அனேக ஞானமான வார்த்தைகளை எழுதிகொடுத்த பிரசங்கி "காரியத்தின் கடைத்தொகை" அதாவது " மொத்த சாராம்சம்" என்று மிக தெளிவாக சொல்கிறார்
பிரசங்கி 12:13காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
இதையேதான் நான் இந்த தளத்தின் மொத்த சாராம்சமாக கருதி எழுதி வருகிறேன்.
நீங்கள் ஜெபிப்பதாலோ, ஆவிக்குரிய கூட்டங்களில் பங்கு பெறுவதாலோ, பிரசங்கங்களை கேட்பதாலோ, வேதம் வாசிப்பதாலோ அல்லது ஆவியில் நிறைவதாலோ கிடைக்கும் தேவபிரசன்னம் எல்லாமே உலகத்துக்குள் நீங்கள் பிரவேசிக்கும் நேரத்தில் காணாமல் போய்விடலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு மறைந்து போகலாம்.
ஆனால்
தேவனின் வார்த்தைகளை கைகொள்ளுவதால் கிடைக்கும் தேவ பெலனும் தேவ பிரசன்னமும் உங்களை விட்டு ஒருபோதும் நீங்கவே நீங்காது.
மேலும் வேத வார்த்தைகளை, தேவனின் கற்பனைகளை சிரத்தை எடுத்து கொள்ளுபவனை ஒரு தீங்கும் அணுகாது என்பதை வேதம் திட்டவட்டமாக சொல்கிறது.
இந்த வார்த்தைக்கு தேவன் என்னை சாட்சியாக நிறுத்தியுள்ளார்.
என்னை ஆண்டவர் அழைத்த நாளில் என்னிடம் "நீ என் வார்த்தைகளை கைகொள்வாயா" என்று கேட்டு நான் சரி என்று பதிலுரைத்த பின்னரே என்னை ஆவியால் அபிஷேகித்தார்
இன்றும் எல்லா மனுஷர்களை பார்த்தும் தேவன் சொல்லும் வார்த்தையும் இதுதான்:
வெளி 22:14ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
ஆம்! அவர் கற்பனைகளின் படி செய்கிறவர்கள் மட்டுமே ஜீவ விருட்சத்தின் மேல் அதிகாரம் பெறமுடியும்!
எனவே இன்றே நீங்கள் படிக்கும் வேத வாக்கியங்களை உங்கள் வாழ்க்கையில் கைகொண்டு நடக்க அப்பியாசப்படுங்கள். ஒரு மாறுபட்ட தேவ வெளிச்சத்தை நீங்கள் அனுபவித்து வாழ முடியும்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)