போய்விடும் என்று பலமுறை சொல்லிபார்த்தாள் ஆனால் அதை ஏற்க்கவில்லை.. சந்தோசத்தோடு அதை தாங்கிக்கொண்டு என்னுடைய வேலைகளை தொடர்கிறேன். இதை தொடர்ந்து எனது அத்தையும் குணமடைய ஆரம்பித்துவிட்டார்கள்.
இது வேத வசனத்தின் அடிப்படையில் சாத்தியமா என்று ஆராய்ந்த பொது நாம் மனதார விரும்பினால் ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்க முடியும் என்று கீழ்கண்ட வசனம் போதிக்கிறது.
கலாத்தியர் 6:2ஒருவர்பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.
மேலும் எசேக்கியேல் இஸ்ரவேலரின் அக்கிரமத்தை சுமந்ததாக கீழ்கண்ட வசனம் சாட்சியிடுகிறது:
எனவே வசனத்தின் அடிப்படையில் உண்மை என்று நம்புவோர் நம்பலாம் நம்பாதோர் நிராகரிக்கலாம்.
முடிவாக எந்த காரியத்தினிமித்தம் இந்த வேதனைகள் உண்டாகியிருந்தாலும் பாவங்களின் பரிகாரியாகிய கர்த்தர் அந்த பாவங்களை பரிகரித்து வேதனைகளை முற்றிலும் நீக்கிபோட மன்றாடுகிறேன். தள சகோதரர்களும் எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
அந்த நோயையும், அதினால் வரும் வலியையும், தாங்கள் சுண்துகொண்ட வலியையும்,உங்கள் அத்தையின் பரமதகப்பனாகிய ஆட்டுக்குட்டியானவர் மீது வைத்து விடுங்கள். அவர் பாரங்களை ஏற்றுக்கொண்டு பரிபூரணாமாய் சமாதானத்தையும்,விடுதலையையும்,இளைப்பாருதலையையும் அளிக்கவல்லவர்.
உங்கள் ஜெபத்தில் நீங்கள் சொல்லிய 'பாதி வலியை தாங்கி கொள்கிறேன்' என்ற வார்த்தைகளின் நிமித்தம், தங்கள் சரீரத்தின் வலியை பிசாசு ஏற்படுத்தி இருக்கிறான்!!! உங்கள் ஜெபத்தின் நிமித்தம், இந்த வலிகளை தேவன் பிசாசின் தர்கிப்பினாலேயே அனுமதிக்கிறார்!!
இனி இவ்வாறு ஜெபிக்காதீர்கள்.அது ஏன் தங்களுக்கு இத்தகைய தங்கள் ஜெபத்தால் நேர வேண்டும்!?
தங்களுக்கும்,தங்கள் அதைக்கும் பூரண சுகம் கிடைக்க கர்த்தர் கிருபை செய்வாராக!!!
அந்த நோயையும், அதினால் வரும் வலியையும், தாங்கள் சுண்துகொண்ட வலியையும்,உங்கள் அத்தையின் பரமதகப்பனாகிய ஆட்டுக்குட்டியானவர் மீது வைத்து விடுங்கள். அவர் பாரங்களை ஏற்றுக்கொண்டு பரிபூரணாமாய் சமாதானத்தையும்,விடுதலையையும்,இளைப்பாருதலையையும் அளிக்கவல்லவர்.
இனி இவ்வாறு ஜெபிக்காதீர்கள்.அது ஏன் தங்களுக்கு இத்தகைய தங்கள் ஜெபத்தால் நேர வேண்டும்!?
GLORY TO GOD THE LORD
சகோதரரே சுமார் ஒரு மாதம் என் அத்தைக்காக அதிக பிரயாசம் எடுத்து ஜெபித்தும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் கால் அதிகமதிகமாக அழுகிபோனபின்னரே எனக்குள் ஏற்ப்பட்ட தூண்டுதலின்மித்தம் அவ்வாறு ஜெபித்தேன். பின்னர் அதற்கொரு முடிவும் வந்தது.
இந்த யோசனை எனக்கு முன்பே இல்லாமல் போனதால் என்னுடைய தகப்பனார் கடுமையான நோயால் பாதிக்கபட்டு மருத்துவ மனையில் அவதிப்பட்டபோது அழுது அழுது வெறும் ஜெபம் மட்டும் செய்தேன் கடைசியில் 15 நாட்களுக்கு பின்னர் இறந்து போனார்கள்.
பிறர் பாரங்களை சுமக்க விரும்பாவிட்டாலும் சரி சுமக்க விரும்புகிறவர்களையும் தேவன் மூலம் உணர்த்துதலை பெற்று சில காரியங்களை செய்பவர்களையும் இளைப்படைய செய்யும் வார்த்தைகளை சொல்லவேண்டாம்.
நம் ஆண்டவர் நம்முடைய பாவங்களை சுமந்தார் நமக்காக அடிபட்டார் என்பது உண்மைதான்! அதக்காக அவரை ஏற்றுக்கொண்ட எல்லோரும் துன்பம் துக்கம் வேதனை இல்லாமல் வாழ்ந்து மரிப்பது இல்லை. அதிகம் ஜெபிக்காதவனில் இருந்து பல மணி நேரம் ஜெபிக்கும் தேவ ஊழியர்கள் எல்லோருமே பல்வேறு வேதனை துன்பம் இவற்றும் கடந்து செல்வதையே நாம் பார்க்கிறோம்.
உண்மை அவ்வாறிருக்க, நம் கண்முன்னே ஒருவர் வேதனைப்படும் போது தேவனிடம் மன்றாடுவதொடு "நான் என்ன செய்யவேண்டும்?" என்று துடிக்காமல், பாரத்தை எல்லாம் தேவன் மேல் போட்டுவிட்டு அது அவன் விதி என்று கண்ட்மூடித்தனமாக இருப்பது பிற மதத்தார் செய்யும் செயல்.
"என்னை தண்டியும் அவர்களை விட்டுவிடும்" என்று மன்றாடிய மோசேயை போல, தாவீதை போல நாமும் மன்றாடுவதில் எந்த தவறும் இல்லை.
மாறாக அந்த காரியங்களை நீங்கள் செய்ய விரும்பாததோடு, பிறரையும் செய்யவிடாமல் தூண்டும் செயலை செய்வது தவறானது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
//மாறாக அந்த காரியங்களை நீங்கள் செய்ய விரும்பாததோடு, பிறரையும் செய்யவிடாமல் தூண்டும் செயலை செய்வது தவறானது.//
நான் செய்ய விரும்பாமலும் இல்லை,தங்களை தூண்டவும் இல்லை. நான் அவ்வாறு கூறியது செபிக்கவேண்டாம் என கூறியதில் அர்த்தம் இல்லாமல் இல்லை.
வேதத்தில் தேவனுக்கு பிரியமானவர்களின் ஜெபங்களுக்கும்,அவசர ஜெபங்களுக்கும்,பதட்டத்தில் பிறக்கும் ஜெபங்களுக்கும்,பிலேயாம் போன்றவர்களின் ஜெபங்களுக்கும்,தேவகுமாரனின் ஜெபங்களுக்கும்,கர்த்தர் நமக்கு கர்த்தர் கற்பித்த ஜெபத்துக்கும் உள்ள வித்தியாசங்களுக்கும்,அவைகள் எந்த தன்மையை பெற்றிருந்தன,கர்த்தர் அவர்களுக்கு கொடுத்த பதிலின் தன்மை என ஆராய்ந்தால் நான் கூறுவதின் அர்த்தம் புரியலாம்.
மேலும் சகோதரரே, தங்களை மனமடிவாகுதல் என் எண்ணமில்லை. கசப்பான காரியங்களை தங்களுக்கு நினைவுபடுத்தியமைக்கு என்னை மன்னிக்கவும்.