இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எனக்கு ஒரு சந்தேகம் - ஏராளமான மனுஷர்கள் படைக்கப்பட காரணம் என்ன?


இனியவர்

Status: Offline
Posts: 52
Date:
எனக்கு ஒரு சந்தேகம் - ஏராளமான மனுஷர்கள் படைக்கப்பட காரணம் என்ன?
Permalink  
 


இந்த உலகம் "துன்மார்க்க ஊளை" என்று பைபிள் சொல்கிறது. எங்கு திரும்பினாலும் பாவம் தாண்டவமாடும்  இந்த துன்மார்க்க ஊளைக்குள் வருபவர்கள் இதனுள் இருந்து தப்பித்து கரையேறுவது என்பது மிக மிக  கடினமான காரியம் என்பது தேவனுக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் கோடிக்கணக்கான ஆத்துமாக்களை இந்த துன்மார்க்க ஊளைககுள் அனுப்பிக்கொண்டே இருக்க காரணம் என்ன?     
 
ஒரு பக்கம் அளவில்லாமல் ஆத்துமாக்கள் பிறக்கிறது இன்னொரு பக்கம் யாரோ ஒருவர் இருவர் இரட்சிப்பை கண்டடைகிறார்கள் ஆனாலும் அவர்கள் பரலோக ராஜ்ஜியம் போய் சேர்வார்களா என்பது உறுதியில்லை காரணம் "முடிவு பரியந்தம் நிலை நிற்பவனே இரட்சிக்கபடுவன்" என்று பைபிள் சொல்கிறது.  இந்நிலையில் "நான்  கணக்கில்லாமல் படைத்துக்கொண்டே இருப்பேன் நீங்கள் ஓடி ஓடி உலகமெங்கும் போய் சுவிசேஷம் சொல்லி எல்லோரையும் இரட்சியுங்கள்" என்று சொல்வது நியாயமா?
 
"ஊளை" என்றால் சகதி அல்லது சேறு என்றோ அல்லது கூவம் ஆறு போன்ற ஒரு இடமோ என்று எடுத்துகொண்டால் அதற்குள் புதிதாக யாரும் விழாமல் தடுத்தால் மட்டுமே உள்ளே கிடக்கும்  எல்லோரையும் ஆட்களை மீட்க முடியும். ஆனால் இங்கோ புதிது புதிதாக ஆட்கள் வந்து உள்ளே விழுந்து கொண்டே இருப்பார்கள் இந்நிலையில் எல்லோரையும் மீட்பது எவ்வாறு சாத்தியம்?
 
இரட்சிப்பு கடினம் என்பது நன்றாக தெரிந்தும் தேவன் ஏன் மனுஷர்களை ஏராளமான படைத்து தள்ளுகிறார்? 
 
பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.
    
========================================================================================================================================


__________________


இனியவர்

Status: Offline
Posts: 52
Date:
RE: எனக்கு ஒரு சந்தேகம் - ஏராளமான மனுஷர்கள் படைக்கப்பட காரணம் என்ன?
Permalink  
 


Wiki answer:

There are approximately 370,000 babies born every day worldwide.

 

இப்படி ஒரு நாளில் லட்ச கணக்கில் பிள்ளைகள் பிறந்தால் இவர்களை எல்லாம் எப்படி எப்பொழுது ரட்சிப்புகுள் நடத்துவது?  

 
எங்கு திரும்பினாலும் பாவம் நிறைந்த இந்த உலகுககுள் எதற்கு இப்படி லட்ச கணக்கில்  குழந்தைகளை கடவுள் படைக்கிறார்?
  
I பேதுரு 4:18 நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?
 
நீதிமானே இரட்சிக்கபடுவது அரிது என்று வசனம்  சொல்கிறதே இன்று பிறந்த அத்தனை குழந்தையும் எப்பொழுது இரட்சிக்க படுவார்கள்?  இயேசுவை ஏற்று ரட்சிப்பை கண்டடையாதவர்கள் நரகம் அல்லவா செல்வார்கள், இதன் மூலம் நரகத்துக்கு போகும் கூட்டம்தானே அதிகமாகும்.  
 
அப்படியிருந்தும் கடவுள் இப்படி குழந்தைகளை படைத்து தள்ள காரணம் என்ன?
 
அன்பு அண்ணன்மார்களே என் அறிவுக்கு எட்டவில்லை யாராவது பதில் தாருங்களேன் 

 



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

மாற்கு 10:27 இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.

 



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

JOHN12 wrote:

மாற்கு 10:27 இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.

 

 


 

ஆம்! மனுஷனால் கூடாதது தேவனால் நிச்சயம் கூடும்.  தேவன் நினைத்தால் எல்லோரையும் அது எத்தனை கோடி ஜனமானாலும் மீட்டு விட முடியும்! 
 
 
அதுவே தேவனின் சித்தமும் கூட!  
 
I தீமோத்தேயு 2:4 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
 
தேவனின் சித்தம் இவ்வாறு இருக்க, இந்த உண்மையை  அறிந்தபின்னர் சில அஞஞான கிறிஸ்த்தவர்கள் சொல்வது போல் இயேசுவை ஏற்றுக்கொண்ட  நான் பரலோகம் போவேன் மற்றவர்கள் நரகம் போவார்கள் என்று மார்தட்ட அவர்களுக்கு எந்த   முகாந்திரமும் இல்லை! 

 

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 19
Date:
Permalink  
 

ஐயா
அவர்கள் வாதை சதாகலமும் ...... என்று எழுதியுள்ளதே தயவுக்கூர்ந்து விளக்கவும்

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

holyson wrote:

ஐயா
அவர்கள் வாதை சதாகலமும் ...... என்று எழுதியுள்ளதே தயவுக்கூர்ந்து விளக்கவும்


 வெளி 14:11 அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்;

ங்கு சதா காலங்களிலும் எழும்புவது வாதியின் புகையே அன்றி மனுஷன்  சதாகாலமும் வாதிக்கபடுதல் என்பது போன்ற குறிப்பு இல்லை

 

இது ஒரு அடையாளமாக எக்காலத்திலும் இருக்கும் என்பது சொல்லபட்டுள்ளது என்றே நான் கருதுகிறேன்

 

வெளி 14:11 மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது.

 
மிருகத்தை வணங்காதவர்கள் மற்றும் முத்திரையை தரிக்காதவர்களுக்கு "இரவும் பகலும் இளைப்பாறுதல் இராது" என்று வசனம் சொல்கிறதேயன்றி "சதா காலங்களிலும் இளைப்பாறுதல் இராது" என்று வசனம் சொல்லவில்லையே. அவர்கள் அந்தி கிறிஸ்த்து ஆட்சி காலத்தில் பூமியில் உயிரோடு இருக்கும் காலம் வரை இரவும் பகலும் இளைப்பாறுதல் இராது என்றுதான் பொருள்படும் என்பது எனது கருத்து.  
 
 
சதா காலமும் வாதிக்கபடுவது பிசாசுதான் என்று இவ்வனசனம் தெளிவாக சொல்கிறது: 
 
வெளி 20:10 மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.
 
அதற்க்கு ஒப்பாக: 
 
யோவான் 17:12  வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை.
 
 
அன்பான சகோதரர் அவர்களே மேற்கூறிய வசனங்களை நான் விளக்குவதன் மூலம் நித்திய வாதை இருக்காது என்றோ துன்மார்க்கருக்கு தண்டனை இல்லை என்று நான் திட்டமாக  மறுக்க விரும்புவதாக கருத வேண்டாம்.
 
 
என்னுடைய கருத்து என்னவெனில்  
 
I தீமோத்தேயு 2:4 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
 
அதாவது, சர்வவல்ல தேவனே எல்லோரும் இரட்சிக்கப்ட வேண்டும் என்று சித்தம் உள்ளவராக இருப்பதால் அதை நிறைவேற்ற ஏதாவது வழி அவரிடம் நிச்சயம் இருக்கும். அது நிறைவேறினால் நித்திய வேதனையில் இருந்து எல்லோரும் தப்பிக்கலாம் என்பதே எனது கருத்து.  எனவே தேவனின் சித்தம் நிறைவேறவேண்டும் என்று தொடர்ந்து ஜெபிக்கிறேன்.  
  

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

//சகோ மோசிலாவிடம் ஆண்டவர் இயேசு இவ்வாறு சொன்னாராம். 

நான் உனக்கு 10 ஆண்டுகள் தருகிறேன். அதற்குள் நீ எனக்கு 1 கோடி ஆத்துமாக்களைக் கொண்டு வர வேண்டும்.///

 

Global human population growth is around 81 million annually  
 
அப்படியெனில் 
 
81 000 000 x 10  = 810,000,000
 
அதாவது 81 கோடி மக்களை படைத்து அதில் ஒரு கோடியை மட்டும் மோகன் C மூலம்  ரட்சித்து மற்ற 80 கோடி மக்களை நரகத்துக்கு அனுப்புவாரா? 
 
அல்லது ரூ 100 கொடுக்கும் 1000 பேர் வேண்டும் என்ற கணக்கில் மோகன் C போன்ற இன்னும் 80 ஊழியர்களிடம் மற்ற 80 கோடியை ஒப்படைப்பாரா?  
 
இன்றைய  உலக மக்கள் தொகை 7.155 billion னில் எத்தனைபேர்  குறுகிய வாசல் வழி பிரவேசித்து பரலோகம் செல்வார்கள்? நமது இந்தியாவில் இன்று  எத்தனை % தேறும் என்று பாருங்கள். 
 
படைப்புக்கும் இரட்சிப்புக்கும் உள்ள விகிதாசாரம் 99 : 1 என்ற நிலையில் இருக்க ஒருபுறம் ஜனங்களை கணக்கில் அடங்காமல் உற்பத்தி செய்து கொண்டு, அதில் ஒருகோடி 1 கோடிக்கு நீ பொறுப்பு என்று சொல்வது   எவ்விதத்தில் சரியாகும்?
 
மத்தேயு 18:14 இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.
 
என்று சொல்லும் தேவன், எப்படி தன சித்தத்தை நிறைவேற்றுவார்? அல்லது தேவனின் சித்தம் நடக்க முடியாததா?   
 
ஆண்டவரைய இயேசு  கட்டளை இட்டபடி   சுவிசேஷம் அவசியம்! ஆனால் சுவிசேஷத்தின் மூலம் உலகத்தை ரட்சிப்பது தேவனின் திட்டமல்ல என்பதை அறியகடவோம்.   
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard