விழுகிறவனை பார்த்து பதறி துடிக்கும் ஒரு கூட்டம் இருந்தால் அவனை பார்த்து கேலியாக சிரித்து கைகொட்டி சிரிக்கும் ஒரு கூட்டமும் இந்த உலகில் எப்பொழுதும் இருக்கத்தான் செய்கிறது.
தன பிள்ளைகள் தவறி தண்டனையை நோக்கி போகும்போது பதருகிறவர் தேவன்
ஓசியா 11:8 எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான்உன்னை எப்படி அத்மாவைப்போலாக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது.
தவறு செய்பவன் தண்டனை பெறவேண்டும் என்று பிராது செய்து தண்டனை பெருவோனை பார்த்து கைகொட்டி கேலிசெய்து சிரிப்பவன் சாத்தான்
மத்தேயு 27:40 தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே ரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா என்று அவரைத் தூஷித்தார்கள். மத்தேயு 27:42 மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைத்தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம்.
யார் எந்த கூட்டத்தில் சேர விரும்புகிறீர்கள் என்பதை அவரவர் முடிவு செய்து கொள்ளவும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)