சாட்சி 1 : எனக்கு கடந்த நாட்களில் நாக்கில் கொடிய புண் வந்துவிட்டது. டாக்டர்களிடம் சென்று பார்த்தபோது அதை குணமாக்க முடியாது என்றும் பாதி நாக்கை வெட்டி எடுக்க வேண்டும் என்றும் சொல்லிவிட்டார்கள். சுமார் 12 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து பாதி நாக்கை வெட்டி எடுத்துவிட்டு வேறு ஒரு இடத்தில் இருக்கும் சதையை எடுத்து அங்கு சேர்த்தார்கள்.
இந்த 12 மணி நேர சிகிச்சையை தாங்கவும் அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடியவும் ஆண்டவர் செய்த பெரிய கிருபைக்காக ஸ்தோத்திரம்.
சாட்சி 2 : எனக்கு உடம்பு முழுவதும் நோய். ஆஸ்துமா /தைராய்டு சுகர் / பி பி போன்று எத்தனையோ நோய்கள். ஆனால் இத்தனை நோயையும் தாங்கிக்கொண்டு இன்னும் நான் உயிருடன் வாழ ஆண்டவர் கிருபை செய்கிறார் அதற்காக ஸ்தோத்திரம்.
சாட்சி 3 : என் மகன் ரோட்டை கிராஸ் செய்கையில் ஒரு பஸ்காரன் அடித்துவிட்டான். அவன் கால்கள் இரண்டும் பஸ் சக்கரத்தில் மாட்டி முற்றிலும் நொறுங்கி எடுக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டது. ஆகினும் ஆண்டவர் என் பிள்ளையின் உயிருக்கு சேதம் எதுவும் இல்லாமல் காப்பாற்றி கொடுத்தாரே அதற்க்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)