சகோ ஜான்12 அவர்கள் எழுதிய கடினமான வார்த்தைகளினிமித்தம் மிகவும் மன மடிவாகி இனி எழுதுவதை நிறுத்திவிடலாம் என்று நினைத்தேன். ஆகினும் ஆண்டவர் எனக்கு ஒரு பழைய சம்பவத்தை நியாபகத்துக்கு கொண்டுவந்து என்னை தேற்றினார்.
அந்த சம்பவம் நான் ஆண்டவரால் அபிஷேகிக்கபட்டு சுமார் 6 நாட்கள் என்னை பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்றபோது நடந்தது. அதுபற்றிய செய்தி கீழ்கண்ட திரியில் உள்ளது.
அந்நேரம் தூத்துகுடியில் ஒரு கொடிய புயல் உருவாகி இருந்தது.
மாரநாதா ஒரு சிறிய பெந்தேகொஸ்தே சர்ச். நானும் எனது தம்பியும் சார்சினுள் போய் அமர்ந்தோம். சர்ச் உள்ளே இருந்த எல்லோருக்குள்ளும் பிசாசின் ஆவி இருப்பது என் கண்ணுக்கு தெரிந்ததால் எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. தேவனை இவ்வளவு வாஞ்சையோடு தேடும் இவர்களுக்குள்ளும் பிசாசு எப்படி தங்கியுள்ளது என்று ஒரே குழப்பமாக இருந்தது. அப்பொழுது நான் பைபிளை திறக்க, வேதவசனம் "இங்கு உள்ளதெல்லாம் நோவா பேழையை உண்டாக்கி ஜலப்ரளயத்துக்கு தப்பும்போது கீழ்படியாமல் அழிந்துபோன மனிதர்களின் ஆவிகள்" என்று பேசியது. அப்பொழுது அதுபற்றி எனக்கு எதுவும் சரியாக புரியவில்லை அதனால் ஆண்டவரிடம் எதுவும் விசாரிக்கவில்லை.
ஜெபம் நடக்கும் வேளையில் மீண்டும் கொடிய புயல்காற்று வீச ஆரம்பித்தது, வானம் மிகவும் இருண்டு காணப்பட்டது, மின்சாரமும் இல்லாமல் போய்விட்டது. அப்பொழுத சர்ச்சில் உள்ள எல்லோரும் அந்த புயல் தாக்காமல் இருப்பதற்க்காக ஜெபிக்க ஆரம்பித்தார்கள்
உடனே ஆண்டவர் என்னிடம் "அவர்கள் ஜெபிப்பதை எதையும் நீ பொருட்படுத்தாதே, அவர்கள் ஜெபிப்பதுபோல நீயும் ஜெபிக்காதே" என திட்டமாக தெரிவித்தார். அகவே நான் எதையும் பொருட்படுத்தாமல் கையில் இருந்த வேதத்தை படித்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் அவர்கள் எல்லோரும் கூட்டமாக ஜெபிக்க ஜெபிக்க என் மனம் என்னையும் அறியாமல் அவர்களோடு சேர்ந்து வேண்டுதல் செய்ய ஆரம்பித்தது. நான் இறைவனிடம் "ஆண்டவரே இங்கு வந்து ஜெபம் பண்ணும் இந்த ஒரு கூட்ட மக்களை காபாற்றுமே" என கேட்ட, அதே விநாடி மின்சாரம் வந்து விட்டது மற்றும் வானத்தில் மேகம் கலைந்தது காற்றும் நின்றுவிட்டது. .
ஆண்டவர் என்னை மிகவும் கடிந்து கொண்டார் "நான் உன்னை என்ன சொன்னேன் நீ என்ன செய்கிறாய்? இந்த ஜனங்கள் இதுபோலவே நான் எதாவது ஒன்றை செய்ய நினைக்கும் போதெல்லாம் என்னுடைய சித்தம் என்ன என்பதை பொருட்படுத்தாமல், இப்படி ஒன்று கூடி ஜெபித்து அதை செய்யவிடாமல் தடுத்து விடுகிறார்கள். அவர்கள் நினைப்பது நடக்க வேண்டும் என்றுதான் ஜெபம் பண்ணுகிறார்களே அன்றி, உம்முடைய சித்தப்படி எல்லாம் நடக்கட்டும் என்று சொல்லி அதை முடிப்பதில்லை. மனிதனுக்கு நன்மையை தோன்றுவதெல்லாம் நன்மையுமல்ல, அவனுக்கு தீமையாய் தோன்றுவதெல்லாம் தீமையுமல்ல. அன்று கேத்சமனே தோட்டத்தில் இயேசு ஜெபித்தபோது என்னை எப்படியாவது இந்த சிலுவை மரணத்தில் இருந்து காப்பாற்றும் என்று மட்டும் ஜெபித்திருந்தால் நானும் இரக்கப்பட்டு அவரை காப்பாற்றியிருப்பேன். ஆனால் மனுகுலத்திற்கு இந்த பெரிய ரட்சிப்பு கிடைக்காமல் போய்விடும். ஆனால் அவர் முடிவில் உம் சித்தப்படி ஆகக்கடவது என்று சொல்லிய அந்த ஒரே வர்த்தயினால்தான் இற்று மனிதனின் இரட்சிப்புக்கு வழியே கிடைத்தது.
"எனது வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவை ஏன்று, அவரை தன்னில் தரித்து கொண்டுள்ள எல்லோருடைய வார்த்தைக்கும் வல்லமை உள்ளது. ஆனால் கிறிஸ்துவை உடையவர்கள் இறைவனின் சித்தம் என்ன என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல், தான் நினைப்பது நடக்க வேண்டும் என்பதிலேயே கவனமாக இருக்கிறார்கள். அதற்குத்தான் ஜெபிக்கிறார்கள். அதுதான் நான் உன்னிடம் சொன்னேன் அவர்களுக்கு இரங்காதே என்று, ஆனால் நீயும் என் சொல்லை கேட்க வில்லை" என கோபமாக பேசினார். எனக்கு மிகவும் மனகஷ்டமாக இருந்தது.
அன்றில் இருந்து இன்றுவரை அவர்களை "கலகவீட்டார்" என்றே ஆண்டவர் என்னிடம் பேசி வருகிறார்.
இப்பொழுது அந்த சம்பவத்தை நினைவுபடுத்தி,
எசேக்கியேல் 2:6நெரிஞ்சில்களுக்குள்ளும் முள்ளுகளுக்குள்ளும் நீ தங்கியிருந்தாலும், நீ அவர்கள் வார்த்தைகளுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகத்துக்குக் கலங்காமலுமிரு; அவர்கள்கலகவீட்டார்.
என்று சொல்லி தேற்றினார். ஆண்டவர் என்னை தேற்றியபடியால் பின்னர் மனதை திடபடுத்தி கொண்டு எழுத ஆரம்பித்து, அவர் எழுதிய எல்லா வரிகளுக்கும் பதில் எழுதினேன், ஆனால் ஆண்டவரோ அதை பதிவிட வேண்டாம் மௌனமாய் இரு என்று சொல்லி என்னை தடுத்துவிட்டார்
எசேக்கியேல் 3:26நீ அவர்களைக் கடிந்துகொள்ளுகிற மனுஷனாயிராமல், ஊமையனாயிருப்பாய்; அவர்கள் கலகவீட்டார்.
ஆகினும் அவர்கள் கேட்டலும் கேட்கவிட்டலும் நீ சொல்ல வேண்டியதை சொல்லிவிடு என்று என்று மாத்திரம் கட்டளையிட்டுள்ளார்.
எசேக்கியேல் 3:27நான் உன்னோடே பேசும்போது, உன் வாயைத் திறப்பேன்; அப்பொழுது
கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைத்தார் என்று அவர்களோடே சொல்வாய்; கேட்கிறவன் கேட்கட்டும், கேளாதவன் கேளாதிருக்கட்டும்; அவர்கள் கலகவீட்டார்.
எனவே இந்த கலகவீட்டாரை கண்டு இனி நான் கலங்காமல் என் பணியை தொடரலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.
நான் சொல்வதை கேட்கிறவன் கேட்கட்டும் கேளாதவன் கேளாதிருக்கட்டும். எனக்கு தேவன் சொன்னதை நான் செய்து முடிக்க வேண்டுமே!
என்னை எப்படியாவது எங்காவது குறை கண்டுபிடித்து நான் வேத ஆதாரங்களுடன் சொல்லும் எல்லா கருத்துக்களையும் முடக்கிவிட வேண்டும் என்று சாத்தான் மிகவும் மும்முரமாக செயல்படுவது நான் வலை தளங்களில் எழுத ஆரம்பித்ததில் இருந்தே எனக்கு தெரியும்.
சிலர் திட்டி தீர்ப்பார்கள், சிலர் எதிர்த்து நிற்ப்பார்கள், சிலர் சாதுபோல பேசி பின்னர் தங்கள் ரூபத்தை காட்டுவார்கள். சிலர் சாபமிடுவார்கள் இப்படி பலரதரப்பட்ட விதமாக என்னோடு எதிர்த்து நின்றாலும் அவர்கள் எல்லோருடைய நோக்கமும் ஒன்றே ஒன்றுதான் அது நான் அறிந்து எழுதும் உண்மைகளை பிறர் ஏற்காமல் தடை செய்துவிட வேண்டும் அல்லது என்னை எழுதவிடாமல் தடுத்து தளத்தை முடக்கிவிட வேண்டும் என்பதுதான்"
ஏனெனில் நான் இங்கு எழுதும் கருத்துக்கள கலக வீட்டாருக்கு மட்டுமல்ல அநேகருக்கு புரிவதற்கு கடினமாகவே இருக்கும். காரணம் வேதம் சொல்லும் கடைசி சத்துருவாகிய மரணத்தை ஜெயிக்கவும்வழிகூட இங்கு சொல்லப்பட்டுள்ளது.
ஆகினும் சகோ. ஜான்12 அவர்கள் "அவருடைய கேள்விக்கு பதில் தரவில்லை தரவில்லை" என்று குற்றம் சுமத்துவதால் அவர் கேள்விகளில் சில முக்கிய கேள்விகளுக்கு தனி தனி திரியில் வசன ஆதாரத்துடன் பதில் தர கர்த்தருக்குள் வாஞ்சிக்கிறேன்.
தேவன் அன்று இஸ்ரவேல் தேசத்தாரை பார்த்து "கலக வீட்டார்" என்று சொன்னார். அதற்க்கு காரணம் கர்த்தராகிய தேவனை அறிந்திருந்தும் அவர் வார்த்தைக்கு செவிகொடுக்கவில்லை
அதுபோல் ஆவிக்குரிய இஸ்ரவேலர் என்று தங்களை கூறிக் கொள்ளும் இன்றைய கிறிஸ்தவர்கள் இயேசுவை நன்றாக அறிந்திருந்தும் அவர் வார்த்தைகளுக்கு கீழ்படிய விரும்பாமல் அதை புரட்டுவதால் இவர்களையும் "கலக வீட்டார்" என்றே தேவன்
குறிப்பிட்டு அவர்களுக்கு பயப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
அவர்கள் குறித்து தேவன் சொன்ன வார்த்தை இதோ:
எசேக்கியேல் 2:6மனுபுத்திரனே; நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; அவர்கள் வார்த்தைகளுக்கும் அஞ்சவேண்டாம்;........................அவர்கள்கலகவீட்டார்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)