ஜீவாதிபதியை கொலை செய்தீர்கள் என்று பவுல் யூதர்களின் மேல் குற்றம் சாட்டினார். ஜீவாதிபதியை கொல்ல முடியாது என்றாலும், அவரது கொலைப்பழி யூதர்களின் மேல் வந்தது. அதாவது இவர்கள் இயேசுவை கொலை செய்யாமலேயே, கொலை பழிக்கு ஆளாயினர்.
உல்க வழக்கின்படி, கொலை என்பதற்கு "ஒரு மனிதனின் உயிரை நியாயமில்லாமல் இன்னொரு மனிதன் அல்லது மனிதர்கள் எடுத்தல்" என்பது அர்த்தமாகும். இந்த வரைமுறையின்படி பார்த்தால் இயேசு கிருஸ்துவை யாரும் கொல்லவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
அன்பு சகோ. சந்தோஷ் அவர்களே தங்கள் விளக்கங்களுக்கு மிக்க நன்றி.
இயேசுவை யாரும் கொல்ல முடியாது என்பது உண்மைதான் ஆகினும், தாங்கள் சுட்டியிருக்கும் வசனமே "ஜீவதிபதியை கொலை செய்தீர்கள்" என்று சொல்லி அவர் கொலை செய்யபட்டதை ஒத்துகொள்கிறது.
மேலும் இயேசு கூட தன் வாயாலேயே தன்னை கொலை செய்வார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மாற்கு 10:33. இதோ, எருசலேமுக்குப்போகிறோம்; அங்கே மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, புறத்தேசத்தாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்.
34 அவர்கள் அவரைப் பரியாசம்பண்ணி, அவரை வாரினால் அடித்து, அவர்மேல் துப்பி, அவரைக் வார்கள்;ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.
உண்மை இவ்வாறிருக்க தாங்கள் குறிப்பிடும் திருக்குர்ரான் வசனம்
இன்னும் நிச்சயமாக நாங்கள்அல்லாஹ்வின் தூதராகிய மர்யமின்குமாரராகிய ஈஸா மஸீஹை கொன்று விட்டோம் என்று அவர்கள் கூறுவதாலும் அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை.
என்று சொல்கிறது!
திருக்குர்ஆன் பொய்யா அல்லது இயேசுவின் வார்த்தைகள் பொய்யா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது நாம் திரியின் தலைப்பின் அடிப்படையில் "இயேசுவை வாரினால் அடித்து துன்பபடுத்தி சிலுவையில் அடித்தது யார்?" எதற்கு? என்பதை ஆராயலாம்மா?
அல்லது, "அவரை யாரும் அடிக்கவே முடியாது அவர் அடிபடுவதற்கு தன்னை ஒப்பு கொடுத்தார் அதனால் அடித்தார்கள் மற்றபடி அவரை யாரும் அடிக்கவே முடியாது என்று சொல்லி விட்டுவிடுவோமா?
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
திருக்குரான் இந்த வசனத்தில் "அவர்கள்" என்று யூதர்களை பற்றி குறிப்பிடுகிறது. மாற்கு 10.33 மற்றும் 34 ன் படியும், யூதர்கள் இயேசுவை கொல்லவில்லை. ஏனெனில் இந்த வசனத்தின்படி அவரை கொன்றவர்கள், புறதேசத்தார்.
அதேபோல யூதர்கள் இயேசுவை சிலுவையிலும் அறையவில்லை. அவரை அறைந்தவர்கள் புறதேசத்தார்.
இதிலிருந்து இயேசு கிருஸ்துவும் பொய் சொல்லவில்லை, திருகுரானும் பொய் சொல்லவில்லை என்பதை அறிய முடியும்.
"ஜீவாதிபதியை கொலை செய்தீர்கள்" என்று பேதுரு யூதர்களை பார்த்தே குற்றம் சாட்டுகிறார். ஆனால் யூதர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாக தீர்த்தவர்கள் மட்டுமே இயேசு கிருஸ்துவின் சரீரத்தை துன்புறுத்தியதில் யூதர்கள் எந்த நேரடியான பங்கும் வகிக்கவில்லை. ஆனாலும் யூதர்கள் மேல் மாத்திரமே இயேசு கிருஸ்துவின் கொலைப்பழி, இரத்தப் பழி வந்தது.
இயேசுவை மரண ஆக்கினைக்குள்ளாகி தீர்த்ததிலோ, அவரது சரீரத்தை துன்புறுத்தியதிலேயோ யூதாஸுக்கு எந்த நேரடி தொடர்பும் இல்லை. அனைவரும் அறிந்திருந்த இயேசு கிருஸ்துவை, "அவர்தான் இவர்" என காட்டி கொடுத்த ஒரே காரணத்திற்காக இயேசு கிருஸ்துவின் கொலைப் பழியும், இரத்தப் பழியும் யூதாசின் மீது வந்தது.
மொத்தத்தில், கொலை செய்வதற்கு உடந்தையாய் இருந்தவர்கள் (யூதர்கள், போர் சேவகர்கள்), கொலை செய்தவர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
//இப்பொழுது நாம் திரியின் தலைப்பின் அடிப்படையில் "இயேசுவை வாரினால் அடித்து துன்பபடுத்தி சிலுவையில் அடித்தது யார்?" எதற்கு? என்பதை ஆராயலாம்மா? அல்லது, "அவரை யாரும் அடிக்கவே முடியாது அவர் அடிபடுவதற்கு தன்னை ஒப்பு கொடுத்தார் அதனால் அடித்தார்கள் மற்றபடி அவரை யாரும் அடிக்கவே முடியாது என்று சொல்லி விட்டுவிடுவோமா? //
"அவரை யாரும் அடிக்கவே முடியாது அவர் அடிபடுவதற்கு தன்னை ஒப்பு கொடுத்தார் அதனால் அடித்தார்கள் மற்றபடி அவரை யாரும் அடிக்கவே முடியாது என்று சொல்வதும் கூட சரியே.
ஏனெனில், இயேசுவின் உத்தரவுக்கு பிறகே, அவரை காட்டி கொடுக்கும்படி, சாத்தான் யூதாசுக்குள் புகுந்தான். இயேசுவும் தனக்கு மரண தண்டனை விதித்த பிலாத்துவை பார்த்து இவ்வாறாக சொன்னார்.
யோவான் 19:11 இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது; ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார்.
இதிலிருந்து நமக்கு தெரிய வருவது,
பிதாவின் சித்தத்தின்படி, தன்னை தானே ஒப்புக் கொடுத்த இயேசு கிருஸ்து, தன் சகோதரர்களான யூதர்களால் பகைக்கப்பட்டதன் நிமித்தம், தன் சீடனான யூதாசுக்கு கொடுத்த உத்தரவால், அவனால் காட்டி கொடுக்கப்பட்டு, யூதர்களால் மரண ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட்டு, பிலாத்து விரும்பா விட்டாலும், யூதர்கள் ஆசைப்படி, பிலாத்துவினால் மரண தண்டனை விதிக்கப்பட்டு, ரோம போர் சேவகர்கள் மூலமாக சிலுவையில் உடல் ரீதியான துன்பத்தை அனுபவித்தார்.
இதில் சாத்தானின் கருவியாக செயல்பட்டவர்க யார், யார் எனில்,
இவர்கள் அக்கிரமகாரர்கள் அதாவது சாத்தானுக்கு துணை போனவர்கள் என்று மாத்திரமே அழைக்கப்படுகின்றனர்.
பெரும்பாலான மனிதர்களிடமும் சாத்தானின் செயலும் உண்டு, கடவுளின் செயலும் உண்டு. நேரத்துக்கு தகுந்தவாறு, ஏதாவது ஒன்று வெளிப்படும். சிலரது இயல்புபடி சாத்தான் அதிகமாக வெளிப்படும் சிலரது இயல்புபடி இறை குணங்கள் வெளிப்படும். அதனால் எந்த மனிதர், எந்த தீமையான செயலை செய்தாலும் அது சாத்தானின் ஆவியாகத்தான் இருக்கும்.
சம்பளத்திற்காக, போலிஸும், ராணுவமும், பிறரை துன்புறுத்தும் செயலை சில சமயங்களில் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இவர்களில் நல்லவர்களும் உண்டு, கெட்டவர்களும் உண்டு. ஆனாலும் மனிதனை துன்புறுத்தும் செயல் தேவனது இயல்பை வெளிப்படுத்தாது என்பதால்,. இது போன்ற வேலைகளை தேவ மனிதர்கள் செய்ய கூடாது.
ரோம போர் சேவகர்கள் தங்கள் கொடுமையை மிகவும் விரும்பி, அதை செய்ததாக தெரிய வருவதால், அவர்கள் தீய ஆவியினால் செயல்பட்டார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.