"வேத வார்த்தைகள்படி யாராலும் வாழ முடியாது" என்று தர்க்கிக்கும் மனுஷர்களை பார்த்து நான் சொல்லும் பதில் "உங்களால் வாழ முடியாது என்றால் யாராலும் வாழ முடியாது என்று தீர்ப்பு சொல்ல வேண்டாம்".
எலியா, நான் மட்டும் தனியாக நிற்கிறேன் என்று அறியாமல் சொன்னபோது தேவன் சொன்ன பதில் என்ன?
I இரா19:18ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார்.
தேவனோடு மனுஷன் சேர்ந்தால் தேவனால் எல்லாம் கூடும் என்று வேதம் சொல்கிறது.
மாற்கு 10:27இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம்கூடும் என்றார்.
நீங்கள் வேறு எங்கும் போகவேண்டாம் என் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்து என்னில் எந்த குற்றம் இடத்தில் இருக்கிறது என்று சொல்லுங்கள் நான் அதை உடனே திருத்திகொள்கிறேன் என்று சொல்வதுண்டு. அத்தோடு என்னை நோக்கி கை நீட்டபட்டு குற்றம் சாட்டபட்ட காரியங்களை எல்லாம் நான் விட்டோழித்ததும் உண்டு.
என்னுடைய குற்றங்கள் சுட்டிக்காட்டபடவும் நான் அவைகளை உண்மைதானா என்று ஆராய்ந்து பார்த்து விட்டொழிக்கவும் வாஞ்சிக்கிறேன்
அநேகர் தங்களின் குற்றங்களும் குறைகளும் யாராலாவது சுட்டிகாட்டபட்டால் அதை நியாயப்படுத்த கடுமையாக போராடுவதோடு அந்த குறையை சுட்டிக்காட்டிய நபர்மீது கடும் கோபம் கொள்கிறார்கள். அன்று ஆதாம் செய்த அதே பாவம்தான்.
ஆனால் நாம் அப்படி இருக்கலாகாது.
"கர்த்தாவே என்னை நானே மேலும் மேலும் ஆராய்ந்து திருத்திகொள் ளும்படிக்கு என் பாவங்களையும் என் மீறுதல்களையும் அடிக்கடி சுட்டிகாட்டி விமாசிக்க யாரையாவது ஒரு விசாரணைகாரனை நியமியும்" என்று செபிப்போமாக.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)