ஐசுவரியம் தவறா என் கருத்து ஐசுவரியத்தின் மீதி நம்பிக்கை வைப்பதே தவறு என்பதே ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு ஐசுவரியவான்களே நாம் நீதிமான்களாக மாற இயேசு சிலுவையில் பாவமானாரே அப்படியே நாம் ஐசுவரியனாக மாற அவர் ( சிலுவையில்) தரித்திரமானாரே......
ஐசுவரியம் தவறா என் கருத்து ஐசுவரியத்தின் மீதி நம்பிக்கை வைப்பதே தவறு என்பதே ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு ஐசுவரியவான்களே நாம் நீதிமான்களாக மாற இயேசு சிலுவையில் பாவமானாரே அப்படியே நாம் ஐசுவரியனாக மாற அவர் ( சிலுவையில்) தரித்திரமானாரே......
இத்தளத்தில் இருப்போர் தங்கள் கருத்தை பகிரவும்
அன்பான சகோதரர் அவர்களே பணம்/உலகப்பொருள் பற்றிய கீழ்கண்ட திரிகளை சற்று வாசித்து பாருங்கள்
ஆண்டவராகிய இயேசு "ஐஸ்வர்யவான் பரலோகத்தில் பிரவேசிக்க மாட்டான்" என்று சொல்லவில்லை மாறாக "ஊசியின் காதில் ஒட்டகம நுழைவதுபோல் மிக மிக கடினம்" என்றுதான் சொல்லியிருக்கிறார்.
எனவே என்னுடைய கருத்து என்னவெனில் பிறக்கும்போதே ஐஸ்வர்யவானாக பிறப்பவர்கள் அந்த ஐஸ்வர்யத்தை கொண்டு நன்மைகளை செய்து முடிந்தவரை பரலோகத்தில் பொக்கிஷத்தை சேர்க்க முயற்சிப்பது நல்லது.
மற்றவர்கள் பணம் மற்றும் உலகப்பொருட்கள் மேல் மோகம் கொண்டு அதை தேடுவதிலேயே குறியாய் இருக்காமல் தேவனின் ராஜ்யத்தை தேடுவதற்கு முதலிடம் கொடுத்தால் அவர்களுக்கு தேவையானது எதுவோ அது தேவனால் நிச்சயம் கொடுக்கப்படும்.
லூக்கா 12:31தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
ஏசாயா 33:16அவன்அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்.
இறுதியாக விசுவாசியாகிய நம்மெல்லோருக்கும் இருக்கவேண்டிய பொதுவான நிலை என்னவெனில்:
I தீமோத்தேயு 6:8உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.
மேலும் தங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவுடுங்கள் முடிந்தவரை விளக்கம் தருகிறேன்.
-- Edited by SUNDAR on Tuesday 8th of July 2014 11:53:58 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)