"பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும்’ என்பார்கள்"
இந்த பழமொழிக்கு ஏற்ப
" நாம் யாருடன் சேர்ந்து இருக்கின்றோமே அவர்களை போல நாமும் இருப்போம் என்பது தான் இதன் பொருள்"
திருடனுடன் ஒருவன் சேர்ந்து இருந்தால் அவனும் திருடுவான்
வேசியோடு நட்பு வைத்து இருக்கின்ற ஒருவள் அவளும் வேசித்தனம் செய்வாள்
நாம் மனிதர்களுடன் பழகுவதும் நட்புவைப்பதும்தவறில்லை ஆனால் அவர்களுடைய கிரியைகளை பார்த்து பழக வேண்டும இல்லை என்றால் அவர்களுடைய கிரியைகளை நாமும் கற்றுகொள்வோம் பின்பு அவர்களைப்போலவே மாறிவிடுவோம்
உபாகமம் 18:9 - அந்த ஜாதிகள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக் கொள்ளவேண்டாம்.
அதை கற்று கொள்ளகூடாது என்பதற்காக தான் நம் தேவன் வேதத்தில்
சங்கீதம் 1 - துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
என்று ஆழகாய் கற்றுகொடுத்து இருக்கின்றார்
இன்னும் புதிதாக சொல்லபோனால் “ உன் நண்பன் யார் என்று சொல் நீ யார் என்று சொல்கின்றேன் ” என்கின்ற வார்த்தையும் உண்டு
"உன் நண்பன் எப்படியோ அப்படியே நீ “ என்பது தான் இதன் பொருள்"
ஆம் உன் நண்பன் அய்யோக்கியன் என்றால் நீயும் அய்யோக்கியன் தான்
உன் நண்பன் பாவி என்றல் நீயும் பாவி தான்
ஆதால் நாம் மற்றவர்களிடத்தில் நட்பு வைத்துகொள்ளும் பொழுது அவர்களுடையகிரியைகளை பார்த்துநட்பு வைதுகொள்ளவது நல்லது அவர்கள் வழியிலே நாம் நடவாமல், அவர்கள் பக்கத்தில் உட்காராமலும் அப்படி பட்டவர்களை விலகிபோவது நல்லது
நீதிமொழிகள் 4:14 - துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே.
இல்லையென்றால் நாம் அவர்களுடைய மார்க்கத்தை கற்றுக்கொண்டு அவர்களைபொலவெ மாறிவிடுவோம், இந்த பொல்லாத உலகத்தில் யார் நல்லவர்கள் கட்டவர்கள் என்பதை நம்மால் அறியமுடியவில்லை