வானமும் பூமியும் ஒழிந்து போனானலும் ஒழிந்து போகாத வல்லமை வாய்ந்தது நியாயபிரமாண வார்த்தைகள் என்று சொல்கிறது நம் ஆண்டவராகிய இயேசுவின் வார்த்தை.
மத்தேயு 5:18வானமும்பூமியும்ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இவ்வார்த்தையை மீண்டும் உறுதிபடுத்தும் விதமாக "இயேசுவின் வார்த்தைகளும் ஒழிந்து போகாது" என்று சொல்கிறது இயேசுவின் இன்னொரு வார்த்தை.
மத்தேயு 24:35வானமும்பூமியும்ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
இவ்வசனங்களின் அடிப்படையில் நிறைவேறும்வரை ஒழிந்து போகாத வார்த்தைகள் இரண்டு
1. நியாயபிரமாண வார்த்தைகள்
2. இயேசுவின் வார்த்தைகள்
பரிசுத்த வேதாகமத்தில் சொல்லபட்டு இன்னும் நிறைவேறாத தீர்க்க தரிசன வார்த்தைகளை நாம் இந்த திரியில் பதிவிட்டு அறிந்து கொள்ளலாம் என்று கருதுகிறேன்.
அறிந்த சகோதர /சகோதரிகள் தங்கள் பதிவுகளை தரும்படி அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நான் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் நிறைவேற வேண்டிய தீர்க்கதரிசன வார்த்தையை இங்கு முதலில் பதிவிட விரும்புகிறேன்.
ஏசாயா 11:. அப்பொழுது ஓநாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்.
பாவத்தினிமித்தம் சீர்கெட்டு ஒன்றுக்கொன்று பகையாகி போன இந்த உலகத்தில் மீண்டும் பகைமை நீக்கபட்டு மரணம் ஒழிக்கபட்டு ஆட்டுக்குட்டியும் அதை பிடித்து தின்னும் ஓநாயும், காளையும் அதை பிடித்து தின்னும் பாலசிங்கமும் ஒருமித்து மேயும் அந்த காலம், கேடு செய்வார் இல்லாமல் பூமி முழுவதும் கர்த்தரை அறிந்திருக்கும் அறிவுள்ளவர்களால் நிரப்பபட்டுள்ள அந்த காலம் இன்னும் வரவேண்டிய ஒன்றும் நான் ஆவலுடன் எதிர்பார்க்கும் காலம் ஆகும்.
-- Edited by SUNDAR on Wednesday 19th of February 2014 03:00:32 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நான் அறிந்து கீழேயுள்ள தீர்க்கதரிசனமும் நிறைவேறியதாக தெரியவில்லை.
எரேமியா 25:33அக்காலத்திலே பூமியின் ஒருமுனை துவக்கி பூமியின் மறுமுனைமட்டும் கர்த்தரால்கொலையுண்டவர்கள்கிடப்பார்கள்; அவர்கள் புலம்பப்படாமலும் சேர்க்கப்படாமலும் அடக்கம்பண்ணப்படாமலும் பூமியின்மேல் எருவாவார்கள்.
ஆனால் இந்த தீர்க்க தரிசன நிறைவேறுதலை காண்பதற்கு அநேகர் பூமியில் இருக்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
//////////////////////////////////ஏசாயா 11:. அப்பொழுது ஓநாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்.
7. பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப்படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்
8. பால் குடிக்குங்குழந்தை விரியன்பாம்பு வளையின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும்,9 என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமிகர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.