அன்பான சகோதரர் ஜான் அவர்களே நாம் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி திட்டி விவாதம் பண்ணிக்கொண்டு இருப்பதில் பயனேதும் இல்லை. அதற்க்காக் இந்த தளத்தில் நான் நடத்தவும் இல்லை.
சாத்தான் எட்ட நின்று நம்மை வேடிக்கை பார்க்கவே இது ஏதுவாகும்.
இந்த தளத்தில் பதிவிட்ட பல திரித்து சகோதரர்கள் ஓரிரு பதிவிலேயே டென்சன் ஆகி என்னை திட்ட ஆரம்பித்துவிடும் நிலையில் தாங்கள் இவ்வளவுநாள் என்னோடு இணைத்து பதிவுகளை தந்ததற்காக என் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்
எனக்கு யாருடனும் எதிர்த்து நிற்கும் பிடிவாத குணம் எதுவும் கிடையாது. நீங்கள் தான் இங்கு வந்து என்னை எதிர்த்து விவாதம் பண்ணுகிறீர்கள் என்பது தங்களுக்கே தெரியும். நான் யாரிடமும் பெரிதாக எதிர்த்து நிர்ப்பது இல்லை. பிடிக்கவில்லை என்றால் விலகிவிடுவேன். என்னை பிடித்து நாலு அடி அடித்தாலும் தான்கிகொள்வேன் அனால் பிற மத சகோதரர்கள் பார்த்து அகாட்டியம் பேசும் அளவுக்கு பதிவிட விரும்புவது இல்லை.
என்னுடைய கருத்துக்கும் திரித்துவ கருத்துக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்பது எனக்கு தெரியும், ஒரு நூலிலையில் இருப்பதுதான்.
அதாவது தாங்கள் சொல்கிறீர்கள்:
ஒரேதேவன் மூன்று ஆத்துவம் அம்மூவரும் சமம் என்கிறீர்கள்.
நான் சொல்கிறேன்: ஒரே தேவன் பாவத்தில் வீழ்ந்த மனுஷனை மீட்பதற்கு மூன்று ஆளத்துவமாக செயல்பட்டார் ஆனால் அவருக்கு முன்று ஆள்தத்துவம் மட்டும்தான் உண்டு என்று அறுதியிட்டு சொல்ல முடியாது என்கிறேன்.(இந்த கருத்தில் தேவன் சர்வத்திலும் பெரியவர் என்ற கருத்தும் உட்கருத்தாக உள்ளது)
இந்நிலையில் இருக்கும் மூன்றே மூன்று கேள்விகளுக்கு தாங்கள் சரியான பதிலை தந்துவிட்டால் என்னுடைய கருத்துக்களை நான் மறு பரிசீலனை செய்யவும், அது சரி என்று நம்பும் பட்சத்தில் எல்லாவற்றையும் மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறேன்.
தேவன் எனக்கு தெரிவித்தார் என்பதால் இப்பொழுதும் நான் மிகவும் கஷ்டபட்டு தேவனின் 10 கற்பனைகள் மற்றும் இயேசுவின் கற்பனைகளை கைகொண்டு நடக்க கடந்து 22 வருடமாக முயற்சித்து வருகிறேன். ஏன் இதை எல்லாம் தேவை இல்லாமல் கஷ்டபட்டு செய்யவேண்டும்? தங்கள் போன்றவர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டும்? எனவே எனக்கும் இலகுவாகதனே இருக்கும். எனவே தங்கள் பதில் எனக்கு சரி என்று புரிதுவிட்டால் எல்லாவற்றையுமே விட்டு விடுகிறேன்.
எனவே என்னுடைய கேள்விகளுக்கு தயவு செய்து பதில் தாருங்கள். நாம் ஆக்கபூர்வமாக எதியாவது செய்யலாம். எல்லா கேள்வியுமே சாதாரண எல்லோருக்கும் தெரிந்த கேள்விகள்தான். தாங்கள் சொல்லும் பதில்களை சுருக்கமாக சொல்லுங்கள். வசன ஆதாரம் தந்தாலும் சரி அல்லது ஜெனெரலாக சொன்னாலும் சரி. பதில் ஏற்புடையதாக இருக்க வேண்டும். எந்த வசனமும் தேவையில்லாமல் எழுதபட்டது அல்ல என்பதை நான் உறுதியாக நம்புகிறேன் எனவே என்னுடைய எதிர் கேள்விகளுக்கு நான் சொல்லும் வசன ஆதாரங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்
என்னை திருத்த வேண்டும் என்று வாஞ்சையுள்ள தாங்கள் ஒத்துழைப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.
நன்றி
அன்புடன்
சுந்தர்
-- Edited by SUNDAR on Thursday 6th of March 2014 09:19:19 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
//என்னை திருத்த வேண்டும் என்று வாஞ்சையுள்ள தாங்கள் ஒத்துழைப்பீர்கள் என்று எண்ணுகிறேன்//
விவாதத்தில் விருப்பமுள்ளவானாக தாங்கள் என்னை கருதவேண்டாம் சகோதரா.
உங்களை திருத்தவேண்டும் என வாஞ்சை கொள்ளவில்லை. ஏனென்றால் அது தேவையற்றது !! ஆனால் நீங்கள் திருந்த வேண்டும் என்றே விரும்புகிறேன்!!
/சாத்தான் எட்ட நின்று நம்மை வேடிக்கை பார்க்கவே இது ஏதுவாகும்.//
FACK ID யின் காரியம் பிசாசினால் எனக்கு வெளிபடுதபட்டது என்றீர்கள். இப்போது பிசாசு நம்மை எப்படி வேடிக்கை பார்பான் என்று தாங்கள் நினைகிறீர்கள் என்று புரியவில்லை.
ஒருவேலை நிதானமிழந்து தாங்கள் அவ்வாறு பேசி இருக்க வாய்ப்புண்டு!! பரவாயில்லை!!
FACK-id யின் காரியத்தை தேவன் எனக்கு அடையாளமாய் சொன்னபோது அதை குறித்து வெறுப்பே ஏற்பட்டது?! பரிசுத்தத்தை பேசும் சகோ.சுந்தரா இப்படி என்று ! அதை பதியும்போது ஏறத்தாழ 12 முறை தடை ஏற்பட்டது?! தடை தேவனாலா ? பிசாசினாலே? என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.. நீங்கள் திருந்தவேண்டும் என்பதற்காகவே இந்த காரியத்தை தங்கள் முன் வைக்கிறேன்..
உங்களின் கேள்விகளை முன்னிட்டு எழும் விவாதத்திற்கு முன்னாக இந்த காரியம் (FACK id )சரிசெயயபடவேண்டும். நேசன் என்கிற நாமதில் தாங்கள் பதிவுகளை தொடர்ந்து சுந்தர் என்ற id ஐ விடவேண்டும் .
இதை தொடர்ந்தே நான் தங்களுக்கு பதிலளிக்கவும், விவாதங்களில் பங்கேற்கவும் முடியும் .அப்போது மட்டுமே நமதுபதிவுகள் தேவ சமூகத்தில் சரிபார்க்கப்பட்டு ஒரே பாதையில் நாம் பயணிக்க இயலும் !!!