இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவனாகிய கர்த்தர் மாத்தி யோசித்தாரா?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
தேவனாகிய கர்த்தர் மாத்தி யோசித்தாரா?
Permalink  
 


கடந்த நாளில் facebookல் எனக்கும் சகோ. அற்ப்புதம் அவர்களுக்கு நடந்த சம்பானஷை கீழேயுள்ளது:   
 
 

மாத்தி யோசி

ஒன்றை தவறு என்று நிரூபிப்பதற்காக மணிக்கணக்கில் செலவிட்டு, வெட்டி ஒட்டி வீடியோ எடுப்பதை விட,

எது சரி என மக்கள் அனைவரும் உணரும்படி கருத்தாக எடுக்கும் சின்ன கட்டுரை அல்லது சின்ன விடியோ கிளிப்

பரவலான கவனத்தை விளம்பரமின்றி பெறும்.

 
Like ·  · Share
  •  
    Raj Kumar and 5 others like this.
  •  
    Sundararaj Paulraj அன்பான சகோதரரே தற்செயலாக தங்கள் பதிவை காண நேர்ந்தது. தங்கள் கருத்துக்கு நன்றி. 

    ஏதேன தோட்டத்தில் எத்தனையோ நல்ல விருட்சம் இருந்தது அதற்க்கெல்லாம் பெயர் சொல்லி விளக்கம் கொடுக்காத தேவன்
    "விலக்கபட்ட கனியை" மாத்திரம் தனியாக பெயர் சொல்லி சுட்டிகாட்டி எச்சரிதாரே? 

    17. ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில்
    சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்

    எனவே தவறுகளை /தவறானவைகள சுட்டுவது அவசியம் என்பதை நாம் அறிய வேண்டும்.

    அத்தோடு தேவனின் பத்து கற்பனைகளை சற்று ஆராய்ந்து பாருகள் எட்டு கற்பனைகள் செய்யகூடாதவைகளை
    சுட்டுவதாகவே உள்ளது.

    எனவே செய்யவேண்டியவிகளைவிட செய்ய கூடாததை வெளிச்சம் போட்டு காண்பிப்பது மிக மிக அவசியம்.
    23 hours ago · Like · 1
  •  
    Arputharaj Samuel சகோதரரே, கொஞ்சம் இயேசுகிறிஸ்துவின் போதனையையும் பாருங்கள். அவர் அனைத்து கற்பனைகள்,
    நியாயப் பிரமாணங்கள் மற்றும் தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் அன்புகூறுதல் என்ற ஒரு செயலில் அடங்கி இருக்கிறது
    என்று சொன்னார் அல்லவா! இருட்டை விளக்குவதை விட ஒரு சிறிய தீக்குச்சியை பற்ற வைத்து வெளிச்சம் உண்டாக்கினாலே போதும்.
    இருள் விலகிடும்.
  •  
    Sundararaj Paulraj ////Arputharaj wrote: "சகோதரரே, கொஞ்சம் இயேசுகிறிஸ்துவின் போதனையையும் பாருங்கள். அவர் அனைத்து
    கற்பனைகள், நியாயப் பிரமாணங்கள் மற்றும் தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் அன்புகூறுதல் என்ற ஒரு செயலில் அடங்கி இருக்கிறது
    என்று சொன்னார் அல்லவா!////

    சரியான கருத்துதான் நன்றி 
    அகினும் அன்புகூறுதல் என்பதை சரியாக அறிந்து கொள்ள "அன்பில்லாத நிலை" என்றால் என்னவென்பதை அறிவது அவசியம்.
    இல்லையேல் அன்புகூருகிறேன் என்று சொல்லிக்கொண்டு இன்றைய நிலைபோல் தவறான நிலையிலேயே அநேகர்
    இருக்க வாய்ப்புண்டு. எனவேதான் அன்பில்லாத நிலை பற்றியும் புதிய ஏற்பாடு விளக்கவே செய்கிறது. 

    //Arputharaj wrote
    இருட்டை விளக்குவதை விட ஒரு சிறிய தீக்குச்சியை பற்ற வைத்து வெளிச்சம் உண்டாக்கினாலே போதும். இருள் விலகிடும்."//

    உண்மைதான்! ஆனால் இருட்டு என்று ஓன்று இருக்கிறது அது எப்படி இருக்கும், அதன் தன்மை என்ன என்பதை அறிந்தால் மட்டுமே
    நாம் முன் எச்சரிக்கையாக தீக்குச்சி தீப்பெட்டி என்ற ஆயத்தத்துடன் செல்ல முடியும் என்பதையும் அறிய வேண்டுகிறேன். 

    எனவே இருட்டின் தன்மை பற்றி அறிந்துகொள்வதும் அவசியம்தானே?
    21 hours ago · Like · 1
  •  
    Arputharaj Samuel ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எதைப் பற்றி அதிகமாக பேசினார்? 

    உண்மைதான், ஆனால் .... போன்ற பதங்கள் விசுவாசத்திற்கேற்றவை அல்ல. இருட்டைப் பற்றி இருட்டில் உள்ளவர்களுக்கு
    நீங்கள் எவ்வளவு அதிகமாக பேசினாலும் அது புரியாது. ஆனால் கொஞ்சம் வெளிச்சத்தைக் காண்பியுங்கள். அவர்களே
    அறிந்து புரிந்து கொள்வார்கள்.
     
 
 
இந்த சம்பாஷணையின் அடிப்படையில்: 
 
பழைய ஏற்பாட்டில் செய்யக்கூடாத காரியங்களை அதிகமாக சொல்லி எச்சரித்த கர்த்தராகிய தேவன், 
 
சகோ. அற்ப்புதம் போல் மாற்றி யோசித்து  
 
புதிய ஏற்பாட்டில் கர்த்தராகிய  இயேசுவாக வந்து செய்ய வேண்டியவைகளை அதிகம் போதித்தாரா? 
 
என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. 
 
ஆகினும் கர்த்தர் எதையும் முன் கூட்டியே யோசித்துவிடுவார் மாத்தி யோசிக்க மாட்டார் என்று நான் நம்புவதால், 
இந்த கருத்தை இன்னும் ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது. அதன் விளக்கங்களை இங்கு
தொடர்ந்து பார்க்கலாம் என்று கருதுகிறேன்.
  


-- Edited by SUNDAR on Friday 14th of March 2014 03:34:18 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
Permalink  
 

அதியில் தேவன் ஆதாம் ஏவாளை படைத்தபோது  ஏதேன் தோட்டத்தில்  எல்லாமே நல்லதாகவே இருந்தது.
ஒரே ஒரு தேவையில்லாதது இருந்தது அதுதான்   "நன்மை தீமை அறியும் கனி".எனவே ஆண்டவர் மற்ற
எல்லா கனியையும் சாப்பிடலாம் என்று ஒட்டு மொத்தமாக குறிப்பிட்டுவிட்டு, தீமையான கனியை மட்டும்
பெயர் சொல்லி சுட்டி அதை சாப்பிட வேண்டாம் என்று எச்சரித்தார்.
   
மனிதன் நன்மை தீமை கனியை புசித்த பின்னர் அவர் நன்மை எது தீமை எது என்பதை அறியவேண்டிய கட்டாய நிலை
உண்டானது. எனவே தேவனாகிய கர்த்தர் நியாய பிரமாணத்தை சொல்லி கொடுத்து நன்மை எது தீமை எதுவென்று வரையறுத்தார். 
 
ஒரு மனுஷன் செய்யவேண்டிய காரியத்தை செய்யாததைவிட செய்யக்கூடாத காரியங்களை செய்வதே
அதிக துன்பத்துக்குள் கொண்டுவரும் எனபதை ஏதேன தோட்டத்தில் ஆதாம் ஏவாள் செய்கை மூலம் அறியமுடியும்.
 
இதை அறிந்த தேவன் மனுஷர்களை துன்பத்தில் இருந்து விடுவிக்கும் பொருட்டு செய்கூடாத காரியங்களை மிக திட்டமாக
வரையறுத்து சொன்னார். எனவேதான் 10 கற்பனைகளில் 8 கற்பனைகள் செய்யக்கூடாதவைகளை சொல்லி எச்சரித்தார்.
 
தேவனின் கற்பனைகளை மீருவதையே மனுஷன் ஆதியில் இருந்து தன் முக்கிய வேலையாக கொண்டு செயல்படுவதை
நாம் பழைய ஏற்பாடு முழுவதும் பார்க்க முடியும். 
 
ஒய்வு நாளில் மன்னாவை சேர்க்க புறப்பட வேண்டாம் என்று கர்த்தர் சொன்னாலும் அங்கும் சிலர் புறப்பட்டு சென்று
அவர் வார்த்தையை மீறினர். அந்நிய தேவர்களை வணங்க வேண்டாம் என்று எத்தனை முறை சொன்னாலும் மீண்டும்
மீண்டும் இஸ்ரவேலர்கள்  அந்நிய தேவர்களை வணங்க சென்றுள்ளதை நாம் பார்க்கலாம்.
 
அதுபோல தேவனின் கற்பனைகளையும் அவர்கள் கைகொள்ளாமல் முற்றிலும் விலகி அவமாக்கிபோட்டார்கள் .
 
எரேமியா 31:32  என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர்  சொல்லுகிறார்.
 
 மத்தேயு 15:6 உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்.
 
இறுதியில் மனுஷன் முற்றிலும் தீமையிலேயே ஊறிப்போய் அநியாயத்தை தண்ணீர்போல குடிக்க ஆரம்பித்த பிறகு
அவனுக்கு நன்மை என்ன வென்பதே தெரியாமல் போனது 
 
சங்கீதம் 14:3 எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
 
என்ற நிலை உருவானது.
 
இந்த நிலையில் பூமிக்கு வந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து மலை பிரசங்கத்தில் ஒரு மனுஷன் எப்படி இருக்க வேண்டும்
என்பதை போதிக்க வேண்டிய அவசிய நிலை ஏற்ப்பட்டது. 
 
அண்ணன் தம்பிக்குள் சண்டை/ சகோதர சகோதரிக்குள் சண்டை / பெற்றோர் பிள்ளைகளுக்குள் சண்டை/
சொந்த பந்தங்களுக்குள் சண்டை/ உள்ளே சண்டை வெளியே சண்டை அத்தோடு வஞ்சனையும் கேடும்
பொறாமையும் கபடும் நிறைந்துள்ள திருகுள்ள  இருதயத்தை சுத்திகரித்து முதலில் மனுஷன் மனுஷனாக
இருதயத்தில் சுத்தமுள்ளவனாக இருக்க வேண்டும் என்பதை போதிக்க வேண்டியதாயிற்று.
   
சுருக்கமாக சொன்னால்:
 
ஏதேன தோட்டத்தில் மனுஷன் நேராக நின்றான்  ஒரே ஒரு தீமை இருந்தது. எனவே  அதுதான் தீமை என்று சுட்டி காட்ட முடிந்தது. 
 
ஆனால் இன்றோ மனுஷன் வௌவால் போல் தலைகீழாக நிற்கிறான் எல்லாமே அவனுக்கு தலைகீழாக தெரிகிறது
எனவே நன்மை எதுவென்று சுட்ட வேண்டிய அவசியம் தேவனுக்கு வந்தது.
 
எனவேதான்  பழைய ஏற்பாட்டில் செய்யகூடாததை அதிகம் போதித்த, தேவன் புதிய ஏற்பாட்டில் செய்ய  வேண்டியதை
அதிகம் போதித்தார் என்றே நான் கருதுகிறேன்.
 


-- Edited by SUNDAR on Monday 17th of March 2014 08:38:19 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard