இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எவன் கலகக்காரன்?!


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
எவன் கலகக்காரன்?!
Permalink  
 


தவறு செய்பவனா தவறை சுட்டி காடுபவனா? ! எவன் கலகக்காரன்!! நான் கலகக்காரனல்ல!! உலகத்தை கலக்குகிரவனாய் இருக்க விரும்புபவன்..

தேள் கொட்டிய கள்வனின் கதை நியாபகமிருக்கிறதா தல சகோதரர்களே !!!

அவன் தன்னை இறைதூதன் என சொல்லிக்கொள்ள என்ன நியாயம் இருக்கிறது!!

தவறுகளை திருத்திக் கொள்ளாமல் அரசியல் செய்து, பதிவுகளைத்தர உணர்வில்லாத பேய் தனதிற்கடுத்த  துணிகரம் எங்கிருந்து வருகிறது?!

தவறு செய்பவனா தவறை சுட்டி காடுபவனா? ! எவன் கலகக்காரன்!! நான் கலகக்காரனல்ல!! உலகத்தை கலக்குகிரவனாய் இருக்க விரும்புபவன்..

தவறு செய்பவன் தேவ நியமங்களை அறிவிக்க தேவன் தடைசெய்வது மாத்திரமல்ல.. அவர் சொல்வதை நீங்களே கேளுங்கள்..

 சங்கீதம்

50 அதிகாரம்

16. தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என் பிரமாணங்களை எடுத்துரைக்கவும், என் உடன்படிக்கையை உன் வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு.

17. சிட்சையை நீ பகைத்து, என் வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய்.

18. நீ திருடனைக் காணும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு.

19. உன் வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், உன் நாவு சற்பனையைப் (வஞ்சனையை) பிணைக்கிறது.

20. நீ உட்கார்ந்து உன் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, உன் தாயின் மகனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய்.

21. இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாயிருந்தேன், உன்னைப்போல் நானும் இருப்பேன் என்று நினைவுகொண்டாய்; ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன் கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன்.

22. தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை.

மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது என்றே எவருக்கும் நற்செய்தி போதியுங்கள் !! கேட்க காதுள்ளவர்கள் செவிசாய்க்கட்டும்!!

இயேசுவின் காலத்தில் ஏரோது ராஜா செய்தது நியாயம் என்றால் கள்வர்கள் செய்வதும் நியாயம் தான் என்று எடுத்துகொள்கிறார்களோ !!

 

தேவனுக்கு மகிமை உண்டாகுக!!!



-- Edited by JOHN12 on Wednesday 5th of March 2014 08:18:07 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
Permalink  
 

இயேசு சொன்ன முக்கிய கட்டளைகளின் அடிப்படையில் மனந்திரும்புங்கள் என்று போதிப்பதோடு மட்டுமல்லாமல் அவர் வார்த்தைகளை கைகொள்ள வேண்டியும் உபதேசிப்பது அவசியமே.  
 
மத்தேயு 28:20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; 
 
அப்படி  அடுத்தவர்களுக்கு உபதேசிக்கும் முன்னர் நாம் அவர் கட்டளைகளை கைகொள்ள பிரயாசம் எடுக்க வேண்டும். என்னில் இயேசுவின் கற்பனையை கைகொள்ளாதவன் பொய்யன் என்று வேதம் சொல்கிறது:  
 
I யோவான் 2:4 அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.
 
 
இப்பொழுதும் கலகம் பண்ணுதல் என்றால் என்ன?  யார் கலககாரன்? எதற்காக இஸ்ரவேல் வீட்டாரை தேவன் கலக வீட்டார் என்று சொல்கிறார்?
 
வசனமே பதில் சொல்கிறது!      
 
எசேக்கியேல் 3:7 இஸ்ரவேல் விட்டாரோவெனில், உனக்குச் செவிகொடுக்கமாட்டார்கள்; எனக்கே செவிகொடுக்கமாட்டோம் என்கிறார்களே; 
 
I சாமுவேல் 12:15 நீங்கள் கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல், கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினீர்களானால்,
 
தானியேல் 9:5  கலகம்பண்ணி, உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய நியாயங்களையும் விட்டு அகன்றுபோனோம்.
 
ஆம்! தேவனின் வார்த்தைக்கு செவிகொடுக்காமல் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அதை நிராகரிப்பவர் எல்லோருமே கலகவீடார்களே.  
 
இன்றைய "கலகவீட்டார்" பழைய ஏற்பாட்டில் தேவன் சொன்ன எந்த  கற்பனைகளுக்கும் செவி கொடுப்பது இல்லை.   புதிய ஏற்பாட்டில் இயேசு சொன்ன எந்த கட்டளையையும் கண்டு கொள்வதே  இல்லை. ஆவிக்குரிய அப்போஸ்த்தலர்கள் வாழ்ந்த முறைப்படி வாழவும் முயற்ச்சிக்க வில்லை.
 
 

நீங்கள் யாருக்கு முழுமையாக கீழ்படிகிறீர்கள் ?

பழைய ஏற்பாட்டில் தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்ட:-

  • ஒய்வு நாளில் ஒரு வேலையும் செய்யக்கூடாது (உப:5:13)
  • நீரில் வழ்பவைகளில் சிறகும் செதிலும் இல்லாதவைகளை புசிக்ககூடது (லேவி)
  • ஸ்திரி விலக்காய் இருக்கும் போது ஏழு நாள் அவளுடன் சேரக்கூடாது.
  • பணத்தை வட்டிக்கு கொடுக்கக்கூடாது (வங்கியில், PF கூட) (எசெக்18:8)

போன்ற அனேக தேவனின் கட்டளைகள் கைகொள்ளப்படுவது இல்லை. காரணம் கேட்டால் பழைய ஏற்பாடு முடிந்து விட்டது என்கிறார்கள்

புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து சொன்ன:-

  • உன்னிடத்தில் கேட்பவனுக்கு கொடு( லூக் : 6:30)
  • உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புபவனுக்கு மனம் கோணாதே (மத்:5:42)
  • பூமியிலே உங்களுக்கு பொக்கிசங்களை சேர்த்துவைக்க வேண்டாம் (மத்:6:21)
  • உங்களுக்கு உண்டானவைகளை விற்று பிச்சை கொடுங்கள் (லூக்:12:33)
  • திருப்பி கொடுப்பார்கள் என்ற எண்ணத்தில் கடன் கொடாதே.
  • உன் வீட்டில் விருந்து பண்ணும் போது ஏழை பிச்சைகாரனை கூப்பிடு
  • ஒரு கன்னத்தில் அடித்தல் மறு கன்னத்தை திருப்பி கொடு(லூக்:6:29)

போன்ற தேவ குமாரனின் கட்டளைகள் கை கைகொள்ளப்படுவது இல்லை. காரணம் கேட்டால் இந்த உலகத்தில் வாழும் நாம் அப்படியெல்லாம் செய்ய முடியாது அது மிக கடினம் என்றோ அல்லது எதோ ஒரு சாக்கு சொல்கின்றனர்

அட்லீஸ்ட் பவுல் அப்போஸ்தலர் எழுதிய:

சபைகளில் உங்கள் ஸ்திரிகள் பேசக்கூடாது, பேசும் படி அவர்களுக்கு உத்தரவில்லை(1கொரி:14:34)

  • அர்த்தம் சொல்லுகிறவர் இல்லை என்றல் சபையில் அன்னிய பாஷை பேசக்கூடாது(1கொரி:14:27,28)
  • உண்ணவும் உடுக்கவும் உண்டயிருந்தால் போதும் என்று இருக்கக்கடவோம் (1 தீமோத்:6:8)
  • தெய்வ பயத்தொடே ஒருவருக்கொருவர் கீழ்படியுங்கள் (எபே 5:21)
  • பொய்யை களைந்து அவனவன் பிறருடன் மெய்யை பேசுங்கள்(எபே:4:25)
  • ஒருவருக்கொருவன் அன்பு கூறுகிற விஷயத்திலன்றி ஒன்றிலும் கடன்படாதிருங்கள்

.

போன்ற ஆவியானவரின் வார்த்தைகளும் கைக்கொள்ளபடுவதில்லை ஏன் என்று கேட்டால் நாங்கள் ஆவியில் நடத்தப்படுகிறோம் பாவம் எங்களை மேற்கொள்ள மாட்டாது அல்லது நாங்கள் வாக்குவாதம் பண்ண மாட்டோம் என்று சொல்லி எஸ்கேப் ஆகி விடுகிறார்கள்.

 

அக மொத்தம்

தேவன் 10 கட்டளைகளை கொடுத்தார்

தேவகுமாரன் அதை இரண்டாக சுருக்கி கொடுத்தார்

பவுல் அவர்கள் அதை ஒன்றாக மாற்றினார்

மனிதர்கள் அதை ஒன்றுமில்லாமல் மாற்றிவிட்டனர்.

 
 
இப்பொழுதும் கர்த்தர் என்னை நோக்கி சொல்கிறார்: 
 
எரேமியா 7:27 நீ இந்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்குச் சொன்னாலும், அவர்கள் உனக்குச் செவிகொடுக்கமாட்டார்கள்; நீ அவர்களை நோக்கிக் கூப்பிட்டாலும், அவர்கள் உனக்கு மறுஉத்தரவு கொடுக்கமாட்டார்கள்.
 
ஆகினும்  
 
எசேக்கியேல் 2:5 தங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசி உண்டென்கிறதை அவர்கள் அறியவேண்டும்.
 
என்பதற்காகவே என்னை எழுத சொல்கிறார்!  எழுதுகிறேன்! 

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard