இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கூடுமானால் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
கூடுமானால் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்!
Permalink  
 


சமாதான கர்த்தரையே சிலுவையில் அடித்து கொன்ற உலகம் இது!
 
இங்கு எல்லோரோடும் சமாதானமாக இருப்பது சாத்தியமா?
 
தீயவர்களால் நல்லவர்களோடு சமாதானமாக இருக்க மாடார்கள் இருக்கவும் முடியாது!  காரணம் நல்லவனால் தீயவர்களின் தீய செயல்களுக்கு அடிக்கடி இடையுறு ஏற்ப்படுவதொடு அவர்களின் குறைகளும் பாவங்களுக்கும் அவர்களுக்கு சுட்டிகாட்டபடுகிறது. ஏமாறும் மக்கள் ஏமாராதபடி எச்சரிக்கபடுகிரார்கள் அதனால் ஏமாற்றுபவர்களுக்கு பாதிப்பு ஏற்ப்படுகிறது. லஞ்சம் வாங்குபவனுக்கு லஞ்சம் வாங்காதவனை கண்டால் எரிச்சல் வரும்!  எனவே அவர்கள் செம்மையானவர்கள் எங்கு தவறுவார்கள் அவனுக்கு எங்கு குழி தோண்டலாம் என்ற திட்டத்திலேயே திரிவார்கள். 
 
யோசேப்பை அவன் சகோதரர்கள் ஏன் பகைத்தார்கள்?
 
ஆதியாகமம் 37:2 அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் குமாரரோடே இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான்
 
எனவேதான்  துன்மார்க்கனான அவனுடைய சகோதரர்கள் அவனை குழிக்குள் தள்ளவும் அட்மையாய் விற்கவும் துணிந்தார்கள்.
  
அதுபோல் இன்றைய உலகில் துன்மார்க்கர்கள் நீதிமான்கள் மேல்  
எப்பொழுதும் கடும் கோபத்துடனே திரிகிறார்கள். 
 
சங்கீதம் 37:12 துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைத்து, அவன்பேரில் பற்கடிக்கிறான்.
 
ஆகினும் தேவன் தன பிள்ளைகளுக்கோ உதவிசெய்கிறார்.
 
சங்கீதம் 37:40 கர்த்தர் அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால்,அவர்களைத் துன்மார்க்கருடைய கைக்குத் தப்புவித்து இரட்சிப்பார்.       
 
 
அதுபோல் நேர்மையாய்/ நல்லவனாய் இருப்பவர்கள் தீயவர்களோடு சமாதானமாக இருக்கமுடியாது எனவே அவர்களை விட்டு விலகி இருப்பது நல்லது.  காரணம் ஒரு தேவ பிள்ளைக்கு யார்மீதும் எந்த கசப்பும் இருக்கவே கூடாது அவன் நமக்கு எதிராக கொடிய பாவமே . செய்திருந்தாலும் அவன்மேல் கசப்பு வராமல் நம் இருதயத்தை சுத்தப்படுத்துதல் அவசியம். எனவே பிடிக்கவில்லை என்றால் நல்ல இருதயத்தோடு நாம் விலகிவிடுவது நல்லது.   
 
கடந்த நாளில்சகோதரர் ஒருவர் எழுதிய வார்த்தைகளின் நிமித்தம் தேவையற்ற மன கசப்பு ஏற்ப்பட்டது அதை தொடர்ந்து "அவர் அப்படி எழுதிவிட்டார் நீ விட்டுவிடாதே இன்னும் மோசமான பதிவுகளை எழுது அவனை திட்டு விட்டுவிடாதே" என்று எதோ ஒரு சக்தி என்னை உந்தி தூண்டிக்கொண்டே இருந்தது. அதினிமித்தம் நீண்ட நேரம் நான் சமாதனமற்று இருந்தேன்.    
 
ஆகினும் இறுதியில் அந்த தூண்டுதலுக்கு எதற்கும் சம்மதியாமல், "என்னுடைய எழுத்துக்கள் அவரை பாதித்திருந்தால்/ என்னிடம் தவறிருந்தால் என்னை மன்னியும் கர்த்தாவே" என்று வேண்டியதோடு அவருக்காகவும் அவரோடு இருப்பவர்களுக்காகவும் ஜெபித்தபோது மீண்டும் எனக்கு சமாதானம் கிடைத்தது. 
 
இப்படிதான் சாத்தான் அநேகருடைய சமாதானத்தை கெடுத்து இரண்டு தேவ பிள்ளைகளுக்கு இடையேகூட சமாதானம் இல்லாமல் துண்டித்து விடுகிறான். பொதுவாக நான் அப்படிபட்ட கடின வார்த்தைகளை  எழுதுகிறவன் அல்ல! ஆகினும் பல விசுவாசிகளின் ஆதங்கம் மற்றும் என் அனுபவத்தோடு கூடிய  தேவ நடத்துதல் அதை எழுத தூண்டியதேயன்றி, யார்மேலும் உள்ள கசப்பில் அல்ல. ஆகினும்
நம்மேல் தப்பு இருக்கிறதோ இல்லையோ நாம் என் தாழ்ந்து போககூடாது? 
 
சங்138:6 கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; 
யாக்கோபு 4:6 தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.
 
அதைதானே நம் இயேசுவும் செய்தார் அவர் மரண பரியந்தம் தன்னை தாழ்த்தியதொடு நம்மையும் செய்ய சொன்னார். ஆனால் நாம் அப்படி செய்கிறோமா?  
 
ஆண்டவராகிய இயேசு பிரசங்கம் செய்த நாட்களில் அவரின் பயனுள்ள  பிரசங்கத்தில் அநேகர் சந்தோசத்தோடு  கேட்டார்கள் அதே நேரம் சிலர் நம் ஆண்டவர்மேல் எறிவதற்கு கற்களை பொறுக்கவும் செய்தார்கள்.
  
அவர்கள் கற்களை  பொறுக்கிய உடன் நாமும் கற்களை பொறுக்கினால் பிறகு அவர்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு? 
 
எனவே நம்மை நாமே முடிந்தவரை தாழ்த்தி எல்லோரோடும் சமாதானமாக இருக்க முயர்ச்சிபோம். 
 
சமாதானத்தின் தேவன்தாமே  நம்முடைய இருதயத்தில் எந்த கசப்பும் இல்லாமல் நீக்கிபோட்டு எல்லோரோடும் சமாதானமாக இருக்க கிருபை செய்வாராக.
  

 



-- Edited by SUNDAR on Monday 14th of July 2014 05:02:05 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard