இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எல்லோருக்கும் சமமான நியாயதீர்ப்பு என்றால் என்ன செய்வீர்கள்?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
எல்லோருக்கும் சமமான நியாயதீர்ப்பு என்றால் என்ன செய்வீர்கள்?
Permalink  
 


கடந்த நாளில் ஒரு இந்துமத முதலாளியிடம் பேசிக்கொண்டு இருந்தபோது அவர் என்னை பார்த்து இவ்வாறு கேட்டார்.
 
"நீங்கள் நல்லவனாக வாழ அதிக சிரத்தை எடுத்து முயர்ச்சிக்கிறீர்கள். கடவுளின் கடினமான கட்டளைகளைகூட கைகொண்டு நடக்க முயற்சி செய்து, உலக சந்தோஷங்களை உதறிவிட்டு வாழ்கிறீர்கள். இவ்வளவு கஷ்ட்டப்பட்டு வாழ்ந்து முடித்த பிறகு நாளை கடவுள் எல்லோருக்குமே ஒரே விதமான நியாயதீர்ப்பு  என்று சொல்லி விட்டால் என்ன செய்வீர்கள்? உங்களுக்கு எமாற்றம்தானே மிஞ்சும்? 
 
"அவனின்றி  அணுவும் அசையாது"   
 
இல்லாததொன்றில்லை எல்லாமும் நீயென்று
சொல்லாமல் சொல்லிவைத்தாய்
சொல்லாலும் மனதாலும் சுடர்கொண்டு தொழுவோரை
மென்மேலும் உயரவைத்தாய்
புல்லாகி பூண்டாகி புழுவாகி மரமாகி
புவியாகி வாழ வைத்தாய்
 
என்ற இறைடையாரின் பாடலின்படி இந்த உலகிலுள்ள எல்லாமே இறைவன்தான் என்றும் அவனின் செயல் இன்றி அணுகூட அசைய முடியாது என்றும் போதிக்கபடுகிறது. 
 
அதற்க்கு ஒப்ப நமது ஆதியாகமத்தில் முதல் அத்தியாயத்தில் அடிக்கடி வரும் "அது அப்படியே ஆயிற்று" என்ற வார்த்தை 
மூல மொழியில் "அவர் அப்படியே ஆனார்" என்று உள்ளது. இங்கு வரும் அவர் என்பது வார்த்தையானவரை குறிக்கிறது. என்று சகோ. சந்தோஷ் குறிப்பிட்டுள்ளது சரிதானே.  
 
ஆக வார்த்தையான தேவனே எல்லாவற்றிலும் எல்லாமாக இருக்கிறார் என்று எடுத்துகொள்ள முடியும். 
 
எனவே நடப்பது எல்லாம் கடவுளின் செயல் என்றால் முடிவில் அவர் எல்லோருக்கும் சமமான நியாயதீர்ப்பை கொடுத்துவிடலாம் அல்லவா? என்பது அவரின் கூற்று! 
 
அவனவன் கிரியைக்கு தகுந்த நியாயதீர்ப்பு நிச்சயம் உண்டு! 
மத்தேயு 16:27 மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன்கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.
வெளி 20:12 மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
என்பது வேதம் சொல்லும் திட்டமான கருத்து என்றாலும்,  
I தீமோத்தேயு 2:4 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
 
எனவே,  அப்படி ஒரு நியாயதீர்ப்பு நடந்துவிட்டால் "நான் பரலோகத்துக்கு போவேன் மற்றவர்கள் எல்லாம் நரகத்துக்கு போவார்கள்" என்று 
குதுகுலத்துடன் இருக்கும் பலர் முறுமுறுக்க கூடும் என்று என்பதற்கு ஒப்பாக நம் ஆண்டவராகிய  இயேசுவும் ஒரு உவமையை கூறியிருக்கிறாரே?
 
மத்தேயு 20:8. சாயங்காலத்தில், திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் தன் காரியக்காரனை நோக்கி: நீ வேலையாட்களை அழைத்து, பிந்திவந்தவர்கள் தொடங்கி முந்திவந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலி கொடு என்றான்.
9. அப்பொழுது பதினோராம் மணிவேளையில் வேலையமர்த்தப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள் 
10. முந்தி அமர்த்தப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று எண்ணினார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள்.
11. வாங்கிக்கொண்டு வீட்டெஜமானை நோக்கி:
12. பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒரு மணி நேரமாத்திரம் வேலை செய்தார்கள்; பகலின் கஷ்டத்தையும் வெயிலின் உஷ்ணத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள்.
13. அவர்களில் ஒருவனுக்கு அவன் பிரதியுத்தரமாக: சிநேகிதனே, நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்கு சம்மதிக்கவில்லையா?
14. உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்தது போலப் பிந்தி வந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ்டம்.
 
மத்தேயு 20:15 என்னுடையதை என் இஷ்டப்படிச் செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா என்றான்.
 
ஆம்! தேவன் தயாளனாக செயல்பட்டால் பலர் வண்கண்ணனாக மாற வாய்ப்புண்டு.  
 
தேவன் புறஜாதியாரைகூட எப்படி ஆசீர்வதிக்கிறார் பாருங்கள் 
 
ஏசாயா 19:25 அவர்களைக் குறித்துச் சேனைகளின் கர்த்தர்: எகிப்தியராகிய என் ஜனமும், அசீரியராகிய என் கரத்தின் கிரியையும், இஸ்ரவேலராகியஎன் சுதந்தரமும் ஆசீர்வதிக்கப்பட்டது என்று சொல்லி, அவர்களை ஆசீர்வதிப்பார். 
 
இப்பொழுது அந்த இந்து முதலாளியின் கேள்விக்கு வருவோம்!  
 
என்னை பார்த்து "எல்லோருக்கும் ஒரே விதமான நியாய தீர்ப்பு என்றால் உங்களுக்கு ஏமாற்றம்தானே மிஞ்சும்" என்று எதோ  என்மேல் பரிதாபபட்டு கேட்ட அந்த முதலாளில் என்னுடைய பதிலால் எந்த மறுபேச்சும் சொல்லமுடியாமல் போனார்: ஆம்!   
என்பதில்லை படிக்கும் முன்னர் தங்கள் பதில் என்னவென்பதை சற்று யொசித்துகொள்ளவும்!  ஏனெனில் வசனம் இவ்வாறு சொல்கிறது! 
 
மத்தேயு 18:14  இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.
 
"எல்லோரும் மீட்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் என் தேவன் இயேசு சிலுவையில் அத்தனை பாடுபட்டார்! அதுபோல் இத்தனை சிரமம் எடுத்து அவர் வார்த்தையை கைகொண்டு நடப்பதும் எனக்கு எதுவும் பெரிதாக கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு  இல்லாமல், எல்லோரும் மீட்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான்! என்னை நிலை நிருத்துபவரும் தேவனேயன்றி என்னால் எதுவும் முடியாது! 
 
அவ்வாறிருக்க எல்லோருக்கம் ஒரே தீர்ப்பு கிடைத்தால் அது தேவனின் சித்தத்தின் நிறைவேறுத லேயன்றி  வேறல்ல. அதனால் முதலில் மிகுந்த  சந்தோஷபடுவது நான்தான். எதுவும் பெரிதாக எதிர்பார்த்து  நாளை அது கிடைக்கவில்லை என்றால்தான் ஏமாற்றம் உண்டாகும். ஆனால் என் எதிர்பார்ப்பே எல்லோருக்கும் நல்ல நியாயதீர்ப்பு வேண்டும் என்பதாக  இருக்கும்போது அதனால் மிகுந்த சந்தோஷமேயன்றி ஏமாற்றம் எதுவும் இல்லை" என்பதே எனது பதில்! 


-- Edited by SUNDAR on Thursday 16th of January 2014 01:04:55 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
RE: எல்லோருக்கும் சமமான நியாயதீர்ப்பு என்றால் என்ன செய்வீர்கள்?
Permalink  
 


//எல்லோருக்கும் சமமான நியாயதீர்ப்பு என்றால் என்ன செய்வீர்கள்?//

வேதத்திற்கு ஒருவர் எதிர்த்து நிற்பவராய் இருப்பறேயானால் அவருக்கு என்ன செய்வோமோ, அதனையே 'எல்லோருக்கும் சமமான நியாயதீர்ப்பு' என 'மற்றொரு இடருதலுக்கான கல்லை' வைப்பருக்கும் செய்வோம்.  ஜெபம் செய்வோம்!! 

பட்சிக்கும் அக்கினிக்கு மகிமை உண்டாகுக!!!

-------------------------------------------------------------------------------

மத்தேயு 23:33 சர்ப்பங்களே, விரியன்பாம்புக்குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்?



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

அன்பர்களே நான் எனது கட்டுரைகளில் பல செய்திகளில் எல்லோருக்கும் நல்லதொரு முடிவு வேண்டும் என்று எழுதுவதன் காரணம்
என்னவென்பதை இங்கு தெரிவித்துகொள்ள விரும்புகிறேன் 
 
ஒவ்வொரு கிறிஸ்தவரும் தன்னை போல பிறரை நேசித்து இரட்சிப்பை அடையாதோர் கொடிய நரகத்தில் தண்டிக்க படாமல் இரட்சிப்பை கண்டடையவேண்டும் என்பதற்காக கதறி ஜெபிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த என்னுடைய கருத்துக்கள் எழுதப்பட்டதேயன்றி,
இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்களை உக்குவிப்பதர்க்காக அல்ல எனபதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.
 
இயேசுவை ஏற்றுக்கொள்ளாதோர்மேல் தேவ கோவம் நிலை நிற்கும் என்று வேதம் தெளிவாக சொல்கிறது.
 
யோவான் 3:36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றார்.   
 
அடுத்து இயேசுவை விசுவசியாதவன் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கபடுவான் என்றும் வேதாகமம் சொல்கிறது.
 
மாற்கு 16:16 விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.
     
எனவே அன்பானவர்களே, கிறிஸ்த்தவர்கள் பிறருக்காக பரிதபித்து ஜெபிக்கவேண்டும் என்பதற்காக நான் எழுதும் கருத்துக்களை எடுத்துகொண்டு, இலவசமாக சுலபமாக கிடைக்கும் இயேசுவின் இரட்சிப்பை அலட்சியப்படுத்தாதீர்கள் தேவ கோபத்திற்கு ஆளாகாதீர்கள் என்று அன்புடன் வேண்டுகிறேன். 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 19
Date:
Permalink  
 

சுந்தர் ஐயா கருத்து சரியானதே நாம் இலவசமாய் தானே பெற்றோம் நம்மை காட்டிலும் கடுமையாக சட்டத்திட்டங்களை கடைபிடிப்போருமுண்டு
அவர்கள் விசுவாசத்தினால் பெற முயர்ச்சியாமல் சொந்த்தில் முயர்ச்சிப்பதால் அடையாமல் இருக்கிறார்கள்

சுந்தர் ஐயாவின் கருத்து ஒருவன் விழுவதை பார்த்து நாம் மகிழக்கூடாது (தேவனின் பூரணசித்தம் அதுவல்லவே )மறாக நாம் கலங்க வேண்டும்


தீர்க்க தரிசணங்களானாலும் ஒழிந்துபோம் அன்பு ஒழியாது (அவர் பட்சிக்கும் அக்கினி என்பதை நான் மறக்கவில்லை)
தேவன் அன்பானவர் அவரின் அனைத்து செயல்களையும் நாம் அறிந்தவர்கள் அல்லவே

மறைவானவை கர்த்தருக்கே உரியவை


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
எல்லோருக்கும் சமமான நியாயதீர்ப்பு என்றால் என்ன செய்வீர்கள்?
Permalink  
 


holyson wrote:

 
சுந்தர் ஐயாவின் கருத்து ஒருவன் விழுவதை பார்த்து நாம் மகிழக்கூடாது (தேவனின் பூரணசித்தம் அதுவல்லவே )மறாக நாம் கலங்க வேண்டும்


தீர்க்க தரிசணங்களானாலும் ஒழிந்துபோம் அன்பு ஒழியாது (அவர் பட்சிக்கும் அக்கினி என்பதை நான் மறக்கவில்லை)
தேவன் அன்பானவர் அவரின் அனைத்து செயல்களையும் நாம் அறிந்தவர்கள் அல்லவே
 


 

நான் சொல்லவிரும்பும் கருத்தை மிக சுலபமாக  சரியாக  புரிந்து கொள்ளும் இருதயத்தை தேவன் கொடுத்தபடியால் நான் அவரை ஸ்தோத்தரிக்கிறேன்.
 
சுருக்கமாக சொன்னால் ஒவ்வொரு கிறிஸ் தன்னைப்போல் பிறரை நேசித்து தான் நரகாக்கினைக்கு தப்பித்துகொண்டது போல எல்லோரும் தப்பிக்க வேண்டும் என்று ஆழ் மனதில் எண்ண வேண்டும். அதுவே தேவனின் சித்தம்!  
 
அடுத்தவன் தண்டிக்கப்பட வேண்டும் என்ற ரகசிய எண்ணம் சிறிதேனும் கூட இருதயத்தில் இருக்ககூடாது அப்படி எண்ணம் இருப்பவர்கள் புதிய ஏற்ப்பாடு சொல்லும் அன்பில் பூரண பட்டவர்கள் அல்ல என்பதே! 
 
அது தேவனுக்கு உகந்தது அல்ல! 
 
கிறிஸ்த்தவர்களிடம் இவ்வாறு விவாதிககும் நான், ஆண்டவரை அறியாத ஒருவரிடம் விவாதிக்கும்போது " இயேசுவை எற்றுக் கொள்ளாதவனும் துன்மார்க்கனுன் ஆக்கினைதீர்ப்படைவார்கள் என்றும் அவர்களுக்கு வேதனை நிச்சயம் உண்டு" என்று வசனம் சொல்கிறபடியே விவாதிப்பேன் என்பதையும் கருத்தில் கொள்க.   
 
கிறிஸ்த்தவர்கள் தேவ அன்பில் பூரணப்படவேண்டும் என்பதே என்னுடைய செய்தியின் நோக்கம்.
  

   

 



-- Edited by SUNDAR on Friday 21st of February 2014 12:29:59 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 19
Date:
RE: எல்லோருக்கும் சமமான நியாயதீர்ப்பு என்றால் என்ன செய்வீர்கள்?
Permalink  
 



உங்கள் கருத்துக்கு நன்றி ஐயா

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard