சிறு பிள்ளைகளாக இருக்கும்போது நாம் எதை பற்றியும் கவலைப்படுவது இல்லை காரணம் நமது பெற்றோர்கள் நமக்கு தேவையான எல்லாவற்றையும் செய்த முடித்துவிட்டார்கள். நமக்கு இந்த உலக வாழ்க்கை பற்றிய எந்த உண்மையும் தெரியாத அந்நாட்களில், நம் தாய் தகப்பன் நமக்கு தேவையான எல்லாவற்றையும தந்துவிடுவார்கள் என்று விசுவாசிக்க கூட தெரியாத அந்த நாட்களில் அவர்கள் நமது தேவைகளை ஆராய்ந்து அறிந்து அவைகளை தங்களால முடிந்த அளவு
நிறைவேற்றி நம்மை கவனித்துகொண்டார்கள்.
அவ்வளவு அன்போடு நம்மை கவனித்துகொண்ட பெற்றோர்களே ஒரு கால அளவு கடந்து நாம் பெரியவர்களாகும் போது நாம் உலகத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்றும், நமது வாழ்க்கையை நாமே அமைத்துகொள்ள வேண்டுமே என்று எதிர்பார்க்கிறார்கள். நாம் அவர்களுக்காக பெரிய உதவி எதுவும் செய்யாவிட்டலும் நமது வாழ்க்கையையாவது சரியாக அமைக்க தெரியவில்லை என்றால் அவர்கள் படும் வேதனை அதிகம்.
காரணம் நமது தகப்பனும் இருந்த இடத்தில் இருந்துகொண்டு எல்லாவற்றையும் சாதித்துவிடவில்லை! நம்முடைய தேவைகளை சந்திக்க அவர் அனுபவித்த பாடுகளும் வேதனைகளும் அதிகமதிகம். அந்த பாடுகளையும் சுமைகளையும் சற்றேனும் இறக்கிவைத்து இளைப்பாற விரும்பும் அவர், நாம் எந்த உண்மைகளையும் அறியாமல் எந்த பொறுப்பும் எடுக்காமல் ஏனோ தானோ என்று வாழும்போது வேதனையடைகிறார்.
தேவன் மனுஷனுக்கு இடையே உள்ள உறவு முறையும் அப்படிபட்டதே!
ஒரு மனுஷன் கிறிஸ்த்துவுக்குள் குழந்தையாக பிறக்கும்போது பலவித அற்ப்புத அடையாங்கள் மற்றும் உலக தேவைகள் சந்திப்பதன் மூலம் ஒரு புதிய அனுபவத்துக்குள் நம்மை கொண்டு செல்லும் தேவன், நாம் கிறிஸ்த்துவுக்குள் வளர வளர அவர் தரும் உதவிகளை நிருத்திவிடுவதொடு உலகை பற்றிய உண்மைகளை நாம் சரிவர அறிந்துகொள்ள வேண்டும் என்றும் அதற்கேற்ற பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்.
நம்மை இந்த் நிலையில் வைத்திருக்கும் தேவன் செய்திருக்கும் தியாகம் என்பது மிக மிக அதிகம். அதை சரியாக புரிந்துகொண்டு அவரோடு சேர்ந்து பாரங்களை சுமக்கும் மனுஷர்களை அவர் எதிர்பார்க்கிறார்.
நம்முடைய கையில் இருந்து தேவனுக்கு எந்த உதவியும் தேவையில்லை என்றாலும் நம்போன்ற சக மனுஷர்களுக்கு நம்முடைய கிரியைகள் அவசியம் தேவையாகிறது.
அதை சரிவர நிறைவேற்றி அநேகருக்கு நாம் பயனுள்ள பாத்திரமாக மாற தேவனிடம் இருந்து இந்த உலகை பற்றிய சரியான உண்மைகளை அறிந்துகொள்வது அவசியம்! தேவன் எல்லோரிடமும் பேசவேண்டிய விதத்தில் பேசுகிறார்! அதை சரியாக கவனித்து கீழ்படிந்தால் மேன்மை உண்டு இல்லையேல் சாவு நிச்சயம்!
தேவனுடைய மனுஷனாகிய ஏலி கர்த்தரை பற்றி சொல்லிய எந்த ஒரு உண்மையும் அவர்களின் குமாரர்களின் காதுகளில் ஏறவேயில்லை. காரணம் அவர்களின் சிந்தையும் செயலும் அதை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இல்லாமல் எங்கு எவன் பலியிடுகிரான் இன்றைக்கு எந்த ஆட்டின் தொடைக்கறி நமக்கு கிடைக்கும் என்ற நோக்கிலேயே இருந்ததால் ஏலியின் வார்த்தைகளை புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அவர்கள் இருதயம் அடைபட்டிருந்தது.முடிவு ஏலியின் வாரிசாக எல்லோருக்கும் பிரதானமாக இருக்க வேண்டியவர்கள் எங்கோ போய் மாண்டு போனார்கள்.
யாருக்கு தேவன் உண்மைகளை தெரிவிப்பார்?
ஒரு தகப்பன் யாரிடம் தன்னுடைய பொக்கிஷங்கள் இருக்கும் இடங்களை தெரிவிப்பார்? குடிகாரனும், வெறியனும், சோம்பேறியும், மூடனும், கீழ்படியாதவனுமாக இருக்கும் எந்த ஒரு மகனும் தன தகப்பனிடம் இருந்து எந்த ரகசியங்களையும் அறிந்துகொள்ள முடியாது. அதுபோல் தேவனின் எதிர்பார்ப்புகள்படி கனி கொடுக்காத எந்த ஒரு மனுஷனும் தேவனிடம் இருந்து எந்த உண்மைகளையும் அறிந்துகொள்ள முடியாது காரணம் அப்படிபட்டவர்களுக்கு உண்மையை தெரிவிப்பதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை மாறாக பிரச்சனைகள் இன்னும் அதிகமாவே அவர்கள் காரணமாக இருப்பார்கள்.
கோவில் எங்கே இருக்கிறது சாமி சொரூபம் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் ஒருவன் தேடி ஓடி அலைந்தான். பக்தி பரவசம்தனோ என்று எண்ணி கோவிலை காண்பித்தால் காலையில் சாமியும் இல்லை உண்டியலும் இல்லை. இதைதான் என்று அனேக மனுஷர்கள் செய்கிறார்கள் உண்மையை அறியவேண்டும் என்று அலைகிறார்கள் ஆனால் உண்மையை அறிந்தபின்னர் தேவனுக்கே எதிரியாகி இன்னும் சிக்கலை அதிகமாக்கி விடுகிறார்கள்
அனேக உண்மைகளை அறிந்த ஞான்முள்ளவனான தேவ தூதன் ஓர் காலத்தில் சாத்தானாகி போனதால், தேவன் எடுத்த எடுப்பில் யாரிடமும் உண்மைகளை ஒப்புவிப்பதில்லை! தேவனிடம் இருந்து உண்மைகளை அறிய முதலில் அவருடைய நம்பிக்கைக்கு பாத்திரவானாக நாம் நடக்கவேண்டியது மிக மிக அவசியமாகிறது.
தேவனின் நம்பிக்கைக்கு நம்மை பாத்திரவானாக்குவது எது என்று கேட்டால். உண்மை /நேர்மை /கீழ்படிதல் என்று அனேக காரியங்களை சொல்லலாம். ஆனால் இவை எல்லாவற்றிக்கும் அடிப்படையாகவும் ஆணி வேறாகவும் அமைவது ஒரே ஒரு காரியம் தான்! அது எது தெரியுமா?
எல்லோரும் யோசியுங்கள். தெரிந்தவர்கள் தெரிவியுங்கள்!
நான் அறிந்ததை எழுத நேரம் கிடைக்கும்போது தொடர்கிறேன்......
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
எனக்கு தெரிந்தபடி !தேவன் அன்பாகவே இருக்கிறார்! என்றும் !அன்பே பெரிது! என்றும் பைபிள் சொல்வதாலும் தேவனிடம் முழு மனதோடு அன்பு கூறுவதே முதல் பிரதான கட்டளையாக இருப்பதாலும் . யார் சக மனுஷனிடத்திலும் தேவனிடத்தில் மாயமற்ற கபடமற்ற உள்ளத்துடன் மிகுந்த அன்பாய் நடந்து கொள்கிரார்களோ அவர்களே தேவனுடைய நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.