I யோவான் 4:3மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.
II யோவான் 1:7மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.
"அந்தி கிறிஸ்த்து" என்றால் "கிறிஸ்த்துவுக்கு எதிரானவன்"என்று பொருள்படுகிறது. .
வேதாகம காலத்தில் கிறிஸ்த்துவுக்கு எதிராக யார் யார் இருந்தார்கள் என்பது குறித்து வேதத்தில் அடையாளம் காட்டபட்டு "மாம்சத்தில் வந்த இயேசுவை மருதலிக்கிரவர்கள் "அந்தி கிறிஸ்த்து" என்று எழுதப்பட்டுவிட்டது.
ஆனால் "அந்திகிறிஸ்த்து" என்ற வார்த்தையின் பொருளடக்கம் அத்தோடு முடிந்துபோவது இல்லை. இன்றும் இயேசுவுக்கு எதிராக செயல்படுகிறவர்கள் எல்லோருமே "அந்தி கிறிஸ்த்து" என்ற வார்த்தையில் அடங்கதான் செய்வார்கள்.
சிலர் வெளிப்படையாக இயேசுவை ஏற்றுக்கொண்டாலும் தங்கள் கிரியைகளால் அவரை மறுதலிக்கிறார்கள் அவர்களும் அந்தி கிறிஸ்த்துதானே.
இரண்டு எஜமான்களில் ஒருவரான கிறிஸ்த்துவை ஏற்றுக்கொண்டு அவருக்கு நேர் எதிர் எஜமானனாகிய உலக பொருள் பணத்தை தேடுவதில் அதிக ஆர்வம் காட்டுபவர்களும் எவரும் அந்தி கிறிஸ்த்துக்கள் என்று தீர்க்கப்படலாம்.
"தாங்களே கிறிஸ்த்து" என்று சொல்லும் அநேகர் தோன்றுவார்கள் என்று வேதம் சொல்கிறது அவர்களும் கிறிஸ்த்துவுக்கு எதிரான அந்தி கிரிஸ்த்துக்கல்தானே.
அதுபோல் பின்னாளில் தேவனை மறுதலித்து தன்னையே தேவன்போல காட்டுபவன் எழும்புவான் என்று வேதம் சொல்கிறது.
II தெசலோனிக்கேயர் 2:4அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து,தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.
அவன் தேவனுக்கு எதிர்த்து நிற்கிறவன் அவனும் அந்தி கிறிஸ்து பட்டியலில்தானே அடங்குவான்.
அதாவது "அந்தி கிறிஸ்த்து" என்ற "கிறிஸ்த்துவுக்கு எதிரானவன்" என்ற வார்த்தை ஒரு குறுகிய பொருளுடையதும், ஒருவரையோ அல்லது இருவரையோ குறிப்பது அல்ல. உலகத்தின் முடிவு பரியந்தமும் யார் யாரெல்லாம் இயேசுவை கிறிஸ்த்து அல்ல என்று மறுதலித்து பிதாவுக்கும் எதிராக செயல்படுகிறார்களோ அவர்கள் எல்லோருமே அந்தி கிறிஸ்த்து என்ற லிஸ்டில்தானே அடங்குவார்கள்
I யோவான் 2:22இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.
இவர்கள் தாங்களும் வஞ்சிக்கபட்டு கிரிஸ்த்துவுக்கும் தேவனுக்கும் எதிராக செயல்படுவதோடு அநேகரின் விசுவாசத்தையும் கவிழ்த்துபோடுவார்கள் என்று வேதம் சொல்கிறது.
மத்தேயு 24:5ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரைவஞ்சிப்பார்கள்.
வேதாகம நாட்களில் இல்லாத எத்தனையோ புதிய புதிய பாவங்கள் இந்த கடைசி காலத்தில் பெருகியிருப்பது போல வேதாகம காலத்தில் ஒருவிதமான அந்திகிரிஸ்து இருந்திருந்தால் இன்றைய கால கட்டத்துக்கு ஏற்றார்போல வேறொரு அந்தி கிறிஸ்த்து இன்றும் இருக்கத்தான் செய்வார்கள். இன்னும் கடைசி நேரத்தில் வேறுபல அந்தி கிரிஸ்த்துக்கள் (கிறிஸ்த்துவுக்கு எதிரானவர்கள்) தோன்றத்தை செய்வார்கள் அவர்களை நமக்கு அடையாளம் காட்டவே ஆவியானவர் நம்முள் இருக்கிறார்.
எனவே அந்திகிரிஸ்த்து குறித்து யார் சொல்வதையும் முற்றிலும் தவறு என்று தள்ளிவிடவும் முடியாது, இதுதான் இதற்குமேல் ஒன்றும் இல்லை என்று தீர்மாநித்துவிடவும் முடியாது.ஆகினும் வேத வசனங்களுக்கு வியாக்கீனம் கொடுப்பவர்களும் தீர்க்கதரிசனம் சொல்பவர்களும் கீழ்கண்ட தேவனின் வார்த்தைகளை எச்சரிக்கையாக கவனிக்க கடவர்கள்.
உபாகமம் 18:20சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும்தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.
அறியாததை, தெரியாதவைகளை வியாக்கீனம் என்று துணித்து சொல்லி செத்துபோகாதீர்கள்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)