இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மனிதர்களாகிய நாம் எப்படி இருக்க வேண்டும் ?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
மனிதர்களாகிய நாம் எப்படி இருக்க வேண்டும் ?
Permalink  
 


உலகில் உள்ள அனைத்து  மனிதர்களுடைய எண்ணமும் நம்முடைய  எண்ணமும் இன்று  எப்படி இருக்கின்றன என்று ஆராய்ந்து பார்த்தல் மனிதர்கள் தங்களை எப்படி நினைக்கின்றார்களோ அப்படி யே மற்ற மனிதர்களும் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள், அப்படி இல்லையென்றால் அவர்கள்மேல் ஒரு வித வெறுப்பு ஏற்படுத்தி கொள்கின்றார்கள்

 

உதாரணம் : நான் அவனுக்கு எத்தனையோ   உதவி செய்து இருக்கின்றேன் ஆனால் அவன் எனக்கு இந்த சிறிய உதவி கூட செய்யவில்லை என்று

 

மனிதனுக்கு இரண்டு குணங்கள் இருக்கின்றது

(1)  நல்ல குணங்கள் 

(2)   கெட்ட குணங்கள்

 

நீ அவனுக்கு நல்லது செய்தாய் அது உனக்குள் இருக்கும்  நல்லகுணம் ஆனால் அவன் உனக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதை நீ தவறாக எடுத்துகொள்ளாமல் அது அவனுடைய குணங்களில் ஒன்று என்று எடுத்துகொண்டால் அதன் பின்பு  ஒருவரையும் தவறாக நினைக்க மாட்டோம் நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள்  நம்முடன் இருக்கும் மற்றவர்களுக்கும் இருக்காது என்று எண்ணி விட்டோம் என்றால் எந்தவித பிரச்சனையும் ஏற்படாது

 

முதலாவது  நமக்கு புரிந்துகொள்ளுதல் அவசியம்

 

மற்றவர்கள்  எதிர்பார்ப்பது போல நாம் இருப்பதில்லை - நாம் எதிர்பார்ப்பது போல மற்றவர்கள்  இருப்பதில்லை

 

உதாரணமாக  நம்முடன்  பழகும் நண்பன் ஒருவனுக்கு பெருமை என்ற குணம் அல்லது வேறதாவது குணம்  உள்ளது என்றால் அதை நாம் புரிந்துகொண்டு  இவனுக்கு இப்படி ஒரு குணம் இருக்கின்றது என்று எண்ணி அதர் கேற்றபடி நாம அவனுடன்    பழக வேண்டும் அவனும் அப்படியே நம்முடைய குணங்களை பார்த்து பழக வேண்டும், குறை ஏதாவது இருந்தால் இவன் அவனை மன்னிக்க வேண்டும் அவன் இவனை மன்னிக்க வேண்டும்

 

மாற்கு 11:25

ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்.

 

அப்படி செய்யாமல் அவனை வெறுப்பதும் அவன் குணங்கள் சரியில்லை என்று தூற்றுவதும் தவறான காரியமாகும்

 

தெளிவு உள்ளவன் தெளிவில்லாதவர்களை சகித்து கொள்ளவேண்டும்

எல்லாம் தெரிந்தவன் தெரியாதவர்களை அலட்ச்சிய படுத்தாகூடாது 

இதுதான் உண்மையான சத்தியம்

 

நாய் குலைக்கின்றது என்று நாம் திரும்ப குலைக்க முடியா ?

நாய் என்றால் குலைக்க தானே செய்யும் நாயோடு குணம் அதுதானே என்று நாம் விலகி போகவில்லையா,   வீட்டில் வளர்க்கவில்லையா அதனுடைய  குணம் தெரிந்து தானே இப்படி செய்கின்றோம்

அதே போலவே மனிதனுடைய  குணமும்,   ஒருவனுக்கு குறை சொல்வதே வேலையாக வைத்துள்ளான், இன்னொருவன் தன்னை பெருமையாக பேசுவதையே வேலையாக வைத்துள்ளான்

 

நாம்  எதிர்பார்பதா  நடக்கின்றது ?

 

கணவனுக்கு ஏற்ற மனைவி இல்லை - மனைவிக்கு ஏற்ற கணவன் இல்லை

தாய் ஏற்ற பிள்ளை இல்லை - பிள்ளை ஏற்ற தாய் இல்லை

 

 

மொத்தத்தில் நம்மை உண்டாக்கின  கடவுள்  நினைப்பது போலவே நாம் இல்லை

 

சங்கீதம் 53

2. தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.
3. அவர்கள் எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.


உபாகமம் 9:13 பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: இந்த ஜனங்களைப் பார்த்தேன்; அது வணங்காக் கழுத்துள்ள ஜனம்.

 

அதற்காக கடவுள் நம்மை வெறுத்தா விட்டாரா ? இல்லை கைவிட்டுவிட்டாரா  


ஓசியா 11:8 எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்?

 

தேவனை போலவே நாமும் மற்றவர்கள் குறைகளையும் சுபாவங்கலையும்  நாம் புரிந்துகொண்டு அவர்களை வெறுக்காமல்  அது அவர்களுடைய குணங்களில் ஒன்று  என்று அறிந்து ஒருவருக்கொருவர் மன்னித்து வாழ்வதே சிறந்தது


எபேசியர் 4:32 ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.

கொலோசெயர் 3:13 ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.

 

ஒவ்வொரு மனிதனும்  இப்படிதான் இருக்க வேண்டும்....



-- Edited by EDWIN SUDHAKAR on Wednesday 16th of April 2014 07:33:03 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard