ஒரு சமயம் நாங்கள் சைதாபேட்டை யில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தபோது நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு அடுத்த இடத்தில் அரை கிரவுண்டு இடம் (plot) நீண்ட நாட்கள் காலியாக கிடந்தது. அந்த இடத்து ஓணரும் நல்ல விலை கிடைத்தால் அதை விற்றுவிடும் நிலையில் இருந்தார்.
என் மனைவிக்கு அந்த இடத்தை வாங்க வேண்டும் என்ற ஆசை மனதில் இருந்ததோ என்னவோ தெரியவில்லை. ஒருநாள் என்னிடம் "பக்கத்தில் காலியாக கிடக்கும் இடம் நமக்குதான்" என்று ஆண்டவர் என்னிடம் சொல்லிவிடார்" என்று அதிகமான மகிழ்ச்சியில் தெரிவித்தாள்.
என்னிடம் எந்த பணமும் இல்லாத அந்த நேரத்தில் அந்த இடத்தை வாங்க லட்ச கணக்கில் பணம் வர வாய்ப்பே இல்லை. ஆகினும் கர்த்தர் இவ்வார்த்தையை சொல்லியிருந்தால் அது நிச்சயம் நிறைவேறும் என்று சொல்லி வைத்தேன்.
அதன் பிறகு என் மனைவி அடிக்கடி என்னிடம் "ஏதாவது கடனை கிடனை வாங்கி அந்த இடத்தை வாங்க முயற்ச்சிக்கலாம்" என்று ஆலோசனை தந்தாள்.
கர்த்தர் சொன்ன வார்த்தையை நிறைவேற்ற நாமாக கடனை வாங்கி கஷ்டபட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. அவர் சொன்னால் கண்டிப்பாக செய்வார். நாம் கடன் வாங்கி செய்தால் பிறகு கர்த்தர் சொன்னதாக பொருள்படாது. என்று சொல்லிவிட்டேன்.
நாட்கள் ஓடின சுமார் 6 மாதங்களுக்குபிறகு ஒரு இஸ்லாம் சகோதரர் அந்த இடத்தை வாங்கிவிட்டார். வாங்கிய வர உடனே வீடும் கட்ட ஆரம்பித்து விட்டார்.
என் மனைவியிடம் "நீ எதோ சொன்னாய் ஆனால் இப்படி நடக்கிறதே" என்று கேட்டேன். அதற்க்கு அவள் ஆண்டவர் என்னிடம் "அந்த இஸ்லாம்காரன் இடத்தை வாங்குவான் வீட்டை கட்டுவான் ஆனால் அதில் அவன் குடியிருக்க மாட்டான், அந்த வீடு உனக்குத்தான்" என்று ஆண்டவர் தெளிவாக எனக்கு தெரிவித்திருக்கிறார் என்று சொன்னாள்.
எனக்கு கொஞ்சம்கூட நம்பிக்கை இல்லை. புதிதாக இடம் வாங்கி வீடு கட்டும் அவர் வீட்டை விறப்பதாவது அடுத்து என்னிடம் ஒரு லட்ச ரூபாய் பணம்கூட இல்லை. மேலும் நான் யாரிடமும் கடன் வாங்கவே கூடாது என்ற தீவிர கோட்பாட்டில் இருந்தேன். இந்நிலையில் கர்த்தர் ஏதாவது அதிசயம் செய்தால் அன்றி அது சாத்தியமே இல்லை. அத்தோடு கர்த்தர் வீடு வாங்க அதிசயம் செய்து பணம் தருவார் என்ற நம்மிக்கையும் எனக்கு இல்லை.
ஆகினும் என் மனைவி சொல்வதை பார்த்தால் ஒருவேளை கர்த்தர் சொல்லியிருப்பாரோ என்று நம்பவும் தோன்றியது.
கட கட என்று வேலைகள் நடந்து சுமார் 3 மாதத்தில் அழகான வீடு கட்டி முடிந்தது. இடத்தை வாங்கிய சகோதரர் கிட்டவே நின்று மிக அருமையாக வீட்டை கட்டி முடித்தார்.
ஆனால் என் மனைவி சொன்னபடியே நடந்தது. அவரின் மனைவி "வீடு கூவத்துக்கு பக்கத்தில் இருக்கிறது பள்ளமாக இருக்கிறது என்று எதோ காரணம் சொல்லி அந்த வீட்டுக்கு வரவே மாட்டேன் என்று பிடிவாதமாக் மறுத்துவிட்டாராம்" இறுதியில் என் மனைவி சொன்னது போலவே அந்த வீடு மீண்டும் காலியாகி விற்ப்பனைக்காக வந்தது.
காலி இடமாக இருந்தபோது 9-10 லட்சமாக இருந்தது இப்பொழுது 38 லட்சமாக உயர்த்தபட்டது.
பக்கத்தில் உள்ளவர்கள் நான் 30க்கு முடித்து தாரேன் என்று என் மனைவியிடம் சொல்லவே என் மனைவி மீண்டும் என்னை நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள். அதானால் வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்ப்பட ஆரம்பித்தது எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை
என்னிடம் எந்த பணமும் இல்லை. ஒரு வங்கி கடன் எடுக்க வேண்டும் என்றால் கூட 20% அட்வான்ஸ் அதாவது 6 லட்சம் தேவை நான் எங்கு போவேன். எனது தம்பி மிகப்பெரிய பணக்காரன் அவனிடம் கேட்டால் அவன் தரலாம். ஆனால் எனக்கோ யாரிடமும் சென்று கடன் வேண்டும் என்று கேட்க கொஞ்சமும் விருப்பம் இல்லை.
ஆனால என் மனைவியோ பிடிவாதமாக "கடவுள் சொல்லிவிட்டார் இந்த வீடு நமக்குதான் எப்படியாது அதை வாங்கி தாருங்கள்" என்று தினமும் சண்டை போட்டு பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்து விட்டாள். காலையில் எழுந்து சமைப்பது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவ எதுவும் செய்யமாட்டாள். "வீடு வேண்டும்" என்று ஒரே பிடிவாதம்.
இறுதியில் என்னால் தாங்க முடியாத ஒரு நிலை வந்தபோது ஆண்டவரிடம் சென்று பாரத்தோடு முறையிட ஆரம்பித்தேன் "ஆண்டவரே! என் நிலைமை உனக்கு நன்றாகவே தெரியும். இந்த சூழ்நிலையில் நான் வீடு வாங்க நினைப்பதுகூட தவறு. ஆனால் இந்த காரியத்தினிமித்தம் வீட்டில் அடிக்கடி சண்டை வருகிறது. அவளும் உம்முடைய பிள்ளை தானே. ஓன்று அவளிடம் இந்த வீடு வாங்கும் ஆசையை விட்டுவிட சொல்லி கண்டிஷனாக சொல்லும் அல்லது அவள் விருப்பபடி வீட்டை வாங்கி கொடுங்கள். "வெள்ளியும் என்னுடையது பொன்னும் என்னுடையது என்று சொல்லும் தங்களுக்கு எதுவுமே பெரிய காரியம் இல்லை" என்று சொல்லி மன்றாடி ஜெபித்தேன்.
கர்த்தர் வீட்டை வாங்கி கொடுப்பதற்கு பதில் அந்த வீட்டை வாங்க வேறு ஒரு ஆளை கொண்டுவந்துவிட்டார். சில நாட்களுக்கு பின்னர் அந்த வீடு சுமார் 38 லட்சத்துக்கு விற்க்கபட்டு உடனே வாங்கியவர்கள் குடிவந்து விட்டார்கள்.
அடுத்த சில நாட்களுக்குள் நாங்களும் அந்த இடத்தை காலி செய்து வேறு இடம் போய்விட்டோம்.
என் மனைவி "ஆண்டவர் அந்த இடத்தையும் வீட்டையும் நமக்காகவே வைத்திருந்தார். நீங்கள்தான் எந்த முயர்ச்சியும் எடுத்து அதை வாங்க பிரயாசம் எடுக்காமல் விட்டு விட்டீர்கள். கடவுள் ஓரளவுக்குத்தான் செய்வார் மற்றதை நாம்தான் செய்து முடிக்க வேண்டும" என்று சொல்லி என்மேல் குற்றம் சுமத்தினாள்.
உண்மையில் அங்கு ஆண்டவர்தான் பேசினாரா அல்லது ஆண்டவரைபோல சாத்தான் பெசினானா என்பது இன்றுவரை எனக்கு புரியாத புதிராக இருந்தாலும், என்னை பொருத்தவரை கர்த்தர் வாக்கு கொடுத்திருந்தால் அதை கண்டிப்பாக நிறைவேற்றியிருப்பார் ஏனெனில் அவர் வாக்கு மாறாதவர்.
இங்கோ, என் மனைவியின் ஆள் மன ஆசைகளை அறிந்து கொண்ட சாத்தான், கடவுளை போலவே பேசி, குடும்பத்தில் சில மாதங்கள் பெரிய குழப்பத்தை ஏற்படுத்திவிட்டான் என்றே நான் கருதுகிறேன்.
இந்த புதிய ஏற்பாடு காலத்தில் நமக்கு பூமிக்குறிய ஆசீர்வாதங்கள் வாக்குபண்ணபடவில்லை. ஆண்டவராகிய இயேசுவோ ஆதி அப்போஸ்த்தலர்களோ ஊழியர் என்ற போர்வையில் சொகுசுவாழ்க்கை வாழவில்லை. எனவே "வீட்டை வாங்கி தருவேன் "காரை வாங்கி தருவேன்" "இடத்தை வாங்கி தருவேன்" "டி வி வாங்கி தருவேன் என்று ஆசை வார்த்தை கண்பிப்பது எல்லாம் 99% சாத்தனின் வேலையாகத்தான் இருக்கும். அதை நம்பி ஏமாந்து இருக்கும் சமாதானத்தை கெடுத்து கொள்ளாமல் நன்றாக ஜெபித்து பின்னர் எதையும் முடிவெடுக்கவும்.
I பேதுரு 4:7எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்தபுத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
கர்த்தரின் ஆசீர்வாதம் ஐசுவரியத்தை தரும் அதினோடே அவர் வேதனையைக்கூட்டார்
நீங்க எடுத்ததே சரியான முடிவு என எண்ணுகிறேன்
உங்களிடம் உபரியாக 20-25 லட்சம் இருந்தால் மீதியை வங்கி கடன் மூலம் பெற்று வீட்டைவாங்கலாம்
ஒரு லட்சம் கூட இல்லாத நிலையில் பெரும் தொகை கடன் வாங்கிய வீட்டில் நிம்மதியாக இருக்கவைக்காது என நினைக்கிறேன்
கர்த்தரின் ஆசீர்வாதம் ஐசுவரியத்தை தரும் அதினோடே அவர் வேதனையைக்கூட்டார்
நீங்க எடுத்ததே சரியான முடிவு என எண்ணுகிறேன்
என் மனைவி முழு இரவு ஜெபங்களுக்கு சென்று அதிகமாக ஜெபிப்பது உண்டு அவ்வாறு ஜெபித்துவிட்டு ஒருநாள் காலை நாலு மணிக்கு தனியாக வீட்டுக்கு வரும்போது ஒரு நாய் அவளை பார்த்து குறைத்துக்கொண்டு ஓடி வந்ததாம். அப்பொழுது ஆண்டவர் அவளிடம் "இயேசுவின் நாமத்தில் அந்த நாயின் வாயை கட்டுகிறேன் என்று சொல்" என்றாராம். அவளும் அவ்வாறு சொல்லவே ஓடிவந்த நாய் மௌனமாகி அப்படியே பின்னோக்கி போனதாம். அதாவது நாய் பொதுவாக திரும்பிதான் போகும் ஆனால் அவ்வாறு போகவில்லை பின்னோக்கியே ரிவர்சிலேயே போனதாம்.
அடுத்து
ஒரு முக்கிய காரியத்தில் ஒரு முடிவு எடுப்பதற்காக ஆண்டவரிடம் ஒரு மாதத்துக்குமேல் ஜெபித்திருக்கிறாள். அந்நேரம் ஒருநாள் அதே நினைவுடன் வெளியில் சென்று வீட்டுக்கு வந்த அவள் வீட்டு வாசல் படியில் கால் எடுத்து வைத்தவுடன் "அதிக ஆக்கினைக்குள்ளாகாமல் நீ தப்பித்துகொள்" என்ற ஆடவரின் வார்த்தை செவிகளில் சத்தமாக விழுந்ததை கேட்டிருக்கிறாள் அத்தோடு அந்த முடிவை மாற்றிக் கொண்திருக்கிறாள்.
அடுத்து ஒருநாள்,
ஆண்டவர் அவள் படுத்திருக்கும் கட்டிலின் பக்கத்தில் வந்து நின்று "4 மணி ஆகிவிட்டது மகளே எழுந்திரு ஜெபி" என்று சொல்லியிருக்கிறார். இவள் எழும்பாமல் தூங்கவே, மூன்று முறை அவ்வாறு சொல்லி எழுப்பியவர் பின்னர் போய்விட்டாராம்.
மறுநாள் காலையில்தான் சுனாமி பேரழிவு நடந்தது.
மேலும்
அவள் தலையில் கொஞ்சம் முடி நரைத்திருப்பதால் கலர் அடிப்பதுண்டு. ஒருநாள் ஆண்டவர் அவளிடம் "உலகத்தார் வேஷம் போடுவதுபோல் நீ வேஷம் போடாதே" என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம். அத்தோடு நான் சொல்லியும் கூட இன்றுவரைகலர் பூசுவது இல்லை.
இதுபோல் இன்னும் அனேக நேரங்களில் ஆண்டவர் அவளுடன் இடைபட்டு நேரடியாகவும் வசனத்தின் மூலமும் பேசியிருகிறார். கேட்ட கேள்விக்கு எல்லாமே பதில் சொல்லியிருக்கிறார்.
ஆனால்
இந்த நிலம்/வீடு சம்பந்தபட விஷயத்தில் பேசியது அவர்தானா என்பதை என்னால் ஒரு முடிவாக சொல்ல முடியவில்லை.
காரணம்
ஒருமுறை காலையில் வேலைக்கு சென்ற நான் இரவு வந்த பார்த்தபோது வீட்டில் புதிதாக ஒரு பிரிட்ஜ் (refrigerator) இருந்தது. பிரிட்ஜ் இல்லாத எங்கள் வீட்டில் அது எப்படி இது வந்தது என்று வினவியபோது. காலையில் அவளுடன் ஆண்டவர் பேசியதாகவும், இன்று புதன் கிழமை நல்ல நாள் உடனே போய் உன்னிடம் இருக்கும் தங்க டாலரை அடகுகடையில் வைத்து பிரிட்ஜ் வாங்கிவிடு என்று சொன்னதாகவும் அதனால் இதை வாங்கியதாகவும் சொன்னாள்.
"நாள் பார்க்ககூடாது" என்று சொல்லும் தேவன் "நல்ல நாள்" என்று நிச்சயம் சொல்லியிருகமட்டார் என்றும் மேலும் அடகு கடையில்
அடகு வைத்து ஒரு பொருளை வாங்க சொல்லவேமாட்டார் என்று நிச்சயமாக நம்பிய நான் அது தேவனின் வார்த்தை அல்ல என்று புரிந்துகொண்டேன்.
அடுத்து ஒருநாள் இரவு "நீ இப்பவே எழுந்து போய் பக்கத்தில் இருக்கும் ரெயில் தண்ட வாளத்தில் தலையை வைத்து படுத்துகொள் ஒரே நிமிடம்தான் வலியே இல்லாமல் உயிர் போய்விடும்" என்று சொன்னதாக சொன்னாள்.
அது எப்படி தேவனின் வார்த்தையாக இருக்க முடியும்?
இப்படி தேவனே தெளிவாக பேசும் இடங்களில் சாத்தானும் அப்பப்போ வந்து ஏதாவது விஷ விதைகளை தூவிவிட்டு போவது எல்லோருக்குமே நடக்கும் ஓன்று.
அதை வசனத்தின் அடிப்படையில் ஆராய்ந்து பகுத்து அறிய தெரியவில்லை என்றால் சிக்கலில் மாட்டுவது நிச்சயம்.
எனவே எந்த மனுஷன் சொல்லும் /சொல்லியிருக்கும் வார்த்தைகளும் முற்றிலும் தேவனால் ஏவப்பட்டு சொல்லபடுவது என்று என்னால் ஏற்க்க முடியவில்லை.
-- Edited by SUNDAR on Wednesday 26th of March 2014 03:55:13 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
உங்களுக்கு ஒரு காரியம் வெளிப்படுத்தபட்டால் உடனே அதை ஆண்டவர்தான் பேசினார் என்று முடிவு கட்டி விடாதீர்கள். சத்துரு கூட ஆண்டவர்போலவே பல நேரங்களில் பேசக்கூடும் என்பதற்கு மேலேயுள்ள கட்டுரை கண்ட்கூடான அனுபவ சாட்சி!
ஆண்டவரையும் வேத வசனங்களையும் அறிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும் தேவன் இப்படி பேச மாட்டார் என்பது! எனவே அவர்களிடம் சாத்தான் சென்று தன வஞ்சக வார்த்தைகளை விதைப்பது இல்லை.
ஆனால் தேவனை குறித்த வைராக்கியம் கீழ்படிதல் இல்லாமல் தடுமாற்றம் உள்ளவர்களுக்கு என்ன வார்த்தையை போட்டால் அந்த குடும்பத்தின் நிம்மதியை கெடுக்கலாம் என்பது சாத்தனுக்கு நன்றாகவே தெரியும்.
அன்று ஏவாளிடம் தனியாக பேசி அவளை கெடுத்த அதே பழைய யுக்தியைதான் சாத்தான் இன்னும் பெரிதாக நம்பி பயன்படுத்தி வருகிறான் ஆனாலும் அதிலும்கூட வீழ்ந்துபோகும் ஆவிக்குரிய ஸ்திரிகள் இன்றும் இறுக்கத்தான் செய்கிறார்கள்!
எனவே அன்பானவர்களே தேவனின் வார்த்தைகளையும் சாத்தனின் வார்த்தைகளையும் பகுத்தறியும் தன்மையை பெற தேவனிடம் நன்றாக ஜெபியுங்கள். வேத வார்த்தைகளை நன்றாக ஆராய்ந்து தேவனின் இருதய எண்ணங்களை புரிந்துகொள்ளுங்கள் அப்பொழுது சாத்தானால் தேவையற்ற வார்த்தைகளை உங்களுக்குள் விதைக்க முடியாமல் ஓடிப்போவான்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)