இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்த்தவ மதமா? ஆவியானவரின் நடத்துதலா?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
கிறிஸ்த்தவ மதமா? ஆவியானவரின் நடத்துதலா?
Permalink  
 


பரிசுத்த ஆவியானவரின் நடத்துதலில் இல்லாமல் கிறிஸ்த்தவம் என்ற மத வலைக்குள் இருந்துகொண்டு தேவனை /தேவ சித்தத்தை சரியாக அறியாமல் சில மனித கோட்பாடுகளை முக்கியப்படுத்தி கடின மனதுடன் பிடிவாதத்தில் இருக்கும் அநேகருக்கு தங்களிடம் இருக்கும் பல தவறுகள் புரிவதே  இல்லை.   
 
எதோ சில வசனங்களை எடுத்து தனக்கும் புரியாமல் பிறருக்கும் புரியாமல் விளக்கும் இவர்களுக்கு, நாம் பாமரர்களுக்கு கூட சுலபமாக புரியும் விதத்தில் எழுதும் உண்மை சம்பவங்களைகூட ஏற்ப்பதர்க்கு மனதில்லாமல், அதிலும் ஏதாவது தவறு கண்டுபிடித்து என்னை நியாயம் தீர்க்க முயன்றதால், அடிக்கடி மன வருத்தத்துக்குள்ளாகி  பின்னர் தியானித்து பதிவுகளை எழுதிடவே  விருப்பம் இல்லாமல் ஆகிவிட்டது.
  
இவர்கள் இவ்வாறு என்னை நியாயம் தீர்க்க முயல்வதன் காரணம் நான் தேவனிடம் அறிந்து சொல்லும் கருத்துக்கள் எல்லாம் அவர்கள் இருதயத்தில் சென்று குத்துவதால் அதை ஜீரணிக்க முடியாமல் வேத வசனங்களை புரட்டி தாங்கள் எதோ அதிமேதாவிகள் போல காண்பிக்க முயல்கிறார்கள்.
 
நான் இந்த தளத்தை துவங்கிய நாட்களில் இருந்து பல மேதாவிகள் வந்து என்னை எழுத விடாமல் தடுக்க எவ்வளவோ முயன்று என்னை பலவிதமான சாபங்களிட்டு சென்றுள்ளனர்.
 
இப்படி அவர்கள் கடினமாக என்னை எதிர்க்க காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் நான் திரும்ப திரும்ப சொல்லும் கருத்து "வேத வார்த்தைகளை உங்கள் அன்றாட வாழ்வில் கைகொண்டு நடக்க பிரயாசம் எடுங்கள்" என்பதுதான்.
 
இந்த கருத்து சாத்தனுக்கு கொஞ்சமும் பிடிப்பதில்லை. 
 
காரணம் "கற்பனையை கைக்கொள்" "கற்பனையின்படி நட" "வார்த்தைகளின்படி செய்" என்று பழைய ஏற்பாட்டிலும் சரி புதிய ஏற்பாட்டிலும் சரி, திரும்ப திரும்ப தேவன் வலியுருத்துகிறார்.
 
ஆனால் இங்கோ கற்பனையை கைகொள்ளுவது கடினமாகையால் சுலபமாக பக்க வழியாக நுழைய முயலும் கூட்டத்துக்கு என்னுடைய எழுத்துக்கள் வேம்பாக கசக்கிறது எனவே குறைகூறவும் திட்டவும் ஓடிவந்துவிடுகிரார்கள். 
 
ஒருவர் உண்மை கிறிஸ்த்தவனாக இருந்து ஆவியானவரின் நடத்துதலில் இருந்தால் அவர் நிச்சயம் வேத வார்த்தைகளை கைகொண்டு நடக்க முயர்ச்சிப்பான். காரணம் ஆவியானவரின் முதல் பணியே பாவங்களை கண்டித்து உணர்த்தி நம்மை சத்தியத்துக்குள் நடத்துவதுதான்.
 
யோவான் 16:13 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; 
 
யோவான் 16:8 அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
 
சத்தியம் என்றால் என்ன? 
 
யோவான் 17:17 உம்முடைய வசனமே சத்தியம்
 
எனவே "சத்தியத்துக்குள் நடத்துதல்" என்றால் வேத வசனத்துக்கு கீழ்படிதலுள்ள பிள்ளையாக நம்மை மாற்றுதலே ஆவியானவரின் முக்கிய பணி.
 
"கிறிஸ்த்து இயேசுவுக்குள் இருந்து ஆவியின் படி நடப்பவர்களுக்கே ஆக்கினை தீர்ப்பில்லை" என்று வேதம் சொல்கிறது என்பதை இங்கே நினைப்பூட்டுகிறேன்.  
 
ரோமர் 8:1 கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை
 
கிறிஸ்த்தவ மதமோ அல்லது எதாவது மனுஷ கோட்பாடுகளோ ஒருவரை அக்கினை தீர்ப்பில் இருந்து தப்புவிக்க மாட்டாது. 
     
  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 627
Date:
Permalink  
 

கண்டிப்பாக அண்ணா வேத்திட்கு புறம்பாக எதுவுமில்லை.. வேதமே விளக்கு கட்டளையே வெளிச்சம் .. எவருமே பரிசுத்த ஆவியானவருக்குள் இருந்தால் நிச்சயம் கட்பனைகளை கைக்கொள்ள முயட்சி எடுக்கப்படும்..

எனவே நீங்கள் எழுதுவதை நிறுத்தாதீர்கள்.. மேலும் தேவ செய்திகளையும் வெளிப்பாடுகைளையும் எழுதுங்கள்.

எனக்கு உங்கள் தளமும் செய்திகளும் மிகுந்த ஆவிக்குரிய வளர்ச்சியை தருகிறது.

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard