'I கொரிந்தியர் 14:2. அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியிலே இரகசியங்களைப்பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.''''
அந்நிய பாஷை பேசுகிறவன் தேவனிடத்தில் பேசுகிறான் அல்லது தேவனோடு சம்பாஷிக்கிறான். அது எவ்வளவு மேன்மையானது என்பதை தேவனோடு பேசினால் மட்டுமே அறியமுடியும். ஒரு அரை மணி நேரம் அமர்ந்து அந்நிய பாஷையை பேசிப்பாருங்கள். பின்னர் நீங்கள் போகும் இடமெல்லாம் தேவ பிரசன்னம் கூட வருவதை அறிய முடியும்.
நான் அந்நியபாஷையை பேசி அதை செல் போனில் பதிவு செய்தேன். அந்த பதிவுகளை போட்டு கேட்கும் நேரமெல்லாம் தலையில் இருந்து கால் வரை அபிஷேகம் இறங்குவதை அறிய முடிகிறது.
தேவனோடு பேசிய மோசேயின் முகம் பிரகாசம் அடைந்தது
யாத்திராகமம் 34:30ஆரோனும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேயைப் பார்க்கும்போது, அவன் முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டு, அவன் சமீபத்தில் சேரப்பயந்தார்கள்.
அதேபோல் தேவனோடு அந்நிய பாஷை பெசுவோரிடமும் அந்த பிரகாசம் வந்து அமரும் என்பதும், தீமைகள் அவர் அருகில் வரமுடியாமல் அவரை விட்டு தூர விலக ஓடும் என்பதும் உறுதியல்லவா?
எந்த ஒரு வசனத்தையும் நம் வாழ்வில் செயல்படுத்தி அதன் ருசியையும் அனுபவித்தால் மட்டுமே அதன் மேன்மை தெரியும்
அன்பவ பூர்வமாக அறியாதவர்களுக்கு எவ்வளவுதான் எடுத்து சொன்னாலும் அதன் மேன்மை புரியபோவது இல்லை.
ஆகினும் எனது கருத்து என்னவெனில் அந்நிய பாஷை பேசுபவர்கள் பொது இடங்களில் கூட்டங்களில் பேசும்போது பேசி சொன்னதையே சொல்லி சொல்லி குழப்பி அடுத்தவர்களுக்கு எரிச்சல் ஊட்டாமல், தனி ஜெபத்தில் தேவனோடு இருக்கும்போது பேசுவது நல்லது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)