இன்றைய கால கட்டங்களில் "கடவுளின் ஊழியம்" என்பது காசு சம்பாதிக்கும் ஒரு வழியாக மாற்றபட்டு வருகிறது.
எத்தனையோ எச்சரிப்புகளை எவ்வளவோபேர் எழுதியும் எதையும் கண்டுகொள்ளாமல் காசு வேட்டை ஆடிக்கொண்டிருக்கும் கயவர்கள் பலர் இன்று பெருகிவிட்டார்கள்.
இதற்க்கெல்லாம் அடிப்படை காரணம் என்னவென்று பார்த்தால் "என் வார்த்தையின்படி செய்யுங்கள்" என்று தேவன் திரும்ப திரும்ப சொல்லும் வேத வசனங்களை / இயேசுவின் வார்த்தைகளை வாழ்வில் கைகொண்டு வாழ வேண்டும் என்பது குறித்து போதிய
போதனை இல்லாமையே.
இருபுறம் கருக்குள்ள வேத வசனமாகிய பட்டயங்கள் மேல் அவகளுக்கு பயம் இல்லை! அவர்கள் செய்யும் காரியங்கள் பின்னாளில் கொண்டுவரப்போகும் பயங்கரங்கள் அவர்களுக்கு புரியவில்லை.
"கன்மலையை நோக்கி பேசு" என்று கர்த்தர் சொல்ல, பேசுவதற்கு பதில் கோலால் அடித்த மோசேக்கு கிடைத்த தண்டனை மரணம். இவ்வாறு ஊழியர்களின் சிறு மீருதல்கள்கூட உற்றுநோக்கப்படும் போது, பெரிய பாவங்களின் பயங்கர பின்விளைவுகள் குறித்து விவரித்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
கர்த்தர் வரும் நாட்கள் நெருங்கி வரும் நிலையில் காசு சேர்ப்பதற்கு இது காலம் அல்ல!
காசு சேர்க்க நினைப்பவர்கள் எலிசாவின் வேலைக்காரனாகிய கேயாசியை நினைத்துகொள்ளுங்கள். யோர்தானில் மூழ்கியதால் நீரோடு போன குஷ்டம் காசும் பொருளும் வாங்கியவன் கையேடு திரும்பி வந்தது.
பணமும் பொருளும் கண்ட இடத்தில் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்பதற்கு இது ஒரு திருஷ்டாந்திர எச்சரிப்பு!
எண்ணற்ற ஊழியர்கள் பெருகிப்போன இந்த் கால நிலையில் கள்ள ஊழியர்களை இனம் கொண்டு கொள்வது கொஞ்சம் கடினம்தான். இங்கு என்னுடைய கருத்து என்னவெனில் நாம் கர்த்தருடைய கற்பனைகளை கைகொண்டு அவருக்கு பிரியமாக வாழ்ந்தால் கண்டவனும் வந்து நம்மிடம் காசு பிடுங்கிசெல்ல கர்த்தர் அனுமதிக்க மாட்டார் என்பதே.
கர்த்தரின் சித்தப்படி சம்பாதித்து அவரிடம் ஒப்புவிக்கபட்ட காசு ஒருகாலும் கள்ளனிடம் போய் சேராது.
அதுபோல்
கர்த்தரின் வார்த்தைகள்படி வாழும் ஒருவனை/ஒருவளை தொடுவது கர்த்தரின் கண்மணியை தொடுவதற்கு சமானம்! எனவே தீமையும் தீயவனும் அவனை நெருங்குவதில்லை
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)