உப 28:60 நீ கண்டு பயந்த எகிப்து வியாதிகளெல்லாம் உன்மேல் வருவிப்பார்; அவைகள் உன்னைப் பற்றிக்கொள்ளும்.
உப 28:59 கர்த்தர் நீங்காத பெரிய வாதைகளாலும் நீங்காத கொடிய ரோகங்களாலும் உன்னையும் உன் சந்ததியையும் அதிசயமாய் வாதித்து,
இதுபோன்ற பல வசனங்கள் தேவன் வியாதியை கொண்டு மனுஷனை வாதிப்பது போன்ற கருத்தை சொல்கிறது
ஆகினும் வியாதி என்பதும் தேவ சிட்சையின் ஒரு பகுதி என்று வேண்டுமானால் எடுத்து கொள்ளலாமேயன்றி அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை.புல 3:33என்பதை அறிய வேண்டும்.
அவரின் சிட்சைக்கு காரணம் நம்முடைய மீறுதலே! இதை நியாய பிரமான புத்தகத்தில் அவர் தெளிவாக சொல்லியிருக்கிறார்.
உபாகமம் 2815. இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும்.
உபாகமம் 28:22கர்த்தர் உன்னை ஈளையினாலும், காய்ச்சலினாலும் உஷ்ணத்தினாலும், எரிபந்தத்தினாலும், வறட்சியினாலும், கருக்காயினாலும், விஷப்பனியினாலும் வாதிப்பார்; நீ அழியுமட்டும் இவைகள் உன்னைப் பின்தொடரும்.
லேவியராகமம் 26:16நான் உங்களுக்குச் செய்வது என்னவென்றால், கண்களைப் பூத்துப்போகப்பண்ணுகிறதற்கும், இருதயத்தைத் துயரப்படுத்துகிறதற்கும், திகிலையும் ஈளையையும் காய்ச்சலையும் உங்களுக்கு வரப்பண்ணுவேன்;
தேவனின் கற்பனைக்கு கீழ்படியவில்லை என்றால் நாம் நம்மை அறியாமலேயே சத்துருவின் காரியங்களை செய்கிறோம். எனவே சத்துரு அதற்க்கான தண்டனையை தேவன் மூலம் நம்மிடம் சுமத்துகிறான். இதுதான் உண்மை.
தேவன் யாருக்கும் மனப்பூர்வமாக தீமை செய்பவர் அல்ல. முதலில் நன்மையின் ஊற்றாகிய தேவனை சரியாக புரிந்துகொண்டால் மட்டுமே மற்ற உண்மைகளை நாம் புரிய முடியும்.
என் தகப்பனார் என்னை அடித்தார் என்றால் அவர் ஏன் என்னை அடித்தார் என்று சிந்திப்பதுதான் சிறந்ததேயன்றி "என் தகப்பனார்
அடிக்கிறவர், நான் அடிகள்பட காரணர் அவர்தான் " என்று புலம்புவதில் பயனில்லை.
யோபு 2:7அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் அவனை வாதித்தான்.
பெலிஸ்த்தியரை மூல வியாதியால் வாதித்தது கர்த்தர்.
I சாமுவேல் 5:6அஸ்தோத் ஊராரைப் பாழாக்கும்படிக்கு கர்த்தருடைய கை அவர்கள் மேல் பாரமாயிருந்தது; அவர் அஸ்தோத்தின் ஜனங்களையும், அதின் எல்லைகளுக்குள் இருக்கிறவர்களையும் மூலவியாதியினால் வாதித்தார்.
எனவே வியாதியை சாத்தானாலும் கொண்டுவர முடியும் தேவனாலும் கொண்டு வர முடியும்.