மனசாட்சிப்படி விசாரிக்கப்பட்டு பரலோகம் போக முடியாது ஆண்டவரின் கிருபையினாலேயே நாம் போகலாம்
பரலோகம் போகாவிடின் நமது அனைத்தும் விருதை போகுமே சகோதரா
பரலோகம் போவதட்கு தானே இத்தனை போராட்டங்கள் இத்தனை காரியங்கள்
நாம் என்னத்தை செய்தும் பரலோகம் போகவிடின் என்ன பயன்?
//மனசாட்சிப்படி விசாரிக்கப் படுபவர்கள் பரலோகம் போக முடியுமெனில் சிலுவை பலி எதற்கு? மனசாட்சிப்படி வாழ்ந்து ஒருவன் மீட்க பட முடியுமெனில் 'மனிதனின் மீட்புக்கு ஒரே வழி கிறிஸ்துதான் /சிலுவை பலிதான்' என வேதம் ஏன் சொல்கிறது? மனசாட்சி படி வாழ்ந்தால் பரலோகம் போகலாம் எனினும் யாராலும் அப்படி வாழ முடியாது என்பதே கசப்பான உண்மை. //
மனசாட்சிப்படி விசாரிக்கப்படுபவர்கள் பரலோகம் போவார்கள் என்று நான் சொல்லவில்லை..
சகோதரி நான் சில குறிப்பான ஆதாரங்களை காட்டியிருக்கிறேன். நீங்கள் சொல்லும் கருத்தில் நீங்கள் உறுதியாய் இருக்கிறீர்கள். பாராட்டுக்கள். உங்கள் கருத்தை நீங்கள் நிராகரிக்க வேண்டும் என்று கூறும் உரிமை எனக்கு இல்லை.
இயேசு உயிர்த்த பின் சுவிசேஷம் எருசலேமிலிருந்து உலகெங்கும் கடந்து போக கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு சென்றது. அந்த நாட்களுக்குள் எவ்வளவோ பேர் அதை கேள்வி படாமல் இறந்து இருப்பார்கள். சரி இதற்கு மேல் இதை குறித்து வாதாட நான் விரும்பவில்லை.
__________________
.................................................. எப்போதும்நான் ஒரு வேதாகமமாணவனே ...............................................