இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கர்த்தரின் வார்த்தை எல்லா நேரமும் கனிவாக இருப்பதில்லை!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
கர்த்தரின் வார்த்தை எல்லா நேரமும் கனிவாக இருப்பதில்லை!
Permalink  
 


ஒருநாள் காலை 4 மணிக்கு ஆண்டவராகிய இயேசு ஒரு சகோதரியின் கால் அருகில் வந்து அமர்ந்துகொண்டு "மகளே எழுந்திரு மணி 4 ஆகிறது எழுந்து ஜெபம் பண்ணு" என்று பாசமான/இனிமையான  குரலில் பேசினாராம். ஆனால் இந்த சகோதரியோ திரும்பி படுத்துக் கொண்டு, எழுந்து ஜெபிக்க மறுத்து விட்டார்களாம். இரண்டு மூன்று முறை ஆண்டவர் எழுப்பி பார்த்து விட்டு, பின்னர் கடந்து சென்று விட்டாராம். ஆனால் அந்த இடம் முழுவதும் தேவ பிரசன்னமும் சமாதானமும் நீண்டநேரம் நிறைந்து இருந்ததாம். அதை சொல்லி சொல்லி சந்தொஷபட்டார்கள்.         
 
சில நாட்களுக்கு பிறகு அதே சகோதரி வேறு ஒரு காரியத்துக்காக ஆண்டவரிடம் மன்றாடி ஜெபித்துக்கொண்டு இருந்தபோது சற்றும் எதிர்பாராத விதமாக "அதிக ஆக்கினை அடையாதபடி நீ தப்பித்துகொள்" என்ற கடினமான வார்த்தை அவர் காதில் வந்து விழுந்ததாம். இவர் நடுங்கிவிட்டாராம். 
 
ஆம்! நம் ஆண்டவர் எல்லா நேரங்களிலும் கனிவான வார்த்தைகளை மட்டுமே பேசமாட்டார், கீழ்படியாதவர்களுக்கும் பாவிகளுக்கும் அவர் "உமையுள்ள நியாயாதிபதி"யும் "பட்ச்சிக்கிற அக்கினி"யும் ஆவார் என்பதை நாம் மறந்துவிடகூடாது!  
 
வேதத்தில் இருக்கும்  நல்ல வாக்குத்தத்தங்களை எல்லாம் தேடி தேடி எடுத்து, அது நமக்குதான் சொல்லபட்டது என்று எண்ணி உரிமை கொண்டாடுகிறோம்! 
 
ஏசாயா 41:10 நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்;
 
சங்கீதம் 91:10 பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.
 
எபிரெயர் 13:5 நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை
 
போன்ற பல்வேறு அருமையான தேவ வாக்குத்தத்தங்கள் எல்லோர் வீட்டிலும் தொங்குவதை நம்மால் பார்க்க முடியும்! 
 
ஆனால், 
 
இப்படி வாக்குகொடுத்துள்ள தேவனே அனேக  இடங்களில் "ஊமையான நாய், பெருவாயிற்று நாய், சாத்தான், சேற்றில் புரளும் பன்றி, குருடன், சோம்பேறி, நித்திரை பிரியர், ஓநாய் போன்ற மிக கடின வார்த்தைகளால் விமர்சித்து பலரை கலங்கடித்திருக்கிறார் 
 
மத்தேயு 16:23 அவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; 
 
ஏசாயா 56:10 அவனுடைய காவற்காரர் எல்லாரும் ஒன்றும் அறியாத குருடர்; அவர்களெல்லாரும் குலைக்கமாட்டாத ஊமையான நாய்கள்; தூக்கமயக்கமாய்ப் புலம்புகிறவர்கள், படுத்துக்கொள்ளுகிறவர்கள், நித்திரைப் பிரியர்;
 

செப்பனியா 3:3 அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் கெர்ச்சிக்கிற சிங்கங்கள்; அதின் நியாயாதிபதிகள் சாயங்காலத்தில் புறப்படுகிறதும் விடியற்காலமட்டும் ஒரு எலும்பையும் மீதியாக வைக்காததுமான ஓநாய்கள்.

 
II பேதுரு 2:22 நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது.
 
இப்படிபட்ட வார்த்தைகளும் நமது வேதத்தில்தான் இருக்கிறது. நாம் அனேக நேரங்களில் அதை வாசிக்கிறோம். ஆனால் என்றாவது இந்த வார்த்தை எனக்குதான் சொல்லபட்டது என்று நாம் சிந்தித்து பார்த்திருக்கிறோமா?  
 
சொற்பம் கூட தேறாது!  அது யாருக்கோ சொல்லபட்டது என்று நாம் கடந்து சென்றுவிடுகிறோம். 
 
காரணம் "நாமெல்லாம் பெரிய பரிசுத்தவான்கள்! தேவன் நமக்கு நல்ல வாக்கு தத்தங்களை மட்டும்தான் தருவார். திட்டும் வார்த்தைகள் எல்லாம் வேறு யாருக்கோ சொல்லபட்டது" என்று விட்டுவிடுகிறோம் 
 
ஆனால் வேதம் என்ன சொல்கிறது என்றால் கடிந்து கொள்ளுதலை வெறுப்பவன்  செத்துபோவானாம்!    
 
நீதி 15:10 வழியை விட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி விசனமாயிருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.
 
நீதிமொழிகள் 12:1  கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன்.
 
நம்மேல் ஒரு கடின வார்த்தை வீசப்பட்டால் நமக்கு மன கஷ்டம் ஏற்ப்பட்டலும், அதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம். நாம் எவ்விதத்தில் அந்த வார்த்தைக்கு ஒத்த  நிலையில் இருக்கிறோம். நாம் எங்கு நம்மை திருத்தவேண்டும் என்று யோசித்து திருந்துகிரவனே விவேகி! அவனே தேவனோடு முன்னேறி செல்லமுடியும்.  
 
நீதிமொழிகள் 13:18  கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ கனமடைவான்.
நீதிமொழிகள் 15:5  கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.
 
எனவே ஒருவர் நம்மை கடிந்துகொள்ளும்போது அவரின் அந்த கடிந்து கொள்ளுதலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று கவனித்து நடந்தால் மட்டுமே நாம் கனமடைய முடியும்.    
 
பாவத்தை குறித்து உணர்த்தபட்டபோது "பாவம் செய்தேன்" என்று அறிக்கை செய்த சவுல்/ யூதாஸ் போன்றவர்களே மன்னிப்பு பெறாமல் மரணத்தை சந்தித்திருக்கும்போது, நாம் கடிந்துகோள்ளப்படும்போது எவ்வளவு அதிகமாக நம்மை நிதானித்துகொள்வது அவசியம் என்பதை அறியவேண்டும்.      
 
எனவே வேதத்தில் உள்ள இனிமையான வார்த்தைகளைவிட கடின வார்த்தைகள் குறித்து அதிகம் தியானித்து அதற்க்கு நாம் பாத்திரமாக இருக்க வாய்ப்புண்டா என்று ஆராய்ந்து, தேவன் அதை நம்மேல் பயன்படுத்தும்முன் நம்மை நாம் திருத்திகொள்வோமாக  
 
தேவனின் திட்டம் ஒன்றை சரிவர செய்யமுடியாமல் தவறியபோது
கர்த்தர் என்னை மிக கடுமையாக கடிந்துகொண்ட வார்த்தை:
 
பிரசங்கி 10:1 செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும்.   என்பதே! 
 

 



-- Edited by SUNDAR on Wednesday 16th of July 2014 11:30:52 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard