இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எனக்கு தெரிந்த இருவர் கொடிய வியாதியால் வேதனை படுகின்றனர்
sar


இளையவர்

Status: Offline
Posts: 21
Date:
எனக்கு தெரிந்த இருவர் கொடிய வியாதியால் வேதனை படுகின்றனர்
Permalink  
 


எனக்கு தெரிந்த இருவர் கொடிய வியாதியால் வேதனை படுகின்றனர் ஒருவர் கான்சர் வியாதியால் வேதனை படுகின்றா மறையவர் பாரிச வாதத்தினால் வேதனைபடுகிரார் இருவரும் விரைவில் சுகமடைய செபிக்கும் படி வேண்டிகொள்கிறேன் 



__________________


இனியவர்

Status: Offline
Posts: 52
Date:
RE: எனக்கு தெரிந்த இருவர் கொடிய வியாதியால் வேதனை படுகின்றனர்
Permalink  
 


அந்த சகோதரர்களுக்காக நானும் ஜெபிக்கிறேன் அண்ணா.
.

விரைவிலேயே குணம் அடைய  வேதனைகள் நீங்க ஆண்டவர்தாமே  கிருபை செய்வாராக.

 



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
எனக்கு தெரிந்த இருவர் கொடிய வியாதியால் வேதனை படுகின்றனர்
Permalink  
 


sar wrote:

எனக்கு தெரிந்த இருவர் கொடிய வியாதியால் வேதனை படுகின்றனர் ஒருவர் கான்சர் வியாதியால் வேதனை படுகின்றா மறையவர் பாரிச வாதத்தினால் வேதனைபடுகிரார் இருவரும் விரைவில் சுகமடைய செபிக்கும் படி வேண்டிகொள்கிறேன் 


சரீர நோயின் பிடியில் சிக்கி தவிக்கும் அந்த சகோதரர்களுக்காக நானும் ஜெபித்து கொள்கிறேன். 

 
அத்தோடு மேலும் ஒரு தகவலையும் தர விரும்புகிறேன்.
 
நோயின் முக்கிய காரணம் பாவமே. யோபுவைபோல வேறு சில காரணங்களின் நிமித்தமும் நோய் வரலாம். ஆகினும் 90% காரணம் நமது பாவம்தான்.
 
கொடிய நோயில் வாடிய ஒரு மனுஷனை குணமாக்கிய இயேசு இவ்வாறு சொல்கிறார்:
 
யோவான் 5:14 அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடிஇனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
   
மேலும் ஒரு வசனமும் எனது கருத்துக்கு வலு சேர்க்கிறது 
 
யாக்கோபு 5:15 அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
 
அத்தோடு கூட கட்டளைகளுக்கு கீழ்படியாமல் மீறி நடப்பவர்களுக்கு  ஈளை காய்ச்சல் போன்ற  நோய்கள் வரும் என்றும் கர்த்தர் எச்சரித்துள்ளார்.  
 
லேவியராகமம் 26:15. என் கட்டளைகளை வெறுத்து, உங்கள் ஆத்துமா என் நியாயங்களை அரோசித்து, என் கற்பனைகள் எல்லாவற்றின்படியும் செய்யாதபடிக்கு, என் உடன்படிக்கையை நீங்கள் மீறிப்போடுவீர்களாகில்
16 நான் உங்களுக்குச் செய்வது என்னவென்றால், கண்களைப் பூத்துப்போகப்பண்ணுகிறதற்கும், இருதயத்தைத் துயரப்படுத்துகிறதற்கும், திகிலையும் ஈளையையும் காய்ச்சலையும் உங்களுக்கு வரப்பண்ணுவேன்;
 
எனவே அன்பான சகோதரர்களே நாம் நோய் நீங்க ஜெபிபதோடு அது பாவத்தின் மூலம் வந்திருக்குமானால் அந்த பாவத்தின் ஆணி வேர் எனவேன்பதை கண்டறிந்து அதை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்.
 
ஒரு சிறிய உண்மை சம்பவத்தை இங்கு கூறுகிறேன்.
 
எனது மனைவிக்கு இரண்டு சொத்தை பல்கள் உண்டாகி கடும் வலி ஏற்ப்பட்டது. டாக்டரிடம் சென்று X ரே எடுத்து பார்த்தபோது  அதை கண்டிப்பாக பிடுங்கியே ஆகவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.
 
பிடுங்குவதற்கு ஒப்புக்கொண்டு பிடுங்குவதக்கான இருக்கையில் அமர்ந்தபிறகு, என் மனைவி என் கணவரிடம் ஒருவார்த்தை கேட்டுவிட்டு வருகிறேன் என்று சொல்லி வெளியில் வந்து எனக்கு போன் பண்ணி பல்லை பிடுங்கபோவதாக தெரிவித்தாள்.
 
அவளுக்கு பல்வலி வந்த உடனேயே அதன் காரணத்தை அறிந்த நான்,  அவள் செய்யும் ஒரு தவறான  காரியத்தை சுட்டிகாட்டி, நீ அதை விட்டுவிடு அப்படி செய்தால் உனக்கு பல்வலி போய்விடும் என்று அறிவுரை சொல்லியிருந்தேன். ஆனால் அவள் அதை கேட்கவில்லை. 
 
இப்பொழுது எனக்கு போன் பண்ணியபோதும் நான் அதே காரியத்தை தான் சொன்னேன். நீ பல்லை பிடுங்காமல் வீட்டுக்கு வந்து நான் சொல்லும் காரியத்தை தியாகமாக நினைத்து விட்டுப்பார். அதற்க்கு பிறகும் உனக்கு பல் வலி வந்தால் பிறகு பிடுங்கலாம் என்று சொன்னேன்.
 
அவள் பல்லை பிடுங்காமல் வீட்டுக்கு வந்து, நான் விட சொன்ன காரியத்தை விட்டுவிட்டாள். இன்று சுமார் 1 வருடத்துக்கு மேல் ஆகிறது அந்த பல்லில் எந்த பிரச்சனையும் வரவில்லை. 
 
ஆனால் இன்றும் சில நேரங்களில் அவள் என்னிடம் எனக்கு அந்த காரியத்தை செய்யாமல் இருக்க முடியவில்லை என்று சொல்லும்போது  "உனக்கு இரண்டு பல் வேண்டாம் என்றால் நீ அந்த காரியத்தை செய்யலாம். "பல் வேண்டுமா பாவம் வேண்டுமா" நீயே முடிவு செய்துகொள் என்று சொல்லிவிடுவேன்.
 
ஆம்! உண்மை இதுதான்.  
 
ர்த்தரின் காவலுக்கு முன்னால் கொடிய  கிருமியும் கூட வேலை செய்ய முடியாது!
 
 
பரம வைத்தியரின் வார்த்தைக்கு முன்னால் படித்தவர்கள் வைத்தியம் ஒன்றுக்கும் உதவாது! 
 
 
எனவே கர்த்தருடன் உள்ள உறவை சீர் செய்வதுதான் எந்த நோயையும் தீர்க்கும் அடிப்படை மருந்து! 
 
  


-- Edited by SUNDAR on Friday 29th of November 2013 07:05:53 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

sar


இளையவர்

Status: Offline
Posts: 21
Date:
RE: எனக்கு தெரிந்த இருவர் கொடிய வியாதியால் வேதனை படுகின்றனர்
Permalink  
 


சகோதரர் சுந்தர் மற்றும் சகோதரர் JOHNJOSH தங்கள்  இருவருக்கும் எனது நன்றிகள்((எனக்கு தெரிந்த இருவர் கொடிய வியாதியால் வேதனை படுகின்றனர் ஒருவர் கான்சர் வியாதியால் வேதனை படுகின்றா மறையவர் பாரிச வாதத்தினால் வேதனைபடுகிரார் இருவரும் விரைவில் சுகமடைய செபிக்கும் படி வேண்டிகொள்கிறேன் ))  

 

கான்சர் வியாதியால்  அவஸ்தை பட்ட அந்த சகோதரி  கடந்த  ஞாயிற்றுக்கிழமை இறந்து விடார்கள் என்ற விடயத்தை வருத்ததுடன்  தெரிவித்து  கொள்கிறேன் .தேவன் அந்த குடும்பத்தை  தாங்குவாரக 

 

சகோதரர் சுந்தர் கூறிய உண்மை சம்பவம் எனது மனதை தொட்டது காரணம் எனக்கும் கடும்  பல் வலி ஏற்பட்டது  நான் செபம் பண்ணி குணமடைந்து விட்டது .தங்களது பதிவு மூலம் பல் வலிக்கான காரணத்தை அறிந்து கொண்டேன் ,நன்றி 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard