சமீபத்தில் நான் ஒரு வலைதளத்தை பார்க்க நேர்ந்தது.அதில் உள்ள கருத்துக்கள் என்னை சற்று குழப்புகிறது. பாவமன்னிப்பு தவறா? விவாதியுங்கள்! அங்கு பதிவிட நினைக்கிறேன் அதற்கான கருத்துக்களை எமக்கு தாருங்கள்
மத்தேயு 9:6பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்கு
இவ்வாறு நம் இயேசப்பா தன வாக்காலேயே சொல்லியிருக்கிறார் பின்னர் மனுஷன் சொல்லி என்ன ஆகபோகிறது அண்ணா.
பாவம் சரியானது என்பவனுக்கே பாவமன்னிப்பு தவறானதாய் தோன்றும்!!! இம்மையில் தம் பங்கை பெற்றிருக்கிற நிர்மூடர்களுக்கு செவிசாய்த்து தாங்கள் ஏன் குழப்பம் கொள்ள வேண்டும்..
அவருக்கு தாங்கள் பதிவிட விரும்பினால், அந்த blog இருகிறதா என முதலில் பாருங்கள் !!
"பாவங்கள் மன்னிக்கப்படாது" என்ற கட்டுரையை எழுதியவர் தன்னுடைய கட்டுரையில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்களை சொல்லியிருந்தார். அதை அவருக்கு சுட்டி காட்டி எது சரியான கருத்து என கேட்கும் போது, அவரே தன் கருத்தை மாற்றி கொள்ளவும் வாய்ப்புண்டு. நேரமின்மை காரணமாக என்னால் சகோதரர் பென் ஜானுக்கு உதவ முடியவில்லை. ஆனால் சிறிது நாளுக்கு முன் அந்த தளத்தை பார்க்க முயன்ற போது அந்த தளமே அங்கு இல்லை.