தங்கள் பிள்ளைகளை காப்பற்றுவதற்காக தங்கள் உயிரையே தியாகம் செய்த தாய்மார்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம்.
தங்கள் பிள்ளைகளின் நலனுக்காக தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்த அனேக பெற்றோர்கள் பற்றி கேள்விபட்டிருக்கிறோம்.
நாளை நம் பிள்ளைகள் நம்மை நம்மை கவனிக்காது என்று தெரிந்தும் கூட, பிள்ளைகளை கண்ணோடும் கருத்தோடும் வளைத்து விடும் தாய்மார்கள் இன்றும் என்றும் அநேகர் உண்டு!
கொடூர பெற்ற ஒரு தாய் கூட தன பிள்ளை தண்டனை பெறுவதையோ வேதனை அடைவதையோ தாங்க சகிக்க மாட்டாள்!
நடைமுறை நிஜம் இவ்வாறு இருக்க,
தன மகனையே ஆக்கி தின்று தன வாயாலேயே அறிக்கை செய்யும் ஸ்திரி பற்றி எங்காவது கேள்விபட்டதுண்டா?
உண்டு! என்று வேத ஆதாரத்தோடு சொல்ல முடியும்: 2 ராஜா 6ம் அதிகாரத்தில் வரும் வசனம் இதோ!
28. இந்த ஸ்திரீ என்னை நோக்கி: உன் மகனைத் தா, அவனை இன்று தின்போம்; நாளைக்கு என் மகனைத் தின்போம் என்றாள். 29. அப்படியே என் மகனை ஆக்கித் தின்றோம்;
இந்த கொடூரமான செயல் உண்மை என்பதை நிரூபிக்க இன்னொரு வசனமும் வேதத்தில் பதிவு செய்யபடுள்ளது!
புலம்பல் 4:10இரக்கமுள்ளஸ்திரீகளின் கைகள் தங்கள் பிள்ளைகளைச் சமைத்தன, என் ஜனமாகிய குமாரத்தியின் அழிவில்அவைகள் அவர்களுக்கு ஆகாரமாயின.
அதுவும் இரக்கமுள்ள ஸ்திரிகள் தங்கள் பிள்ளைகளையே சமைத்து ஆகாரமாக்கினார்களாம்!
என்னதான் பசி வேதனை என்றாலும் இருப்பதை தன பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு தான் பட்டினி கிடக்கும் தாய்மார்களை நம் தேசத்தில் பார்த்திருக்கிறோம் ஆனால் இந்த ஸ்திரிகள் செய்த கொடூர காரியங்ளை நம்ப முடிகிறதா? வேதம் சொல்வதால் இந்த காரியங்களை நம்பாமலும் இருக்கமுடியவில்லை!
பாம்பு போன்ற சில மிருகங்கள் தங்கள் குட்டிகளை தாங்களே தின்னும் என்று கேள்விபட்டிருக்கிறோம்! இங்கு ஆறறிவுள்ள மனுஷர்கள் இவ்வாறு செய்வது அடுக்குமா?
இந்த காரியங்கள் குறித்து என்னுடைய சொந்த கருத்து என்ன வெனில் இஸ்ரவேலர்கள் இந்தியர்களைபோலல்லாமல் இரக்கமற்ற ஆவியுடையவர்களாக இருந்தார்கள் என்று கருதுகிறேன்.
இதை குறித்து இயேசுவும் ஒரு இடத்தில் கடிந்து கூறியிருக்கிறார்!