திக்கற்ற குடும்பத்தின் ஒற்றை வாரிசாய் உள்ள எனக்கு மிகவும் நெருங்கிய நன்பர் ஒருவரின் மரணத்தால் அந்த குடும்பம் சிதிலமாவதை என் கண் முன் கான வேண்டியுள்ளது, அந்த குடுப்பத்திற்கு மேலும் சிக்கல் ஏற்படாதவாறு செய்யுமாறு பெரியவரிடம் கூட்டாக மன்றாடி கேட்டுக்கொள்வோம்
நிச்சயம் ஜெபிக்கிறேன் சகோதரரே.. எந்த மாதிரி உதவி அவர்களுக்கு தேவைப்படுகிறது என விவரிப்பீர்கலானால் ஜெபிக்கவும் தங்கள் மூலமாய் முடிந்தவரை உதவவும் கூட முடியும்!!
திக்கற்ற குடும்பத்தின் ஒற்றை வாரிசாய் உள்ள எனக்கு மிகவும் நெருங்கிய நன்பர் ஒருவரின் மரணத்தால் அந்த குடும்பம் சிதிலமாவதை என் கண் முன் கான வேண்டியுள்ளது, அந்த குடுப்பத்திற்கு மேலும் சிக்கல் ஏற்படாதவாறு செய்யுமாறு பெரியவரிடம் கூட்டாக மன்றாடி கேட்டுக்கொள்வோம்
அன்பான சகோதரர் அவர்களே பிறர் மேலுள்ள அக்கரையிநிமித்தம் எழுந்துள்ள தங்களின் இதய பாரத்துக்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்.
இந்த உலகத்தில் எத்தனையோ சம்பவங்கள் கொடுமைகள் விபத்துக்கள் நாச மோசங்கள் நம் கண்களுக்கு மறைவாக நடந்து நாம் அறியாமலேமுடிந்து போகின்றன.
ஆனால் நமது கண்களுக்கு முன்னாள் நம் அறிவுக்கு எட்டி நமக்கோ அல்லது யாருக்கோ ஒரு தீமையான காரணம் நட க்கிறது என்றால் அது எதோ ஒரு விதத்தில் நமது வாழ்வோடு சம்பந்தபட்டுள்ளது என்பதை முதல் கணம் அறிய வேண்டும். காரணம் இல்லாமல் எதுவும் கண்ணுக்கு தெரிவதும் இல்லை காரணம் கெட்டவன் எவனும் தேவ பாதுகாப்பில் இருக்கும் நம் கண் முன் வருவதும் இல்லை.
எனவே தங்கள்நண்பனின் குடும்பத்துக்காக தாங்கள் மன்றாட வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை தாங்கள் புரிந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.
அத்தோடு நீங்கள் மனதார அந்த குடும்பத்தின் பாரத்தை சுமக்க விரும்பினால் தேவன் நிச்சயம் பாரத்தை பகுந்து பகுதி பகுதியாக வைத்து இலகுவாக்குவார். தேவநேயல்லாமல் வேறு யாராலும் எந்த ஒரு வேதனைக்கும் முற்றுபுள்ளி வைக்க முடியாது. எனவே நீங்கள் அந்த குடும்பத்துக்காக கதறுங்கள் நாங்களும் வேண்டுகிறோம் ஆனால் எங்களுக்கு அந்த குடும்பத்தை பற்றியுள்ள முக்கிய பிரச்சனை என்னவென்பது முழுமையாக தெரியாத பட்சத்தில் முழு பாரத்தோடு மன்றாட முடியாது. ஆனால் தங்களுக்கு அங்கு நடக்கும் எல்லாமே தெரியும் எனவே உங்களை ஒப்புகொடுத்து ஜெபியுங்கள் தேவன் நிச்சயம் அந்த குடும்பத்துக்கு உதவிககரம் நீட்டுவார்.
நாங்களும் அந்த குடும்பத்துக்காக ஜெபிக்கிறோம். மேலும் ஏதாவது உதவி தேவைபட்டால் இங்கு பதிவிடுங்கள். நம்மால் முடிந்தததை செய்யலாம்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நன்றி சகோதரர்களே! நான் முழுமனதுடன் அவர்களுக்காக ஜெபிக்கிறேன், தாங்கள் குறிப்பிடுவது போல இந்த சிக்கலில் இருந்து அந்த குடும்பத்தை மீட்கும் பொருப்பில் எனக்கும் பங்கு உண்டு என்பதை எனக்கு உணர்த்தியதற்கு நன்றி! ஆயினும் பொருளாதார உதவிகளோ, வேலை வாய்ப்பு உதவிகளோ, தேவைபடாத,மனவலிமை மட்டுமே தேவைபடுகின்ற படியால் எனது விண்ணப்பத்தை கர்த்தரிடம் முறையிடுவது அன்றி வேறு யாதும் செய்வதற்கில்லை என்கிற நிலை,இன்றைய இளைஞர்கள் கர்த்தரின் மேல் இன்னும் விசுவாசமும்,நம்பிக்கையும் கொள்வார்கள் எனில் இது போன்ற துர்மரணங்களை தடுக்க முடியும்.நன்றி.