தேவன் மனுஷனுக்கு அளித்துள்ள மிக மிக மேலான இறுதியான வாக்குத்தத்தம் என்ன?
I யோவான் 2:25நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.
ஆம்! மனுஷனுக்கு நித்திய ஜீவனை அதாவது முடிவில்லா வாழ்வை அளிப்பதுதான் தேவனின் பிரதான திட்டம் மற்றும் வாக்குத்தத்தம். அதுமே ஒவ்வொரு கிறிஸ்தவ விசுவாசியும் எதிர்பாத்திருக்கும் எதிர்பார்ப்பும் கூட.
இந்த பிரதான திட்டத்தை தேவன் எவ்வாறு நிறைவேற்றுகிறார்?
வேதம் இவ்வாறு சொல்கிறது!
யோவான் 3:16தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனைஅடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
தன் ஒரே பேரான குமானாகிய இயேசுவின் மூலமாக இந்த் நித்திய ஜீவனை பூமிக்கு கொண்டுவந்தார்!
நித்தய ஜீவன் தற்போது யாரிடம் இருக்கிறது?
வேதம் இவ்வாறு சொல்கிறது.
I யோவான் 5:11 தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச்சாட்சியாம்.
நித்திய ஜீவன் என்பது குமாரனாகிய இயேசுவிடம் இருக்கிறது
நித்திய ஜீவன் எவ்வாறு மனுஷனை வந்தடையும்?
யோவான் 6:40குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன், நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.
இயேசுவை கண்டு அவரிடம் விசுவாசமாய் இருப்பவன் நித்திய ஜீவனை அடைந்து கடைசி நாளில் எழுப்பபடுவான்.
இவ்வாறு இயேசுவின் மூலம் நித்திய ஜீவனை பெற்றவன் ஒருகாலும் கெட்டுபோக மாட்டான் என்று இயேசு உறுதியாக சொல்கிறார்!
யோவான் 10:28நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.
இவ்வாறு இயேசு சொல்வதன் மூலம், இயேசுவின் கரத்தின் கீழ் வந்தவர்கள் ஒருகாலும் கெட்டுபோக மாட்டார்கள் என்றும் அவர்களுக்கு நித்திய ஜீவன் நிச்சயம் உண்டு என்றும் எடுத்து கொள்ளலாம் என்று கருதுகிறேன்.
சகோதரர்களின் கருத்து என்ன?
-- Edited by SUNDAR on Tuesday 30th of July 2013 07:15:35 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)