இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சுவிசேஷத்தைக் கேள்விப்படாதவர்களை தேவன் நரகத்துக்கு அனுப்புவது சரியா?
சுவிசேஷத்தைக் கேள்விப்படாதவர்களை தேவன் நரகத்துக்கு அனுப்புவது சரியா? [4 vote(s)]

சரிதான்...
25.0%
சரியில்லை...
75.0%
தெரியவில்லை...
0.0%
இச்செய்தியை படித்து புரிந்து கொள்கிறேன்...
0.0%


இளையவர்

Status: Offline
Posts: 27
Date:
சுவிசேஷத்தைக் கேள்விப்படாதவர்களை தேவன் நரகத்துக்கு அனுப்புவது சரியா?
Permalink  
 


 

77. சுவிசேஷத்தைக் கேள்விப்படாதவர்களை தேவன் நரகத்துக்கு அனுப்புவது சரியா?no

 

 

 

 

 

Tamil Bible Q and A (பைபிள்கேள்வியும்பதிலும்) www.tamil-bible.com http://tamilbibleqanda.blogspot.com -லிருந்து எடுக்கப்பட்டது

 

Monday, November 26, 2012

 

கேள்வி: நம்மைச் சுற்றி எத்தனையோ பேர் உள்ளனர். இயேசுவை அறியாதவர்கள் எத்தனையோ நல்லவர்கள் இருக்கிறார்கள், இறந்து போகிறார்கள். அவர்களுக்கு இயேசுவைப்பற்றி யாரும் சொல்லாமலே இறந்தும் போகிறார்கள். அவர்கள் அநேக நன்மைகள் செய்து இருக்கலாம், மற்றவர்களால் துன்புறுத்தப்பட்டு இருக்கலாம். இவர்கள் அனைவரும் நரகத்துக்கு போவார்களா அல்லது வித்தியாசமான நியாயத்தீர்ப்பு இருக்குமா?

பதில்:
இந்தக் கேள்வி பல ஆண்டுகளாக  எழுப்பப்பட்டுள்ளது. பைபிளில் சொல்லப்பட்டுள்ள  சுவிசேஷத்தை கேள்விப்படாதவர்களும் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுவார்கள் என்று காட்டுவதுபோல் உள்ளது. இப்படி வாய்ப்பு கிடைக்காதவர்கள் நரகத்துக்கு போவது நியாயமாக தோன்றவில்லை என்ற எண்ணம் எழுவது இயல்பு. இன்று தொழில்நுட்பமானது எங்கேயோ சென்றுவிட்டது, இப்படி இயேசுவைக் கேள்விப்படவதர்கள் ஒருவேளை மிகவும் சொற்பமானவர்களாக இருக்கலாம்.

"எத்தனையோநல்லவர்கள்இருக்கிறார்கள்" என்பதுமுழுக்கதவறு. There is no one good. நல்லவன் ஒருவனும் இல்லை என்று பைபிளில் தெளிவாக உள்ளது (ரோமர் 3:10-12) . நீங்கள் நல்லவர்கள் என்று நினைப்பவர்களின் மற்ற பக்கங்கள் உங்களுக்கு தெரியாது. மிகவும் சரியாக சொல்லவேண்டும் என்றால் நம்மைப்பற்றியே நமக்கு சரியாக தெரியாது. கொடுக்கப்பட்ட ஒரு சூழ்நிலையில் எப்படி நடந்துகொண்டோம், ஏன் இப்படி செய்தோம், நினைத்தோம், பேசினோம் என்று வருந்துபவர்கள் எல்லாருமே. எனவே பைபிளில் நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை, இருதயமே மகா திருக்கும், கேடுள்ளதுமாக இருக்கிறது -heart is deceitful and desperately wicked என்பது முழுக்க முழுக்க உண்மை.

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னையன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்றும், நானே ஆடுகளுக்கு வாசல் என்வழியாய் பிரவேசியாமல் வேறு வழியாய் பிரவேசிக்க முயற்சிப்பவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாக இருக்கிறான் என்று தெளிவாக இயேசு சொல்லியிருக்கிறார்.

இயேசுவைப்பற்றி கேள்விப்படாதவர்களைப் பற்றிய நியாயத்தீர்ப்பைப் பார்ப்போம். இதற்காக பதில் பைபிளில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்று பார்ப்போம். அப்போஸ்தலனாகிய பவுல் இப்படியாக சொல்கிறார்.

ரோமர் 2ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம்:

14. அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் (naturally) நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள்.

15. அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்க்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.

16. என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.











-- Edited by Sugumar S T on Saturday 17th of August 2013 08:38:06 AM

__________________

Sugumar Samuel T

யோவான் 8:32சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.



இளையவர்

Status: Offline
Posts: 27
Date:
RE: சுவிசேஷத்தைக் கேள்விப்படாதவர்களை தேவன் நரகத்துக்கு அனுப்புவது சரியா?
Permalink  
 


ஒருமுறை ஒரு கிராமத்துக்கு என் தந்தையோடு சென்றேன், அங்கே செல்ல பேருந்து கிடையாது, வயல்-வரப்புகளைத் தாண்டி செல்லவேண்டும்.  அப்போது மிகவும் இளைஞனாக இருந்தேன். ஒரு வயதான முதியவரிடம் "இயேசுவைத் தெரியுமா?" என்றேன். "எனக்கு  அவங்க வீடு தெரியாது,  கடைக்காரரிடம் கேளுங்கள் அவருக்குத் தெரியும்" என்றார். இயேசுவைப்பற்றி கேள்விப்படாத சிலர் வாழ்ந்த கிராமம் அது. பின்புதான் தேவனைப்பற்றி விளக்க ஆரம்பித்தேன். அதே கிராமத்தில் ஒருவரிடம் "கெட்ட வார்த்தை பேசுவது சரியா?" என்றேன். "தப்புதான்" என்றார்.  "திருடினால்?" என்றேன்... "வரண்டுவது தப்புதான்" என்றார். "பொய், கொலை... என்று சொல்லிக்கொண்டே போகும் போது இதெல்லாம் தவறு என்று யார் இவர்களுக்கு சொன்னது? என்ற எண்ணம் எழுந்தது.   ஆனால் இதெல்லாம் இவர்களுடைய இருதயத்தில் எழுதப்பட்டுள்ளது.

புறஜாதியார் அவர்கள் செய்யும் பாவம் மற்றும் பாவம் அல்லாத கிரியைகளைக் கொண்டே நியாயத்தீர்ப்பு அடைவார்கள். நியாயத்தீர்ப்பு தங்களுக்கு தெரியாத ஒரு அளவுகோல் வைத்து அல்ல தெரிந்த அளவுகோல் வைத்துதான்.  ஆனால் புறஜாதியாரில் அவர்களுடைய அளவுகோலின்படி பாவம் செய்யாதவர் யார்?


யோவான் 8ம் அதிகாரத்தில் நாம் அறிந்த சம்பவம் இங்கே நம் நினைவிற்காக: 
அவர்(இயேசு) நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொன்னார்...அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார். (இங்கே பாவம் செய்யாதவர் இயேசு மட்டுமே! இல்லையென்றால் அவரும் சென்றிருக்கவேண்டும்)

இயேசுவைப்பற்றி கேள்விப்பட்டு அதை தள்ளிவிட்டவர்களும் ஆக்கினைத்தீர்ப்பு அடைவார்கள். இயேசுவை ஏற்றுக்கொண்டு பாவத்தில் ஜீவிப்பவர்களும் ஆக்கினைத்தீர்ப்பு அடைவார்கள்.

II கொரிந்தியர் 5:10 ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும். 

தேவன் நீதியுள்ள நியாயாதிபதி. தீட்டும், தீங்குள்ளதொன்றும் அதற்குள் (பரலோகத்திற்குள்) பிரவேசிப்பதில்லை.

I பேதுரு 4:18 நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?



__________________

Sugumar Samuel T

யோவான் 8:32சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.



இளையவர்

Status: Offline
Posts: 27
Date:
சுவிசேஷத்தைக் கேள்விப்படாதவர்களை தேவன் நரகத்துக்கு அனுப்புவது சரியா?
Permalink  
 


ஆகவே இந்த கட்டுரைபடி பார்த்தல், இயேசுவின் சுவிசேசத்தை கேட்காமால் மறித்து போயிருந்த மனிதன் தன மனசாட்சியின்படி நன்மை செய்திருந்தால் அவன் பரலோகம் வர வாய்ப்பு இருபதாக தெரிகிறது...

 

இதனை இத்தள சகோதிரர்கள் ஏற்று கொள்கிறீர்களா...?



-- Edited by Sugumar S T on Wednesday 21st of August 2013 06:31:45 AM



-- Edited by Sugumar S T on Wednesday 21st of August 2013 06:44:29 AM

__________________

Sugumar Samuel T

யோவான் 8:32சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

சுவிசேஷம் பற்றியே கேள்விப்படாத ஒருவரை நரக தண்டனைக்கு அனுப்புவது என்பது நீதி / நியாயமில்லாத ஒரு காரியம். அப்படிபட்ட காரியத்தை மகா நீதிபரராகிய தேவன் நிச்சயம் செய்யவே மாட்டார். எனவே அது  சரியாய் தவறா என்ற கேள்விக்கே இடமில்லை.  எனவே இந்த கேள்விக்கான பதிலை அறிவதற்கு நாம் இறுதி வெள்ளை சிங்காசன நியாய தீர்ப்பு பற்றிய வசனங்களை ஆராயலாம். 
 
வெளி 20:12 மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
வெளி 20: 13. சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
 
மேலேயுள்ள வசனத்தின்படி "தங்கள் தங்கள் கிரியையின் படி நியாயதீப்படைந்த ஜனங்களை பார்க்கிறோம். இதில் ஒரு கூட்டம் மரித்துபோனவர்கள் இன்னொரு கூட்டம் பாதாளத்தில் இருந்து வந்தவர்கள். இவர்கள் சுவிசேஷத்தை கேட்டு ஏற்காதவர்களா அல்லது சுவிசேஷத்தை கேள்விப்படதவர்களா என்பது பற்றிய விளக்கம் இல்லாவிட்டலும் தங்கள் தங்கள் கிரியையின்படி நியாயதீப்படையும் சில கூட்டம் இருக்கிறது என்பதை நாம் அறிய முடியும். இந்த கூட்டத்தில் சுவிசேஷத்தை கேள்விப்படாதவர்கள் இருப்பார்கள் என்பதே எனது புரிதல். 
    
அடுத்து, 
 
14. அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.
 
மரணம் என்பது ஒருவருடைய பெயர் என்றும் பாதாளம் என்பது அவனுக்கு பின்னே செல்கிறது என்றும் வேதம் நமக்கு 
 
வெளி 6:8 நான் பார்த்தபோது, இதோ, மங்கினநிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது
 
இந்த மரணம் என்பவனும் அவன் பின் செல்லும் பாதாளம் முழுவதும் அக்கினி கடலிலே தள்ளபடுகிறது. 
 
 
அடுத்து, 
வெளி 20:15 ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.
 
இந்த வசனம் ஒரு தனி கூட்டத்தை பற்றி பேசுகிறது.  இந்த வசனத்தை நாம் சற்று கூர்ந்து ஆராய்ந்தால் " ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ" என்ற வார்த்தையின் அடிப்படையில் பார்க்கும்போது "முதலில் ஜீவ புஸ்தகத்தில் பெயர் எழுதப்பட்டவன்! பின்னர் நியாய தீர்ப்பு நாளில் அந்த பெயர் புத்தகத்தில் காணப்படாமல் கிருக்கிபோடப்பட்டவன்" என்று பொருள் கொள்ளமுடியும்.
 
இந்த கூட்டமே இயேசுவை ஏற்றுக்கொண்ட இரட்சிக்கபட்ட ஜீவ புஸ்தகத்தில் பெயர் எழுதப்பட்ட கிறிஸ்த்தவர்களின்
கூட்டம். இங்கு இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்களோ அல்லது ஜீவ புஸ்தகத்தில் பெயர் எழுதப்படாதவர்களோ அடங்க மாட்டார்கள்.  
 
இங்கு நாம் மேலும் அறியும் முக்கியமான விஷயம் என்னவென்றால் இயேசுவை கேள்விப்படாதவர்களை விட அவரை கேள்விபட்டு ஏற்றுக்கொண்டு பின்வாங்கிபோனவர்களுக்கு தண்டனை கடுமையாக இருக்கும் என்பதை நாம் அறிய முடியும்.
 
எபிரெயர் 6:4 ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,
எபிரெயர் 6:5 தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,
 
எபிரெயர் 6:8 முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது;சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.
 
II பேதுரு 2:21 வர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்த பின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.   
 
 
 

இவ்வசனங்களின் அடிப்படையில் ஜீவா புஸ்தகத்தில் பெயர் எழுதப்பட்டு கிறுக்கி போடபட்டவர்களே இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரியும் கடலில் பங்கடையும் நிலை இருக்கிறது என்பதை அறிதல் நலம். எனவே பிறரை நியாயம் தீர்த்துக்கொண்டு திரிவதை காட்டிலும் இயேசுவை ஏற்றுக்கொண்டுள்ள நாம் அதிக ஆக்கினை அடையாமல் தப்பிக்கசெய்ய வேண்டிய காரியங்களில் கவனம் செலுத்துவது மிக மிக அவசியம்.

ஆகினும் இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களின் மிகப்பெரிய மேன்மை மேன்மை என்ன என்பதையும் அறிதல் அவசியம்!  

 
பூமியில் வாழும் எந்த மனுஷனும் மரணத்தில் இருந்தும் மரித்தபின் மரிக்கும்  பாதாளத்தின் வல்லடிக்கும்  தப்பிக்கவே  முடியாது!
 
சங்கீதம் 89:48 மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கிவிடுகிறவன் யார்? 
 
எனவே இயேசுவை ஏற்றுகொள்ளாதவர்கள் மரித்த்ததும் பாதாளத்தில் இறங்குகிறார்கள். அங்கு நியாயதீர்ப்பு நாள்வரை அவர்கள் வேதனை அனுபவிக்க வேண்டும்.
 
 
ஆனால் இயேசுவை ஏற்றுக்கொண்டு சபைக்குள் வருவோருக்கு உடனடி மேன்மை உண்டு! 
 
 
மத்தேயு 16:18  இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
 
 
ஆம்! இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களை பாதாளத்தின் வாசல்கள் மேற்கொள்ளுவதில்லை!  இதுவே அவர்களின் உடனடி மேன்மை!

 



-- Edited by SUNDAR on Wednesday 28th of August 2013 12:18:47 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 27
Date:
RE: சுவிசேஷத்தைக் கேள்விப்படாதவர்களை தேவன் நரகத்துக்கு அனுப்புவது சரியா?
Permalink  
 





Recall this once more. But you should also allow Jesus Christ to come into your heart....



__________________

Sugumar Samuel T

யோவான் 8:32சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.



இளையவர்

Status: Offline
Posts: 27
Date:
சுவிசேஷத்தைக் கேள்விப்படாதவர்களை தேவன் நரகத்துக்கு அனுப்புவது சரியா?
Permalink  
 


ஒருவேளை ஒரு நபர் மனசாட்சின்யின்படி பாவி என்று விளங்கினால் அவன் நரகத்திருக்கு தள்ளப்படுவான்... எதற்கு Risk ...
இயேசுவை ஏற்றுக்கொள்வோம்... Sorry ... இயேசு நம்மை எற்றுகொள்ளட்டும்...



-- Edited by Sugumar S T on Tuesday 15th of April 2014 07:26:24 PM

__________________

Sugumar Samuel T

யோவான் 8:32சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

பூமியிலுள்ள யாவருக்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும் அப்பொழுது தான் முடிவு வரும் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது அல்லவா! எனவே சுவிசேஷம் சொல்லப்படாமல் ஒருவர் மரிப்பதில்லை எப்படியாவது அவருக்கு இயேசுவை பற்றிய செய்தி கடந்து போகும் என்பதே எனது கருத்து..

நமது தேவன் நீதியின் கர்த்தர்

வேதம் தெளிவாக சொல்கிறது இயேசுவை ஏற்றுக்கொள்ளாத யாவரும் நரகத்திட்கு தான் செல்ல வேண்டி வரும் என்று , ஆண்டவர் சொல்வதை செய்பவர். ஆக யாவருக்கும் சுவிசேஷம் கடந்து போகும்.

__________________


இளையவர்

Status: Offline
Posts: 22
Date:
RE: சுவிசேஷத்தைக் கேள்விப்படாதவர்களை தேவன் நரகத்துக்கு அனுப்புவது சரியா?
Permalink  
 


///பூமியிலுள்ள யாவருக்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும் அப்பொழுது தான் முடிவு வரும் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது//// . இது  உண்மை தான் சகோதரி .  ஏற்கனவே சுவிசேஷத்தை கேள்விப்படாமல் நிறைய பேர் மரித்து  விடடார்களே .சரி அதை விடுங்கள் 

 நீங்கள் சொல்கிறபடி ////இயேசுவை ஏற்றுக்கொள்ளாத யாவரும் நரகத்திட்கு தான் செல்ல வேண்டி வரும்////

 ஏன் இப்படி வேதம் சொல்கிறது என்றால்  

மன சாட்சியின் படி  தீர்க்கப்படும் எவருமே பரலோகம் போக மாட்டார்கள். ஏனெனில் மனசாட்சியின் படி தீர்க்கப் பட்டால் கூட எவருமே நீதிமான்கள் கிடையாது. நாம் நீதி என்று நினைப்பது எல்லாம் கர்த்தரின் பார்வையில் கந்தை துணி போன்றது.

 

சுவிசேஷத்தை கேள்விப்படாதவர்கள் மனசாட்சி படி விசாரிக்கப் படுவார்கள். அப்படி விசாரிக்கப்பட்டாலும் அவர்கள் நீதிமான்களாய் தீர்க்கப் பட மாட்டார்கள் . எனவே அவர்கள் பரலோகம் போக முடியாது. இதனால் தான் வேதம் அப்படி சொல்கிறது.



__________________

.................................................. எப்போதும் நான் ஒரு வேதாகம மாணவனே  ...............................................



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
சுவிசேஷத்தைக் கேள்விப்படாதவர்களை தேவன் நரகத்துக்கு அனுப்புவது சரியா?
Permalink  
 


சுவிசேஷத்தை கேள்விப்படாமல் அநேகர் மரித்து இருக்கிறார்கள் என்று உங்களுக்கு ஆணித்தரமாக சொல்ல முடியுமா நண்பா?
இல்லவே இல்லை நாம் பார்ப்பது மனுசன் பார்க்கும் விதமாக ஆனால் ஆண்டவர் அப்படி அல்ல.. அவர் நீதியின் தெய்வம் ஆகவே சுவிசேஷம் கேள்விப்படாமல் மரிப்பார்கள் அல்லது மரித்திருப்பார்கள் என்பது ஏற்க முடியாத கருத்தாக உள்ளது.

மனசாட்சிப்படி விசாரிக்கப்பட்டும் பரலோகம் போக முடியாவிட்டால் என்ன பயன் சகோதரா?

எமக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் சுவிசேஷம் யாவருக்கும் கடந்து போகும் என்பதே எனது கருத்து..

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

//சுவிசேஷத்தை கேள்விப்படாமல் அநேகர் மரித்து இருக்கிறார்கள் என்று உங்களுக்கு ஆணித்தரமாக சொல்ல முடியுமா நண்பா?//

இயேசுவின் இரட்சிப்பை பற்றிய செய்தியே சுவிஷேஷமாக அறிவிக்கப்படுத்திகிறது.

இயேசுவின் சிலுவை மரணத்திற்கு முன்னர் மரித்தவர்களுக்கு எப்படி சுவிசேஷம் அறிவிக்கப்பட்டிருக்கும்?

கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் சிஸ்ட்டர்.



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

இயேசுவின் சிலுவை மரணம் தான் சுவிசேஷம். இயேசுவின் வருகைக்கு முன்னர் தேவன் மோசேக்கு கொடுத்த கட்டளைகளையும் நியாயப்பிரமானங்களையும் யாவரும் அறிந்திருந்தார்கள் என்பதை நாம் வேதத்தை வாசிக்கும் போது அறிந்து கொள்ள முடிகிறது. ஆக அவர்களுக்கு ஆண்டவரை பற்றி அறிவிக்க வேண்டிய தேவை இல்லை. இருந்தும் பல தேவ ஊழியர்கள் மூலம் தேவன் அவரின் கட்டளைகளை ஜனங்களுக்கு ஞாபகப்படுத்தி வந்தார்.

__________________


இளையவர்

Status: Offline
Posts: 22
Date:
RE: சுவிசேஷத்தைக் கேள்விப்படாதவர்களை தேவன் நரகத்துக்கு அனுப்புவது சரியா?
Permalink  
 


'யேசுவின் சிலுவை மரணம் தான் சுவிஷேசம்' என்று சொல்வது தவறு சிஸ்டர் .

இயேசு சிலுவையில் மரித்தார் என்று தெரிந்தவர்கள் எல்லாம் சுவிசேஷத்தை அறிந்தவர்களா? அப்படியானால் இயேசு மரித்தார் என்பதை நம்பும் யாவரும் இரட்சிக்க பட்டிருக்க வேண்டும் அல்லவா? நானும் ஒரு காலத்தில் இயேசு சிலுவையில் மரித்தார் என்பதை நம்பினவன்தான். ஆனால் இரட்சிக்க படாமல் இருந்தேன்.

சுவிசேஷம் என்றால் நல்ல செய்தி அல்லவா? இயேசு மரித்தார் என்பதை மட்டும் சொல்வது துர் செய்தி அல்லவா? மரண செய்தி நல்ல செய்தியா?

சுவிசேஷம் என்பது 'இயேசு என்னுடைய பாவங்களுக்காக மரித்தார் என்பதையும்; அடக்கம் பண்ணப்பட்டு உயிர்த்தார் என்பதையும் இச்செயலால் நமக்கு மீட்பு உண்டு என்பதையும் அறிவதேயாகும் '

அதாவது சுந்தர் அண்ணா சொல்வது போல "இயேசுவின் இரட்சிப்பை பற்றிய செய்தியே சுவிஷேஷமாகும்''

 

//சுவிசேஷத்தை கேள்விப்படாமல் அநேகர் மரித்து இருக்கிறார்கள் என்று உங்களுக்கு ஆணித்தரமாக சொல்ல முடியுமா நண்பா?// 

இயேசு மரித்தார் உயிர்த்தார் என்பதை அறிந்த பலர் இந்த செயலால் தமக்கு பாவ விமோசனம் உண்டு என்பதை அறியவில்லை. இப்படி பட்டவர்கள் சுவிசேஷத்தை அறிந்தவர்களா?


இப்படி முழு சுவிசேஷமும் அறியாமல் யாருமே மரிக்கவில்லை என்று சொல்கிறீர்களா?

என்னுடைய நண்பன் ஒருவன் எனது பள்ளி நாட்களில் இதை அறியாமல் மரித்து போனான் . அந்த நாட்களில் நான் கூட சுவிசேஷத்தை அறியவில்லை. என்னுடைய பாட்டன் இயேசுவை கூட அறியவில்லை. நமது முன்னோர்கள் பலருக்கு இயேசு என்றால் யாரென்றே தெரியாது. இவர்கள் இன்னும் மரிக்கவில்லையா?

எனவே சுவிசேஷம் அறியாமல் பலர் இறந்துள்ளனர் என என்னால் ஆணித்தரமாக கூற முடியும்.







__________________

.................................................. எப்போதும் நான் ஒரு வேதாகம மாணவனே  ...............................................



இளையவர்

Status: Offline
Posts: 22
Date:
Permalink  
 

///மனசாட்சிப்படி விசாரிக்கப்பட்டும் பரலோகம் போக முடியாவிட்டால் என்ன பயன் சகோதரா? ///


'மனசாட்சிப்படி விசாரிக்கப்படும் யாரும் பரலோகம் போக முடியாது' என்னும் என் கருத்தை மாற்றி கொள்கிறேன் சிஸ்டர். அது ஆண்டவனுக்கு தான் தெரியும். என்னை சிந்திக்க வைத்ததட்கு நன்றி.

ஆனால் மனசாட்சிப்படி விசாரிக்கப் பட்டால் கட்டாயம் பரலோகம் போய்தான் ஆக வேண்டுமா?

ஒருவன் மன சாட்சி படி வாழ்ந்தால் பரலோகம் போகலாம் என்பது உண்மைதான். ஆனால் மனிதனின் வீழ்ச்சிக்கு பின் யாராலும் மனசாட்சி படி வாழ முடியவில்லை. அதே போல நியாய பிராமண படி வாழ்ந்தால் பரலோகம் போகலாம் ஆனால் யாராலுமே அப்படி வாழ முடியவில்லை.

மனசாட்சிப்படி விசாரிக்கப் படுபவர்கள் பரலோகம் போக முடியுமெனில் சிலுவை பலி எதற்கு? மனசாட்சிப்படி வாழ்ந்து ஒருவன் மீட்க பட முடியுமெனில் 'மனிதனின் மீட்புக்கு ஒரே வழி கிறிஸ்துதான் /சிலுவை பலிதான்' என வேதம் ஏன் சொல்கிறது? மனசாட்சி படி வாழ்ந்தால் பரலோகம் போகலாம் எனினும் யாராலும் அப்படி வாழ முடியாது என்பதே கசப்பான உண்மை.

இதட்கு பதில் என்ன?

 



__________________

.................................................. எப்போதும் நான் ஒரு வேதாகம மாணவனே  ...............................................



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
சுவிசேஷத்தைக் கேள்விப்படாதவர்களை தேவன் நரகத்துக்கு அனுப்புவது சரியா?
Permalink  
 


அன்பான சகோதரரே,

இயேசு சிலுவையில் மரித்தது தான் சுவிஷேசம் என்று நான் கூறியது சுருக்கமாக சொன்னேன் அதாவது விளக்கமாக சொன்னால் இயேசு எனது பாவங்களுக்காக மரித்து மீண்டும் மூன்றாவது நாள் உயிரோடு எழுந்தார் இன்றும் ஜீவிக்கிறார் மற்றும் எம்மை பாவம் கழுவி சுத்திகரிக்க வல்லவர் என்பது தான் சுவிஷேசம் நீங்கள் என்னை தவறுதலாக புரிந்துள்ளீர்கள் சகோதரனே,

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாக சுவிஷேசம் கடந்து போகும்

அதாவது ஒருவர் ஒரு கைப்பிரதியில் இயேசு மட்டுமே தெய்வம் என்பதை வாசித்தாலே அது அவருக்கு சுவிஷேசம் தான்

இன்னுமொருவருக்கு ஒரு சகோதரன் போய் இயேசு நமது பாவங்களுக்கு மரித்தார் அவரே தெய்வம் என்று கூறினாலோ அதுவும் அந்த சகோதரனுக்கு சுவிஷேசம் தான்

இவ்வாறு சுவிஷேசம் முழு விபரமாய் சொல்லப்படாவிட்டாலும் அவைகளும் சுவிஷேசம் தான் அதை உரியவர்கள் தான் தேடி அறிந்து கொள்ள வேண்டும்.

நான் இந்து மாதத்தில் இருந்து ஆண்டவரை ஏற்று கொண்டேன் எனக்கு சுவிஷேசமாக சொல்லப்பட்டது எப்படியெனில் இயேசு எனது பாவங்களுக்காக மரித்தார் என்றும் அவர் என் பாவத்தை மன்னிக்க தயார் என்பது தான் அதட்கு பின்னர் நான் நினைத்தேன் தெய்வங்களில் இயேசுவும் ஒருவர் என்று தான் ஆனால் ஆண்டவர் என்னிடம் பேச ஆரம்பித்தார் தான் தெய்வங்களில் ஒருவர் அல்ல என்றும் அவர் மட்டுமே தெய்வம் என்றும் உணர்த்தினார் அப்பொழுது நான் ஆண்டவரிடம் கேட்டேன் அப்படியானால் இந்து மதத்தில் எத்தனை அதிசயங்கள் நடக்கிறது அது எப்படி என்று அதட்கு ஆண்டவர் கூறினார் அந்த அதிசயங்களை செய்பவன் சாத்தான் என்று அப்போ நான் கேட்டேன் அது யார் என்று ஆண்டவர் சொன்னார் தூதனாய் இருந்தவன் அவனது மேட்டிமையான எண்ணத்தின் நிமித்தம் தன்னால் பூமிக்கு தள்ளப்பட்டவன் என்றும் பேசினார்

இவ்வாறு எனக்கு சுவிஷேசம் சொன்னவர்கள் எனக்கு சொல்லித்தரவில்லை மாறாக ஆண்டவர் தான் சொல்லி தந்தார்

எனவே முழுமையான விபரங்களோடு தான் சுவிஷேசம் ஒவ்வொருவருக்கும் போகும் என்று கூற முடியாது.

அதை ஆண்டவரே முடிவு செய்வார் ஆனால் எப்படியாவது சகலருக்கும் சுவிஷேசம் கடந்து போகும்

அப்படி சுவிஷேசம் யாவருக்கும் கடந்து போகாமல் இருக்குமாயின் ஆண்டவர் நீதி இல்லாதவராக விளங்குவார் எனவே அப்படியல்ல நமது தேவன் நீதி தவறாத பரிசுத்தர்.

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

//என்னுடைய நண்பன் ஒருவன் எனது பள்ளி நாட்களில் இதை அறியாமல் மரித்து போனான் . அந்த நாட்களில் நான் கூட சுவிசேஷத்தை அறியவில்லை. என்னுடைய பாட்டன் இயேசுவை கூட அறியவில்லை. நமது முன்னோர்கள் பலருக்கு இயேசு என்றால் யாரென்றே தெரியாது. இவர்கள் இன்னும் மரிக்கவில்லையா?//

நமது முன்னோர்களோ அல்லது உங்களது நண்பரோ ஆண்டவரை அறியாமல் மரித்து இருப்பார்கள் என்பதை எமக்கு கூற முடியாது. ஒருவேளை அவருக்கு எப்படியோ சுவிஷேசம் போயிருக்கலாம்.



__________________
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard