கடந்த நாளில் வேதத்தை தியானித்துகொண்டு இருந்தபோது கர்த்தருடைய தூதனாவர் குறித்து சில வசனங்களை வாசிக்க நேர்ந்தது அவற்றுள் சில இதோ:
முள் செடியில் மோசேக்கு தரிசனமானவர்:
யாத்திராகமம் 3:2கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தத 4. அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான்.
சுருக்கமாக பார்த்தால்:
கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார்..........முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார்.
இந்த வசனத்தில் முட்செடியில் நடுவில் இருந்த கர்த்தருடைய தூதனானவரை தேவனாக வசனம் காண்பிக்கிறது
ஆகாருக்கு தரிசனமானவர்:
ஆதியாகமம் 16:7கர்த்தருடையதூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு: சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்
13. அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள்.
இங்கும் அந்த தூதனானவரை கர்த்தர் என்றும் தேவன் என்றும் வசனம் குறிப்பிடுகிறது.
யாத்திராகமம் 32:34இப்பொழுது நீ போய், நான் உனக்குச் சொன்ன இடத்துக்கு ஜனங்களை அழைத்துக்கொண்டுபோ; என் தூதனானவர் உனக்குமுன் செல்லுவார்; ஆகிலும், நான் விசாரிக்கும் நாளில் அவர்களுடைய பாவத்தை அவர்களிடத்தில் விசாரிப்பேன் என்றார்.
இந்த் வார்த்தைகள் கர்த்தராகிய தேவன் மோசேயிடம் சொல்வது ஆகும். அதாவது "என் தூதனானவர்" உனக்கு முன் செல்வார் என்று கர்த்தர் சொல்லுகிறார். அவ்வாறு கொண்டு வந்து விட்ட தூதனாவர் இவ்வாறு சொல்கிறார்:
நியாயாதிபதிகள் 2:1கர்த்தருடையதூதனானவர் கில்காலிலிருந்து போகீமுக்கு வந்து: நான் உங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி, உங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் நான் உங்களைக் கொண்டுவந்து விட்டு, உங்களோடே பண்ணின என் உடன்படிக்கையை நான் ஒருக்காலும் முறித்துப்போடுவதில்லை என்றும்,
இங்கு தூதனானவர் "என் உடன்படிக்கை" என்று குறிப்பிடுகிறார். ஆனால் இவ்வுடன்படிக்கையை பண்ணியவர் கர்த்தர்
யாத்திராகமம் 34:27பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் இஸ்ரவேலோடும் உடன்படிக்கைபண்ணினேன் என்றார்.
எனவே கர்த்தருடைய தூதனானவர் இங்கு "என் உடன்படிக்கை" என்று சொல்வதன் மூலம் அவர் கர்த்தராக அறியப்படுகிறார்.
மேலும் ஆபிரஹாமின் வீட்டில் வந்து விருந்து புசித்து பின்னர் லோத்துவின் வீட்டிக்கு சென்ற மூன்று புருஷர்களில் ஒருவரும் கர்த்தருக்கு ஒப்பாகவே அறியப்படுகிறார்.
ஆனால் "கர்த்தர்" தூதனோடு பேசுவதாகவும் "கர்த்தருடைய தூதன்" கர்த்தரோடு பேசுவதாகவும் காட்டும் சில வசனங்களும் வேதாகமத்தில் உண்டு:
II சாமுவேல் 24:16, கர்த்தர் அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, ஜனங்களைச் சங்கரிக்கிற தூதனை நோக்கி: போதும், இப்போது உன் கையை நிறுத்து என்றார்; அந்த வேளையில் கர்த்தருடையதூதன் எபூசியனாகியா அர்வனாவின் போரடிக்கிற களத்திற்கு நேரே இருந்தான்.
சகரியா 1:12அப்பொழுது கர்த்தருடையதூதன் மறுமொழியாக: சேனைகளின் கர்த்தாவே, இந்த எழுபது வருஷமாய் நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின்மேலும் யூதா பட்டணங்களின்மேலும் எந்தமட்டும் இரங்காதிருப்பீர் என்று சொல்ல,
மேலும் வேதாகமத்தில் அனேக இடங்களில் "கர்த்தருடைய தூதன்" என்று வரும் சொற்கள் தேவனை குறிக்காமல் தூதனை குறிப்பதாக வந்துள்ளது:
I இராஜாக்கள் 19:7கர்த்தருடையதூதன் திரும்ப இரண்டாந்தரம் வந்து அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு; நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்றான்.
லூக்கா 1:11அப்பொழுது கர்த்தருடையதூதன் ஒருவன் தூபபீடத்தின் வலது பக்கத்திலே நின்று அவருக்குத் தரிசனமானான்.
யோவான் தனக்கு வெளிப்பாடு கிட்டியபோது தன்னுடன் பேசிய தூதனை வணங்கும்படி பாதத்தில் விழுகிறான் ஆனால் அவரோ தன்னை வணங்க வேண்டாம் தேவனை தொழுதுகொள் என்று கூறுகிறார்.
வெளி 19:10 அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள்.
தேவ தூதர்கள் தங்களை தேவனுக்கு ஒப்பாக உயர்த்தாமல் தேவனை தொழுதுகொள் என்று சொல்லும் பட்சத்தில் இவ்வாறு வேதத்தில் பல இடங்களில் "கர்த்தருடைய தூதனானவர்" என்று குறிப்பிடபட்டு அவரை தேவனுக்கு ஒப்பாக குறிப்பிடும் பதம் யாரை குறிக்கிறது?
மல்கியா 3:1இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிறஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்;
இங்கு "உடன்படிக்கையின் தூதனுமானவர்" என்று சொல்லப்படுகிறவர் யார்?
-- Edited by SUNDAR on Thursday 9th of January 2014 06:13:08 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
"கர்த்தருடைய தூதனானவர்" , "உடன்படிக்கையின் தூதனானவர்" என பழைய ஏற்பாட்டில் அழைக்கப்பட்டவர் இயேசு கிருஸ்துவே. இதை வேத மாணக்கர் என்ற குழுவினர் கூட தங்கள் பதிவுகளில் சொல்லியிருக்கின்றனர். சகோதரர் ஜான் 12 அவர்களும் "கர்த்தருடைய தூதனானவர்" குறித்து தன் கருத்தை சொல்வார்கள் என எதிர்பார்க்கலாம்.
கர்த்தருடைய தூதனானவர்,உடன்படிக்கையின் தூதரானவர் என வேதம் குறிப்பிடுபவர் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தான். இதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் தூதனானவருக்கும்,தூதருக்கும் வித்தியாசம் உண்டு!! 'தூதரானவர்' தூதர்களால் வணங்கப்படுபவர்!!! மேலதிக விளக்கங்கள் தேவைப்படின் தருகிறேன்.
கர்த்தருக்கு மகிமை உண்டாகுக!!!
-- Edited by JOHN12 on Monday 3rd of February 2014 05:18:36 PM
ஜான் அண்ணா கூறியது போல வார்த்தையில் தூதன் என்று சொல்லப்படுவதட்கும் தூதனானவர் என்று சொல்லப்படுவதட்கும் வித்தியாசம் உண்டு.. எப்படி எனின் கர்த்தருடைய தூதன் என்ற வசனத்தை பார்ப்போமானால் அது ஆண்டவரின் தூதனை குறிக்கிறது. அந்தப்படி கர்த்தருடைய தூதனானவர் என்று பார்ப்போமானால் தூதன் + ஆனவர் என்று பிரித்தால் தூதனாய் ஆனவர் என்று குறிப்பிடலாம் தூதனாக வந்தவர் என்றும் குறிப்பிடலாம். மேலும் அந்த வசனங்களை உற்று நோக்குவோமாயின் அதில் கர்த்தருடைய தூதனானவர் என்று குறிப்பிடப்படும் போது அதில் மரியாதை உள்ளது (வர்) என்று உள்ளது.
அந்த தூதனானவர் எனப்படுபவர் தேவன் என்றும் கர்த்தர் என்றும் கூறப்பட்டிருப்பினும் அது திரித்துவத்தின் பிதாவானவரைக் குறிக்காமல் குமாரனையே குறிக்கும். ஏனெனில் பிதாவை யாரும் காண முடியாது.