ஆள் மாறாட்டம் என்று எதை குறித்து கேட்டுள்ளீர்கள் என்பது புரிகிறது.
ஒரு மனுஷனுக்கு பதில் இன்னொரு மனுஷன் செயல்படுதே ஆள் மாறாட்டம் எனப்படும்.
மற்றபடி நிர்வாக வசதிக்காக ஒரே மனுஷன் இரண்டு பெயர்களில் மூன்று பெயர்களில் செயல்படுவது என்பது ஆள்மாறாடம் ஆகாது. இன்று உலகத்தில் அநேகருக்கு இரண்டு பெயர்கள் மூன்று பெயர்கள் இருக்கிறது.
அலுவலகத்தில் "மணி" என்று செயல்படுபவர் வீட்டில் "ராஜா மணி" என்றும் வேறு இடத்தில் "ராஜா" என்ற பெயரில் செயல்பட முடியும். அதில் எந்த தவறும் இருக்க வாய்ப்பில்லை.
ஏன் பாவத்தில் இருந்து மனுஷர்களை மீட்கும் திட்டத்தில் ஒரே தேவன் பல்வேறு பெயர்களில் செயல்படவில்லையா?
எனவே ஒருவர் எழுத வேண்டிய பரீச்சையை ஆள் மாறாட்டம் செய்து இன்னொருவர் எழுதுவது, ஒருவருக்கு கிடைக்க வேண்டிய பணத்தை ஆள் மாறாட்டம் செய்து இன்னொருவர் பெறுவது போன்ற செய்கைகள், நீதியாய் நடக்க வேண்டும் (ஏசா 33:15) என்ற தேவனின் எதிர்பார்ப்புக்கு விரோதமானது
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
//மற்றபடி நிர்வாக வசதிக்காக ஒரே மனுஷன் இரண்டு பெயர்களில் மூன்று பெயர்களில் செயல்படுவது என்பது ஆள்மாறாடம் ஆகாது. இன்று உலகத்தில் அநேகருக்கு இரண்டு பெயர்கள் மூன்று பெயர்கள் இருக்கிறது.
அலுவலகத்தில் "மணி" என்று செயல்படுபவர் வீட்டில் "ராஜா மணி" என்றும் வேறு இடத்தில் "ராஜா" என்ற பெயரில் செயல்பட முடியும். அதில் எந்த தவறும் இருக்க வாய்ப்பில்லை. //
சகோதரரே,
உங்களுடன் மாத்திரம் இதை கேட்கிறேன். நீங்கள் செய்வது தவறல்லவா?!
தேவனிடத்தில் நீங்கள் நேசன் என தலத்தில் தோன்றியதை 'பாவம்' என்று புலம்பி அறிக்கை செய்துவிட்டு (சிறு வெளிபாடு தான்!!!)தற்போது இது நிர்வாக வசதிக்காக என்றுரைப்பது யோக்கியமல்லவே!!!
உங்கள் ஊழியதிர்க்கு கனமுண்டாக நீங்கள் செய்யவேண்டியதை நான் ஏற்கனவே கூறி இருக்கிறேன்..
போலியான இறைநேசனாய் தாங்கள் இருக்காமல் உண்மையான இறைநேசனாய் பதிவுகளை தொடருங்கள்>! சுந்தர் என்கிற நாமம் கைவிடபடுவதாக!!!
இன்னமும் துணிகரம் கொண்டு தங்களை 'தீர்க்கதரிசி' என்று சொல்லி பாவம் செய்யாதிருங்கள்.. நீங்கள் இன்னும் மனித சாட்சியை நாடுபவராக தான் பார்கிறீர்கள். இழந்த தேவமகிமையை பெற பரிசுத்த குலைச்சல் சரிசெய்ப்படவேண்டும் என்பதை நீங்கள் அறியாமலிருக்க எனக்கு மனமில்லை.
நேசன் என தாங்கள் ஏற்பட்டதை தவறு நீங்கள் அறிவிப்பு செய்யும் பட்சைலேயே தேவன் இந்த பாவத்தை மன்னிக்க இயலும். தாங்கள் சவுலை போன்றே உணர்வில்லாது இருப்பீர்களானால் ., இந்த விசயத்தில் இத்தோடு என்னுடைய ஆலோசனைகளையும் நிறுத்திவிடுகிறேன்!!
மருநாமம் அல்லது புனைபெயர் வைத்துகொள்வது தவறல்ல என நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் இங்கு காரியம் வேறு. புனை பெயர் சிலருக்கு வீட்டில் மாத்திரம் வழக்கத்தில் இருக்கும். அங்கு அவர்கள் காரியத்தை சாதித்துக்கொள்ள புனைபெயரை வெய்த்து கொள்ளாமல், அன்பின் மிகுதியால் தங்கள் வீட்டில் புனைபெயரோடு வழங்கபடுகிரார்கள்.
இங்கு 'நேசன்' என்கிற பெயர் மற்றவர்களால் அல்ல தங்களினாலேயே புனைந்துகொள்ளபட்ட புனைபெயர். நீங்கள் 'சுந்தராக' தலத்தில் தோன்றியிருக்காவிட்டால் இது தவறல்ல. ஆனால் ஒரேபதிவில் இருவராகவும் தோன்றி நீங்கள் நிர்வாகிப்பீர்கலென்றால் அந்த நிர்வாக வசதி யாருக்குரியது!!
அது கர்த்தருகுரியதில்லை என்று எப்படி இன்னும் அறியாமளிருகிறீர்கள்?
'உங்களை' கொண்டும்,உங்களின் புற தோற்றமான 'நேசனை' கொண்டும் பரிச்தமான தேவன் பேசவில்லை என்பதை நீங்கள் எதை கொண்டு மறுப்பீர்கள்?!
மருநாமம் இருபது பாவமில்லை. ஆனால் அதைகொண்டு சுய ஆதாயம் தேடினதுனானால் அது அயோக்கியம் என இந்திய சட்டமே சொல்லுகிறது.
ஆக, நேசன் என்கிற fack ID யை தாங்கள் கொண்டிருப்பது இந்திய சட்டப்படி (CYBER CRIME ACT- 2000) தவறு தான்!! மனுஷ சட்டமே உங்களை இவ்வாறாக தீர்க்குமேயென்றால் நியாயதீர்ப்பை கற்பனை செய்துபாருங்கள்!!
-- Edited by JOHN12 on Tuesday 11th of March 2014 07:42:31 PM
ஒருவர் புனைப் பெயரில் பதிவு தருவது மிக பெரிய குற்றம் என்று நான் இந்த திரியை துவங்கவில்லை சகோதரரே ஆனால் கேள்வியும் நானே பதிலும் நானே என்று ஒரே தளத்தில் இருவராக வந்தது சரியா? தவறா ,குற்றமா? குற்றம் இல்லையா? அது மத்திரம் இல்லை பொய் என்றால் என்ன? உண்மைத் தன்மையை மறைப்பது தானே " நீங்களும் நேசனும் ஒன்றுதானே என்று ஒருவர் சொன்னபோது நீங்கள் என்ன எழுதியிருந்தீர் இல்லை நேசன் அலுவலகம் வந்தபிறகு இந்த பதிவிற்கு பதில் தருவார் என்று சொல்லவில்லையா? நான் ஏன் இதை கேட்டேன் என்றால் நான் அந்த வார்த்தைகளை உண்மை என்று நம்பிவிட்டேன் அதை இப்ப நினைத்து வருந்துகிறேன் இப்படி ஏமாற்றம் செய்வது முறையா? இல்லை நீ ஏமாந்தா அதுக்கு நான் என்ன செய்வது உனக்கு வெளிப்பாடு இல்லை எங்கிறீர்களா?
இந்த மாதிரி நம்ப வைப்பது பொய்யா பொய் இல்லையா? பதில் தேவை
sundar wrote //நம் ஆண்டவராகிய இயேசுவும் உள்ளதை உள்ளது என்று பேசவே போதித்துள்ளார்: //
இதற்கு என்ன அர்த்தம்?
-- Edited by isrel on Wednesday 12th of March 2014 12:49:08 PM
ஆக, நேசன் என்கிற fack ID யை தாங்கள் கொண்டிருப்பது இந்திய சட்டப்படி (CYBER CRIME ACT- 2000) தவறு தான்!! மனுஷ சட்டமே உங்களை இவ்வாறாக தீர்க்குமேயென்றால் நியாயதீர்ப்பை கற்பனை செய்துபாருங்கள்!!
-- Edited by JOHN12 on Tuesday 11th of March 2014 07:42:31 PM
ஐயா ஜான்12 அவர்களே எப்படியாவது என்னை குற்றவாளியாக தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டீர்கள் நல்லது கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.
ஆகினும் கர்த்தர் என்னை கரம்பிடித்தபோது என்னோடு சொன்ன வசனம் ஒன்றை இங்கு பதிவிட விரும்புகிறேன்.
ஏசாயா 8:12இந்த ஜனங்கள் கட்டுப்பாடு என்று சொல்லுகிறதையெல்லாம் நீங்கள் கட்டுப்பாடு என்று சொல்லாமலும், அவர்கள் பயப்படுகிற பயத்தின்படி நீங்கள் பயப்படாமலும், கலங்காமலும்,13.சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம்பண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும் அவரே உங்கள் அச்சமுமாயிருப்பார்.
என்னை அழைத்த தேவன், உணர்த்துதல் மூலமும் வசனம் மூலமும் அவர் கட்டளைகளை பின்பற்றி நடக்க சொல்லி திடமாக எச்சரித்தார் அவரே என்னுடைய பயமும் அச்சமும் என்பதால்தான் அவருக்கு பயந்து அவரின் கற்பனைகளை கைகொள்ள முயர்ச்சிக்கிரேனேயன்றி யாருடைய நற்ப்பெயரும் எனக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக அல்ல. மனுஷ நர்ப்பெயர் எவனுக்கு வேண்டும்?
மேலும் "நேசன்" என்ற பெயரில் இந்த தளத்தில் எழுதியதற்கு முக்கிய காரணம் உண்டு. நான் வேறொரு பொதுவான தளத்தில் அனேக ஆன்மீக பதிவுகளை "இறைநேசன்" என்ற புனை பெயரில் எழுதினேன். அங்கு கிறிஸ்த்துவை பற்றி நேரடியாக பிரசங்கிக்க முடியாததால், அந்த தளத்தில் எனக்கு மிகவும் பிடித்த (இரட்சிப்புக்கு ஏதுவான) சில ஆன்மீக நன்பர்களை நமது தளத்துக்கு கொண்டு வந்து சரியான உண்மையை புரியவைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த தளத்தையும் ஆரம்பித்தேன், "இறைநேசன்" என்ற பெயரை இங்கும் தொடர்ந்தேன் (அவர்களுக்கு "சுந்தர்" பற்றி தெரியாது)
அதே நேரத்தில் என் உண்மை பெயருடனும் கிறிஸ்த்துவை பற்றி நேரடியாக எழுதி அவர்களுடைய வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும் என்ற நோக்கமே என்னுடையது. பல நண்பர்கள் என்னை நேரில் வந்து சந்தித்தும் சென்றுள்ளர்கள். நல்ல நோக்கில் என்னிடம் கேட்ட எவரிடமும் இறைநேசனு ம் நானும் ஓன்று என்ற உண்மையை மறைக்கவில்லை.
என் நோக்கத்தில் எந்த களங்கமும் இல்லை அதை தேவன் அறிவார். தங்களை போல மனுஷர்களுக்கு அதில் தவறு தெரியலாம் அதை பற்றி எனக்கு கவலையில்லை. நம் நோக்கம் சரியாக இருந்தால் எல்லாமே சரியாகவே நடக்கும்.
தீய நோக்கமே பாவம்! இங்கு எந்த தீய நோக்கமும் இல்லை.
I கொரிந்தியர் 9:22 ; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.
மேலும் நான் இந்த தளத்தை ஆரம்பித்ததன் நோக்கமே கிறிஸ்த்தவர் களோடு விவாதிப்பது அல்ல. அவர்களோடு விவாதிப்பதற்கு எனக்கு ஒன்றும் இல்லை. ஏற்கெனவே இரட்சிப்பை பெற்ற அவர்களுக்கு பிரசங்கிக்க பல பாஸ்டர்கள் உண்டு. அத்தோடு பல பிரிவு கிறிஸ்த்தவர்களுக்கிடையே ஒற்றுமை இல்லை என்பதும் ஒருவரை தாக்கி ஒருவர் பதிவிடுவதும் அடுத்தவர் மேல் ஏதாவது குற்றம் கண்டுபிடிப்பதுமே அவர்களின் வேலை என்பதும் நான் சொல்லும் எதையும் அவர்கள் கேட்கபோவது இல்லை என்பதும் எனக்கு நன்றாகவே தெரியும். எனவே பிற மத அன்பர்களை பொதுவான கருத்துக்களால் கவர்ந்து அவர்களுக்கு இயேசுவின் பலி/ இரட்சிப்பு பற்றிய உண்மையை அறிவிக்க வேண்டும் என்பதே எனது பதிவின் முக்கிய நோக்கமாக இருந்தது.
அனால் தேவனின் சித்தமோ என்னவோ தெரியவில்லை நான் நினைத்தது ஓன்று இங்கு நடப்பது ஒன்றாக இருக்கிறது.
என்னை அனுதினம் நடத்தும் கர்த்தருக்கு முன்னால் நான் குற்றவாளியா என்பதை அவரே தீர்மானிக்கட்டும்.
JOHN12 wrote:
///தல சகோதரர்களே,
இந்த திரியில்., முதல் பதிவை பாருங்கள்!! என்ன கொடுமை !? ஒருவர் பதிவை சகோ.சுந்தர் எடிட் செய்துள்ளார்!? எப்படி சாத்தியம்.
இதற்கு அர்த்தம் என்ன?! அடுத்தவர் பதிவை இவர் எப்படி இரு நாள் கழித்து திருத்தினார்!!///
இப்பொழுதும் மாடரேட்டர் உரிமையுள்ள நான் சகோ.isrel அவர்களின் பதிவு தலைப்பு நீண்டதாக இருந்ததால் அதன் பொருள் மாராதவாறு அதில் சிறிய மாறுதல் செய்தேன். அவரே அதைப்பற்றி ஒன்றும் சொல்லாத போது அதையெல்லாம் குற்றம் குறை என்று கண்டுபிடிக்க தீவிரித்தபின்னர் நாம் ஆண்டவருக்காக ஆக்கபூர்வமாக எதையும் செய்யமுடியாது என்று கருதுகிறேன். தங்கள் பதிவு இங்கு தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். காரணம் குறை கண்டுபிடிக்க ஆரம்பித்தால் எல்லாமே குறையாகத்தான் தெரியும். அதற்க்கெல்லாம் பதில் சொல்லி நான் சரியானவன் என்று யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
மிக்க நன்றி சகோதரரே!
நான் தேவ சித்தப்படிதான் இதை எல்லாம் எழுதினேன் என்ற உண்மையை ஓர்நாளில் நீங்கள் நிச்சயம் அறிவீர்கள்.
கர்த்தர் தங்களை அவர் சித்தப்படி நடத்துவாராக!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
பிறர் கேட்கவேண்டிய கேள்விகளை நானே கேட்டு நானே பதில் சொல்வதில் என்ன தவறு?
இயேசுவே சில இடங்களில் கேள்விகளை கேட்டு பதிலும் சொல்லியிருக்கிறாரே!
isrel wrote:
///பொய் என்றால் என்ன? உண்மைத் தன்மையை மறைப்பது தானே ///
உண்மையை மறைத்த பல சம்பவங்கள் வேதத்தில் உள்ளது. உதாரணமாக வேவு பார்க்க வந்த இஸ்ரவேலரை மறைத்துவைத்த ரேகாப் என்ற வேசி. மற்றும் சிதேக்கியாவை சந்தித்த எரேமியா பிரபுக்களிடம் மாற்றி சொன்னது போன்றவைகள். அது தவறாக தீர்மாநிக்கபடவில்லை சகோதரரே.
தேவன் அருளிய வேதத்திலேயே இன்னும் அனேக உண்மைகள் மறை பொருளாக இருக்கிறது என்றும் அவை கர்த்தருக்கே உரியவை என்றும் வேதம் சொல்லவில்லையா?
எனவே உண்மையை சிலருக்கு சொல்லாமல் மறைப்பதில் எந்த தவறும் இல்லை
isrel wrote:
///" நீங்களும் நேசனும் ஒன்றுதானே என்று ஒருவர் சொன்னபோது நீங்கள் என்ன எழுதியிருந்தீர் இல்லை நேசன் அலுவலகம் வந்தபிறகு இந்த பதிவிற்கு பதில் தருவார் என்று சொல்லவில்லையா?///
தாங்கள் சுட்டும் திரி கீழேயுள்ளது அதில் தாங்கள் குறிப்பிடும் "இல்லை" என்ற வார்த்தை எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள்.
////வேண்டுமானால் கேள்வியும் நானே , பதிலும் நானே என்பது போல நேசன் அவர்கள் பதில் கொடுக்கலாம்///
இப்பொழுது "இறைநேசனும் நானும் ஒண்ணுதானா" என்ற உண்மை தங்களுக்கு தெரியவேண்டும் அவ்வளவுதானே? அலுவலகம் போகும் போது அவரே அதற்க்கு விரைவில் பதில் தருவார். கொஞ்சம் அவரசப்படாமல் காத்திருங்கள்
"இல்லை" என்ற வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை அதை ஏன் இடையில் செருகியுள்ளீர்கள்?
நான் பொதுவாக இரண்டு இடங்களில் இருந்து பதிவுகளை தருவது வழக்கம். இந்த பதிவை நான் எழுதும்போது வேறுஒரு இடத்தில் இருந்தேன். எனது அலுவலகம் போகும்போது பதிலை தரும் எண்ணத்தில் இவ்வாறு எழுதினேன்.
மேலும் கேள்வியை கேட்ட ஜான் அவர்கள் நேரடியாக கேட்டிருந்தால் ஓன்று "ஆம்" அல்லது இல்லை என்று சொல்ல வேண்டிய அவசியம் வந்திருக்கும். அனால் அவரும் நேரடியாக கேட்கவில்லை நானும் நேரடியாக மறுக்கவில்லை.
isrel wrote:
//நான் ஏன் இதை கேட்டேன் என்றால் நான் அந்த வார்த்தைகளை உண்மை என்று நம்பிவிட்டேன் அதை இப்ப நினைத்து வருந்துகிறேன்///
உங்களை ஏமாற்றி நான் ஏதாவது பாவம் செய்ய வைத்துவிட்டேனா? நேசன் வேறு சுந்தர் வேறு என்று எண்ணிய நீங்கள் அவரால் எதாவது வழி தவறி விட்டீர்களா? அப்படிஎன்றால் நான் தங்களிடமும் தேவனிடமும் மன்னிப்பு கேட்கவேண்டியது மிக மிக அவசியம்.
அப்படி நடக்காதவரை நீங்களோ நானோ வருந்த வேண்டிய அவசியமே இல்லை.
தேவனுக்கோ மனுஷனுக்கோ விரோதமாக பாவம் செய்தால் மட்டுமே வருந்தவேண்டியது அவசியம்.
isrel wrote:
///இப்படி ஏமாற்றம் செய்வது முறையா? இல்லை நீ ஏமாந்தா அதுக்கு நான் என்ன செய்வது உனக்கு வெளிப்பாடு இல்லை எங்கிறீர்களா?///
உங்களை ஏமாற்றுவது எனது நோக்கமல்ல. எனது பதிலை சற்று கூர்ந்து கவனித்தாலே நான் நேரடியாக பதில் சொல்ல விரும்பாமல் விலகுகிறேன் என்று அறிந்துகொள்ள முடியும். அறிந்து கொண்டவர்கள் தனி மடலில் கேட்டு தெரிந்துகொண்டார்கள். உங்களால் அறிய முடியவில்லை அவ்வளவே.
isrel wrote:
///இந்த மாதிரி நம்ப வைப்பது பொய்யா பொய் இல்லையா? பதில் தேவை///
ஆண்டவராகிய இயேசுவை பற்றி ஜனங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நம்பினார்கள் (இன்றும் நம்புகிறார்கள்)
மாற்கு 8:28. சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்
இதில் எதுவுமே உண்மை இல்லை என்பது உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும் அவருக்கும் தெரியும். அவர்களாக இப்படி ஒரு காரியத்தை நம்பினால் அதற்க்கு அவர் பொறுப்பாக முடியாது. அது பொய்யும் ஆகாது!
isrel wrote: sundar wrote //நம் ஆண்டவராகிய இயேசுவும் உள்ளதை உள்ளது என்று பேசவே போதித்துள்ளார்: //
இதற்கு என்ன அர்த்தம்?///
இங்கு எங்கும் " உள்ளத்துக்கு" "இல்லை" என்றும் இல்லாதுக்கு "உள்ளது" என்றும் பதில் சொல்லப்படவில்லையே சகோதரரே!
என்பது போன்ற பதில்களை சொல்ல முடிந்தாலும், நான் எதோ ஒரு நோக்கத்தில் செய்ய ஆரம்பித்த காரியம் தங்களை ஏமாற்றியிருக்குமானால் அதற்காக வருந்துகிறேன். இனி அதுபோல் நிகழாமல் இருக்க கர்த்தருக்குள் பிரயாசம் எடுக்கிறேன்.
கர்த்தர் தாமே இனி எவரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எமாற்றாதவாறு நம்மை நடத்துவாராக.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)