மனுஷர்களின் உணர்வுகளில் "சிரித்தல்" (நகைத்தல்) என்பது மிகவும் முக்கியமானதும் தனிப்பட்ட தன்மை உடையதும் ஆகும். காரணம் மிருகங்கள் மற்றும் எந்த ஐந்தறிவு ஜீவன்களும் சிரிப்பது கிடையாது.அது மனுஷனுக்கு மட்டுமே கொடுக்கபட்ட ஒரு விசேஷ உணர்வு/குணம்.
சிரிக்கும்போது நமது மனது லேசாகிறது. என்னதான் மனபாரம் இருந்தாலும் எல்லாம் குறைத்து இதயம் இலகுவாகிறது எனவேதான் "வாய்விட்டு சரித்தால் நோய் விட்டு போகும்" என்ற பழமொழி உள்ளது.
சிரித்தலில் பலவிதமான சிரிப்புகள் உள்ளது. லேசாக நகைக்கும் புன் சிரிப்பு, ஏளனமாக சிரிக்கும் கேலி சிரிப்பு, வாய்விட்டு சிரிக்கும் காமெடி சிரிப்பு, வெள்ளை மனம் கொண்டோரின் பிள்ளை சிரிப்பு, உள்ளுக்குள்ளேயே சிரிக்கும் மௌன சிரிப்பு, மறைத்து சிரிக்கும் நமுட்டு சிரிப்பு என்று பல்வேறு சிரிப்பு வகைகள் உள்ளன.
இந்தனை வகைகளாக சிரிப்பு இருந்து நம் ஆண்டவராகிய இயேசு தன ஜீவிய காலத்தில் எந்த ஒரு இடத்திலும் லேசாக கூட சிரித்ததாக/ நகைத்ததாக வேதம் சொல்லவில்லை.
இயேசுவை பார்த்து பலர் கேலியாக நகைத்திருக்கிரார்கள்
மத்தேயு 9:24விலகுங்கள், இந்தச் சிறுபெண் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார்.
லூக்கா 8:53 அவள் மரித்துப்போனாளென்று அவர்கள் அறிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள்.
மரித்து போன பெண்ணை பார்த்து அவள் நித்திரை செய்கிறாள் என்று இயேசு உண்மையை சொன்னதற்காக அவரை பாத்து பலர் கேலியாக நகைத்திருக்கிரார்கள். ஆனால் இயேசுவோ எந்த இடத்திலும் நகைத்தாக வேதத்தில் பதிவிடப்படவில்லை.
ஒரு சாதாரண மனுஷனுக்கு இருக்கும் அனைத்து உணர்வுகளும் இயேசுவுக்கு இருந்தது என்பதை வேத வசனங்கள் மூலம் அறிய முடியும்
1. அவருக்கு பசி இருந்தது
மத்தேயு 21:18 காலையிலே அவர் நகரத்துக்கு திரும்பி வருகையில், அவருக்குப் பசிஉண்டாயிற்று.
2. அவருக்கு தாகம் இருந்தது
யோவான் 4:8அப்பொழுது சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ள வந்தாள். இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத்தா என்றார்.
3. அவருக்கு கோபம் இருந்தது
14. தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், காசுக்காரர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு 15. கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு,
4. அவர் துக்கபட்டார் /வியாகுலப்பட்டார்!
மத்தேயு 26:37பேதுருவையும், செபதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார்.
இணையத்தில் சில வேத ஆராய்ச்சியாளர்களின் கருத்த்துகளையும் படித்து பார்த்தேன்..
அனைத்தும் 'இருக்கிறது ஆனால் இல்லை என்பதாகவே' இருந்தது!!ஆகவே இதை குறித்து நான் தியானித்தேன். சில கேள்விகளும் அதனை தொடர்ந்து சில பதில்களும் எனக்கு கிடைத்தன!!
சகோ.சுந்தர் //ஆனால் அவர் ஒரு இடத்தில் கூட சிரிக்க அல்லது நகைக்க மாத்திரம் செய்யவில்லை.///
ஆம்.. வேதத்தில் அவர் ஒரு இடத்தில கூட சிரித்ததாகவோ, நகைத்ததாகவோ சொல்லப்படவில்லை.. இது நிச்சயம்...
வேதத்தில் ஏசுவானவர் விருத்தசேதனம் செயப்பட்டது உள்பட அனேக முக்கிய காரியங்கள் சொல்லப்பட்டுள்ளன.. ஆனால் அனுதினமும் அவர் ஜலமலாதி செய்த காரியத்தை பற்றி எழுதப்படவில்லை.. ஆகவே அவர் கழிவு நீக்கம் செய்யவில்லை என்ற முடிவிற்கு நாம் வர இயலாது என்பது அதிகம் கவனிக்க தக்கது!!
இயேசு நன்மை தீமை அறியும் வயாதினை கடந்து வரும் மட்டும் வெண்ணையும்,தேனையும் உண்டதாக வேதத்தில் சொல்ல பட்டுள்ளது!!
ஏசாயா 7:15தீமையை வெறுத்து நன்மையைத் தெரிந்துகொள்ள அறியும் வயதுமட்டும் அவர் வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார்.
(வெண்ணையும் தேனையும் இஸ்ரவேலில் மீதியானவர்களும் சாபிட்டார்கள் என்பது இணைத்து பார்க்கப்பட வேண்டியது!!)
ஆகா இயேசுவானவர் நன்மை தீமை அறியும் வயதிற்கு முன்னதாக,சிறுவயதில் இருக்கும் போது, குழந்தையாக இருக்கும்போது சிரித்திருக்க வாய்ப்புண்டு!!
சில ஆங்கில கட்டுரைகளில்,
அவர் தாம் செய்ய வேண்டியவைகளை மிக சரியாய் அறிந்திருந்தபடியால் எப்படி ஒரு அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் பணி முடியும் மட்டும் சிரிக்காமல் இருபரோ,அப்படி ஏசுவும் உலகத்தின் பாவத்தை சுமர்ந்து தீர்ப்பதற்கு சிரிக்காமல் ,நகைக்காமல் இருந்தார்
செல்வந்தர் ஊசியின் காதில் நுழைவதை பார்க்கிலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுளைதுவிடுவது எளிது என்பதை இயேசு சிரிக்காமல் கூறி இருப்பார் என்பது யோசிக்க வேண்டியது.
என்பதாக சொல்லப்பட்டுள்ளது!!
அவரது ராஜ்ஜியம் உலகம் சார்ந்திராதது போல அதிசயமானவரது மகிழ்ச்சியும் உலக பிரகாரமாய் வெளிப்படுவதாய் இல்லாமலிருந்திருக்கலாம். அவரது மகிழ்ச்சி அவருடைய பிள்ளைகளாகிய நமக்கு முக்கியமில்லாதது போல அவரது பார்வையில் இருந்திருக்கலாம். அதை முன்னிட்டு வேதத்தில் எழுதப்படாமல் விடபட்டிருக்கலாம் என்கிற ஐயமும் வருகிறது!! இக்காரியத்தை தேவனே அறிவார்!!
தேவனுக்கு மகிமை உண்டாவதாக!!!
-- Edited by JOHN12 on Wednesday 4th of December 2013 06:06:10 PM
இயேசு கிருஸ்து தன் ஊழியத்தை தன்னுடைய முப்பதாம் வயதில் ஆரம்பித்தார். அதிலிருந்து சுமார் மூன்று வருடங்கள் வரை அவர் தன் சீடர்களுக்கு போதித்தார். அதன் பிறகு சிலுவையில் அறையப்பட்டார். சுவிசேஷ நூல்கள் இந்த கடைசி மூன்று வருடங்களையே விவரிப்பதாக உள்ளன.
தன் ஊழியத்தின் ஆரம்பத்தில், அவர் யோவான் ஸ்னானிடம் ஞானஸ்னானம் எடுத்து கொண்டார். அப்போது உலகத்தின் பாவங்கள் அனைத்தும், யோவான் ஸ்னானன் மூலம் அவர் மேல் சுமத்தப்பட்டதாகவும், அந்த பாவங்களை சுமந்து, போக்காட்டை (பாவத்தை சுமந்து சுற்றி திரியும் ஆடு - பழைய ஏற்பாடு) போல மூன்று வருட காலங்கள் இந்த பூமியில் தன் ஊழியத்தை செய்து வந்ததாகவும் சிலர் சொல்கின்றனர். (இது என்னுடைய கருத்தல்ல, இதை பற்றி நான் ஆராய வேண்டி இருக்கிறது. இந்த கருத்து எனக்கு ஏற்புடையதாக இல்லை.) இதற்கு ஆதாரமாக,
"இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற ஆட்டுக்குட்டி" என யோவான் ஸ்னானன் சொன்னதை சொல்கின்றனர். அவர் உலகத்தின் பாவத்தை தன் மேல் சுமந்து மூன்று வருட காலம் இருந்ததால் அவர் தனக்குள்ளாக ஒரு வேதனையை உணர்ந்ததாக சிலர் சொல்கின்றனர். அதனால் அவர் சிரிக்கவேயில்லை என்பது அவர்களின் கருத்து. இது பற்றி யாரேனும் விளக்க விரும்பினால் விளக்கலாம்.