இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசுவை சிலுவையில் அடித்தது யார்?


இனியவர்

Status: Offline
Posts: 52
Date:
இயேசுவை சிலுவையில் அடித்தது யார்?
Permalink  
 


ஐயா, எத்தனையோ நன்மைகள் செய்த நம் இயேசப்பா ஆகாதவர் என்று தள்ளப்பட்டு அதிகமான அடிகள் அடிக்கபட்டு முள்முடி சூட்டபட்டு அதிக வேதனை பட்டு, மிக கொடூரமான முறையில் சிலுவையில் அடித்து கொலை செய்யபட்டார். பின்னர் மூன்றாம் நாளில் உயிர்தெழுந்தார் என்பதும் நாம் அறிந்த உண்மை.
 
அவர் நம்முடைய பாவங்களுக்காகவே அவ்வாறு மரித்திருந்தாலும் அதில் எனக்கு ஒரு டவுட்டு என்னவெனில், நம் இயேசப்பாவை சிலுவையில் அடித்தது யார்? 
 
பரிசேயர்  என்று சொல்லபட்ட மத வெறிபிடித்த  மனுஷர்களா? 
அல்லது
சாத்தான் என்று சொல்லப்படும் சத்துருவாகிய பிசாசா? 
அல்லது 
நானே எல்லாவற்றையும் செய்யும் கர்த்தர் என்று சொல்லும் தேவனா?  
 
ஒருவேளை மனுஷர்கள் என்றால்:
மனுஷர்கள் செய்த பாவத்துக்கு அந்த பாவ மனுஷர்கள் கையிலேயே எப்படியய்யா இயேசு  அடிபட வேண்டிய அவசியம் வரும்? 
 
அல்லது பிசாசு என்றால்:  
தேவனையே அடித்து துன்புறுத்தி கொலை செய்யும் அளவுக்கு பிசாசு பெரியவனா?
 
இல்லை தேவன் எனில்:
தேவன் தன் குமாரனை தானே அடித்து கொலை செய்து விட்டாரா?
 
இந்த கருத்தின் உண்மைதான் என்ன ஐயா? மனுஷனை படைத்த தேவன் எதற்க்காக அந்த மனுஷர்கள் கையில் அடிபட வேண்டும்? 
  


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

அன்பான சகோதரரே உங்களுக்கு அடிப்படையில் இருந்தே எதுவும் புரியவில்லை போல் இருக்கிறது.
 
எதற்கும் கீழ்கண்ட தொடுப்பை சற்று வாசியுங்கள்.    
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

நண்பரே..

அப்போஸ்தலர் 2:23 அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.

மத்தேயு 23:34 ஆகையால், இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபாரகரையும் உங்களிடத்திலே அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களின் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பபடுத்துவீர்கள்.

இதில் 'உங்களிடத்தில்' 'நீங்கள்' என்று வருகிற பதங்கள் யாரை குறிக்கிறதோ அவர்களே இயேசுவை சிலுவையில் அறிந்தவர்கள்.. 

சகோதரா, கிறிஸ்து எதற்காக யாருக்காக மரித்தார் நீங்களே உணர்ந்து அறிவது தான் மென்மையானது. 

இதற்கு ஆயிரம் பதிவுகளும், அனேக விளக்கங்கள் இருந்தாலும். உங்களது வாழ்வில் தேவனாகிய இயேசு எதற்காக மரித்தார் என நீங்களே தேவ சமூகத்தில் அறிந்து உணருவீர்கலானால் தேவராஜ்ஜியம் உங்கள் இருதயத்தில் ஸ்தாபிக்கப்படும்.

லூக்கா 17:21 இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார். 

Glory to God!!!



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

JOHN12 wrote:

நண்பரே..

அப்போஸ்தலர் 2:23 அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.

மத்தேயு 23:34 ஆகையால், இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபாரகரையும் உங்களிடத்திலே அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களின் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பபடுத்துவீர்கள்.

இதில் 'உங்களிடத்தில்' 'நீங்கள்' என்று வருகிற பதங்கள் யாரை குறிக்கிறதோ அவர்களே இயேசுவை சிலுவையில் அறிந்தவர்கள்.. 

 


 

இப்படி ஒரு  வசனத்தை மேலோட்டமாக காட்டி இவர்தான் காரணம் என்று சொல்வதற்கு வேத வசனம் தேவையில்லை. வரலாற்று புத்தகமே  

போதுமானது. நமது வேத  வசனங்கள் வரலாற்று புத்தகங்களை விட மேலானதும் ஒரே வசனத்தில் அனேக ஆழ் அருத்தங்களை கொண்டதாகவும் இருக்கிறது என்பதை அறிய வேண்டும்.
 
இப்பொழுது நாம் நம் சகோதர ஜான்12 அவர்கள் சுட்டிய வசனத்தை இங்கு எடுத்துகொள்வோம்.
 
  
///அப்போஸ்தலர் 2:23 அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்./      
 
இதற்க்கு ஒப்பாக நேரடியாக சொள்ளபட்டுள்ள இன்னொரு வசனம் 
 
லூக்கா 24:20 நம்முடைய பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் அவரை மரண ஆக்கினைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள்.
 
 
வசனத்தின் படியே எடுத்துகொண்டால் இங்கு "நீங்கள்" என்று சொல்லும் அந்த பதம் இஸ்ரவேலின் பிரதான ஆசாரியர்கள் மற்றும்  வேதபாரகர் கூட்டத்தையோ குறிப்பதாக இருக்கிறது.  
 
ஆனால் உண்மையில் அவர்களா  இயேசுவை சிலுவையில் அடித்தார்கள்?  இல்லையே,  போர் சேவகர்கள்தான் அவரை சிலுவையில் அறைந்தார்கள்.  
 
யோவான் 19:23 போர்ச் சேவகர் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு,
 
அப்படியிருப்பினும் வசனம்  "பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் அவரை மரண ஆக்கினைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள்." என்று சொல்ல காரணம் என்ன?
 
உலகில் நடக்கும் எந்த ஒரு காரியத்திற்கு மூன்று விதமான காரணங்கள் உண்டு  
1. உடனடி காரணம் அல்லது மேலோட்டமான காரணம் 
2. முக்கிய காரணம் அல்லது அடிப்படை காரணம் 
3. ஆவிக்குரிய காரணம் அல்லாத தேவ காரணம் 
 
இதில் மேலோட்டமான உடனடி கரியத்தை கண்டுபிடிக்க பெரிய ஆராய்ச்சி தேவையில்லை அடுத்துள்ள அடிப்படை காரணத்தை கண்டுபிடிக்க சற்று ஆழமாக ஆராய்தல் வேண்டும் ஆனால் கடைசியில் உள்ள ஆவிக்குரிய பொருளை அறிய தேவனின் வெளிப்பாடு நிச்சயம் வேண்டும்.
 
இதன் அடிப்படையில் 
 
உடனடி காரணராக இயேசுவை  சிலுவையில் அறைந்தவர்கள் போர்ச்செவகர்கள் என்பதை எல்லோர் கண்களும் கண்டது
 
அடிப்படை காரணமாக இயேசுவை சிலுவையில் அறைய ஒப்புகொடுத்தவர்கள் பிரதான ஆசாரியர்கள் என்பது எல்லோரும் அறிந்து நடந்தது
 
கொலைசெய்வதைவிட கொலை செய்ய தூண்டுவது முக்கிய குற்றம் என்பதால் வசனம் போர்செவகர்களோடு
பிரதான ஆசாரியர்களையும் சேர்த்து சிலுவையில் அடித்தார்கள் என்று சொல்கிறது.
 
அதபோல் பிரதான ஆசாரியர்களை இயேசுவுக்கு விரோதமாக எழும்பி கொலை செய்ய தூண்டிய அடிப்படை காரணி ஒன்றுள்ளது! மறைவானதும் மேற்ப்பார்வைக்கு தெரியாததுமான ஆவிக்குரிய காரணியை  இங்கு சற்று விளக்கமாக பார்க்கலாம்!
 
இயேசுவை பிடித்து கொலை செய்ய துடித்த பிரதான ஆசாரியர்களையும் வேத பாரகர்களையும் பார்த்து இயேசு இவ்வாறு  சொல்கிறார் 
 
யோவான் 8:44 நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்;
 
ஆதிமுதல் மனுஷ கொலை பாதகனாக இருப்பது ஒன்றே ஒன்றுதான் அதுதான் "பிசாசு" இக்கருத்தை இயேசு தெளிவாக் சொல்வதோடு அந்த பிசாசின் இச்சையை செய்யவே அவர்கள் மனதாக இருப்பதாகவும் இங்கு கூறுகிறார்.
 
எனவே பிரதான ஆசாரியர்களை கொலை செய்ய தூண்டியது "மனுஷ கொலை பாதகனாகிய சாத்தானேயன்றி"  வேறல்ல என்பது மிக தெளிவாக தெரிகிறது  
 
இதன் அடிப்படையில் 
 
இயேசுவை சிலுவையில்  அறைந்தவர்கள் போர்செவகர்கள்! 
 
போர்ச்செவகர்கள்  இயேசுவை சிலுவையில் அறைய தூண்டியவர்கள் அல்லது காரணமாயிருந்தவர்கள் பிரதான ஆசாரியர்கள்! 
 
பிரதான ஆசாரியர்கள் இயேசுவை சிலுவையில் அறையும்படி தூண்ட காரணமாயிருந்தது பிசாசு!
 
  
சுருக்கமாக சொன்னால் இயேசு சிலுவையில் அறையப்பட அடிப்படை காரமாயிருப்பது ஆதிமுதல் மனுஷ கொலைபாதகனாக இருக்கும் பிசாசே!  
 
 

 

 

 



-- Edited by SUNDAR on Wednesday 25th of September 2013 12:00:35 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோதரர்  சுந்தர் அவர்களே!!

 

நான் கூறுவதன் பொருளறிந்து பின் பதியுங்கள்.. அது ஏதாவது தவறான பொருளை தந்ததா ??

//சுருக்கமாக சொன்னால் இயேசு சிலுவையில் அறையப்பட அடிப்படை காரமாயிருப்பது ஆதிமுதல் மனுஷ கொலைபாதகனாக இருக்கும் பிசாசே!  //
 

எந்த பலிப்பொருள் பிசாசின் நிமித்தம் செத்தது?. பாவ நிவாரணத்திற்க்கு மாத்திரமா பலி செலுத்தப்படும்? தங்களுக்கு தெரியாதா?. சமாதான பலி,தகன பலி என்றும் இருக்கிறதே.அது பாவத்தின் நிமித்தமா செலுத்தப்படுகிறது?? இயேசுவை குற்றநிவாரண பலியாக மாத்திரம் தான் வேதம் சித்தரிக்கிறதா என்ன?!!அப்படி தான்  என்றால் அவர் உயிர்த்தெலுந்த பின் முதலாவது சமாதானத்தை எவ்வாறு கட்டளையிட முடியும்???

யாத்திராகமம் 20:24 மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்துவாயாக; நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்.

லூக்கா 24:36 இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

இயேசு நமக்காக பலியானார், பலியைச் செலுத்ினவர்கள் பிரதான ஆசாரியார்கள். ஆலாயத்துக்கு (எருசலேம்) புறம்பான பலிபீடம் சிலுவை.. இயேசுவின் பிரதான நான்கு காயங்கள் நான்கு பலிபீடா கொம்புகளுக்கு ஒப்புமை கொள்ளப்படவேண்டியாவைகள்..

யாத்திராகமம் 27:2 அதின் நாலு மூலைகளிலும் நாலு கொம்புகளை உண்டாக்குவாயாக; அதின் கொம்புகள் அதனோடே ஏகமாய் இருக்கவேண்டும்; அதை வெண்கலத் தகட்டால் மூடவேண்டும்.

இப்படி ஒரு  வசனத்தை மேலோட்டமாக காட்டி இவர்தான் காரணம் என்று சொல்வதற்கு வேத வசனம் தேவையில்லை. வரலாற்று புத்தகமே  

போதுமானது. நமது வேத  வசனங்கள் வரலாற்று புத்தகங்களை விட மேலானதும் ஒரே வசனத்தில் அனேக ஆழ் அருத்தங்களை கொண்டதாகவும் இருக்கிறது என்பதை அறிய வேண்டும்.
 
இப்பொழுது நாம் நம் சகோதர ஜான்12 அவர்கள் சுட்டிய வசனத்தை இங்கு எடுத்துகொள்வோம்.//

அநாதி திட்டத்தை தாங்கள் இவ்வளவு லேசில் வணைகிறது வியப்பை தருகிறது.. உங்களை பொறுத்தவரையில் எல்லாவற்றிற்கும் பிசாசே காரணம் என்றால் அது அவ்வாறே இருக்கட்டும். ஆனால்நான் வேதத்தில் இருந்து காண்பித்த வசனங்களை தாங்கள் எவ்வாறு வரலாற்று புத்தக ஆதாரமாக கூற முடியும்? 

தேவன் இயேசுவை வெட்டினார் என வேதத்தில் உள்ளது.. தங்களுக்கு தெரியுமா??? அறிந்து கொள்ளுங்கள்..

சகரியா 13:7 பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய புருஷன்மேலும் எழும்பு என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார், மேய்ப்பனை வெட்டுவேன், அப்பொழுது ஆடுகள் சிதறிப்போகும்; ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்மேல் திரும்ப வைப்பேன்.

மத்தேயு 26:31 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.

மாற்கு 14:27 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.

 உண்மையில் இயேசு வெட்டப்பட்டதாக வேதபுத்தகதிலும், எந்த வரலாற்று புத்தகத்திலும் இல்லை!! அப்படியானால் என் இந்த வசனம்?? இதன் பொருள் தங்களுக்கு தெரியுமா?? அறிந்திருந்தீர்கலானால் தெரிவியுங்கள்.. 

இயேசு நமக்காக மரித்தார்.. உங்களுக்கு இன்னொரு உண்மையை சொல்லவா?? இயேசு மனித சாயலேற்று பிறப்பதற்காக மனுஷர் தேவ சாயலை உண்டானார்கள்!!

இடறின பிசாசிற்காக  இயேசு மரிக்காமல்,  பிசாசை இடரும் படி செய்ததாக நீங்கள் கூறும் அசுத்த ஆவிக்காக மரிக்காமல், மனுஷனுக்காக இயேசு ஏன்  மரித்தார்!!மனுசரஷு பாவத்தின் நிமித்தம் மரித்தார்.. பிசாசின் பாவத்திற்காக அல்ல..

ரோமர் 6:10 அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார்.

அவர் எல்லோருக்காகவும் மரித்தார் 

II கொரிந்தியர் 5:14 கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்;

பிசாசு இயேசுவை கொன்றான் என்றால்,இயேசு வெற்றி சிறந்தார் என வேதம் கூறுவதெப்படி?? அவன் அறியாதவனாய் இயேசுவை கொலை செய்தான் என்றால் தானியெலை பார்க்கிலும் ஞானவானாய் இருப்பதெப்படி??? 

நான் தேவனில்லாமல், search  engine இல் வசனத்தை எடுத்துப்போட்டு அனைவரின் நேரத்தையும் வீண்டடித்து எனக்குப் பெருமை உண்டாகத் தேடுகிறேனா?? ஆழத்தை தொடாமல், நுனிப்புள்ளை மேய்ந்து, மனக்கண்ணை பிரகாசம் பண்ணினேன் எனக்கூறும் காரியம் எத்துனை பேரை இன்னும் இடரப்பண்ணும்? என்ன பக்தி விருத்தியை உண்டாகும்? தேவன் பதில் அளிக்கட்டும்..  

மெய்யான தெய்வத்திற்கே மகிமை உண்டாகுக!!!

--------------------------------------------------------------------------------------------------------------

ரோமர் 1:21 அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள்சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.



-- Edited by JOHN12 on Wednesday 25th of September 2013 02:01:56 PM

__________________


இளையவர்

Status: Offline
Posts: 35
Date:
Permalink  
 

JOHN12 wrote:

சகோதரா, கிறிஸ்து எதற்காக யாருக்காக மரித்தார் நீங்களே உணர்ந்து அறிவது தான் மென்மையானது. 

இதற்கு ஆயிரம் பதிவுகளும், அனேக விளக்கங்கள் இருந்தாலும். உங்களது வாழ்வில் தேவனாகிய இயேசு எதற்காக மரித்தார் என நீங்களே தேவ சமூகத்தில் அறிந்து உணருவீர்கலானால் தேவராஜ்ஜியம் உங்கள் இருதயத்தில் ஸ்தாபிக்கப்படும்.

லூக்கா 17:21 இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார். 

Glory to God!!!


 முற்றிலும் உண்மையே


இயேசு கிறிஸ்த்து எதற்காக பலியானார் என்பது தான் முக்கியமே தவிற யார் அடித்தது என்பது அல்ல (வேறு யார் நாம் தான்)

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்(ஏசா 53:5 )

மேலும்
 கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும் (ஏசா 53:10)



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

I am Follower of Jesus wrote:
 

இயேசு கிறிஸ்த்து எதற்காக பலியானார் என்பது தான் முக்கியமே தவிற யார் அடித்தது என்பது அல்ல (வேறு யார் நாம் தான்)

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்(ஏசா 53:5 )

மேலும்
 கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும் (ஏசா 53:10)


இயேசு தேவ குமான் என்பதும் அவர் என்னுடைய பாவத்துக்கும் எல்லோருடைய பாவத்துக்கும் மரித்தார் என்பதும்  அவரை தேவன் மரணத்துக்கு ஒப்புகொடுத்தார் என்பதும் நம்மைபோலுள்ள எல்லா கிறிஸ்த்தவர்களும் அறிந்த உண்மை.  
 
ஆனால அவர் எதற்க்காக யாரால் அவ்வளவு கொடூரமாக கொலை செய்யபட்டார்? என்பதை அறிந்தால் மட்டுமே பாவத்தின் அடிப்படை வேர் என்ன? இயேசு எதற்காக அடிக்கப்பட வேண்டும்? இப்பொழுது நாம் என்ன செய்யவேண்டும்? என்று அறிந்து அதி வேகமாக செயல்பட முடியும். "எனக்காக அடிபட்டார் எனக்காக அடிபட்டார்" என்று சொல்லிக்கொண்டு ஏனோ தானோ என்று ஒரு ஜீவனற்ற கிரிஸ்த்தவனாக வாழ்வதில் நமக்கோ அல்லது தேவனுக்கோ எந்த பயனும் உண்டாக போவதில்லை.   

I am Follower of Jesus wrote: (வேறு யார் நாம் தான்)

தங்களின் வார்த்தைகள் படி நீங்களும் உங்களை சேர்ந்தவர்களும் இயேசுவை சிலுவையில் அடித்தீர்கள் என்றால் அதற்க்கான காரணம் என்ன? 
 
இவ்வளவு அற்ப்புதங்கள் செய்து எல்லோருக்கும்  நன்மை செய்பவராகவே சுற்றி திரிந்த இயேசுவை நீங்கள் ஏன் அவமானபடுத்தி அவ்வளவு மூர்க்க கோபத்தோடு கொடூரமாக கொலை செய்தீர்கள்?
 
காரணம் இல்லாமல் யாரும் யாரையும் கொலை செய்வதில்லை அல்லவா? எனவே நீங்கள் கொலை செய்த காரணத்தை கூறுங்கள்!  

 

 

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

JOHN12 wrote:

சகோதரர்  சுந்தர் அவர்களே!!

நான் கூறுவதன் பொருளறிந்து பின் பதியுங்கள்.. அது ஏதாவது தவறான பொருளை தந்ததா ??

//சுருக்கமாக சொன்னால் இயேசு சிலுவையில் அறையப்பட அடிப்படை காரமாயிருப்பது ஆதிமுதல் மனுஷ கொலைபாதகனாக இருக்கும் பிசாசே!  //
 

எந்த பலிப்பொருள் பிசாசின் நிமித்தம் செத்தது?. பாவ நிவாரணத்திற்க்கு மாத்திரமா பலி செலுத்தப்படும்? தங்களுக்கு தெரியாதா?. சமாதான பலி,தகன பலி என்றும் இருக்கிறதே.அது பாவத்தின் நிமித்தமா செலுத்தப்படுகிறது?? இயேசுவை குற்றநிவாரண பலியாக மாத்திரம் தான் வேதம் சித்தரிக்கிறதா என்ன?!!அப்படி தான்  என்றால் அவர் உயிர்த்தெலுந்த பின் முதலாவது சமாதானத்தை எவ்வாறு கட்டளையிட முடியும்???

யாத்திராகமம் 20:24 மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்துவாயாக; நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்.

லூக்கா 24:36 இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

--------------------------------------------------------------------------------------------------------------

ரோமர் 1:21 அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள்சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.

 


சகோதரரே தாங்கள் கூறியுள்ள பொருளை நான் மறுக்கவில்லையே அதற்க்கு மேலும் ஆழமான அடிப்படை விளக்கம் கொடுத்தேன் அவ்வளவுதான்.   

அடுத்து பலியைபற்றி பேசப்போனால் அது ஒரு மிகப்பெரிய சப்ஜெக்ட்.  இரக்கத்தையே விரும்பும் தேவன் பலியை கேட்டார்? அதன் தொடர்ச்சியாக பலியிடப்படும் ஒரு ஜீவன் மரிக்கிறது எனவே மரணத்தின் அதிபதி யார்? மரணம் என்பது தேவனின் ஆதி திட்டமா? ஆதாமை படைத்த இடத்தில் சாத்தனை அனுமதிக்க காரணம் என்ன? போன்ற பல கேள்விகளுக்கு பதிலை அறிய வேண்டும்.    

இங்கு இயேசுவை கொலை செய்தது யார் என்பதை மட்டும் பார்க்கலாம். நான் இவ்வளவு விளக்கமாக சொன்னபிறகு சம்பந்தமே இல்லாதே சில வசனங்களை எடுத்துபோட்டு என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை விளக்கமாக சொல்லாவிட்டால்  அதனால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இருக்கபோவதில்லை.

இயேசு தேவ குமான் என்பதும் அவர் என்னுடைய பாவத்துக்கும் எல்லோருடைய பாவத்துக்கும் மரித்தார் என்பதும்  அவரை தேவன் மரணத்துக்கு ஒப்புகொடுத்தார் என்பதும் நம்மைபோலுள்ள எல்லா கிறிஸ்த்தவர்களும் அறிந்த உண்மை. இதை யாரும் மறுக்கவும் இல்லை மறுக்கவும் முடியாது!  

 
ஆனால  "கொலை பாதகன்" ஒருவன்தான் ஒரு கொலையை செய்ய முடியும் ஆதிமுதல் இருக்கும் ஒரே மனுஷ கொலைபாதகன் ஆண்டவராகிய இயேசுவின் வார்த்தைகள்படி "பிசாசு" ஒருவனே. எனவே அவன்தான் இயேசுவை கொலை செய்ய முடியும். என்பது எனது கருத்து. 
 
நீங்கள் எந்த வசனத்தின் அடிப்படையில் யார் அவரை கொலை செய்தார்கள் என்று சொல்கிறீர்கள்? (முதலில் நீங்கள் சொன்ன வசனத்துக்கு அடிப்படையில் இருந்து விளக்கம் கொடுத்துவிட்டேன்)
 
இயேசுவுக்கு தெரியாத வேறு எதோ மனுஷ கொலைபாதகன் இருப்பதை நீங்கள் அறிவீர்களா? 
 
சொல்வதை சுருக்கமாக விளங்கும் வண்ணம் சொன்னால் எனக்கு புரிவதற்கு சுலபமாக இருக்கும் அல்லவா? 
 
   
 JOHN12 wrote:
///பிசாசு இயேசுவை கொன்றான் என்றால்,இயேசு வெற்றி சிறந்தார் என வேதம் கூறுவதெப்படி?? அவன் அறியாதவனாய் இயேசுவை கொலை செய்தான் என்றால் தானியெலை பார்க்கிலும் ஞானவானாய் இருப்பதெப்படி??? ///
    
அங்குதான்  தேவனின் திட்டம் தெரியாமல் தவறு செய்து பிசாசு மாட்டிகொண்டன். எந்த ஒரு ஞானமும் தேவ ஞானத்துக்கு முன்னால் ஒன்றுமில்லை! 
 
கீழ்படியாமையால் வீழ்ந்துபோன உலகை மரண பரியந்தம் கீழ்படிதலிநிமித்தம் இயேசு ஜெயித்தார்  அதனால் அவர் சிலுவையில் வெற்றி சிறந்தார்.  
 

 

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோ.சுந்தர் அவர்களே,

 

நான் தொடர்பில்லாமல் கேள்விகளை கேட்கவில்லை

தேவன் இயேசுவை வெட்டினாரா இல்லையா?? அப்படியானால் பிசாசு கொல்லவில்லையா? பதில் கூறுங்கள். தேவனா கொன்றார்!!! 

மனுஷ கொலை பாதகனான பிசாசு இயேசுவை கொன்றிருப்பானேயானால் பிசாசின் மேல் ரத்தபழி விழாமல் இயேசுவின் ரத்தபழி மனுஷர் மேல் விழக்காரணம் என்ன??

தன் ஜீவனை விட அதிகாரம் உடைய ஒரே மனிதர் இயேசு? அவரை பிசாசு கொன்றான் என நீங்கள் காட்டும் காரியம் எப்படிபட்டது ? 

 

//JOHN12 wrote:
///பிசாசு இயேசுவை கொன்றான் என்றால்,இயேசு வெற்றி சிறந்தார் என வேதம் கூறுவதெப்படி?? அவன் அறியாதவனாய் இயேசுவை கொலை செய்தான் என்றால் தானியெலை பார்க்கிலும் ஞானவானாய் இருப்பதெப்படி??? ///
    
Bro.Sundar: அங்குதான்  தேவனின் திட்டம் தெரியாமல் தவறு செய்து பிசாசு மாட்டிகொண்டன். எந்த ஒரு ஞானமும் தேவ ஞானத்துக்கு முன்னால் ஒன்றுமில்லை!//
 
நீங்கள்  நினைப்பது தவறு.. கீழே உள்ள வசனங்களை படியுங்கள்..அனேக ஆன்மீக புத்தகங்கள் தாங்கள் கூறும் கருத்துக்களை பெற்றதாய் உள்ளன.. ஆனால் வேதம் கூறுவதோ வேறு.. பிசாசிற்கு தன் முடிவு  நன்றாய் தெரியும்!!!! அது சர்வ நாசம் என்று தெளிவாய் அறிந்திருக்கிறான்!!!
 

மத்தேயு16 :22,23. அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.

                                     அவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார். 

இயேசு உலகத்தின் பாவத்திற்காக மரிப்பது,பிசாசிற்கு தெரிந்த ஒரு காரியம். அவனை தானியேலை பார்க்கிலும் ஞானவான் என்கிற காரியம் எத்துனை உண்மை.. அவன் இயேசு மரிக்கூடாது என்பதற்காகவே, பேதுருவின் வழியாக இயேசுவை கடிந்து கொண்டான்!!!

சகோதரரே, நான் என் பலிகளை பற்றி எழுதினேன் என இப்போது சகோதரர் உணர கூடும்..

சகோதரா.. வழிவிலகி போன நீசர்கள்,இயேசுவைபுறக்கணிப்போர்  அனைவரும் இயேசுவின் ரத்தபழியை சுமப்பர் என்பதே என் கட்டுரையின் சாரம்.. ரத்த பழியை சுமப்பவரே ஏசுவை கொலைசெய்தவர் ஆகிறார் என்பதை இனியும் நான் சொல்ல தேவை இல்லை!!

 

Glory to GOD!!!!!!!!!



-- Edited by JOHN12 on Friday 27th of September 2013 07:22:38 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

JOHN12 wrote:

தேவன் இயேசுவை வெட்டினாரா இல்லையா?? அப்படியானால் பிசாசு கொல்லவில்லையா? பதில் கூறுங்கள். தேவனா கொன்றார்!!! 

 


தேவன் அனுமதிக்காமல் தேவ சித்தம் இல்லாமல் பிசாசு இயேசுவை கொன்றுவிட முடியுமா சகோதரரே? சர்வலோக பாவங்களுக்கு இயேசு மரிக்கவேண்டியது இருந்ததால்தான் தேவன் இந்த செயலை அனுமதிக்கிறார்.  அவரே திட்டமிட்டார் அவரே நிறைவேற்றினார்!  எனவே மேலேயுள்ள வசனமும்  உண்மையே! 

போர்செவகர்கள் கொலை செய்கிறார்கள், மனுஷர்கள் உடனாளியாக இருக்கிறார்கள்,  பிசாசு  தூண்டுகிறான், தேவன் அனுமதிக்கிறார், இயேசு தம்மை தாமே ஒப்புகொடுக்கிறார்.       
 கலாத்தியர் 1:4  நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்;

JOHN12 wrote:

மனுஷ கொலை பாதகனான பிசாசு இயேசுவை கொன்றிருப்பானே ஆனால் பிசாசின் மேல் ரத்தபலி விழாமல் இயேசுவின் ரத்தபலி மனுஷர் மேல் விழ காரணம் என்ன??

இயேசுவை கொலை செய்ய மனுஷனை தூண்டியது பிசாசின் ஆவிகள் என்று எழுதிநேநேயன்றி இரத்த பழி யார்மேல் என்று நான் எழுதவில்லை. 

எண்ணாகமம் 35:33   இரத்தம் தேசத்தைத் தீட்டுப்படுத்தும்; இரத்தம் சிந்தினவனுடைய இரத்தத்தினாலேயொழிய, வேறொன்றினாலும் தேசத்திலே சிந்துண்ட இரத்தத்திற்காகப் பாவநிவிர்த்தியில்லை.

 
என்ற வசனப்படி மனுஷ குமாரனாகிய இயேசுவின் இரத்தத்தை சிந்திய  பழியை மனுஷர்கள் சுமந்தே ஆகவேண்டும். பிசாசு தூண்டினாலும் அதை நிராகரித்து விலகாமல் அவன் இச்சைக்கு  உட்பட்டு இயேசுவை கொலை செய்த பாவம் தண்டனைக்கு உரியதே என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் மனுஷர்கள் நன்மை செய்தவராகிய இயேசுவை கொலை செய்ய எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை, என்பதும் அவர்கள் ஆதியில்  இருந்தே  மனுஷ கொலைபாதகர்கள் இல்லை என்பதாலும் அவர்கள் மட்டாக தண்டிக்கபட்டு விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. 
 
JOHN12 wrote:
தன் ஜீவனை விட அதிகாரம் உடைய ஒரே மனிதர் இயேசு? அவரை பிசாசு கொன்றான் என நீங்கள் காடும் காரியம் எப்படி? 
                                       
ஜீவனை விடுவதும் கொலை செய்வது இரண்டு வெவ்வேறு சம்பவங்கள்.சரீரத்தை மாத்திரம் தனியே கொல்ல  முடியும் என்று லூக்கா 12:5 சொல்கிறதே!நம்போன்ற மனுஷர்களை கொலை செய்தால் ஜீவன் போய்விடும். ஆனால் இயேசுவை கொலை செய்தாலும் அவர் ஒப்புகொடுக்கவிட்டால் அவர் ஜீவன் போகாது.  
அந்தப்படியே அவர் ஒப்புகொடுத்தார்.
 
JOHN12 wrote:
////Bro.Sundar: அங்குதான்  தேவனின் திட்டம் தெரியாமல் தவறு செய்து பிசாசு மாட்டிகொண்டன். எந்த ஒரு ஞானமும் தேவ ஞானத்துக்கு முன்னால் ஒன்றுமில்லை!//
 
நீங்கள்  நினைப்பது தவறு.. கீழே உள்ள வசனங்களை படியுங்கள்..அனேக ஆன்மீக புத்தகங்கள் தாங்கள் கூறும் கருத்துக்களை பெற்றதாய் உள்ளன.. ஆனால் வேதம் கூறுவதோ வேறு.. பிசாசிற்கு தன் முடிவு  நன்றாய் தெரியும்!!!! அது சர்வ நாசம் என்று தெளிவாய் அறிந்திருக்கிறான்!!!
 

மத்தேயு16 :22,23அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.

                                     அவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார். 

இயேசு உலகத்தின் பாவத்திற்காக மரிப்பது,பிசாசிற்கு தெரிந்த ஒரு காரியம். அவனை தானியேலை பார்க்கிலும் ஞானவான் என்கிற காரியம் எத்துனை உண்மை.. அவன் இயேசு மரிக்கூடாது என்பதற்காகவே, பேதுருவின் வழியாக இயேசுவை கடிந்து கொண்டான்!!!////

ஆண்டவராகிய இயேசு மறித்து மூன்றாம் நாளில் உயிர்ப்பார் என்ற  இந்த காரியத்தை இயேசு தன வாயை திறந்து சொல்லும்வரை அதை பற்றிய உண்மை யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. 

மத்தேயு 16:21 அதுமுதல் இயேசு, தாம் எருலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்.

பிதாவுக்கும் இயேசுவுக்கும் மட்டுமே தெரிந்த இந்த இயேசுவின் உயிர்தெழுதல் பற்றிய காரியம் பிசாசுக்கும் தெரியும்  என்பதர்க்க்கு ஒத்த வசனம் வேதத்தில் எனக்கு தெரிந்தவரை எங்கும் இல்லை.  இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள். 

இந்நிலையில் இயேசு ஏன் பேதுருவை பார்த்து அப்பாலே போ சாத்தனே என்று சொன்னார் என்பதை நாம் அறிதல் அவசியமே!    

இயேசு சொல்லும் வசனம் இதோ :  

அவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார். 

இங்கு இரண்டாவதாக இயேசு அதே வரியில் தொடர்ந்து 

சொல்லும் வார்த்தைகளை சற்று கவனிக்க வேண்டும் 

 தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்"

"மனுஷனுக்கு ஏற்றவைகளை சிந்திக்கிறாய்"  

கொல்லவும்  அழிக்கவுமே வரும் பிசாசு என்றாவது மனுஷனுக்கு ஏற்றவைகளை சிந்திப்பனா?என்று நாம் சற்று யோசிக்க வேண்டும்.  

எனவே இங்கு இயேசு பேதுரு என்ற மனுஷனை பார்த்தே "சாத்தானே" என்று கூறினாரேயன்றி மற்றபடி பிசாசை பார்த்து மனுஷனுக்கு ஏற்றவைகளை சிதிக்கிறாய் என்று சொல்லியிருக்க வாய்ப்பேயில்லை. 

எனவே இவ்வசனத்தின்  பொருள் தேவனின் திட்டத்துக்கு விரோதமாக சித்திக்கும்/செயல்படும் எல்லா மனுஷனுமே ாத்தான்களே"  என்றே பொருள்படும்.

அபிஷேகம் பண்ணபட்ட கேருப்  எப்படி சாத்தான் ஆனான்? தேவனுக்கு விரோதமாக சிதித்ததாலேயே அவன் சாத்தான் ஆனான். அவன்பெயர் ஆதியில்  சாத்தான் அல்ல!அதேபோல் எந்த மனுஷன் தேவனின் திட்டத்துக்கு விரோதமாக சிந்தித்தாலும் அவன் சாத்தனே!

The original Hebrew term, satan, is a noun from a verb meaning primarily to, “obstruct, oppose,” as it is found in Numbers 22:22, 1 Samuel 29:4, Psalms 109:6.

தேவ திட்டத்தின் கெடுப்பவனும் எதிர்த்து  நிற்ப்பவன் எவனும் சாத்தனே! மற்றபடிசாத்தானான லூசிபரின் உண்மை  உண்மை பெயர் "ேருப்"தான்.

சுருங்க சொல்லின் "ஒரு மனுஷன் உலக நலனை கருத்தில் கொண்டோ அல்லது  தனது நலன்/ பிறர் நலன்/ நீதி நியாயம் எதை கருத்தில் கொண்டாவது தேவனின் சித்தத்துக்கு அல்லது திட்டத்துக்கு அல்லது அவர் வார்த்தைக்கு விரோதமாக செயல்பட்டால் அவன் மனுஷனாக இருந்தாலும்  ஒரு சாத்தனே!  என்பதே இவ்வார்த்தையின் அடிப்படை கருத்து.   

எனவே "இயேசு மரித்துவிட கூடாது என்று ஆதங்கத்தில் சொன்ன"பெதுருவைபார்த்துதான் இயேசு சாத்தான் என்றாரேயன்றி பிசாசை பார்த்து அல்ல!

பிசாசு இயேசுவை கொலை செய்யவே தருணம் பார்த்துகொண்டு இருந்தான். கொலை செய்வதற்கு எதுவாக  யுதாசுக்குள் புகுந்து அவரை காட்டிகொடுத்தான் என்று வேதம் தெளிவாக சொல்கிறது.

லூக்கா 22:3 அப்பொழுது பன்னிருவரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபேர்கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான். லூக்கா 22:4 அவன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் சேனைத் தலைவர்களிடத்திலும் போய், அவரைக் காட்டிக்கொடுக்கும் வகையைக் குறித்து அவர்களோடே ஆலோசனை பண்ணினான். 

 JOHN12 wrote:

///"வழிவிலகி போன நீசர்கள், இயேசுவை புறக்கணிப்போர் அனைவரும் இயேசுவின் ரத்தபழியை சுமப்பர் என்பதே என் கட்டுரையின் சாரம்.. ரத்த பழியை சுமப்பவரே ஏசுவை கொலைசெய்தவர் ஆகிறார்"  /////

இப்பொழுது தங்கள் கருத்துக்களின் அடிப்படையில்  ஒன்றே ஓன்று மட்டும் எனக்கு நன்றாகவே புரிகிறது. அதாவது இயேசுவின்   கொலை பழியானது அவரை ஏற்றுக்கொள்ளதவர்கள் மற்றும் பாவிகளான மனுஷர்களின்மேல் போடப்பட்டு அவர்கள் எப்படியாவது தண்டிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்!
 
ஆனால் நானோ, "நானும் ஒரு மனுஷன்" என்ற காரணத்தாலும் என்னை நேசிப்பதுபோல பிறரையும் நேசிக்கவேண்டும் என்ற எண்ணத்தாலும், என்போன்ற மனுஷர்கள் பிறப்பிலேயே பாவிகள் அல்ல என்றும் அவர்கள் பிசாசால் தூண்டப்பட்டுதான் பாவம் செய்கிறார்கள் என்றும் அதனால் அவர்கள் எல்லோருக்குமே தேவனிடத்தில் மட்டான தண்டனையோடு மன்னிப்பு  கிடைக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் எழுதுகிறேன். 
 
தேவனுடைய சித்தமும் எல்லோரும் மீட்கப்பட வேண்டும் என்று இருப்பதால் அவர் சித்தமே என்னுடைய சித்தமாக கொண்டு செயல்படுகிறேன்.  
   
யாருடைய விருப்பம் நிறைவேறும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்!

  



-- Edited by SUNDAR on Wednesday 16th of October 2013 12:47:42 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோ சுந்தர் அவர்களே,

நாம் பேசும் விஷயங்களையே இன்னும் ஆழமாய் பேசுவோம். கீழ்கண்ட வசனத்தில் தேவன் அனுமதித்ததாக இல்லை. 

//சகரியா 13:7 பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய புருஷன்மேலும் எழும்பு என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார், மேய்ப்பனை வெட்டுவேன், அப்பொழுது ஆடுகள் சிதறிப்போகும்; ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்மேல் திரும்ப வைப்பேன்.

மத்தேயு 26:31 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.//

தேவன் வெட்டினதாக  ஏற்று கொள்கிறீர்களா?? அப்படியானால் பிசாசு  இயேசுவைக்  கொல்ல மனிதர்களை எழுப்பினான் என்பதும்,தேவன் மனிதர்கள் கொள்ள அனுமதித்தார் என்பதும் எவாறு உண்மையாககூடும்.. சொல்லுங்கள்!!!

தேவன் வெட்டினார் என்றால் பலி பொருளாக வெட்டினாரா? இல்லை அறுப்புண்டு போகும்படி மேசியாவை சங்கரித்தாரா?? காய்பா எனும் பிரதான ஆசாரியன் தீர்க்க தரிசனம் உரைத்து சொன்னது தேவ சித்தத்தை என்பதை அறியீர்களா?? அவன் பின் வருமாறு கூர்நானே!!!

யோவான்11 :49. அப்பொழுது அவர்களில் ஒருவனும் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு ஒன்றுந் தெரியாது;50. ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான்.51. இதை அவன் சுயமாய்ச் சொல்லாமல், அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதஜனங்களுக்காக மரிக்கப்போகிறாரென்றும்,52. அந்த ஜனங்களுக்காகமாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறாரென்றும், தீர்க்கதரிசனமாய்ச் சொன்னான்.

பிரதான ஆசாரியனின் (காய்பா ) மூலமாய் இந்த பலி செலுத்தபட்டிருக்கிறது. இயேசு பலிபொருள் என்று காய்பா அறிந்திருந்தான். பலி செலுத்தப்படும் போது பிரதான ஆசாரியன் மீது பழி சுமத்தபடுகிரதில்லை என்பதை சகோதரர் அறிந்திருப்பீர்கள். (இதை முன்னிட்டே இயேசு பிறக்கும் பொது பிரதான ஆசாரியரா அல்லது மரிக்கும்போதா அல்லது உயிர்தெழுந்த பின்னரா ?  என்று நீண்ட நாளுக்கு முன்பு தங்களிடம் கேட்டிருந்தேன் .தாங்கள் பதில் தர வேண்டும்!!)இயேசுவிற்கு எப்போதும் பிதா செவிகொடுக்கிறார் என்பதை தாங்கள் அறிந்திருக்க கூடும். சிலுவையில் அடித்து கொடுமை படுத்தினவர்களை இயேசு மன்னித்தார்.. மன்னிக்கும்படி பிதாவையும் மன்னிக்கும் படிக்கு விண்ணப்பம் பண்ணினார். அந்த விண்ணப்பம் அங்கிகரிக்க பட்டிருக்க இதில் யார் கொலை செய்தார் என்பதை சகோதரர் கூறுங்கள்..

தேவன் வெட்டினார் என்றால்-கொலை செய்தது தேவன் என்பதாகிவிடும் 

பிசாசு என்போமாகில்-தேவாலய உப்பரிக்கையிலே அவரை கொல்லாமல் விட்டது எப்படி ?ஏன் என்கிற கேள்வி வரும்.. அவன் இயேசுவின் மரித்தளின் காலவேளையும் உயிர்தேளுதலின் காலவேளையையும் அறியாதிருந்தான் என்கிற கூற்றும் உடைத்தெரியப்படும்!!

போர் சேவகர்கள்,கூடமாய் எதிர்த்து கோஷமிட்டவர்கள், பரிசேயர்,பிலாத்து,பிரதான ஆசியர் என்போமாகில் இயேசுவின் மன்னிப்பு வேண்டி பிதாவிடம் வேண்டின ஜெபத்திற்கு தேவன் செவிகொடுக்கவில்லை என்றாகிவிடும்.

இயேசுவின் ரத்தபலி மனமாறாமல் இருக்கிற பாவிகளின் மீதே சுமத்தபடுகிறது.. பாவிகளே இயேசுவை கொன்றவர்கள்..இன்னும் கொன்றுகொண்டே இருக்கிறவர்கள். 

//அபிஷேகம் பண்ணபட்ட கேருப்  எப்படி சாத்தான் ஆனான்? தேவனுக்கு விரோதமாக சிதித்ததாலேயே அவன் சாத்தான் ஆனான். அவன்பெயர் ஆதியில்  சாத்தான் அல்ல!அதேபோல் எந்த மனுஷன் தேவனின் திட்டத்துக்கு விரோதமாக சிந்தித்தாலும் அவன் சாத்தனே!

The original Hebrew term, satan, is a noun from a verb meaning primarily to, “obstruct, oppose,” as it is found in Numbers 22:22, 1 Samuel 29:4, Psalms 109:6.

தேவ திட்டத்தின் கெடுப்பவனும் எதிர்த்து  நிற்ப்பவன் எவனும் சாத்தனே! மற்றபடிசாத்தானான லூசிபரின் உண்மை  உண்மை பெயர் "ேருப்"தான்.//

சகோதரரே.. 

கெருபின்,செருபின் என்கிற பதங்கள் கேருப்கலையே குறிக்கின்றன.. கேருப் என்பது ஒரு பேர் அல்ல..ஒர்தொடெக்ஸ் மதத்தில் பார்க்கும்போது எழு பிரதான தூதர்களி குறிப்பிடுகிறார்கள்.. ரபெல்,மிக்கேல்,கக்பிரிஎல்,உரியல்,ரகுவேல்,சரகுவேல்,ரிமிஎல் என்பதாக!!! ஆனால் வேதத்தில் சில பெயர்களே உள்ளன!!! 

இதை பற்றி தனி திரியில் சமயம் அமைந்தால் பார்க்கலாம்.. கேருப் என்பது தாங்கள் குறிபிடுவது போல சாத்தானின் பெயர் அல்ல பெயர் அல்ல.. பரலோகத்தில் உள்ள நான்கு ஜீவன்களும் கேருபீன்கள் என வேதம் சொல்லும்போது எவ்வாறு கேருப் சாத்தாநின் பெயரை இருக்கும்.. அது பணிவிடை ஆவிகளின் ஒரு உயர் நிலை!! தேவனின் படைப்பு இப்படி !?(எசேக்கியேல் 10).அவைகள் தேவனின் வாகனம்!! 

எந்த கெருபின் பெயரும் வேதத்தில் இல்லை. பிசாசை தவிர. அவன் ('அவன்' என்றால் ஆன் பால் என்று அருத்தம் இல்லை)பெயர் லூசிபர்!!!

 ///தேவனுடைய சித்தமும் எல்லோரும் மீட்கப்பட வேண்டும் என்று இருப்பதால் அவர் சித்தமே என்னுடைய சித்தமாக கொண்டு செயல்படுகிறேன்.  யாருடைய விருப்பம் நிறைவேறும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்!//

 
எல்லோரும் மீட்க்கபடவேண்டுமானால் எல்லோரும் மனந்திரும்பவேண்டும். கர்த்தர் மோவாபை அழித்து இஸ்ரவேலை ஊன்றகட்டுவார் என்றால் மோவாப் ரட்சிப்படையாமல் அல்லவா மரிப்பான்!!! மரித்தான் !!
அவ்வாறிருக்க எல்லோரும் மீட்படைவதேப்படி.. தேவனுக்கு சித்தமானால் ஊசியின் காதில் ஒட்டகமும் நுழையும்.. விசுவாசத்தோடு!!! 

கர்த்தருக்கு மகிமை உண்டாகுக!!!



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

JOHN12 wrote:

 

தேவன் வெட்டினதாக  ஏற்று கொள்கிறீர்களா?? அப்படியானால் பிசாசு  இயேசுவைக்  கொல்ல மனிதர்களை எழுப்பினான் என்பதும்,தேவன் மனிதர்கள் கொள்ள அனுமதித்தார் என்பதும் எவாறு உண்மையாககூடும்.. சொல்லுங்கள்!!!

 


சகோதரர் அவர்களே இயேசுவை குறித்து சொல்லபட்ட தரிசனம்  நீங்கள் சொல்லும் கருத்து எல்லாம்  சரியானதே ஆனால் அதன் அடிப்படை காரணம் என்ன என்பதுதான் இங்கு மாருபடாக  உள்ளது 

 
14:27   I will put the keeper of the sheep to death,
 
வெட்டுவேன் என்று சொல்லும் வார்த்தை ஆங்கில வேதாகமத்தில் "மரணத்துக்கு ஒப்புகொடுப்பேன்" என்பதுபோல் குறிப்பிடபட்டுள்ளது  
 
"மேய்ப்பனை வெட்டுவேன்" என்று கர்த்தர் சொல்லும் பதத்தை கீழ்கண்ட வசனத்தோடு ஒப்பிட்டு படிக்கவும்  
 
6. நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார் .10. கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; 
 
 
தேவ நீதிபடி  "பாவம் செய்தவன் கொல்லபட வேண்டும்" அதனால் தேவனோ பாவிகளாகிய நமது அக்கிரமங்களை இயேசுவின்மேல் சுமத்தி அவரை பாவ நிவாரண பலியாக கொலைக்கு ஒப்புகொடுக்கிறார்.  மற்றபடி இயேசு கொலை செய்யபட வேண்டும் எனபது தேவனின் விருப்பம் இல்லை. அது நிர்பந்தம்!
 
அந்த நிர்பந்தம் எவ்வாறு உண்டானது தேவனை அவ்வாறு செய்ய ஏவியது  யார்? எதற்க்காக? என்பதை  அறிய  நான் இவ்வாறு கேட்கிறேன்:
 
பாவம் செய்த ஒருவன் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்று விரும்புவது அல்லது அவனை குறித்து பிராது பண்ணுவது குற்றம் சுமத்துவது யார்?
 
வெளி 12:10 இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான்.
 
குற்றம் சுமத்துவது ஒரே ஒருவன்தான் அவன்தான் அடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறவன் அவ்வாறு தண்டிக்கப்டாவிட்டால் தூஷிப்பவன்.
 
II சாமுவேல் 12:14 ஆனாலும் இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய் சாகும் என்று சொல்லி, நாத்தான் தன் வீட்டுக்குப்போய்விட்டான்.  
 
ஆம்! பாவம் செய்த தாவீதிக்கு தேவன் சரியான நீதிபடி  தண்டனை கொடுக்காவிட்டால் இங்கு குறிப்பிடபட்டுள்ள  "கத்தரின் சத்துருக்கள்" தூஷிப்பார்கள் என்ற காரணத்தால் தேவன் தாவீதுக்கு தண்டனை கொடுக்கிறார். 
 
கர்த்தருக்கு எந்த மனுஷனும் சத்துருவாக இருக்கமுடியாது இங்கு தேவன் குறிப்பிடுவது  பிசாசும் அவன் கூட்டளிகளுமே.
 
எனவே மனுஷன் தண்டனை பெறவேண்டும் என்று விரும்புவது பிசாசும் அவன் கூட்டாளியும் மட்டுமே! 
 
மேலும் ஒரு உதாரணமாக யோபுவை குறித்த காரியங்களை நான் சொல்ல விரும்புகிறேன். தேவன் யோபுவுக்கு பல துன்பங்களை அனுமதிக்கிறார் அல்லது தேவனே  கூட சில  துன்பத்தை கொடுத்திருக்கலாம் ஆனால் அவர் அதை விரும்பி செய்யவில்லை பிராது பண்ணும் அல்லது குற்றம் சுமத்தும் சாத்தானின் வாயை அடைக்கவே அவ்வாறு செய்கிறார் 
 
யோபு 2:3   முகாந்தரமில்லாமல் அவனை நிர்மூலமாக்கும்படி நீ என்னை ஏவினபோதிலும், அவன் இன்னும் தன் உத்தமத்திலே உறுதியாய் நிற்கிறான் என்றார்.
 
இவ்வாறு தேவன் எந்த ஒரு மனுஷனுக்கு தான் விரும்பி எந்த ஒரு தண்டனையும் கொடுப்பது கிடையாது அவர் நீதியினிமித்தம் சத்துருவால்  நிர்பந்தம்  பண்ணபடுகிறார்.
 
(இதற்க்கு உதாரணமாக நான் முன்பு ஒரு சம்பவம் எழுதினேன். அதாவது என்னுடைய மகன் சுமார் 10வ யது இருக்கும்போது வெளியில் விளையாட சென்றபோது அவனைவிட வயதில் குறைந்த ஒரு பையனை அடித்துவிட்டான்  சிறிதுநேரத்தில் அந்த பையனின் அம்மா பாட்டி அத்தை என்று ஒரு கூட்டமே என்னிடம் வந்தஅவனை பற்றி பிராது பண்ணியது. என் மகன் மிகவும் சாது என்பதும் அவர்கள் மகன் ரொம்ப வால்தனம் பண்ணுவான் என்பதும் எனக்கு தெரியும். காரணம் இல்லாமல் என் மகனை அவனை அடித்திருக்க மாட்டான் என்பதும் எனக்கு தெரியும் ஆகினும் வயதில் குறைந்த பையனுடன் விளையாட சென்றதும் அவனை அடித்தும் குற்றம் என்று தீர்மானித்து அவனை திட்டி இரண்டு மூன்றுஅடிகள் அடித்தபின்னரே அந்த கூட்டம் சமாதானமாக அந்த இடத்தி விட்டு சென்றது. இங்கு என் மகன் மகனை அடிப்பது எனக்கு உடன்பாடு கிடையாது ஆகினும் சில நீதியான காரணங்கள் மற்றும் சத்துருக்கள் அதை காரணம் காட்டி என்னை செய்ய தூண்டியாதால் நான் செய்யவேண்டிய நிரபந்தம் உண்டானது.)
 
அதேதான் இயேசுவின் காரியத்திலும்  நடந்தது! மனுஷர்களின் பாவங்களுக்கு ஈடாக பாவம் செய்த மனுஷகள் சாக வேண்டும் அல்லது  அவர்களுக்கு  பதிலாக அந்த மனுஷர்களை படைத்த தேவனே கொலைசெய்யப்படவேண்டும் என்பது சாத்தனின் நிர்பந்தம் அதை நீதியினிமித்தம் தேவன் அனுமதிக்கிறார் சாத்தான் மிக கொடூரமான முறையில் அதை நிறைவேற்றுகிறான்.
 
பழைய ஏற்பாட்டில் பாவங்களுக்காக செலுத்தபட்ட எந்த பலியும் இவ்வளவு கொடூரமாக சவுக்கால் அடிக்கபட்டு முள் முடி சூட்டப்பட்டு சித்திரவதை செய்யபட்டு கொல்லப்படவில்லை. காரணம் அதை செலுத்தியவர்கள் தேவன் நியமித்த ஆசாரியர்கள். 
 
ஆனால் இங்கோ அப்படியல்ல! இயேசுவின் பலியை நிறைவேற்றியவன் தேவனின் சத்துருவாகிய சாத்தான்! அவனிடம் எந்த இரக்கத்துக்கும் இடமில்லை எனவே
அவன் தன்னை ஆகாதவன் என்று வானத்தில் இருந்து கீழே தள்ளிய  தேவன் பேரில் இருந்த எல்லா  கோபத்தையும் மாம்சமாக வந்த இயேசுவின்மேல் தீர்த்துகொண்டான்.  பிசாசு  புகுந்த மனுஷர்கள் என்ன செய்கிறோம் என்று அறியாமல் அதை செய்தார்கள் 
 
லூக்கா 23:34 தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்
 
இதற்க்கு மேல் எனக்கு விளக்க தெரியவில்லை சகோதரரே. அதற்க்கு அவசியமும் இல்லை என்று கருதுகிறேன்.
 
ன்னை பொருத்தவரை மனுஷன் மேலோ தேவன் மேலோ எந்த குற்றமும் இல்லை "கேட்டின் மகன் ஒருவனே கெட்டவன்"
 
தங்கள் கருத்தில் தாங்கள் உறுதியாக இருந்தால் அதற்கு அடிப்படையில் இருந்து சரியான காரணம் இருந்தால் அப்படியே வைத்துகொள்ளுங்கள்.  
 
Bro. JOHN12 wrote
/எ ந்த கெருபின் பெயரும் வேதத்தில் இல்லை. பிசாசை தவிர. அவன் ('அவன்' என்றால் ஆன் பால் என்று அருத்தம் இல்லை)பெயர் லூசிபர்!!!//
 
சாத்தனின் பெயர் என்று சொல்லப்படும் லூசிபர் என்ற வார்த்தை தமிழ் வேதாகமத்தில் இல்லாத காரணத்தால் அவன் பெயரை "கேருப்" என்று குறிப்பிட்டேன். தங்கள் விளக்கங்களுக்கு நன்றி.
 அவன் பெயர் எதுவாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை அவன் தேவனின் சத்துரு  என்பது மட்டும் எனக்கு தெரியும்.
 
Bro. JOHN12 wrote
//ேசுவின் ரத்தபலி மனமாறாமல் இருக்கிற பாவிகளின் மீதே சுமத்தபடுகிறது.. பாவிகளே இயேசுவை கொன்றவர்கள்..இன்னும் கொன்றுகொண்டே இருக்கிறவர்கள்.///
 
இந்த கருத்து சரிபோல் எனக்கு தோன்றவில்லை சகோதரரே! இயேசுவை மீண்டும் சிலுவையில் அடிப்பவர்கள் யார் என்று வேதம் சொல்கிறது?
 
 
எபிரெயர் 6:4. ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,

6 மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், 

 
இயேசுவை அறிந்தும் மறுதலித்து  பாவம் செய்பவர்களே இயேசுவை மீண்டும் சிலுவையில் அடிப்பவர்கலேயன்றி இயேசுவை அறியாமல் பாவம் செய்பவர்கள் அல்ல!  
 



 



-- Edited by SUNDAR on Wednesday 30th of October 2013 12:04:06 PM



-- Edited by SUNDAR on Wednesday 30th of October 2013 12:07:13 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

சகோதரர் சுந்தர் அவர்களே,

யார் இயேசுவை கொன்றார்கள்? என பார்க்கும் முன் சில உண்மைகளை அறிந்து கொள்வது முக்கியம்.

1. இயேசு கிருஸ்துவின் ஜீவனை அல்லது ஆவியை அவரை விட்டு எடுக்கும் .அதிகாரம் எந்த மனிதர்களுக்கும் கிடையாது. பிசாசுக்கும் கிடையாது. அவரே தன் ஜீவனை ஒப்புக் கொடுத்தால் மட்டுமே அவர் இறக்க முடியும். இந்த அதிகாரத்தை பிதாவாகிய தேவனே இயேசுவுக்கு வழங்கினார். அந்தப்படியே அவர் சிலுவையின் பாதிப்பால் இறப்பதற்க்கு சில மணி நேரங்கள் முன்பாகவே தன் ஆவியை பிதாவிடம் ஒப்புக் கொடுத்து விட்டு இறந்தார்.

சிலுவை அவர் உடலை மட்டுமே பாதித்தது. அவரது ஆவியை அவரே ஒப்புக் கொடுத்தார். அவர் அவ்வாறு ஒப்புக் கொடுக்காமல் இருந்திருந்தால் சில மணி நேரங்கள் கழித்து சிலுவையில் உண்டான பாதிப்பால் அவர் மரணமடைந்திருப்பார் (அதுவும் அவர் விரும்பினால் மட்டுமே). ஆனால் அதற்கு முன்பாகவே அவர் தன் ஜீவனை பிதாவிடம் ஒப்புக் கொடுத்தார்.

இதுவே இயேசு கிருஸ்துவின் மரணத்தை பற்றின சரியான பார்வையாகும். இயேசு கிருஸ்துவின் ஜீவனை எடுக்கும் அளவிற்க்கு மனிதர்களோ, பிசாசோ பெரியவர்கள் கிடையாது.

2. //ஐயா, எத்தனையோ நன்மைகள் செய்த நம் இயேசப்பா ஆகாதவர் என்று தள்ளப்பட்டு அதிகமான அடிகள் அடிக்கபட்டு முள்முடி சூட்டபட்டு அதிக வேதனை பட்டு, மிக கொடூரமான முறையில் சிலுவையில் அடித்து கொலை செய்யபட்டார். //

இந்த உலகில் எத்தனையோ மனிதர்கள் பல்வேறு கொடூரமான  முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். மதம், நாடு, இனம், குலம், காதல் இப்படி எத்தனையோ காரணங்களுக்காக கொடூரமான முறையில் அனேகர் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். தாங்கள் கொண்ட நோக்கத்துக்காக அவர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் அதை தியாகம் செய்துள்ளனர். இவ்வாறு சித்ரவதை பட தங்களை ஒப்புக் கொடுத்தவர்கள், மற்ற மக்கள் தங்களை பரிதாபத்தோடு பார்ப்பதை விரும்ப மாட்டார்கள். ஏனெனில் இவர்களின் மரணம் பரிதாப மரணம் அல்ல. வீர மரணம்.

இவர்களின் தியாகம், தீவிரம், துணிச்சல் இவைகளை உணர முடியாத சாதாரண மக்கள் மட்டுமே இவர்களின் மேல் பரிதாபம் கொள்ளுவார்கள். இயேசு கிருஸ்துவின் மரணமும் பரிதாப மரணம் அல்ல. அது வீர மரணம். (ஆனால் அவரது மரணத்தை பரிதாப மரணமாக காட்டுவது என்பது கிருஸ்துவ மதத்தை பரப்ப நினைப்பவர்களால் செய்யப்படும் ஒரு யுக்தி)

பாவத்தினால் மனிதர்கள் துன்பமடைவது பொறுக்க முடியாமல் தன்னுடைய குமாரனை தேவன் அனுப்பினார். அவரும் வந்து தேவ சித்தத்தை நிறைவேற்றினார். ஆனால் மனிதர்கள் பார்த்து அய்யோ பாவம் ! என உச்சு கொட்டும் அளவுக்கு, மிகவும் பரிதாபமான காட்சிக்குரியவர் அல்ல இயேசு கிருஸ்து என்பதை அறிய வேண்டும்.  அவர் துன்பப்பட்டதை கண்டு அழுத மக்களை பார்த்து அவர் சொன்னது நினைவில் கொள்ளத்தக்கது.

லூக்கா.23.27. திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள்.
28. இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.
29. இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள்வரும்.
30. அப்பொழுது மலைகளை நோக்கி: எங்கள்மேல் விழுங்களென்றும், குன்றுகளை நோக்கி: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள்.
31. பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார்.

கர்ம வினை இல்லாத இயேசு கிருஸ்துவின் நிலையே இவ்வளவு பரிதாபமானது என்றால் கர்ம வினையில் மாட்டி தவிக்கும் மனிதர்களின் நிலை எவ்வளவு பரிதாபகரமானது? யாரு, யாரை பார்த்து பரிதாபபட வேண்டும் என்ற விவஸ்தை வேண்டும். 

3. ஒரு ஆடு மேய்ப்பவர் (அதாங்க பாஸ்டர்),  ஆண்டவரே, உம்முடைய வருகையில் என்னை பரலோத்துக்கு எடுத்து கொள்ளும், என எப்போதும் வேண்டி கொள்வார். ஒரு நாள் அவர் ஒரு கனவு கண்டார். அதில் ஆண்டவர், மகனே உன் வேண்டுதலை கேட்டேன். உன்னை பரலோகத்துக்கு எடுத்து கொள்ள போகிறேன். நாளை நீ இறக்க போகிறாய். அதன் பிறகு நீ பரலோகத்துக்கு வர முடியும் என்றார்.

அது கேட்டு அதிர்ச்சியடைந்தவர், ஆண்டவரே எதோ ஒரு வேகத்தில் அப்படி வேண்டி கொண்டேன். அதையெல்லாம் பெரிசா எடுத்துக்க வேண்டாம். எனக்கு எவ்வளவோ பொறுப்பு இருக்கு. இப்ப வந்தா நான் ஒருவன் மட்டும் தான் வர முடியும். ஆனால நான் உயிரோடு இருந்தால் அனேக ஆத்துமாக்களை உடனடியாக பரலோகத்துக்கு அனுப்ப முடியும். என் பையனை பெரிய படிப்பு படிக்க வைத்து, ஆடு மேய்க்க (அதாங்க பாஸ்டர்) அனுப்பனும். சபைக்கு ஏசி போடணும். பல லட்சத்துக்கு தசம் பாக  காணிக்கை வாங்க வேண்டும். லேட்டஸ்ட் மாடல் கார் வாங்க வேண்டும். இப்படி பல தேவைகள் இருப்பதால் என்னை பரலோகத்துக்கு எடுத்து கொள்ள வேண்டாம் என்று சொன்னார்  

மேற்கண்டது கற்பனையாக இருப்பினும், அனேக மனிதர்கள் இந்த நிலையில்தான் இருக்கிறார்கள் என்பதையும், நாமும் இந்த நிலையில்தான் இருப்போம் என்பதையும் நாமறிவோம்.

மாயையான இந்த உலகிலும், அதில் உள்ளவற்றின் மேலும் ஆசை கொண்டு, அதிலேயே தங்கி எந்த பிரச்சனையுமில்லாமல் எப்போதும் இந்த உலகை அனுபவிக்க வேண்டும் என்று மனிதர்கள் நினைக்கின்றனர். ஆனால் இயேசு கிருஸ்துவுக்கு மாயையான இந்த உலகில் எந்த பிடிப்புமில்லை. பரலோகத்தில் இருந்து இறங்கி வந்த அவருக்கு தன் வேலையை முடித்து பரலோகத்துக்கு செல்வது மட்டுமே குறிக்கோள். தன் உயிரின் மீது ஆசையில்லாத அவருக்கு மரணம் என்பது ஒரு பொருட்டல்ல. தன் சரீர மரணத்துக்கு பயந்து, கெத்சமனே தோட்டத்தில் அவர் பிராத்தனை செய்ததாக சிலர் கூறுகின்றனர். இது தவறான செய்தியாகும். இயேசு கிருஸ்து சரீர மரணத்தை கண்டு ஒரு போதும் .பயந்தவர் அல்ல.

பூமியில் வாழ்வதை விட, தான் வந்த வேலையை முடித்து விட்டு பரலோகம் செல்லவே அவர் பெரிதும் விரும்பினார். மேலும் பரலோகத்திற்க்கு சென்ற பிறகே, அவர் முழு மனித குலத்துக்கும் ஆவியை தர முடியும்,  நன்மை செய்ய முடியும் என்பதால், அவர் மரணமடைந்து பரலோகத்துக்கு செல்லும் நாளை விரும்பினவராக இருந்தார்.

சரீர மரணத்தை கண்டு பயப்படும் சாதாரண மனிதன் போல, இயேசு கிருஸ்து சரீர மரணத்தை கண்டு பயப்படுபவர் இல்லை.

 (தொடரும்)



-- Edited by SANDOSH on Friday 1st of November 2013 11:55:24 PM

__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

4. இந்த உலகமானது மாயையாய் இருக்கிறது. தேவனின் அனுமதியின் பேரில், அது மாயையான சாத்தானின் ஆளுகைக்கு உட்பட்டதாக இருக்கிறது. அனேக மக்களும் மாயையையே விரும்புகிறவர்களாய் இருக்கின்றனர். இப்படிபட்ட மனிதர்கள் மத்தியில் சத்தியத்தை பற்றியும், தேவனை பற்றியும் பேசுபவர்கள் மற்ற மனிதர்களால் துன்பபட்டே ஆக வேண்டும். ஏனெனில் மெஜாரிட்டியாய் இருப்பவர்கள் மைனாரிட்டியை சகித்து கொள்ள மாட்டார்கள்.

பூமிக்கு வந்த இயேசு கிருஸ்து உலகத்துக்கு ஒத்த வேஷம் தரித்தவராக இருந்திருந்தால், அவர் எந்த சேதமுமில்லாமல் வாழ்ந்திருக்க முடியும். உலகத்திற்க்கு, மாமிசத்திற்க்கு, பிசாசிற்க்கு ஒதது போனவராக அவர் இல்லை என்பதை அவரது கொலை நிரூபிக்கிறது. அவர் பிதாவின் பணியை செய்ததனால்,  பிதாவை பற்றின செய்தியை சொன்னதால் அவர் அனேக மக்களுக்கு ஆகாதவராக ஆனார். இயேசுவுக்கு முன்பிருந்த தீர்க்கதரிசிகள் பலரும் அவ்வாறே கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். எப்போதாவது, அந்த நாட்டின் ராஜா, யாராவது  தீர்க்கதரிசியை ஏற்று கொண்டிருந்தால் மட்டுமே, அவர் மற்ற மக்களாலும் ஏற்று கொள்ளப்பட்டு உயிரோடு இருந்திருக்கிறார்.

ஏறக்குறைய எல்லா மத தலைவர்களும் கொல்லப்பட்டே இறந்திருக்கிறார்கள் எனபதை அந்த, அந்த மத நூல்களில் இருந்து அறிந்து கொள்ள முடியும், கிருஸ்ணர், புத்தர், முகம்மது நபி இவர்கள் யாவரும் கொல்லப்பட்டவர்களே. ஆக மதம் உருவாக அடிப்படையாய் இருந்தவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது பொதுவான பார்முலா. இது அவர்கள் சாதாரண உலகத்து மக்களை போல் இருக்காமல், சிந்திக்காமல் வித்தியாசமாய் இருந்ததை காட்டுகிறது. அது மட்டுமல்லாமல் இயற்கையான மரணம் இவர்களை நெருங்க முடியாது (?)என்பதையும் (அந்த அந்த மதத்தினர்) சொல்வதாய் இருக்கிறது.

இயேசு கிருஸ்துவின் சிலுவை பாடுகள், அவர் பிதாவின் பணியை சரியாக நிறைவேற்றினார் என்பதற்கும், சத்தியத்தை பற்றி சொன்னார் என்பதற்க்கும், உலகம், மாமிசம், பிசாசு முதலியவற்றை வென்றவராக அவர் இருந்தார் என்பதற்க்கும் சான்று பகர்வதாக உள்ளது. அவர் ஜீவனுள்ள பரிசுத்த ஆவியினால் பிறந்ததால், அவருக்கு இயற்கை மரணம் என்பது சாத்தியமில்லை எனபது என் சொந்த கருத்தாகும்.

அவரது உயிரை எடுக்கும் அதிகாரம் பிசாசுக்கும் இல்லை, எந்த மனிதர்களுக்கும் இல்லை. விரும்பின நேரத்தில் மரணத்தை சந்திக்க, அவர், பிதாவால் அதிகாரம் பெற்றிருந்தார். (இந்து மதத்தில் இருந்த சில யோகிகளும், சித்தர்களும் தாங்கள் விரும்பின நேரத்தில் மரணமடைந்துள்ளார்கள் என்பதை சில இந்து நூல்களில் இருந்து அறிய முடியும்.)

(தொடரும்)



__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

மேற் கண்டவற்றில் இருந்து நாம் ஒரு முடிவுக்கு வர முடியும். அது என்னவெனில்

1. "இயேசு கிருஸ்து சிலுவையில் மரணமடைந்தார். ஆனால் சிலுவையால் மரணமடையவில்லை"

2. "இயேசு கிருஸ்துவின் சரீரத்தை துன்பபடுத்தினதற்கு போர் வீரர்கள் காரணமாய் இருந்தாலும், போர் வீரர்களை தூண்டி விட யூதர்களும், அவரை காட்டி கொடுத்த யூதாசும் காரணமாய் இருந்தாலும் - அவரது இறப்புக்கு எந்த மனிதரும் காரணம் இல்லை'

(இன்னும் நிச்சயமாக நாங்கள்அல்லாஹ்வின் தூதராகிய மர்யமின்குமாரராகிய  ஈஸா மஸீஹை கொன்று விட்டோம் என்று அவர்கள் கூறுவதாலும் அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை. - இவ்வாறு குர் ஆன் கூறுவது உண்மைதான்)

ஆனால்,

யூதாசின் மேல் இயேசு கிருஸ்துவின் இரத்தப் பழி வந்தது - இயேசுவை துன்புறுத்தியதில் யூதாஸ் எந்த பங்கும் வகிக்கவில்லை என்றாலும், இயேசுவின் கொலைப் பழி யூதாஸின் மேல் வந்தது.

அவரது சரீரத்தை துன்புறுத்தியதில் யூதர்களுக்கு நேரடியான ப்ங்கு இல்லை. - ஆனால் இயேசு கிருஸ்துவின் இரத்தப் பழியை அவர்கள் தாங்களாகவே தங்கள் மேல் ஏற்றுக் கொண்டனர்.

ஆவியில் நிறைந்த பவுல் மற்றும்  இயேசுவின் சீடர்கள் இவர்கள் மூலமாக,  யூதர்களின் மேல் கொலை குற்றம் சாட்டப்பட்டது.

ஜீவாதிபதியை கொலை செய்தீர்கள் என்று பவுல் யூதர்களின் மேல் குற்றம் சாட்டினார். ஜீவாதிபதியை கொல்ல முடியாது என்றாலும், அவரது கொலைப்பழி யூதர்களின் மேல் வந்தது. அதாவது இவர்கள் இயேசுவை கொலை செய்யாமலேயே, கொலை பழிக்கு ஆளாயினர்.

உல்க வழக்கின்படி, கொலை என்பதற்கு "ஒரு மனிதனின் உயிரை நியாயமில்லாமல் இன்னொரு மனிதன் அல்லது மனிதர்கள் எடுத்தல்" என்பது அர்த்தமாகும். இந்த வரைமுறையின்படி பார்த்தால் இயேசு கிருஸ்துவை யாரும் கொல்லவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம். 

கொலை செய்யாத ஒருவர் மீது கொலை பழி போடுவது சரியல்ல என்ற எண்ணம் எல்லாருக்கும் வரலாம். ஆனால் யூதர்கள் தங்கள் சகோதரனாக வந்த இயேசு கிருஸ்துவை, பகைத்து விட்டதால் அவர்கள் மேல் கொலை பழி வந்தது. ஏனெனில் வேதத்தின்படி கொலைகாரன் யார் எனில், தன் சகோதரனை பகைக்கிறவனே.

1 யோவான்.3.15. தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.

இதிலிருந்து கொலைகாரனுக்கான வரையறை உலக வழக்கிற்க்கு ஒன்றாகவும், பைபிளின்படி மற்றொன்றாகவும் இருப்பதை அறியலாம்.

தண்டனையை நிறைவேற்றிய ரோம போர் சேவகர்கள் மேல் இயேசு கிருஸ்துவின் இரத்தப் பழி வந்ததாக தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் எஜமானர் இட்ட கட்டளையையே நிறைவேற்றினார்கள்.

அதிலும் இந்த தண்டனையை நிறைவேற்றியதில் முக்கியமானவனாக இருந்த நூற்றுக்கு அதிபதியாய் இருந்தவன், இயேசுவின் மரணத்தை கண்டு, "இவர் மெயாகவே தேவ குமாரன்" என அறிக்கையிட்டு  இயேசுவை ஏற்றுக் கொண்டான். இவனே முதன் முதலாக வேற்று மதத்தில் இருந்து கிருஸ்துவத்துக்கு மாறின மனிதன் ஆவான்.



__________________
1 2  >  Last»  | Page of 2  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard