நம் ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்தில் தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம் என்று நமக்கு போதித்துள்ளார்.
மத்தேயு 5:39நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்;
அனால் இந்த உலகத்தில் நாம் நமக்கு எதிராக தீமை செய்பனையும் தவறான காரியங்களை செய்பவனையும் முதலில் கண்டிக்காமல் அப்படியே விட்டுவிட்டால், அவன் நம்மை முந்திக்கொண்டு நம்மை இளிச்சவாயனாக நினைத்து நம்மேலேயே பழியை போடும் அவல நிலையை நான் பல முறை சதிந்த்திருக்கிறேன்.
மிக சமீபத்தில் கூட, நான் இரு சக்கர வாகனத்தில் வரும் போது எனக்கு எதிரே தவறான சைடில் வாகனத்தில் வந்த ஒருவர் என்மீது மோதும் நிலையில் வந்து பின்னர் இருவரும் வண்டியை நிறுத்தி விட்டோம். அவர் தவறான பக்கத்தில் வந்ததால் நான் அவரை திட்டுவேன் என்று எதிர்பாத்து என் முகத்தை பார்த்தார் நான் எதுவும் சொல்லாமல் சிரிக்கவே என்னை பார்த்து அவர் திட்ட ஆரம்பித்து விட்டார்.
எனக்கு மிகவும் மன கஷ்டமாக போய்விட்டது நாம் முந்திக்கொண்டு அவனை திட்டியிருந்தால் அவன் நிச்சயம் மன்னிப்பு கேண்டிருக்கலாம் அல்லது குறைந்த பட்சம் என்னை திட்டமலாவது போயிருபானே என்று எண்ணினேன்.
ஆம்! ஆண்டவராகிய இயேசு சொல்லியை வார்த்தைகளை கைகொண்டு நடப்பது என்றால் இந்த உலகத்தோடு முற்றிலும் எதிராக நின்று போராடுவது போன்ற ஒரு நிலையில் தான் நாம் செயல்பட வேண்டும்.
அதனால்தான் இன்று உலகில் கிறிஸ்த்துவுக்காக வாழும் அநேகரை பார்க்க முடியும் ஆனால கிறிஸ்த்துவின் வார்த்தைகளை கைகொண்டு வாழ்பவனை பார்ப்பது கடினம்.
ஆகினும் தீமையை வெல்ல வேறுயே வழி இல்லை அன்பானவர்களே. நம்மேல் ஒரு நாற்றம் எடுக்கும் அசுத்தமான ஒருவன் வந்து மோதிவிட்டால் நாம் எப்படி திரும்ப மோதாமல், வேறு பக்கம் விலகி போவோமோ அதுபோல் தீமையும் ஒரு அருவருக்கத்தக்க அசுத்தம் அதை கண்டு விலகி போவதுதான் சிறந்தது. அதோடு மோதினால் நாமும் அசுத்தமாகிபோவோம்.
தீமைக்கு தீமையை சரிகட்டுவது சுலபம் ஆனால் அதனால் நமக்கோ அல்லது அந்த தீயவனுக்கோ எந்த பலனும் இல்லை.
தீமையை நன்மையால் வெல்வதுதான் சிறந்ததும், இயேசுவின் சீஷன் என்று பிறர் அறிவதற்கு எதுவாக அமையும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)