இந்த வசனத்தை நான் சற்று ஆழமாக தியாநித்தபோது என் கண்களில் கண்ணீர் புறப்பட்டது!
நம் தேவ குமாரன் இயேசு சொல்கிறார் "நான் உங்களை திக்கற்றவர்களாக விடேன்" என்று!
அப்படி எனில் "நாமெல்லாம் தற்போது திக்கற்ற ஒரு நிலையில் இருக்கிறோம்" என்று அதன் மறுபுறம் பொருள் கொள்ள முடியும் அல்லவா?
ஆனால் இந்த உலகில் அனேக மரமண்டை மனுஷர்களுக்கு அவர்கள் எதை நோக்கி போகிறார்கள் எதை தேடி ஒடுகிறார்கள் எந்த முடிவை அடைய வாழ்கிறார்கள் என்று திக்கு எதுவும் தெரியாமல் இருப்பினும், தாங்கள் எல்லாம் அறிந்தவர்கல்போல் எங்கோ ஓடி எதையோ தேடி எப்படியோ ஆடி வாழ்வை முடிக்கிறார்கள்.
"எல்லோரும் ஓடுகிறார்கள் நானும் ஓடுகிறேன் எல்லோரும் பணத்தை தேடுகிறார்கள் நானும் தேடுகிறேன் எல்லோரும் சாகபோகிரார்கள் நானும் செத்துபோவேன்" இதுதான் மனிதனின் ஸ்டேட்மெண்ட்!
இந்த வார்த்தையை சொல்வதற்க்கா தேவன் உன்னை இத்தனை அருமையாய் படைத்தார்? நாம் நித்திய நித்தியமாக என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருக்கவே தேவன் நம்மை படைத்தார்!
ஏசாயா 65:18நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்;
இந்த உண்மையை அனேக மனுஷர்களால் அறியமுடியாதவரை அவர்கள் திக்கற்ற நிலையிலேயே திரிகிறார்கள். திசை தெரியாத பாலைவனத்தில் எங்கு செல்கிறோம் என்று தெரியாமல் அலையும் ஒரு மனுஷனின் நிலைதான் அவர்களுக்கு ஆனாலும் அந்த உண்மை புரிய முடியாத அளவுக்கு அவர்கள் இருதயம் அடைபட்டு கிடக்கிறது. அநித்தியமான சந்தோஷத்தை தேடி மனது அலைபாய்கிறது.
ஆனால் நம்மை தெரிந்துகொண்ட அனைத்தையும் அறிந்த ஆண்டவரோ "உங்களைத் திக்கற்றவர்களாக விடேன்" என்று நம்மேல் கரிசனையோடு, கனிவோடு கூறும் வார்த்தை நினைத்தாலே இனிக்கும் மிகுந்த ஆறுதலையும் நம்பிக்கையையும் தரும் ஒரு வார்த்தை அல்லவா?
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)