இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிவதே முக்கியம்


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிவதே முக்கியம்
Permalink  
 


ஒரு ஊரில் மிகவும் வசதியான நற்பெயர் பெற்ற ஒரு குடும்பம் இருந்தது அந்த குடும்பத்தில் ஒரு தகப்பனும் அந்த தகப்பனுக்கு இரண்டு ஆண்  பிள்ளைகளும் இருந்தார்கள்
அந்த தகப்பன் குணங்களிலும்  தன் கிரியை அனைத்திலும்  உத்தமனாய் இருந்தான் அதினால் அவன் நாமம் அந்த ஊரில் உயர்ந்து  இருந்தது

அந்த தகப்பனுக்கு இருந்த இரண்டு பிள்ளைகளும் அவனுக்கு பிரியமானவர்களாய் இருந்தார்கள், இரண்டு மகன்களும் தன் தகப்பனை நேசித்தார்கள்

ஒரு நாள் அந்த தகப்பன் தன் பிள்ளைகளை அழைத்து நான் வெகுதுற பயணம் செல்கின்றேன் திரும்பவும் வருவதற்கு பல மாதங்கள் ஆகும்
அதுவரை நீங்கள் நான் நடந்த படியே இந்த ஊரிலும் மனிதர்கள் முன்பாகவும் உண்மையும் உத்தமமாய்  நடந்து கொள்ளுங்கள் என்று புத்தி சொல்லி புறப்பட்டு விட்டான்

இரண்டு மகன்களும் தன தகப்பனை அதிகமாக விரும்பினார்கள்

மூத்தவன் தன் தகப்பனுடைய நாமத்தை எப்பொழுதும் உயர்த்தி கொண்டே இருந்தான் தன் தகப்பன்   புகழை எல்லாம் மனிதர்கள் முன்பும்  பாடிகொண்டே இருந்தான் ஆனால் தன தகப்பன் சொன்ன உண்மையும் உத்தமதையும் மறந்து தன கிரியை அனைத்திலும் கேடு உள்ளவனாய் இருந்தான்

இளையவன் தன் தகப்பன்  சொன்னதை மாத்திரம் செய்து  அவன் அவன் தகப்பனை போலவே நடந்து கொண்டான்  அவன் தகப்பன் அவனுக்கு சொன்னது போலவே எல்லார் முன்பாகவும் உத்தமமாய் நடந்து கொண்டான்

சில மாதங்கள் சென்ற பின் தகப்பன் வந்தார்

தன் இளைய மகனை பார்த்த உடன் அவனை மார்போடு தழுவிக்கொண்டு என் வார்த்தைக்கு கீழ்படிந்து என்னை போலவே உண்மையும் உத்தமமாய் நடந்து கொண்ட என் அன்பு மகனே வா வந்து என் தொடை மீது  அமரு உம்மில்  மிகுந்த சந்தோசம் அடைகின்றேன் என்றார்

தன் மூத்த மகனை பார்த்து அக்கிரம காரனே நீ இந்த வீட்டை விட்டு வெளியே போய்விடு என்று உரத்த சத்தமாய் கத்தினார்

மூத்தவன் தன் தகப்பனை பார்த்து தகப்பனே நீர் சென்ற நாள் முதல் இன்று வரை உன் நாமத்தை சொல்லி உம்மை எல்லார் முன்பாகவும் உயர்த்தி உமது புகழை எல்லார் முன்பாகவும் பாடினேனே ஆனால் நீரே என்னை பார்த்து உமக்கு அக்கிரமம் செய்து விட்டேன் என்று சொல்கின்றீரே  எதினால் நான் உமக்கு அக்கிரம் செய்தேன் என்றான்

தகப்பன் அவனை பார்த்து என் பிள்ளை என்  வார்த்தைக்கு கீழ்படிவதை பார்க்கிலும்,    புகழும்  துதியும் எனக்கு பிரியமாய் இருக்குமோ
என் குமாரனே நீ என்னை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவது எனக்கு சந்தோஷத்தை கொடுக்குமோ    அதை பார்க்கிலும் என் மகன் என் வார்த்தைக்கு  கீழ்படிவதல்லவா எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கும் என்றார்

மூத்த மகன் தன் தகப்பன் காலை பிடித்து கண்ணீரோடு  தகப்பனே என்னை மன்னியும் உம்மை உயர்த்துவதையும் மனிதர்கள்
முன்பாக உம்மை புகழ்வதையும் பெரியதாகவே நினைத்து நீர் சொன்ன உண்மையும் உத்தமத்தையும் விட்டுவிட்டேன் இனி உம் வார்த்தைக்கு கீழ்படிந்து உமக்கு பிரியமான மகனாய் இருப்பேன் என்னை மன்னியும்  என்றான்

அந்த தகப்பன் தன மூத்த  மகனை கட்டிக்கொண்டு நல்லது என்று சொல்லி அவன் தவறை மன்னித்தான்

இந்த கதையில் இருந்து நாம் சில காரியங்களை கற்று கொண்டு இருப்போம் என்று எண்ணுகின்றேன்

நமக்கு தேவன் வேதத்தில் மூலம் என் வார்த்தைக்கு கீழ்படி  உண்மையும் உத்தமமுமாய்   இரு என்று அனேக வேத வசனங்களில் நமக்க சொல்லி கொடுத்து இருக்கின்றார்
ஆனால் நாமோ அவர் வார்த்தைக்கு கீழ்படிவதை பார்க்கிலும்

ஆலயம், பாடல், வேத வாசிப்பு, மற்றவர்களிடத்தில் அவரை என் தேவன் இப்படி அவர் அப்படி என்று புகழ்ந்து உயர்த்தி பேசுவதையே முக்கியமாக கொண்டுள்ளோம்

இவைகள் தவறு என்று நான் சொல்லவில்லை இவைகள்  தவறும் இல்லை

ஆனால் தேவனை புகழ்ந்து பேசுவதும் அவரை புகழ்ந்து பாடுவது  1000 ஸ்தோத்திர பலிகள் சொல்வதும் போன்ற இவைகளை பார்க்கிலும்
தேவனுக்கு கீழ்படிவதே மிக மிக முக்கியமானது

 


I சாமுவேல் 15:22 அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.

 


ஆதியாகமம் 26:4 ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால்,



உபாகமம் 27:10 ஆகையால் நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளின்படியும் அவருடைய கட்டளைகளின்படியும் செய்வாயாக என்று சொன்னான்.



-- Edited by EDWIN SUDHAKAR on Friday 11th of April 2014 02:31:11 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard