நான் திட்டவாட்டமாக அறிந்துகொண்டது "மனுஷன்" அவன் படும் கஷ்டங்களுக்கு அவனேதான் பொருப்பெயன்றி வேறு எவரும் இல்லை. அறிந்தோ /அறியாமையினாலோ நாம் செய்யும் பாவங்களே நமக்கு தண்டனையை கொண்டு வருகிறது
உத்தமனுக்கு கர்த்தர் என்றும் துணையாக இருக்கிறார். யோபுவுக்கு பிறகு, அதாவது யோபுவிடம் சாத்தான் தோற்றபிறகு வேறு யாரையும் அவர் சத்துருவுவின் கரத்தில் வேதனைக்கு விட்டுவிட இல்லை.
ஆண்டவராகிய இயேசு ஒருவர் மட்டுமே மற்றவர் பாவங்களை தன்மேல் சுமந்து துன்பம் அனுபவித்தார்.
அதேபோல் இயேசுவின் சுவ்ஷேஷத்திநிமித்தம் சிலர் துன்பங்கள் பாடுகள் அனுபவித்தாலும் அவர்களுக்கு தேவ சமாதானமும் மறுமையில் அதற்க்கான பலனும் அதிகமாக இருக்கும்.
மற்ற மனுஷர்கள் அனைவருமே அவரவர் செய்கைகளுக்கான பலனையே அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
புலம்பல் 3:39உயிருள்ள மனுஷன் முறையிடுவானேன்? அவன் தன் பாவத்துக்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?
அவரவர் தேவனின் வார்த்தைகளின் அடிப்படையில் தன்னை தானே உய்த்து ஆராய்ந்து சோதித்து கர்த்தரிடம் திரும்பினால் நிச்சயம் சகலத்தையும் நன்மையாக மாற்ற தேவனால் முடியும்.
நம்முடைய மீறுதலே நமது துன்பங்களுக்கும் வேதனைகளுக்கும் காரணம் என்பதை நிரூபிக்கும் இன்னொரூ சாட்சி இதோ.
நாங்கள் தற்சமயம் குடியிருக்கும் வீட்டில் கழிவு நீர் செல்லும் வழியில் எதோ கோளாறு ஏற்ப்பட்டு சுமார் ஒரு மாதமாக வீட்டை சுற்றி கழிவு நீர் தேங்க ஆரம்பித்தது. அதானால் எப்பொழுதும் வீட்டினுள் துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. எங்கள் கட்டிடத்தை கட்டிகொண்டுத்த பில்டரிடம் எத்தனையோ முறை சொல்லி பார்த்தும் எங்களை அவர்கள் கவனிக்கவேயில்லை. பின்னர் ஒருமுறை அரைநாள் லீவு எடுத்து அவர்கள் அலுவலகம் போய் சொன்னபோது செவ்வாய் கிழமைக்குள் எல்லாம் கண்டிப்பாக சரிசெய்து விடுவோம் என்று வாக்கு கொடுத்தார்கள் ஆனால் அடுத்து இரண்டு செவ்வாய்கள் கடந்தும் யாரும் வந்து எட்டிகூட பார்க்கவில்லை
யாரையும் சத்தம்போட்டு திட்டுவது எனக்கு பழக்கமல்லாத காரணத்தால் எவ்வளவோ தாழ்மையாக விண்ணப்பம் பண்ணியும் எங்களை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை.
இந்நிலையில் வீட்டுக்குள் வரும் துர்நாற்றம் தாங்க முடியாமல் ஒருநாள் வெறுப்பாகி, ஆண்டவரே இப்படிபட்டவர்களை திட்டாமல் என்ன செய்வது. உம்மிடம் எத்தனயோ முறை சொல்லிவிட்டேன் நீங்களும் கேட்பது இல்லை அந்த பில்டரும் கேட்பதில்லை நான் என்ன செய்ய? என்று ஆண்டவரை நோக்கி புலம்பினேன்.
அப்பொழுது "அந்த பில்டருக்கு தெரியாமல் எடுக்கபட்ட பொருள் ஓன்று உன் வீட்டில் இருக்கிறது அந்த பொருள் இருக்கும் வரை உங்களுக்கு வேதனை உண்டு" என்று என் மனதில் உணர்த்தபட்டது.
என் மனைவியை கூப்பிட்டு என்ன பொருள் என்று விசாரித்த போது சுமார் நான்கு அடி நீளமுள்ள ஒரு அழகான கிரனைட் கல் ஒன்றை எடுத்து அதை வீட்டுக்குள் மறைத்து வைத்திருப்பதை அறிந்தேன்.
அவளை திட்டி அந்த கல்லை தூக்கி வெளியில் போடு என்று சொன்னேன். இதில் என்ன தவறு இருக்கிறது நான் அவர்களிடம் சொல்லிவிடுவேன் என்று சொன்னவள் இரண்டு நாள் ஆகியும் சொல்லவும் இல்லை கல்லை வெளியில் போடவுமில்லை. பின்னர் நானே அந்த கல்லை எடுத்து வெளியில் கொண்டு வைத்துவிட்டேன்
அடுத்த நாளே மிகப்பெரிய ஆச்சர்யமாக நான் அலுவலகம் சென்று வீடு திரும்பியபோது கழிவு நீர் சுத்தம் செய்யப்பட்டு காய்ந்திருந்தது.
நமக்கு வரும் எந்த வேதனைக்கும் துன்பத்துக்கும் வேரு யாரும் காரணம் அல்ல, "நாமேதான் காரணம்" என்ற உண்மை மீண்டும் அங்கு உணர்த்தபட்டது.
அன்று யோசுவாவோடு வந்த இஸ்ரவேலரை கலங்கடித்த ஆகானின் ஞாபகம்தான் எனக்கு இங்கு வந்தது.
யோசுவா 7:21கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும் நான் கண்டு, அவைகளை இச்சித்துஎடுத்துக்கொண்டேன்; இதோ, அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைத்திருக்கிறது, வெள்ளி அதின் அடியிலிருக்கிறது என்றான்.
அவன் செய்த ஆகாத காரியத்தால் பாதிக்கபட்டது அவன் மட்டுமல்ல மொத்த இஸ்ரவேலருமே பாதிக்கபட்டார்களே!
அதுபோல் உங்களை சேர்ந்தவர்கள் உங்கள் மனைவி, பிள்ளைகள் செய்யும் ஆகாத செயலால் அந்த குடும்பத்தை சேர்ந்த எல்லோருமே பாதிக்கப்படலாம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)