கடன் வாங்குவது நிச்சயமாக ஒரு சரியான தேவனின் நடத்துதல் அல்ல என்பதை போதிக்க இந்த இரண்டு வசனங்கள் மட்டுமே போதும்.
1. நாம் கடன் கொடுத்தவனுக்கு அடிமையாக இருந்தால் தேவனுக்கு சுயாதீனராக நம்மை எப்படி ஒப்புகொடுக்க முடியும்?
2. ஒன்றிலும் கடன் படாதிருங்கள் என்பது வெறும் பண பரிமாற்றத்தில் மட்டுமல்ல எல்லாவிதமான செயல்பாடுகள் அதாவது பொருட்களை கடனாக வாங்குவது, உதவியை கடனாக வாங்குவது, மொய் பணம் வாங்குதல் போன்ற எந்த ஒன்றிலும் கடன் பட கூடாது என்பதை குறிக்கிறது.
இது மனிதனால் கூடாததுதான் ஆனால் தேவனோடு சேர்ந்து முயற்சித்தால் நிச்சயம் கூடும்.
ஆகினும் நான் அறிந்த கருத்து என்னவெனில் வாங்கிய கடனுக்கு ஈடான பொருளோ அல்லது வேறு எந்த மதிப்புள்ள ஒரு அடகு பொருளோ கடன் கொடுத்தவனிடம் இருக்கும்போது அந்த கடனால் பாதிப்பில்லை என்பது எனது கருத்து.
மேலேயுள்ள வசனங்கள் அடிப்படையில் தேவன் எனக்கு தெரிவித்ததை சுருக்கமாக சொன்னால் "நாளை ஆண்டவர் வருகையின்போது நாம் எடுத்துகொள்ளப்படும் நிலை வருமானால், நாம் ஆண்டவரோடு போவதிநிமித்தம் எந்த ஒரு மனுஷனுக்கும் எவ்விதத்திலாவது நாம் கடன்படாமல் அல்லது யாருக்கும் எந்த பாக்கியும் இல்லாமல் இருப்பது அவசியம்"
இல்லையெனில்
கடன் கொடுத்தவன் நம்மை குறித்து நீதிபரரான தேவனிடம் முறையிட்டு நம்மை ஆண்டவரோடு போக விடமாட்டான். நாம் போனாலும் அவனிடம் விற்று காசாக்க போதுமான பொருள் அடகாக அவனிடம் இருக்குமானால் அவன் அந்த பொருளை காசாக்கி கொள்ளமுடியம் எனவே நம்மை குறித்து அவன் அக்கறைப்பட மாட்டான்.
எனவே ஆண்டவரின் வருகையில் எடுத்துகொள்ளபட விரும்புகிறவர்கள் உலகத்தாரிடம் கடன்பட்டு அடிமையாகாமல் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்!
-- Edited by SUNDAR on Wednesday 26th of February 2014 12:57:39 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இன்றைக்கு 15 வருடங்களுக்கு முன்னர் சுமார் 1990 வருஷங்களில் வங்கியில் கடன் வாங்குவது என்பது மிக மிக கடினம். ஆனால் இன்றோ வங்கிகளும் தனியார் நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு தனி நபர் கடன், மோட்டர் வாகன கடன் இலவச கடன் அட்டை, அந்த கடன் இந்த கடன் என்று ஆயிரம் கடன்களை அள்ளிகொடுக்க முன் வந்துள்ளனர்.
இன்றைய கடைசி நாட்களில் எப்படியாவது மனுஷர்களை பிடித்து கடனுக்குள் தள்ளி தனக்கு அடிமைகளாக்கி தக்க வைத்துகொள்ள வேண்டும் என்ற சாத்தானின் அதீத முயற்சிகளில் இதுவும் ஓன்று.
அவனின் மாயவலை தெரியாமல் அதில் விழுந்து அவனுக்கு அடிமையாகி போகிறவர்கள் அநேகர்!
எனவே அன்பானவர்களே! கடன் இல்லாதிருப்பவர்கள் புதிதாக கடன் வாங்க முயற்சி எடுக்க வேண்டாம். ஏற்கெனவே கடன் இருப்பவர்கள் விடுதலைக்காக ஆண்டவரிடம் கெஞ்சி முறையிடுங்கள்! உங்களை விடுவிக்க அவர் ஒருவராலேயே கூடும்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)