இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இத்தளத்தில் பதிவுகளை முடிக்கிறேன்!!வணக்கம் சகோதரர்களே!!


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
இத்தளத்தில் பதிவுகளை முடிக்கிறேன்!!வணக்கம் சகோதரர்களே!!
Permalink  
 


அன்பு சகோ.சுந்தர் அவர்களே,

சுந்தர் என்கிற பெயரை SR.MEMBER எனக் கொண்டு எவ்வாறு moderater இன் பணியை தாங்கள் செய்ய இயலும். ஆகவே தான் நேசன் என்கிற பெயரில் பதியுங்கள் என்றேன். அதையும் சரியாய் புரிந்து கொள்ளாமல் முடிவெடுத்து குழப்புவது தங்களுக்கு புதிதல்ல என்பது இங்கு அறிந்ததே!!

சகோ.சுந்தர்//தங்கள் பதிவு இங்கு தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.//

'நேசன்' என்கிற பெயரில் ஓட்டெடுப்பு நடத்தி கள்ள ஓட்டுகளை பதிந்து எதிர்த்த எத்துனை பேரை (chilsam உட்பட )எத்துனை பேரை  வெளியேற்றினீர்கள். நான் உங்களை பகைக்க முகாந்திரம் இருக்ககூடும். ஆனால் தங்கள் தவறுகளை சுட்டி காட்டியதன் நிமித்தம் பகைக்கபட நான் விரும்பவில்லை!! 

மேலும் ., தாங்கள் விரும்பினாலும் .,தவறுகள் திருதபடாமல் தங்களோடு என்னால் சமாதனாமாய் போகமுடியாது. சில பதிவுகளை/பதில் பதிவுகளை தர நினைத்தேன். இனி அந்த காரியமும் எனக்கு தூரமாவதாக. 

இந்த முடிவை நான் எடுப்பதில் அர்த்தம் உள்ளது!!  எனக்கு தேவ சமூகத்தில் அத்தகைய சுந்தந்திரம் இருக்கிறது!!

ஆம் இனி 'இங்கு' பதிவுகளை தரும் காரியம் எனக்கு அருவருப்பாகவே இருக்கும்!! எவரையும் எதிர்கும்படிக்கு 'இங்கு' நான் வரவில்லை!! 

'இங்கு' இனி பதிவுகளை தருவதற்க்கு பதிலாக கழிவறையில் கர்த்தரை துதிக்கலாம் என எண்ணுகிறேன்.

கர்த்தரின் சித்தம் என்னை இங்கிருந்து போராட இப்போது ஏவவில்லை என உணர முடிகிறது!!

இருப்பினும் சகோ.சுந்தர் அவர்களே தங்களுடன் எந்த கசப்பும் இல்லாமல் வெளியேற முடியும் என எண்ணினேன்.. ஆகட்டும். தொடக்கத்திலிருந்தே, தலத்தில் ஒரு ஜனநாயக போர்வையில் ஒரு சர்வாதிகாரமும் இருக்கத்தானே செய்தது!!   

கலப்புள்ள பிரசங்கம்  செய்பவர்களுக்கு தேவ கோபத்தின் கலப்பில்லாத மதுவே கொடுக்கபடுகிறதல்லவா!!

சுந்தர் அவர்களே!!! தங்களின் மீது தேவனுடைய முகம் நன்மைக்கேதுவாக  பிரகாசிப்பதாக!!

எனது பதிவுகளை நிறுத்துகிறேன். இனி என்னையும் எனது பதிவுகளையும் பற்றிய விமர்சனங்களுக்கு பதில அளிக்க இனி தேவனை தவிர ஆள் இல்லாத படியினால் நாகரீகம் கருதி அப்படியே விட்டுவிடவும்.

தேவ அனுமதியுடன் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை வேறேப்படியேனும் கர்த்தருக்குள் அறிய தருகிறேன்!!

மிக்க நன்றி !!

அன்பு நண்பர்களுக்கும் .,கிறிஸ்துவுக்குள் ஒத்துழைத்த அனைவருக்கும் கிறிஸ்துவுக்குள் நன்றி!!!

மகிழ்ச்சியுடனே விடைபெறுகிறேன்!!

 

தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாகுக!!! smilesmilesmile



-- Edited by JOHN12 on Wednesday 12th of March 2014 07:56:04 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
RE: இத்தளத்தில் பதிவுகளை முடிக்கிறேன்!!வணக்கம் சகோதரர்களே!!
Permalink  
 


JOHN12 wrote:

அன்பு சகோ.சுந்தர் அவர்களே,

சுந்தர் என்கிற பெயரை SR.MEMBER எனக் கொண்டு எவ்வாறு moderater இன் பணியை தாங்கள் செய்ய இயலும்.  


-- Edited by JOHN12 on Wednesday 12th of March 2014 07:56:04 PM


ஒரே தளத்தை எத்தனைபேர் வேண்டுமாலும் மாடரேட்  பண்ண முடியும். அந்த தகுதியை மூத்த உறுப்பினருக்கோ  நம்பிக்கை யான உறுப்பினருக்கோ கொடுக்க முடியும். காரணம் ஒரு id மறந்து போனாலோ அல்லது ஒருவர் விடுப்பில் சென்றாலோ  இன்னொன்றை பயன்படுத்தலாம் என்ற நோக்கிலேயே இரு மாடரேட்டர் வைத்துளேன்.  மேலும் இன்னும் ஒரு மாடரேட்டருக்கு கூட அனுமதி கொடுக்க அழைப்பு விடுத்தேன் ஆனால் ஒருவரும் முன்வரவில்லை.

இதில் எந்த தவறும் எனக்கு தெரியவில்லை.
 
JOHN12 wrote:
///ஆகவே தான் நேசன் என்கிற பெயரில் பதியுங்கள் என்றேன். அதையும் சரியாய் புரிந்து கொள்ளாமல் முடிவெடுத்து குழப்புவது தங்களுக்கு புதிதல்ல என்பது இங்கு அறிந்ததே!!/// 
 
"சுந்தர்" என்ற பெயருடைய நான் "நேசன்" என்ற புனை பெயரில் பதிவைதை சில மாதங்களுக்க் முன்னமே நிறுத்திவிட்டேன். இந்நிலையில் மீண்டும் "நேசன்" என்ற புனைபெயரில் பதிவிடுங்கள் என்று சொல்லிவிட்டு, நான் குழப்புவதாக கூறுவது என்ன நியாயம். என்பது புரியவில்லை. உண்மை பெயரில் எழுதுவதுதானே சரி?  
 
 
சகோ.சுந்தர்//தங்கள் பதிவு இங்கு தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.//    
 
கிறிஸ்த்தவர்களோடு வாக்குவாதம் வேண்டாம் என்று முடிவெடுத்த  நான், முன்னமே இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். தங்களுக்கு அதிகமாக இடம்கொடுத்து என்னுடைய பதிவுகளை நிறுத்தி வைத்தது எனது தவறுதான். அதனாலேயே மிருகம்/கழுதை வயது போன்ற தேவையற்ற வார்த்தைகளை வாங்கிகட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. 
 
அதற்காக என் தேவனிடம் மன்னிப்பு கேட்கிறேன். 
 
இனி இதுபோல் திரித்துவத்தை தவறாக புரிந்துகொண்டு போதிக்க வரும்  கலக வீட்டார்  யாரும் வந்தால் துவக்கத்திலே தடைசெய்ய நிச்சயித்துள்ளேன்.   
 
JOHN12 wrote:
///எனது பதிவுகளை நிறுத்துகிறேன். இனி என்னையும் எனது பதிவுகளையும் பற்றிய விமர்சனங்களுக்கு பதில அளிக்க இனி தேவனை தவிர ஆள் இல்லாத படியினால் நாகரீகம் கருதி அப்படியே விட்டுவிடவும்./// 
     
இப்பொழுதும் நான் தங்களின் வேறெந்த காரியத்துக்கும் பதில் தர விரும்பவில்லை. ஆகினும் தோண்டி தோண்டி ஆராய்ந்து அறிந்து இறுதியாக என்மேல் சுமத்தபட்ட குற்றசாட்டுக்கு நாகரீகம் கருதி  பதில் அளிக்க வேண்டியது என்னுடைய கடமை எனவே இந்த பதிவை தருகிறேன்   
 
JOHN12 wrote:
///நேசன்' என்கிற பெயரில் ஓட்டெடுப்பு நடத்தி கள்ள ஓட்டுகளை பதிந்து எதிர்த்த எத்துனை பேரை (chilsam உட்பட )எத்துனை பேரை  வெளியேற்றினீர்கள். நான் உங்களை பகைக்க முகாந்திரம் இருக்ககூடும். ஆனால் தங்கள் தவறுகளை சுட்டி காட்டியதன் நிமித்தம் பகைக்கபட நான் விரும்பவில்லை!!/// 
 
என்னை கடின வார்த்தைகளால் சாபமிட்ட சகோ.சில்சாம் அவர்களின் பயனர் பெயரை தடை செய்ய வாக்கேடுக்கபட்ட  திரியில்கூட 
 
 
நான் ஒரே ஒரு வாக்கை மட்டும்தான் பதிவு செய்தேன் என்பதை கர்த்தருக்குள் நிச்சயித்து தெரிவித்துகொள்கிறேன்.  இதன் மூலம் தாங்கள் கடைசியாக என்மீது சாட்டிய குற்றமும் தவறு என்பதை அறிந்துகொள்ளும்படி அன்புடன் வேண்டுகிறேன்.  
 
யோவான் 15:25 முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதியிருக்கிற வாக்கியம் நிறைவேறும்படிக்கு இப்படியாயிற்று.
 
சத்துருவின் கையில் எவ்விதத்திலும் சிக்க கூடாது அவன் என்னை என் ஒவ்வொரு  செயலையும்  அணுஅணுவாக ஆராய்கிறான் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் எனவே நீதியாய் நடக்க வேண்டும் என்ற தேவனின் கட்டளையின் படி ஒரே வாக்கை மட்டுமே பதிவு செய்தேன். 
 
JOHN12 wrote:
//இருப்பினும் சகோ.சுந்தர் அவர்களே தங்களுடன் எந்த கசப்பும் இல்லாமல் வெளியேற முடியும் என எண்ணினேன்..////
 
தங்கள் முடிவு குறித்து எனக்கு வருத்தமோ அல்லது தங்கள் மீது எனக்கு எந்த கசப்போ இல்லை. எவ்வளவோ சாபமிட்ட சில்சாம் மீதே எனக்கு எந்த கசப்பும் இல்லாதபோது தங்கள் மீது கசப்பு கொள்ள அவசியம் இல்லை.  சமாதானத்தோடு போங்கள் எல்லாம் தேவ சித்தபடி நடக்கும். 
 
தேவனை முகமுகமாக அறிந்ததுபோல் அறிந்துள்ள நான் இன்றுவரை அவருக்கு முன்னாள் நிற்கிறேன் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை
 
தேவனுக்கு சித்தமானால் அவருடைய ராஜ்யத்தில் சந்திப்போம்!    
 
 
அன்புடன் 
சுந்தரராஜ்  
 
   


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard